Thursday, October 13, 2016

Easaayaa 56 | ஏசாயா 56 | Isaiah 56

கர்த்தர்  சொல்லுகிறார்:  நீங்கள்  நியாயத்தைக்  கைக்கொண்டு,  நீதியைச்  செய்யுங்கள்;  என்  இரட்சிப்பு  வரவும்,  என்  நீதி  வெளிப்படவும்  சமீபமாயிருக்கிறது.  (ஏசாயா  56:1)

karththar  sollugi’raar:  neengga'l  niyaayaththaik  kaikko'ndu,  neethiyaich  seyyungga'l;  en  iradchippu  varavum,  en  neethi  ve'lippadavum  sameebamaayirukki’rathu.  (easaayaa  56:1)

இப்படிச்  செய்கிற  மனுஷனும்,  இதைப்  பற்றிக்கொண்டிருந்து,  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்காதபடி  ஆசரித்து,  ஒரு  பொல்லாப்பையும்  செய்யாதபடி  தன்  கையைக்  காத்துக்கொண்டிருக்கிற  மனுபுத்திரனும்  பாக்கியவான்.  (ஏசாயா  56:2)

ippadich  seygi’ra  manushanum,  ithaip  pat’rikko'ndirunthu,  oayvunaa'laip  parisuththak  kulaichchalaakkaathapadi  aasariththu,  oru  pollaappaiyum  seyyaathapadi  than  kaiyaik  kaaththukko'ndirukki’ra  manupuththiranum  baakkiyavaan.  (easaayaa  56:2)

கர்த்தரைச்  சேர்ந்த  அந்நியபுத்திரன்:  கர்த்தர்  என்னைத்  தம்முடைய  ஜனத்தைவிட்டு  முற்றிலும்  பிரித்துப்போடுவாரென்று  சொல்லானாக;  அண்ணகனும்:  இதோ,  நான்  பட்டமரமென்று  சொல்லானாக.  (ஏசாயா  56:3)

karththaraich  searntha  anniyapuththiran:  karththar  ennaith  thammudaiya  janaththaivittu  mut’rilum  piriththuppoaduvaaren’ru  sollaanaaga;  a'n'naganum:  ithoa,  naan  pattamaramen’ru  sollaanaaga.  (easaayaa  56:3)

என்  ஓய்வுநாட்களை  ஆசரித்து,  எனக்கு  இஷ்டமானவைகளைத்  தெரிந்துகொண்டு,  என்  உடன்படிக்கையைப்  பற்றிக்கொள்ளுகிற  அண்ணகர்களைக்  குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (ஏசாயா  56:4)

en  oayvunaadka'lai  aasariththu,  enakku  ishdamaanavaiga'laith  therinthuko'ndu,  en  udanpadikkaiyaip  pat’rikko'l'lugi’ra  a'n'nagarga'laik  ku’riththuk  karththar  sollugi’rathu  ennaven’raal:  (easaayaa  56:4)

நான்  அவர்களுக்கு  என்  ஆலயத்திலும்,  என்  மதில்களுக்குள்ளும்  குமாரருக்கும்  குமாரத்திகளுக்குமுரிய  இடத்தையும்  கீர்த்தியையும்பார்க்கிலும்,  உத்தம  இடத்தையும்  கீர்த்தியையும்  கொடுப்பேன்,  என்றும்  அழியாத  நித்திய  நாமத்தை  அவர்களுக்கு  அருளுவேன்.  (ஏசாயா  56:5)

naan  avarga'lukku  en  aalayaththilum,  en  mathilga'lukku'l'lum  kumaararukkum  kumaaraththiga'lukkumuriya  idaththaiyum  keerththiyaiyumpaarkkilum,  uththama  idaththaiyum  keerththiyaiyum  koduppean,  en’rum  azhiyaatha  niththiya  naamaththai  avarga'lukku  aru'luvean.  (easaayaa  56:5)

கர்த்தரைச்  சேவிக்கவும்,  கர்த்தருடைய  நாமத்தை  நேசிக்கவும்,  அவருக்கு  ஊழியக்காரராயிருக்கவும்,  அவரைச்  சேர்ந்து,  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி  ஆசரித்து,  என்  உடன்படிக்கையைப்  பற்றிக்கொண்டிருக்கிற  அந்நியபுத்திரர்  அனைவரையும்,  (ஏசாயா  56:6)

karththaraich  seavikkavum,  karththarudaiya  naamaththai  neasikkavum,  avarukku  oozhiyakkaararaayirukkavum,  avaraich  searnthu,  oayvunaa'laip  parisuththakkulaichchalaakkaathapadi  aasariththu,  en  udanpadikkaiyaip  pat’rikko'ndirukki’ra  anniyapuththirar  anaivaraiyum,  (easaayaa  56:6)

நான்  என்  பரிசுத்த  பர்வதத்துக்குக்  கொண்டுவந்து:  என்  ஜெபவீட்டிலே  அவர்களை  மகிழப்பண்ணுவேன்;  அவர்களுடைய  சர்வாங்கதகனங்களும்,  அவர்களுடைய  பலிகளும்,  என்  பலிபீடத்தின்மேல்  அங்கிகரிக்கப்பட்டிருக்கும்;  என்னுடைய  வீடு  சகல  ஜனங்களுக்கும்  ஜெபவீடு  என்னப்படும்.  (ஏசாயா  56:7)

naan  en  parisuththa  parvathaththukkuk  ko'nduvanthu:  en  jebaveettilea  avarga'lai  magizhappa'n'nuvean;  avarga'ludaiya  sarvaanggathaganangga'lum,  avarga'ludaiya  baliga'lum,  en  balipeedaththinmeal  anggigarikkappattirukkum;  ennudaiya  veedu  sagala  janangga'lukkum  jebaveedu  ennappadum.  (easaayaa  56:7)

இஸ்ரவேலில்  தள்ளுண்டவர்களைச்  சேர்க்கிற  கர்த்தராகிய  ஆண்டவர்:  அவனிடத்தில்  சேர்க்கப்பட்டவர்களையல்லாமல்  இன்னும்  அவனிடத்தில்  சேர்ப்பேன்  என்கிறார்.  (ஏசாயா  56:8)

isravealil  tha'l'lu'ndavarga'laich  searkki’ra  karththaraagiya  aa'ndavar:  avanidaththil  searkkappattavarga'laiyallaamal  innum  avanidaththil  searppean  engi’raar.  (easaayaa  56:8)

வெளியில்  சஞ்சரிக்கிற  சகல  மிருகங்களே,  காட்டிலுள்ள  சகல  மிருகங்களே,  பட்சிக்க  வாருங்கள்.  (ஏசாயா  56:9)

ve'liyil  sagncharikki’ra  sagala  mirugangga'lea,  kaattilu'l'la  sagala  mirugangga'lea,  padchikka  vaarungga'l.  (easaayaa  56:9)

அவனுடைய  காவற்காரர்  எல்லாரும்  ஒன்றும்  அறியாத  குருடர்;  அவர்களெல்லாரும்  குலைக்கமாட்டாத  ஊமையான  நாய்கள்;  தூக்கமயக்கமாய்ப்  புலம்புகிறவர்கள்,  படுத்துக்கொள்ளுகிறவர்கள்,  நித்திரைப்  பிரியர்;  (ஏசாயா  56:10)

avanudaiya  kaava’rkaarar  ellaarum  on’rum  a’riyaatha  kurudar;  avarga'lellaarum  kulaikkamaattaatha  oomaiyaana  naayga'l;  thookkamayakkamaayp  pulambugi’ravarga'l,  paduththukko'l'lugi’ravarga'l,  niththiraip  piriyar;  (easaayaa  56:10)

திருப்தியடையாமலிருக்கும்  பெருவயிற்று  நாய்கள்;  பகுத்தறிவில்லாத  மேய்ப்பர்;  அவர்களில்  ஒவ்வொருவனும்  தன்  தன்  வழியையும்,  அவனவன்  தன்  தன்  மூலையிலிருந்து  தன்  தன்  பொழிவையும்  நோக்கிக்கொண்டிருக்கிறான்.  (ஏசாயா  56:11)

thirupthiyadaiyaamalirukkum  peruvayit’ru  naayga'l;  paguththa’rivillaatha  meayppar;  avarga'lil  ovvoruvanum  than  than  vazhiyaiyum,  avanavan  than  than  moolaiyilirunthu  than  than  pozhivaiyum  noakkikko'ndirukki’raan.  (easaayaa  56:11)

வாருங்கள்,  திராட்சரசத்தைக்  கொண்டுவருவேன்,  மதுவைக்  குடிப்போம்;  நாளையத்தினம்  இன்றையத்தினம்போலவும்,  இதற்கு  அதிகமாகவும்  இருக்கும்  என்பார்கள்.  (ஏசாயா  56:12)

vaarungga'l,  thiraadcharasaththaik  ko'nduvaruvean,  mathuvaik  kudippoam;  naa'laiyaththinam  in’raiyaththinampoalavum,  itha’rku  athigamaagavum  irukkum  enbaarga'l.  (easaayaa  56:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!