Tuesday, October 11, 2016

Easaayaa 49 | ஏசாயா 49 | Isaiah 49

தீவுகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  தூரத்திலிருக்கிற  ஜனங்களே,  கவனியுங்கள்;  தாயின்  கர்ப்பத்திலிருந்ததுமுதல்  கர்த்தர்  என்னை  அழைத்து,  நான்  என்  தாயின்  வயிற்றில்  இருக்கையில்  என்  நாமத்தைப்  பிரஸ்தாபப்படுத்தினார்.  (ஏசாயா  49:1)

theevuga'lea,  enakkuch  sevikodungga'l;  thooraththilirukki’ra  janangga'lea,  kavaniyungga'l;  thaayin  karppaththilirunthathumuthal  karththar  ennai  azhaiththu,  naan  en  thaayin  vayit’ril  irukkaiyil  en  naamaththaip  pirasthaabappaduththinaar.  (easaayaa  49:1)

அவர்  என்  வாயைக்  கூர்மையான  பட்டயமாக்கி,  தமது  கரத்தின்  நிழலினால்  என்னை  மறைத்து,  என்னைத்  துலக்கமான  அம்பாக்கி,  என்னைத்  தமது  அம்பறாத்தூணியிலே  மூடிவைத்தார்.  (ஏசாயா  49:2)

avar  en  vaayaik  koormaiyaana  pattayamaakki,  thamathu  karaththin  nizhalinaal  ennai  ma’raiththu,  ennaith  thulakkamaana  ambaakki,  ennaith  thamathu  amba’raaththoo'niyilea  moodivaiththaar.  (easaayaa  49:2)

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்  தாசன்;  இஸ்ரவேலே,  நான்  உன்னில்  மகிமைப்படுவேன்  என்றார்.  (ஏசாயா  49:3)

avar  ennai  noakki:  nee  en  thaasan;  isravealea,  naan  unnil  magimaippaduvean  en’raar.  (easaayaa  49:3)

அதற்கு  நான்:  விருதாவாய்  உழைக்கிறேன்,  வீணும்  வியர்த்தமுமாய்  என்  பெலனைச்  செலவழிக்கிறேன்;  ஆகிலும்  என்  நியாயம்  கர்த்தரிடத்திலும்,  என்  பலன்  என்  தேவனிடத்திலும்  இருக்கிறது  என்று  சொன்னேன்.  (ஏசாயா  49:4)

atha’rku  naan:  viruthaavaay  uzhaikki’rean,  vee'num  viyarththamumaay  en  belanaich  selavazhikki’rean;  aagilum  en  niyaayam  karththaridaththilum,  en  palan  en  theavanidaththilum  irukki’rathu  en’ru  sonnean.  (easaayaa  49:4)

யாக்கோபைத்  தம்மிடத்தில்  திருப்பும்படி  நான்  தாயின்  கர்ப்பத்திலிருந்ததுமுதல்  கர்த்தர்  தமக்குத்  தாசனாக  என்னை  உருவாக்கினார்;  இஸ்ரவேலோ  சேராதேபோகிறது;  ஆகிலும்  கர்த்தருடைய  பார்வையில்  கனமடைவேன்,  என்  தேவன்  என்  பெலனாயிருப்பார்.  (ஏசாயா  49:5)

yaakkoabaith  thammidaththil  thiruppumpadi  naan  thaayin  karppaththilirunthathumuthal  karththar  thamakkuth  thaasanaaga  ennai  uruvaakkinaar;  isravealoa  searaatheapoagi’rathu;  aagilum  karththarudaiya  paarvaiyil  kanamadaivean,  en  theavan  en  belanaayiruppaar.  (easaayaa  49:5)

யாக்கோபின்  கோத்திரங்களை  எழுப்பவும்,  இஸ்ரவேலில்  காக்கப்பட்டவர்களைத்  திருப்பவும்,  நீர்  எனக்குத்  தாசனாயிருப்பது  அற்பகாரியமாயிருக்கிறது;  நீர்  பூமியின்  கடைசிபரியந்தமும்  என்னுடைய  இரட்சிப்பாயிருக்கும்படி,  உம்மை  ஜாதிகளுக்கு  ஒளியாகவும்  வைப்பேன்  என்கிறார்.  (ஏசாயா  49:6)

yaakkoabin  koaththirangga'lai  ezhuppavum,  isravealil  kaakkappattavarga'laith  thiruppavum,  neer  enakkuth  thaasanaayiruppathu  a’rpakaariyamaayirukki’rathu;  neer  boomiyin  kadaisipariyanthamum  ennudaiya  iradchippaayirukkumpadi,  ummai  jaathiga'lukku  o'liyaagavum  vaippean  engi’raar.  (easaayaa  49:6)

இஸ்ரவேலின்  மீட்பரும்  அதின்  பரிசுத்தருமாகிய  கர்த்தர்,  மனுஷரால்  அசட்டைபண்ணப்பட்டவரும்,  ஜாதியாரால்  அருவருக்கப்பட்டவரும்,  அதிகாரிகளுக்கு  ஊழியக்காரனுமாயிருக்கிறவரை  நோக்கி,  உண்மையுள்ள  கர்த்தர்  நிமித்தமும்,  உம்மைத்  தெரிந்துகொண்ட  இஸ்ரவேலின்  பரிசுத்தர்  நிமித்தமும்,  ராஜாக்கள்  கண்டு  எழுந்திருந்து,  பிரபுக்கள்  பணிந்துகொள்வார்கள்  என்று  சொல்லுகிறார்.  (ஏசாயா  49:7)

isravealin  meedparum  athin  parisuththarumaagiya  karththar,  manusharaal  asattaipa'n'nappattavarum,  jaathiyaaraal  aruvarukkappattavarum,  athigaariga'lukku  oozhiyakkaaranumaayirukki’ravarai  noakki,  u'nmaiyu'l'la  karththar  nimiththamum,  ummaith  therinthuko'nda  isravealin  parisuththar  nimiththamum,  raajaakka'l  ka'ndu  ezhunthirunthu,  pirabukka'l  pa'ninthuko'lvaarga'l  en’ru  sollugi’raar.  (easaayaa  49:7)

பின்னும்  கர்த்தர்:  அநுக்கிரக  காலத்திலே  நான்  உமக்குச்  செவிகொடுத்து,  இரட்சணியநாளிலே  உமக்கு  உதவிசெய்தேன்;  நீர்  பூமியைச்  சீர்ப்படுத்தி,  பாழாய்க்கிடக்கிற  இடங்களைச்  சுதந்தரிக்கப்பண்ணவும்;  (ஏசாயா  49:8)

pinnum  karththar:  anukkiraga  kaalaththilea  naan  umakkuch  sevikoduththu,  iradcha'niyanaa'lilea  umakku  uthaviseythean;  neer  boomiyaich  seerppaduththi,  paazhaaykkidakki’ra  idangga'laich  suthantharikkappa'n'navum;  (easaayaa  49:8)

கட்டுண்டவர்களை  நோக்கி:  புறப்பட்டுப்போங்கள்  என்றும்;  இருளில்  இருக்கிறவர்களை  நோக்கி:  வெளிப்படுங்கள்  என்றும்  சொல்லவும்,  நான்  உம்மைக்  காப்பாற்றி,  உம்மை  ஜனங்களுக்கு  உடன்படிக்கையாக  ஏற்படுத்துவேன்;  அவர்கள்  வழியோரங்களிலே  மேய்வார்கள்;  சகல  மேடுகளிலும்  அவர்களுக்கு  மேய்ச்சல்  உண்டாயிருக்கும்.  (ஏசாயா  49:9)

kattu'ndavarga'lai  noakki:  pu’rappattuppoangga'l  en’rum;  iru'lil  irukki’ravarga'lai  noakki:  ve'lippadungga'l  en’rum  sollavum,  naan  ummaik  kaappaat’ri,  ummai  janangga'lukku  udanpadikkaiyaaga  ea’rpaduththuvean;  avarga'l  vazhiyoarangga'lilea  meayvaarga'l;  sagala  meaduga'lilum  avarga'lukku  meaychchal  u'ndaayirukkum.  (easaayaa  49:9)

அவர்கள்  பசியாயிருப்பதுமில்லை,  தாகமாயிருப்பதுமில்லை;  உஷ்ணமாகிலும்,  வெயிலாகிலும்  அவர்கள்மேல்  படுவதுமில்லை;  அவர்களுக்கு  இரங்குகிறவர்  அவர்களை  நடத்தி,  அவர்களை  நீரூற்றுகளிடத்திற்குக்  கொண்டுபோய்விடுவார்.  (ஏசாயா  49:10)

avarga'l  pasiyaayiruppathumillai,  thaagamaayiruppathumillai;  ush'namaagilum,  veyilaagilum  avarga'lmeal  paduvathumillai;  avarga'lukku  iranggugi’ravar  avarga'lai  nadaththi,  avarga'lai  neeroot’ruga'lidaththi’rkuk  ko'ndupoayviduvaar.  (easaayaa  49:10)

என்  மலைகளையெல்லாம்  வழிகளாக்குவேன்;  என்  பாதைகள்  உயர்த்தப்படும்.  (ஏசாயா  49:11)

en  malaiga'laiyellaam  vazhiga'laakkuvean;  en  paathaiga'l  uyarththappadum.  (easaayaa  49:11)

இதோ,  இவர்கள்  தூரத்திலிருந்து  வருவார்கள்;  இதோ,  அவர்கள்  வடக்கிலும்  மேற்கிலுமிருந்து  வருவார்கள்;  இவர்கள்  சீனீம்  தேசத்திலுமிருந்து  வருவார்கள்  என்கிறார்.  (ஏசாயா  49:12)

ithoa,  ivarga'l  thooraththilirunthu  varuvaarga'l;  ithoa,  avarga'l  vadakkilum  mea’rkilumirunthu  varuvaarga'l;  ivarga'l  seeneem  theasaththilumirunthu  varuvaarga'l  engi’raar.  (easaayaa  49:12)

வானங்களே,  கெம்பீரித்துப்பாடுங்கள்;  பூமியே,  களிகூரு;  பர்வதங்களே,  கெம்பீரமாய்  முழங்குங்கள்;  கர்த்தர்  தம்முடைய  ஜனத்துக்கு  ஆறுதல்  செய்தார்;  சிறுமைப்பட்டிருக்கிற  தம்முடையவர்கள்மேல்  இரக்கமாயிருப்பார்.  (ஏசாயா  49:13)

vaanangga'lea,  kembeeriththuppaadungga'l;  boomiyea,  ka'likooru;  parvathangga'lea,  kembeeramaay  muzhanggungga'l;  karththar  thammudaiya  janaththukku  aa’ruthal  seythaar;  si’rumaippattirukki’ra  thammudaiyavarga'lmeal  irakkamaayiruppaar.  (easaayaa  49:13)

சீயோனோ:  கர்த்தர்  என்னைக்  கைவிட்டார்,  ஆண்டவர்  என்னை  மறந்தார்  என்று  சொல்லுகிறாள்.  (ஏசாயா  49:14)

seeyoanoa:  karththar  ennaik  kaivittaar,  aa'ndavar  ennai  ma’ranthaar  en’ru  sollugi’raa'l.  (easaayaa  49:14)

ஸ்திரீயானவள்  தன்  கர்ப்பத்தின்  பிள்ளைக்கு  இரங்காமல்,  தன்  பாலகனை  மறப்பாளோ?  அவர்கள்  மறந்தாலும்,  நான்  உன்னை  மறப்பதில்லை.  (ஏசாயா  49:15)

sthireeyaanava'l  than  karppaththin  pi'l'laikku  iranggaamal,  than  paalaganai  ma’rappaa'loa?  avarga'l  ma’ranthaalum,  naan  unnai  ma’rappathillai.  (easaayaa  49:15)

இதோ,  என்  உள்ளங்கைகளில்  உன்னை  வரைந்திருக்கிறேன்;  உன்  மதில்கள்  எப்போதும்  என்முன்  இருக்கிறது.  (ஏசாயா  49:16)

ithoa,  en  u'l'langkaiga'lil  unnai  varainthirukki’rean;  un  mathilga'l  eppoathum  enmun  irukki’rathu.  (easaayaa  49:16)

உன்  குமாரர்  தீவிரித்துவருவார்கள்;  உன்னை  நிர்மூலமாக்கினவர்களும்  உன்னைப்  பாழாக்கினவர்களும்  உன்னைவிட்டுப்  புறப்பட்டுப்போவார்கள்.  (ஏசாயா  49:17)

un  kumaarar  theeviriththuvaruvaarga'l;  unnai  nirmoolamaakkinavarga'lum  unnaip  paazhaakkinavarga'lum  unnaivittup  pu’rappattuppoavaarga'l.  (easaayaa  49:17)

உன்  கண்களை  ஏறெடுத்துச்  சுற்றிலும்  பார்;  அவர்களெல்லாரும்  ஏகமாய்க்  கூடி  உன்னிடத்தில்  வருகிறார்கள்;  நீ  அவர்களெல்லாரையும்  ஆபரணமாகத்  தரித்து,  மணமகள்  அணிந்துகொள்வதுபோல,  நீ  அவர்களை  அணிந்துகொள்வாய்  என்று,  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  (ஏசாயா  49:18)

un  ka'nga'lai  ea’reduththuch  sut’rilum  paar;  avarga'lellaarum  eagamaayk  koodi  unnidaththil  varugi’raarga'l;  nee  avarga'lellaaraiyum  aabara'namaagath  thariththu,  ma'namaga'l  a'ninthuko'lvathupoala,  nee  avarga'lai  a'ninthuko'lvaay  en’ru,  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththar  uraikki’raar.  (easaayaa  49:18)

அப்பொழுது  உன்  வனாந்தரங்களும்,  உன்  பாழிடங்களும்,  நிர்மூலமான  உன்  தேசமும்,  இனிக்  குடிகளின்  திரளினாலே  உனக்கு  நெருக்கமாயிருக்கும்;  உன்னை  விழுங்கினவர்கள்  தூரமாவார்கள்.  (ஏசாயா  49:19)

appozhuthu  un  vanaantharangga'lum,  un  paazhidangga'lum,  nirmoolamaana  un  theasamum,  inik  kudiga'lin  thira'linaalea  unakku  nerukkamaayirukkum;  unnai  vizhungginavarga'l  thooramaavaarga'l.  (easaayaa  49:19)

பிள்ளைகளற்றிருந்த  உனக்கு  உண்டாயிருக்கப்போகிற  பிள்ளைகள்:  இடம்  எங்களுக்கு  நெருக்கமாயிருக்கிறது;  நாங்கள்  குடியிருக்கும்படிக்கு  விலகியிரு  என்று,  உன்  காதுகள்  கேட்கச்  சொல்லுவார்கள்.  (ஏசாயா  49:20)

pi'l'laiga'lat’riruntha  unakku  u'ndaayirukkappoagi’ra  pi'l'laiga'l:  idam  engga'lukku  nerukkamaayirukki’rathu;  naangga'l  kudiyirukkumpadikku  vilagiyiru  en’ru,  un  kaathuga'l  keadkach  solluvaarga'l.  (easaayaa  49:20)

அப்பொழுது  நீ:  இவர்களை  எனக்குப்  பிறப்பித்தவர்  யார்?  நான்  பிள்ளைகளற்றும்,  தனித்தும்,  சிறைப்பட்டும்,  நிலையற்றும்  இருந்தேனே;  இவர்களை  எனக்கு  வளர்த்தவர்  யார்?  இதோ,  நான்  ஒன்றியாய்  விடப்பட்டிருந்தேனே;  இவர்கள்  எங்கேயிருந்தவர்கள்?  என்று  உன்  இருதயத்தில்  சொல்லுவாய்.  (ஏசாயா  49:21)

appozhuthu  nee:  ivarga'lai  enakkup  pi’rappiththavar  yaar?  naan  pi'l'laiga'lat’rum,  thaniththum,  si’raippattum,  nilaiyat’rum  iruntheanea;  ivarga'lai  enakku  va'larththavar  yaar?  ithoa,  naan  on’riyaay  vidappattiruntheanea;  ivarga'l  enggeayirunthavarga'l?  en’ru  un  iruthayaththil  solluvaay.  (easaayaa  49:21)

இதோ,  ஜாதிகளுக்கு  நேராக  என்  கரத்தை  உயர்த்தி,  ஜனங்களுக்கு  நேராக  என்  கொடியை  ஏற்றுவேன்;  அப்பொழுது  உன்  குமாரரைக்  கொடுங்கைகளில்  ஏந்திக்கொண்டு  வருவார்கள்;  உன்  குமாரத்திகள்  தோளின்மேல்  எடுத்துக்கொண்டு  வரப்படுவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  49:22)

ithoa,  jaathiga'lukku  nearaaga  en  karaththai  uyarththi,  janangga'lukku  nearaaga  en  kodiyai  eat’ruvean;  appozhuthu  un  kumaararaik  kodungkaiga'lil  eanthikko'ndu  varuvaarga'l;  un  kumaaraththiga'l  thoa'linmeal  eduththukko'ndu  varappaduvaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (easaayaa  49:22)

ராஜாக்கள்  உன்னை  வளர்க்கும்  தந்தைகளும்,  அவர்களுடைய  நாயகிகள்  உன்  கைத்தாய்களுமாயிருப்பார்கள்;  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  உன்னைப்  பணிந்து,  உன்  கால்களின்  தூளை  நக்குவார்கள்;  நான்  கர்த்தர்,  எனக்குக்  காத்திருக்கிறவர்கள்  வெட்கப்படுவதில்லை  என்பதை  அப்பொழுது  அறிந்துகொள்வாய்.  (ஏசாயா  49:23)

raajaakka'l  unnai  va'larkkum  thanthaiga'lum,  avarga'ludaiya  naayagiga'l  un  kaiththaayga'lumaayiruppaarga'l;  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthu  unnaip  pa'ninthu,  un  kaalga'lin  thoo'lai  nakkuvaarga'l;  naan  karththar,  enakkuk  kaaththirukki’ravarga'l  vedkappaduvathillai  enbathai  appozhuthu  a’rinthuko'lvaay.  (easaayaa  49:23)

பராக்கிரமன்  கையிலிருந்து  கொள்ளைப்பொருளைப்  பறிக்கக்கூடுமோ?  அல்லது  நீதியாய்ச்  சிறைப்பட்டுப்போனவர்களை  விடுவிக்கக்கூடுமோ?  (ஏசாயா  49:24)

baraakkiraman  kaiyilirunthu  ko'l'laipporu'laip  pa’rikkakkoodumoa?  allathu  neethiyaaych  si’raippattuppoanavarga'lai  viduvikkakkoodumoa?  (easaayaa  49:24)

என்றாலும்  இதோ,  பராக்கிரமனால்  சிறைப்படுத்தப்பட்டவர்களும்  விடுவிக்கப்படுவார்கள்;  பெலவந்தனால்  கொள்ளையிடப்பட்டதும்  விடுதலையாக்கப்படும்;  உன்னோடு  வழக்காடுகிறவர்களோடே  நான்  வழக்காடி,  உன்  பிள்ளைகளை  இரட்சித்துக்கொள்ளுவேன்;  (ஏசாயா  49:25)

en’raalum  ithoa,  baraakkiramanaal  si’raippaduththappattavarga'lum  viduvikkappaduvaarga'l;  belavanthanaal  ko'l'laiyidappattathum  viduthalaiyaakkappadum;  unnoadu  vazhakkaadugi’ravarga'loadea  naan  vazhakkaadi,  un  pi'l'laiga'lai  iradchiththukko'l'luvean;  (easaayaa  49:25)

உன்னை  ஒடுக்கினவர்களுடைய  மாம்சத்தை  அவர்களுக்கே  தின்னக்கொடுப்பேன்;  மதுபானத்தால்  வெறிகொள்வதுபோல்  தங்களுடைய  இரத்தத்தினால்  வெறிகொள்வார்கள்;  கர்த்தரும்  யாக்கோபின்  வல்லவருமாகிய  நான்  உன்  இரட்சகரும்  உன்  மீட்பருமாயிருக்கிறதை  மாம்சமான  யாவரும்  அறிந்துகொள்வார்களென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  49:26)

unnai  odukkinavarga'ludaiya  maamsaththai  avarga'lukkea  thinnakkoduppean;  mathubaanaththaal  ve’riko'lvathupoal  thangga'ludaiya  iraththaththinaal  ve’riko'lvaarga'l;  karththarum  yaakkoabin  vallavarumaagiya  naan  un  iradchagarum  un  meedparumaayirukki’rathai  maamsamaana  yaavarum  a’rinthuko'lvaarga'len’ru  karththar  sollugi’raar.  (easaayaa  49:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!