Tuesday, October 11, 2016

Easaayaa 48 | ஏசாயா 48 | Isaiah 48

இஸ்ரவேலென்னும்  பெயர்பெற்று,  யூதாவின்  நீரூற்றிலிருந்து  சுரந்தவர்களும்,  கர்த்தருடைய  நாமத்தின்மேல்  ஆணையிட்டு,  உண்மையும்  நீதியும்  இல்லாமல்  இஸ்ரவேலின்  தேவனை  அறிக்கையிடுகிறவர்களுமான  யாக்கோபின்  வம்சத்தாரே,  கேளுங்கள்.  (ஏசாயா  48:1)

isravealennum  peyarpet’ru,  yoothaavin  neeroot’rilirunthu  suranthavarga'lum,  karththarudaiya  naamaththinmeal  aa'naiyittu,  u'nmaiyum  neethiyum  illaamal  isravealin  theavanai  a’rikkaiyidugi’ravarga'lumaana  yaakkoabin  vamsaththaarea,  kea'lungga'l.  (easaayaa  48:1)

அவர்கள்  தங்களைப்  பரிசுத்த  நகரத்தார்  என்று  சொல்லி,  சேனைகளின்  கர்த்தர்  என்னும்  நாமமுள்ள  இஸ்ரவேலின்  தேவன்மேல்  பற்றுதலாயிருக்கிறார்கள்.  (ஏசாயா  48:2)

avarga'l  thangga'laip  parisuththa  nagaraththaar  en’ru  solli,  seanaiga'lin  karththar  ennum  naamamu'l'la  isravealin  theavanmeal  pat’ruthalaayirukki’raarga'l.  (easaayaa  48:2)

பூர்வகாலத்தில்  நடந்தவைகளை  ஆதிமுதல்  அறிவித்தேன்,  அவைகள்  என்  வாயிலிருந்து  பிறந்தன,  அவைகளை  வெளிப்படுத்தினேன்;  அவைகளைச்  சடிதியாய்ச்  செய்தேன்,  அவைகள்  நடந்தன.  (ஏசாயா  48:3)

poorvakaalaththil  nadanthavaiga'lai  aathimuthal  a’riviththean,  avaiga'l  en  vaayilirunthu  pi’ranthana,  avaiga'lai  ve'lippaduththinean;  avaiga'laich  sadithiyaaych  seythean,  avaiga'l  nadanthana.  (easaayaa  48:3)

நீ  கடினமுள்ளவனென்றும்,  உன்  பிடரி  நரம்பு  இரும்பென்றும்,  உன்  நெற்றி  வெண்கலமென்றும்  அறிந்திருக்கிறேன்.  (ஏசாயா  48:4)

nee  kadinamu'l'lavanen’rum,  un  pidari  narambu  irumben’rum,  un  net’ri  ve'ngalamen’rum  a’rinthirukki’rean.  (easaayaa  48:4)

ஆகையால்:  என்  விக்கிரகம்  அவைகளைச்  செய்ததென்றும்,  நான்  செய்த  சுரூபமும்,  நான்  வார்ப்பித்த  விக்கிரகமும்  அவைகளைக்  கட்டளையிட்டதென்றும்  நீ  சொல்லாதபடிக்கு,  நான்  அவைகளை  முன்னமே  உனக்கு  அறிவித்து,  அவைகள்  வராததற்குமுன்னே  உனக்கு  வெளிப்படுத்தினேன்.  (ஏசாயா  48:5)

aagaiyaal:  en  vikkiragam  avaiga'laich  seythathen’rum,  naan  seytha  suroobamum,  naan  vaarppiththa  vikkiragamum  avaiga'laik  katta'laiyittathen’rum  nee  sollaathapadikku,  naan  avaiga'lai  munnamea  unakku  a’riviththu,  avaiga'l  varaathatha’rkumunnea  unakku  ve'lippaduththinean.  (easaayaa  48:5)

அவைகளைக்  கேள்விப்பட்டாயே,  அவைகளையெல்லாம்  பார்,  இப்பொழுது  நீங்களும்  அவைகளை  அறிவிக்கலாமல்லவோ?  இதுமுதல்  புதியவைகளானவைகளையும்,  நீ  அறியாத  மறைபொருளானவைகளையும்  உனக்குத்  தெரிவிக்கிறேன்.  (ஏசாயா  48:6)

avaiga'laik  kea'lvippattaayea,  avaiga'laiyellaam  paar,  ippozhuthu  neengga'lum  avaiga'lai  a’rivikkalaamallavoa?  ithumuthal  puthiyavaiga'laanavaiga'laiyum,  nee  a’riyaatha  ma’raiporu'laanavaiga'laiyum  unakkuth  therivikki’rean.  (easaayaa  48:6)

அவைகள்  ஆதிமுதற்கொண்டு  அல்ல,  இப்பொழுதே  உண்டாக்கப்பட்டன;  இதோ,  அவைகளை  அறிவேன்  என்று  நீ  சொல்லாதபடிக்கு,  இந்நாட்களுக்கு  முன்னே  நீ  அவைகளைக்  கேள்விப்படவில்லை.  (ஏசாயா  48:7)

avaiga'l  aathimutha’rko'ndu  alla,  ippozhuthea  u'ndaakkappattana;  ithoa,  avaiga'lai  a’rivean  en’ru  nee  sollaathapadikku,  innaadka'lukku  munnea  nee  avaiga'laik  kea'lvippadavillai.  (easaayaa  48:7)

நீ  கேள்விப்படவுமில்லை,  அறியவுமில்லை;  ஆதிமுதல்  உன்  செவி  திறந்திருக்கவுமில்லை;  நீ  துரோகம்பண்ணுவாயென்பதையும்,  தாயின்  கர்ப்பந்தொடங்கி  நீ  மீறுகிறவனென்று  பெயர்பெற்றதையும்  அறிந்திருக்கிறேன்.  (ஏசாயா  48:8)

nee  kea'lvippadavumillai,  a’riyavumillai;  aathimuthal  un  sevi  thi’ranthirukkavumillai;  nee  thuroagampa'n'nuvaayenbathaiyum,  thaayin  karppanthodanggi  nee  mee’rugi’ravanen’ru  peyarpet’rathaiyum  a’rinthirukki’rean.  (easaayaa  48:8)

என்  நாமத்தினிமித்தம்  என்  கோபத்தை  நிறுத்திவைத்தேன்;  உன்னைச்  சங்கரிக்காதபடிக்கு  நான்  என்  புகழ்ச்சியினிமித்தம்  உன்மேல்  பொறுமையாயிருப்பேன்.  (ஏசாயா  48:9)

en  naamaththinimiththam  en  koabaththai  ni’ruththivaiththean;  unnaich  sanggarikkaathapadikku  naan  en  pugazhchchiyinimiththam  unmeal  po’rumaiyaayiruppean.  (easaayaa  48:9)

இதோ,  உன்னைப்  புடமிட்டேன்;  ஆனாலும்  வெள்ளியைப்போலல்ல,  உபத்திரவத்தின்  குகையிலே  உன்னைத்  தெரிந்துகொண்டேன்.  (ஏசாயா  48:10)

ithoa,  unnaip  pudamittean;  aanaalum  ve'l'liyaippoalalla,  ubaththiravaththin  kugaiyilea  unnaith  therinthuko'ndean.  (easaayaa  48:10)

என்னிமித்தம்,  என்னிமித்தமே,  அப்படிச்  செய்வேன்;  என்  நாமத்தின்  பரிசுத்தம்  எப்படிக்  குலைக்கப்படலாம்?  என்  மகிமையை  நான்  வேறொருவருக்குங்கொடேன்.  (ஏசாயா  48:11)

ennimiththam,  ennimiththamea,  appadich  seyvean;  en  naamaththin  parisuththam  eppadik  kulaikkappadalaam?  en  magimaiyai  naan  vea’roruvarukkungkodean.  (easaayaa  48:11)

யாக்கோபே,  நான்  அழைத்திருக்கிற  இஸ்ரவேலே,  எனக்குச்  செவிகொடு;  நான்  அவரே,  நான்  முந்தினவரும்,  நான்  பிந்தினவருமாமே.  (ஏசாயா  48:12)

yaakkoabea,  naan  azhaiththirukki’ra  isravealea,  enakkuch  sevikodu;  naan  avarea,  naan  munthinavarum,  naan  pinthinavarumaamea.  (easaayaa  48:12)

என்  கரமே  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  என்  வலதுகை  வானங்களை  அளவிட்டது;  நான்  அவைகளுக்குக்  கட்டளையிட,  அவைகள்  அனைத்தும்  நிற்கும்.  (ஏசாயா  48:13)

en  karamea  boomiyai  asthibaarappaduththi,  en  valathukai  vaanangga'lai  a'lavittathu;  naan  avaiga'lukkuk  katta'laiyida,  avaiga'l  anaiththum  ni’rkum.  (easaayaa  48:13)

நீங்களெல்லாரும்  கூடிவந்து  கேளுங்கள்;  கர்த்தருக்குப்  பிரியமானவன்  அவருக்குச்  சித்தமானதைப்  பாபிலோனில்  செய்வான்;  அவன்  புயம்  கல்தேயரின்மேல்  இருக்கும்  என்பதை  இவர்களில்  அறிவித்தவன்  யார்?  (ஏசாயா  48:14)

neengga'lellaarum  koodivanthu  kea'lungga'l;  karththarukkup  piriyamaanavan  avarukkuch  siththamaanathaip  baabiloanil  seyvaan;  avan  puyam  kaltheayarinmeal  irukkum  enbathai  ivarga'lil  a’riviththavan  yaar?  (easaayaa  48:14)

நான்,  நானே  அதைச்  சொன்னேன்;  நான்  அவனை  அழைத்தேன்;  நான்  அவனை  வரப்பண்ணினேன்;  அவன்  வழி  வாய்க்கும்.  (ஏசாயா  48:15)

naan,  naanea  athaich  sonnean;  naan  avanai  azhaiththean;  naan  avanai  varappa'n'ninean;  avan  vazhi  vaaykkum.  (easaayaa  48:15)

நீங்கள்  என்  சமீபத்தில்  வந்து,  நான்  சொல்வதைக்  கேளுங்கள்;  நான்  ஆதிமுதற்கொண்டு  அந்தரங்கத்தில்  பேசவில்லை;  அது  உண்டான  காலந்துவக்கி  அங்கே  நான்  இருந்தேன்;  இப்பொழுதோ  கர்த்தராகிய  ஆண்டவரும்,  அவருடைய  ஆவியும்  என்னை  அனுப்புகிறார்.  (ஏசாயா  48:16)

neengga'l  en  sameebaththil  vanthu,  naan  solvathaik  kea'lungga'l;  naan  aathimutha’rko'ndu  antharanggaththil  peasavillai;  athu  u'ndaana  kaalanthuvakki  anggea  naan  irunthean;  ippozhuthoa  karththaraagiya  aa'ndavarum,  avarudaiya  aaviyum  ennai  anuppugi’raar.  (easaayaa  48:16)

இஸ்ரவேலின்  பரிசுத்தராயிருக்கிற  உன்  மீட்பரான  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  பிரயோஜனமாயிருக்கிறதை  உனக்குப்  போதித்து,  நீ  நடக்கவேண்டிய  வழியிலே  உன்னை  நடத்துகிற  உன்  தேவனாகிய  கர்த்தர்  நானே.  (ஏசாயா  48:17)

isravealin  parisuththaraayirukki’ra  un  meedparaana  karththar  sollugi’rathaavathu:  pirayoajanamaayirukki’rathai  unakkup  poathiththu,  nee  nadakkavea'ndiya  vazhiyilea  unnai  nadaththugi’ra  un  theavanaagiya  karththar  naanea.  (easaayaa  48:17)

ஆ,  என்  கற்பனைகளைக்  கவனித்தாயானால்  நலமாயிருக்கும்;  அப்பொழுது  உன்  சமாதானம்  நதியைப்போலும்,  உன்  நீதி  சமுத்திரத்தின்  அலைகளைப்போலும்  இருக்கும்.  (ஏசாயா  48:18)

aa,  en  ka’rpanaiga'laik  kavaniththaayaanaal  nalamaayirukkum;  appozhuthu  un  samaathaanam  nathiyaippoalum,  un  neethi  samuththiraththin  alaiga'laippoalum  irukkum.  (easaayaa  48:18)

அப்பொழுது  உன்  சந்ததி  மணலத்தனையாகவும்,  உன்  கர்ப்பப்பிறப்பு  அதின்  அணுக்களத்தனையாகவும்  இருக்கும்;  அப்பொழுது  அதின்  பெயர்  நம்மை  விட்டு  அற்றுப்போகாமலும்  அழிக்கப்படாமலும்  இருக்கும்.  (ஏசாயா  48:19)

appozhuthu  un  santhathi  ma'nalaththanaiyaagavum,  un  karppappi’rappu  athin  a'nukka'laththanaiyaagavum  irukkum;  appozhuthu  athin  peyar  nammai  vittu  at’ruppoagaamalum  azhikkappadaamalum  irukkum.  (easaayaa  48:19)

பாபிலோனிலிருந்து  புறப்படுங்கள்;  கல்தேயரைவிட்டு  ஓடிவாருங்கள்;  கர்த்தர்  தம்முடைய  தாசனாகிய  யாக்கோபை  மீட்டுக்கொண்டாரென்று  சொல்லுங்கள்;  இதைக்  கெம்பீரசத்தமாய்க்  கூறிப்  பிரசித்தப்படுத்துங்கள்,  பூமியின்  கடையாந்தரமட்டும்  வெளிப்படுத்துங்கள்  என்கிறார்.  (ஏசாயா  48:20)

baabiloanilirunthu  pu’rappadungga'l;  kaltheayaraivittu  oadivaarungga'l;  karththar  thammudaiya  thaasanaagiya  yaakkoabai  meettukko'ndaaren’ru  sollungga'l;  ithaik  kembeerasaththamaayk  koo’rip  pirasiththappaduththungga'l,  boomiyin  kadaiyaantharamattum  ve'lippaduththungga'l  engi’raar.  (easaayaa  48:20)

அவர்  அவர்களை  வனாந்தரங்களில்  நடத்தும்போது,  அவர்களுக்குத்  தாகவிடாயிருந்ததில்லை;  கன்மலையிலிருந்து  தண்ணீரை  அவர்களுக்குச்  சுரக்கப்பண்ணினார்,  கன்மலையைப்  பிளந்தார்,  தண்ணீர்  ஓடிவந்தது.  (ஏசாயா  48:21)

avar  avarga'lai  vanaantharangga'lil  nadaththumpoathu,  avarga'lukkuth  thaagavidaayirunthathillai;  kanmalaiyilirunthu  tha'n'neerai  avarga'lukkuch  surakkappa'n'ninaar,  kanmalaiyaip  pi'lanthaar,  tha'n'neer  oadivanthathu.  (easaayaa  48:21)

துன்மார்க்கருக்குச்  சமாதானம்  இல்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  48:22)

thunmaarkkarukkuch  samaathaanam  illaiyen’ru  karththar  sollugi’raar.  (easaayaa  48:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!