Wednesday, October 12, 2016

Easaayaa 51 | ஏசாயா 51 | Isaiah 51

நீதியைப்  பின்பற்றி,  கர்த்தரைத்  தேடுகிற  நீங்கள்  எனக்குச்  செவிகொடுங்கள்;  நீங்கள்  வெட்டி  எடுக்கப்பட்ட  கன்மலையையும்,  நீங்கள்  தோண்டி  எடுக்கப்பட்ட  துரவின்  குழியையும்  நோக்கிப்பாருங்கள்.  (ஏசாயா  51:1)

neethiyaip  pinpat’ri,  karththaraith  theadugi’ra  neengga'l  enakkuch  sevikodungga'l;  neengga'l  vetti  edukkappatta  kanmalaiyaiyum,  neengga'l  thoa'ndi  edukkappatta  thuravin  kuzhiyaiyum  noakkippaarungga'l.  (easaayaa  51:1)

உங்கள்  தகப்பனாகிய  ஆபிரகாமையும்,  உங்களைப்  பெற்ற  சாராளையும்  நோக்கிப்பாருங்கள்;  அவன்  ஒருவனாயிருக்கையில்  நான்  அவனை  அழைத்து,  அவனை  ஆசீர்வதித்து,  அவனைப்  பெருகப்பண்ணினேன்.  (ஏசாயா  51:2)

ungga'l  thagappanaagiya  aabirahaamaiyum,  ungga'laip  pet’ra  saaraa'laiyum  noakkippaarungga'l;  avan  oruvanaayirukkaiyil  naan  avanai  azhaiththu,  avanai  aaseervathiththu,  avanaip  perugappa'n'ninean.  (easaayaa  51:2)

கர்த்தர்  சீயோனுக்கு  ஆறுதல்  செய்வார்;  அவர்  அதின்  பாழான  ஸ்தலங்களையெல்லாம்  தேறுதலடையச்  செய்து,  அதின்  வனாந்தரத்தை  ஏதேனைப்போலவும்,  அதின்  அவாந்தரவெளியைக்  கர்த்தரின்  தோட்டத்தைப்போலவும்  ஆக்குவார்;  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  துதியும்  கீதசத்தமும்  அதில்  உண்டாயிருக்கும்.  (ஏசாயா  51:3)

karththar  seeyoanukku  aa’ruthal  seyvaar;  avar  athin  paazhaana  sthalangga'laiyellaam  thea’ruthaladaiyach  seythu,  athin  vanaantharaththai  eatheanaippoalavum,  athin  avaantharave'liyaik  karththarin  thoattaththaippoalavum  aakkuvaar;  santhoashamum  magizhchchiyum  thuthiyum  keethasaththamum  athil  u'ndaayirukkum.  (easaayaa  51:3)

என்  ஜனங்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  ஜாதியாரே,  என்  வாக்கைக்  கவனியுங்கள்;  வேதம்  என்னிலிருந்து  வெளிப்படும்;  என்  பிரமாணத்தை  ஜனங்களின்  வெளிச்சமாக  ஸ்தாபிப்பேன்.  (ஏசாயா  51:4)

en  janangga'lea,  enakkuch  sevikodungga'l;  en  jaathiyaarea,  en  vaakkaik  kavaniyungga'l;  veatham  ennilirunthu  ve'lippadum;  en  piramaa'naththai  janangga'lin  ve'lichchamaaga  sthaabippean.  (easaayaa  51:4)

என்  நீதி  சமீபமாயிருக்கிறது;  என்  இரட்சிப்பு  வெளிப்படும்;  என்  புயங்கள்  ஜனங்களை  நியாயந்தீர்க்கும்;  தீவுகள்  எனக்குக்  காத்திருந்து,  என்  புயத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்கும்.  (ஏசாயா  51:5)

en  neethi  sameebamaayirukki’rathu;  en  iradchippu  ve'lippadum;  en  puyangga'l  janangga'lai  niyaayantheerkkum;  theevuga'l  enakkuk  kaaththirunthu,  en  puyaththinmeal  nambikkaiyaayirukkum.  (easaayaa  51:5)

உங்கள்  கண்களை  வானத்துக்கு  ஏறெடுங்கள்,  கீழே  இருக்கிற  பூமியையும்  நோக்கிப்பாருங்கள்;  வானம்  புகையைப்போல்  ஒழிந்துபோம்,  பூமி  வஸ்திரத்தைப்போல்  பழசாய்ப்போம்;  அதின்  குடிகளும்  அப்படியே  ஒழிந்துபோவார்கள்;  என்  இரட்சிப்போ  என்றென்றைக்கும்  இருக்கும்;  என்  நீதி  அற்றுப்போவதில்லை.  (ஏசாயா  51:6)

ungga'l  ka'nga'lai  vaanaththukku  ea’redungga'l,  keezhea  irukki’ra  boomiyaiyum  noakkippaarungga'l;  vaanam  pugaiyaippoal  ozhinthupoam,  boomi  vasthiraththaippoal  pazhasaayppoam;  athin  kudiga'lum  appadiyea  ozhinthupoavaarga'l;  en  iradchippoa  en’ren’raikkum  irukkum;  en  neethi  at’ruppoavathillai.  (easaayaa  51:6)

நீதியை  அறிந்தவர்களே,  என்  வேதத்தை  இருதயத்தில்  பதித்திருக்கிற  ஜனங்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  மனுஷரின்  நிந்தனைக்குப்  பயப்படாமலும்,  அவர்கள்  தூஷணங்களால்  கலங்காமலும்  இருங்கள்.  (ஏசாயா  51:7)

neethiyai  a’rinthavarga'lea,  en  veathaththai  iruthayaththil  pathiththirukki’ra  janangga'lea,  enakkuch  sevikodungga'l;  manusharin  ninthanaikkup  bayappadaamalum,  avarga'l  thoosha'nangga'laal  kalanggaamalum  irungga'l.  (easaayaa  51:7)

பொட்டுப்பூச்சி  அவர்களை  வஸ்திரத்தைப்போல்  அரித்து,  புழு  அவர்களை  ஆட்டுமயிரைப்போல்  தின்னும்;  என்னுடைய  நீதியோ  என்றென்றைக்கும்  நிலைக்கும்,  என்  இரட்சிப்புத்  தலைமுறை  தலைமுறைதோறும்  இருக்கும்.  (ஏசாயா  51:8)

pottuppoochchi  avarga'lai  vasthiraththaippoal  ariththu,  puzhu  avarga'lai  aattumayiraippoal  thinnum;  ennudaiya  neethiyoa  en’ren’raikkum  nilaikkum,  en  iradchipputh  thalaimu’rai  thalaimu’raithoa’rum  irukkum.  (easaayaa  51:8)

எழும்பு,  எழும்பு,  பெலன்கொள்;  கர்த்தரின்  புயமே,  முந்தினநாட்களிலும்  பூர்வ  தலைமுறைகளிலும்  எழும்பினபடி  எழும்பு;  இராகாபைத்  துண்டித்ததும்  வலுசர்ப்பத்தை  வதைத்ததும்  நீதானல்லவோ?  (ஏசாயா  51:9)

ezhumbu,  ezhumbu,  belanko'l;  karththarin  puyamea,  munthinanaadka'lilum  poorva  thalaimu’raiga'lilum  ezhumbinapadi  ezhumbu;  iraahaabaith  thu'ndiththathum  valusarppaththai  vathaiththathum  neethaanallavoa?  (easaayaa  51:9)

மகா  ஆழத்தின்  தண்ணீர்களாகிய  சமுத்திரத்தை  வற்றிப்போகப்பண்ணினதும்,  மீட்கப்பட்டவர்கள்  கடந்துபோகக்  கடலின்  பள்ளங்களை  வழியாக்கினதும்  நீதானல்லவோ?  (ஏசாயா  51:10)

mahaa  aazhaththin  tha'n'neerga'laagiya  samuththiraththai  vat’rippoagappa'n'ninathum,  meedkappattavarga'l  kadanthupoagak  kadalin  pa'l'langga'lai  vazhiyaakkinathum  neethaanallavoa?  (easaayaa  51:10)

அப்படியே  கர்த்தரால்  மீட்கப்பட்டவர்கள்  ஆனந்தக்களிப்புடன்  பாடி  சீயோனுக்குத்  திரும்பிவருவார்கள்;  நித்திய  மகிழ்ச்சி  அவர்கள்  தலையின்மேல்  இருக்கும்;  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  அடைவார்கள்;  சஞ்சலமும்  தவிப்பும்  ஓடிப்போம்.  (ஏசாயா  51:11)

appadiyea  karththaraal  meedkappattavarga'l  aananthakka'lippudan  paadi  seeyoanukkuth  thirumbivaruvaarga'l;  niththiya  magizhchchi  avarga'l  thalaiyinmeal  irukkum;  santhoashamum  magizhchchiyum  adaivaarga'l;  sagnchalamum  thavippum  oadippoam.  (easaayaa  51:11)

நான்,  நானே  உங்களுக்கு  ஆறுதல்  செய்கிறவர்;  சாகப்போகிற  மனுஷனுக்கும்,  புல்லுக்கொப்பாகிற  மனுபுத்திரனுக்கும்  பயப்படுகிறதற்கும்,  வானங்களை  விரித்து,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  உன்னை  உண்டாக்கின  கர்த்தரை  மறக்கிறதற்கும்  நீ  யார்?  (ஏசாயா  51:12)

naan,  naanea  ungga'lukku  aa’ruthal  seygi’ravar;  saagappoagi’ra  manushanukkum,  pullukkoppaagi’ra  manupuththiranukkum  bayappadugi’ratha’rkum,  vaanangga'lai  viriththu,  boomiyai  asthibaarappaduththi,  unnai  u'ndaakkina  karththarai  ma’rakki’ratha’rkum  nee  yaar?  (easaayaa  51:12)

இடுக்கண்செய்கிறவன்  அழிக்க  ஆயத்தமாகிறபோது,  நீ  அவனுடைய  உக்கிரத்துக்கு  நித்தம்  இடைவிடாமல்  பயப்படுகிறதென்ன?  இடுக்கண்செய்கிறவனுடைய  உக்கிரம்  எங்கே?  (ஏசாயா  51:13)

idukka'nseygi’ravan  azhikka  aayaththamaagi’rapoathu,  nee  avanudaiya  ukkiraththukku  niththam  idaividaamal  bayappadugi’rathenna?  idukka'nseygi’ravanudaiya  ukkiram  enggea?  (easaayaa  51:13)

சிறைப்பட்டுப்போனவன்  தீவிரமாய்  விடுதலையாவான்;  அவன்  கிடங்கிலே  சாவதுமில்லை,  அவனுடைய  அப்பம்  குறைவுபடுவதுமில்லை.  (ஏசாயா  51:14)

si’raippattuppoanavan  theeviramaay  viduthalaiyaavaan;  avan  kidanggilea  saavathumillai,  avanudaiya  appam  ku’raivupaduvathumillai.  (easaayaa  51:14)

உன்  தேவனாயிருக்கிற  கர்த்தர்  நானே;  அலைகள்  கொந்தளிக்கத்தக்கதாய்ச்  சமுத்திரத்தைக்  குலுக்குகிற  சேனைகளின்  கர்த்தர்  என்கிற  நாமமுள்ளவர்.  (ஏசாயா  51:15)

un  theavanaayirukki’ra  karththar  naanea;  alaiga'l  kontha'likkaththakkathaaych  samuththiraththaik  kulukkugi’ra  seanaiga'lin  karththar  engi’ra  naamamu'l'lavar.  (easaayaa  51:15)

நான்  வானத்தை  நிலைப்படுத்தி,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  சீயோனை  நோக்கி:  நீ  என்  ஜனமென்று  சொல்வதற்காக,  நான்  என்  வார்த்தையை  உன்  வாயிலே  அருளி,  என்  கரத்தின்  நிழலினால்  உன்னை  மறைக்கிறேன்.  (ஏசாயா  51:16)

naan  vaanaththai  nilaippaduththi,  boomiyai  asthibaarappaduththi,  seeyoanai  noakki:  nee  en  janamen’ru  solvatha’rkaaga,  naan  en  vaarththaiyai  un  vaayilea  aru'li,  en  karaththin  nizhalinaal  unnai  ma’raikki’rean.  (easaayaa  51:16)

எழும்பு,  எழும்பு,  கர்த்தருடைய  உக்கிரத்தின்  பாத்திரத்தை  அவர்  கையில்  வாங்கிக்  குடித்திருக்கிற  எருசலேமே,  எழுந்துநில்,  தத்தளிக்கச்செய்யும்  பாத்திரத்தின்  வண்டல்களை  உறிஞ்சிக்  குடித்தாய்.  (ஏசாயா  51:17)

ezhumbu,  ezhumbu,  karththarudaiya  ukkiraththin  paaththiraththai  avar  kaiyil  vaanggik  kudiththirukki’ra  erusaleamea,  ezhunthunil,  thaththa'likkachseyyum  paaththiraththin  va'ndalga'lai  u’rignchik  kudiththaay.  (easaayaa  51:17)

அவள்  பெற்ற  புத்திரரெல்லாரிலும்  அவளை  நடத்துவார்  ஒருவருமில்லை;  அவள்  வளர்த்த  குமாரரெல்லாரிலும்  அவளைக்  கைகொடுத்து  அழைப்பார்  ஒருவருமில்லை.  (ஏசாயா  51:18)

ava'l  pet’ra  puththirarellaarilum  ava'lai  nadaththuvaar  oruvarumillai;  ava'l  va'larththa  kumaararellaarilum  ava'laik  kaikoduththu  azhaippaar  oruvarumillai.  (easaayaa  51:18)

இவ்விரண்டும்  உனக்குச்  சம்பவித்தது;  உனக்குப்  பரிதபிக்கிறவன்  யார்?  பாழ்க்கடிப்பும்,  சங்காரமும்,  பஞ்சமும்,  பட்டயமும்  வந்தன;  யாரைக்கொண்டு  உனக்கு  ஆறுதல்  செய்வேன்?  (ஏசாயா  51:19)

ivvira'ndum  unakkuch  sambaviththathu;  unakkup  parithabikki’ravan  yaar?  paazhkkadippum,  sanggaaramum,  pagnchamum,  pattayamum  vanthana;  yaaraikko'ndu  unakku  aa’ruthal  seyvean?  (easaayaa  51:19)

உன்  குமாரர்  மூர்ச்சித்து  விழுந்தார்கள்;  அவர்கள்,  வலையிலே  சிக்குண்ட  கலைமானைப்போல,  எல்லா  வீதிகளின்  முனையிலும்,  கர்த்தருடைய  உக்கிரத்தினாலும்,  உன்  தேவனுடைய  கண்டிதத்தினாலும்  நிறைந்தவர்களாய்க்  கிடக்கிறார்கள்.  (ஏசாயா  51:20)

un  kumaarar  moorchchiththu  vizhunthaarga'l;  avarga'l,  valaiyilea  sikku'nda  kalaimaanaippoala,  ellaa  veethiga'lin  munaiyilum,  karththarudaiya  ukkiraththinaalum,  un  theavanudaiya  ka'ndithaththinaalum  ni’rainthavarga'laayk  kidakki’raarga'l.  (easaayaa  51:20)

ஆகையால்  சிறுமைப்பட்டவளே,  மதுபானங்குடியாமல்  வெறிகொண்டவளே,  நீ  கேள்.  (ஏசாயா  51:21)

aagaiyaal  si’rumaippattava'lea,  mathubaanangkudiyaamal  ve’riko'ndava'lea,  nee  kea'l.  (easaayaa  51:21)

கர்த்தராகிய  உன்  ஆண்டவரும்  தம்முடைய  ஜனத்துக்காக  வழக்காடப்போகிற  உன்  தேவனுமானவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  தத்தளிப்பின்  பாத்திரத்தை  உன்  கையிலிருந்து  நீக்கிப்போடுகிறேன்,  இனி  என்  உக்கிரத்தினுடைய  பாத்திரத்தின்  வண்டல்களை  நீ  குடிப்பதில்லை.  (ஏசாயா  51:22)

karththaraagiya  un  aa'ndavarum  thammudaiya  janaththukkaaga  vazhakkaadappoagi’ra  un  theavanumaanavar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  thaththa'lippin  paaththiraththai  un  kaiyilirunthu  neekkippoadugi’rean,  ini  en  ukkiraththinudaiya  paaththiraththin  va'ndalga'lai  nee  kudippathillai.  (easaayaa  51:22)

உன்னை  நோக்கி:  நாங்கள்  கடந்துபோகும்படிக்குக்  குனியென்றுசொல்லி,  கடந்துபோகிறவர்களுக்கு  நீ  உன்  முதுகைத்  தரையும்  வீதியுமாக்கும்படி,  உன்னைச்  சஞ்சலப்படுத்தினவர்களின்  கையில்  அதைக்  கொடுப்பேன்  என்றார்.  (ஏசாயா  51:23)

unnai  noakki:  naangga'l  kadanthupoagumpadikkuk  kuniyen’rusolli,  kadanthupoagi’ravarga'lukku  nee  un  muthugaith  tharaiyum  veethiyumaakkumpadi,  unnaich  sagnchalappaduththinavarga'lin  kaiyil  athaik  koduppean  en’raar.  (easaayaa  51:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!