Wednesday, October 12, 2016

Easaayaa 53 | ஏசாயா 53 | Isaiah 53


எங்கள்  மூலமாய்க்  கேள்விப்பட்டதை  விசுவாசித்தவன்  யார்?  கர்த்தருடைய  புயம்  யாருக்கு  வெளிப்பட்டது?  (ஏசாயா  53:1)

engga'l  moolamaayk  kea'lvippattathai  visuvaasiththavan  yaar?  karththarudaiya  puyam  yaarukku  ve'lippattathu?  (easaayaa  53:1)

இளங்கிளையைப்போலவும்,  வறண்ட  நிலத்திலிருந்து  துளிர்க்கிற  வேரைப்போலவும்  அவனுக்கு  முன்பாக  எழும்புகிறார்;  அவருக்கு  அழகுமில்லை,  சௌந்தரியமுமில்லை;  அவரைப்  பார்க்கும்போது,  நாம்  அவரை  விரும்பத்தக்க  ரூபம்  அவருக்கு  இல்லாதிருந்தது.  (ஏசாயா  53:2)

i'langki'laiyaippoalavum,  va’ra'nda  nilaththilirunthu  thu'lirkki’ra  vearaippoalavum  avanukku  munbaaga  ezhumbugi’raar;  avarukku  azhagumillai,  saunthariyamumillai;  avaraip  paarkkumpoathu,  naam  avarai  virumbaththakka  roobam  avarukku  illaathirunthathu.  (easaayaa  53:2)

அவர்  அசட்டைபண்ணப்பட்டவரும்,  மனுஷரால்  புறக்கணிக்கப்பட்டவரும்,  துக்கம்  நிறைந்தவரும்,  பாடு  அநுபவித்தவருமாயிருந்தார்;  அவரைவிட்டு,  நம்முடைய  முகங்களை  மறைத்துக்கொண்டோம்;  அவர்  அசட்டைபண்ணப்பட்டிருந்தார்;  அவரை  எண்ணாமற்போனோம்.  (ஏசாயா  53:3)

avar  asattaipa'n'nappattavarum,  manusharaal  pu’rakka'nikkappattavarum,  thukkam  ni’rainthavarum,  paadu  anubaviththavarumaayirunthaar;  avaraivittu,  nammudaiya  mugangga'lai  ma’raiththukko'ndoam;  avar  asattaipa'n'nappattirunthaar;  avarai  e'n'naama’rpoanoam.  (easaayaa  53:3)

மெய்யாகவே  அவர்  நம்முடைய  பாடுகளை  ஏற்றுக்கொண்டு,  நம்முடைய  துக்கங்களைச்  சுமந்தார்;  நாமோ,  அவர்  தேவனால்  அடிபட்டு  வாதிக்கப்பட்டு,  சிறுமைப்பட்டவரென்று  எண்ணினோம்.  (ஏசாயா  53:4)

meyyaagavea  avar  nammudaiya  paaduga'lai  eat’rukko'ndu,  nammudaiya  thukkangga'laich  sumanthaar;  naamoa,  avar  theavanaal  adipattu  vaathikkappattu,  si’rumaippattavaren’ru  e'n'ninoam.  (easaayaa  53:4)

நம்முடைய  மீறுதல்களினிமித்தம்  அவர்  காயப்பட்டு,  நம்முடைய  அக்கிரமங்களினிமித்தம்  அவர்  நொறுக்கப்பட்டார்;  நமக்குச்  சமாதானத்தை  உண்டுபண்ணும்  ஆக்கினை  அவர்மேல்  வந்தது;  அவருடைய  தழும்புகளால்  குணமாகிறோம்.  (ஏசாயா  53:5)

nammudaiya  mee’ruthalga'linimiththam  avar  kaayappattu,  nammudaiya  akkiramangga'linimiththam  avar  no’rukkappattaar;  namakkuch  samaathaanaththai  u'ndupa'n'num  aakkinai  avarmeal  vanthathu;  avarudaiya  thazhumbuga'laal  ku'namaagi’roam.  (easaayaa  53:5)

நாமெல்லாரும்  ஆடுகளைப்போல  வழிதப்பித்  திரிந்து,  அவனவன்  தன்  தன்  வழியிலே  போனோம்;  கர்த்தரோ  நம்மெல்லாருடைய  அக்கிரமத்தையும்  அவர்மேல்  விழப்பண்ணினார்.  (ஏசாயா  53:6)

naamellaarum  aaduga'laippoala  vazhithappith  thirinthu,  avanavan  than  than  vazhiyilea  poanoam;  karththaroa  nammellaarudaiya  akkiramaththaiyum  avarmeal  vizhappa'n'ninaar.  (easaayaa  53:6)

அவர்  நெருக்கப்பட்டும்  ஒடுக்கப்பட்டும்  இருந்தார்,  ஆனாலும்  தம்முடைய  வாயை  அவர்  திறக்கவில்லை;  அடிக்கப்படும்படி  கொண்டுபோகப்படுகிற  ஒரு  ஆட்டுக்குட்டியைப்போலவும்,  தன்னை  மயிர்கத்தரிக்கிறவனுக்கு  முன்பாகச்  சத்தமிடாதிருக்கிற  ஆட்டைப்போலவும்,  அவர்  தம்முடைய  வாயைத்  திறவாதிருந்தார்.  (ஏசாயா  53:7)

avar  nerukkappattum  odukkappattum  irunthaar,  aanaalum  thammudaiya  vaayai  avar  thi’rakkavillai;  adikkappadumpadi  ko'ndupoagappadugi’ra  oru  aattukkuttiyaippoalavum,  thannai  mayirkaththarikki’ravanukku  munbaagach  saththamidaathirukki’ra  aattaippoalavum,  avar  thammudaiya  vaayaith  thi’ravaathirunthaar.  (easaayaa  53:7)

இடுக்கணிலும்  நியாயத்தீர்ப்பிலுமிருந்து  அவர்  எடுக்கப்பட்டார்;  அவருடைய  வம்சத்தை  யாரால்  சொல்லி  முடியும்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலிருந்து  அறுப்புண்டுபோனார்;  என்  ஜனத்தின்  மீறுதலினிமித்தம்  அவர்  வாதிக்கப்பட்டார்.  (ஏசாயா  53:8)

idukka'nilum  niyaayaththeerppilumirunthu  avar  edukkappattaar;  avarudaiya  vamsaththai  yaaraal  solli  mudiyum;  jeevanu'l'loarudaiya  theasaththilirunthu  a’ruppu'ndupoanaar;  en  janaththin  mee’ruthalinimiththam  avar  vaathikkappattaar.  (easaayaa  53:8)

துன்மார்க்கரோடே  அவருடைய  பிரேதக்குழியை  நியமித்தார்கள்;  ஆனாலும்  அவர்  மரித்தபோது  ஐசுவரியவானோடே  இருந்தார்;  அவர்  கொடுமை  செய்யவில்லை;  அவர்  வாயில்  வஞ்சனை  இருந்ததுமில்லை.  (ஏசாயா  53:9)

thunmaarkkaroadea  avarudaiya  pireathakkuzhiyai  niyamiththaarga'l;  aanaalum  avar  mariththapoathu  aisuvariyavaanoadea  irunthaar;  avar  kodumai  seyyavillai;  avar  vaayil  vagnchanai  irunthathumillai.  (easaayaa  53:9)

கர்த்தரோ  அவரை  நொறுக்கச்  சித்தமாகி,  அவரைப்  பாடுகளுக்குட்படுத்தினார்;  அவருடைய  ஆத்துமா  தன்னைக்  குற்றநிவாரணபலியாக  ஒப்புக்கொடுக்கும்போது,  அவர்  தமது  சந்ததியைக்  கண்டு,  நீடித்த  நாளாயிருப்பார்,  கர்த்தருக்குச்  சித்தமானது  அவர்  கையினால்  வாய்க்கும்.  (ஏசாயா  53:10)

karththaroa  avarai  no’rukkach  siththamaagi,  avaraip  paaduga'lukkudpaduththinaar;  avarudaiya  aaththumaa  thannaik  kut’ranivaara'nabaliyaaga  oppukkodukkumpoathu,  avar  thamathu  santhathiyaik  ka'ndu,  neediththa  naa'laayiruppaar,  karththarukkuch  siththamaanathu  avar  kaiyinaal  vaaykkum.  (easaayaa  53:10)

அவர்  தமது  ஆத்தும  வருத்தத்தின்  பலனைக்  கண்டு  திருப்தியாவார்;  என்  தாசனாகிய  நீதிபரர்  தம்மைப்  பற்றும்  அறிவினால்  அநேகரை  நீதிமான்களாக்குவார்;  அவர்களுடைய  அக்கிரமங்களைத்  தாமே  சுமந்துகொள்வார்.  (ஏசாயா  53:11)

avar  thamathu  aaththuma  varuththaththin  palanaik  ka'ndu  thirupthiyaavaar;  en  thaasanaagiya  neethiparar  thammaip  pat’rum  a’rivinaal  aneagarai  neethimaanga'laakkuvaar;  avarga'ludaiya  akkiramangga'laith  thaamea  sumanthuko'lvaar.  (easaayaa  53:11)

அவர்  தம்முடைய  ஆத்துமாவை  மரணத்திலூற்றி,  அக்கிரமக்காரரில்  ஒருவராக  எண்ணப்பட்டு,  அநேகருடைய  பாவத்தைத்  தாமே  சுமந்து,  அக்கிரமக்காரருக்காக  வேண்டிக்கொண்டதினிமித்தம்  அநேகரை  அவருக்குப்  பங்காகக்  கொடுப்பேன்;  பலவான்களை  அவர்  தமக்குக்  கொள்ளையாகப்  பங்கிட்டுக்கொள்வார்.  (ஏசாயா  53:12)

avar  thammudaiya  aaththumaavai  mara'naththiloot’ri,  akkiramakkaararil  oruvaraaga  e'n'nappattu,  aneagarudaiya  paavaththaith  thaamea  sumanthu,  akkiramakkaararukkaaga  vea'ndikko'ndathinimiththam  aneagarai  avarukkup  panggaagak  koduppean;  balavaanga'lai  avar  thamakkuk  ko'l'laiyaagap  panggittukko'lvaar.  (easaayaa  53:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!