Monday, October 10, 2016

Easaayaa 45 | ஏசாயா 45 | Isaiah 45

கர்த்தராகிய  நான்  அபிஷேகம்பண்ணின  கோரேசுக்கு  முன்பாக  ஜாதிகளைக்  கீழ்ப்படுத்தி,  ராஜாக்களின்  இடைக்கட்டுகளை  அவிழ்க்கும்படிக்கும்,  அவனுக்கு  முன்பாக  வாசல்கள்  பூட்டப்படாதிருக்க,  கதவுகளைத்  திறந்துவைக்கும்படிக்கும்,  அவனைப்பார்த்து,  அவன்  வலதுகையைப்  பிடித்துக்கொண்டு,  அவனுக்குச்  சொல்லுகிறதாவது:  (ஏசாயா  45:1)

karththaraagiya  naan  abisheagampa'n'nina  koareasukku  munbaaga  jaathiga'laik  keezhppaduththi,  raajaakka'lin  idaikkattuga'lai  avizhkkumpadikkum,  avanukku  munbaaga  vaasalga'l  poottappadaathirukka,  kathavuga'laith  thi’ranthuvaikkumpadikkum,  avanaippaarththu,  avan  valathukaiyaip  pidiththukko'ndu,  avanukkuch  sollugi’rathaavathu:  (easaayaa  45:1)

நான்  உனக்கு  முன்னே  போய்,  கோணலானவைகளைச்  செவ்வையாக்குவேன்.  (ஏசாயா  45:2)

naan  unakku  munnea  poay,  koa'nalaanavaiga'laich  sevvaiyaakkuvean.  (easaayaa  45:2)

உன்னைப்  பெயர்சொல்லி  அழைக்கிற  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  நானே  என்று  நீ  அறியும்படிக்கு,  (ஏசாயா  45:3)

unnaip  peyarsolli  azhaikki’ra  isravealin  theavanaagiya  karththar  naanea  en’ru  nee  a’riyumpadikku,  (easaayaa  45:3)

வெண்கலக்  கதவுகளை  உடைத்து,  இருப்புத்  தாழ்ப்பாள்களை  முறித்து,  அந்தகாரத்தில்  இருக்கிற  பொக்கிஷங்களையும்,  ஒளிப்பிடத்தில்  இருக்கிற  புதையல்களையும்  உனக்குக்  கொடுப்பேன்;  நான்  என்  தாசனாகிய  யாக்கோபினிமித்தமும்,  நான்  தெரிந்துகொண்ட  இஸ்ரவேலினிமித்தமும்,  நான்  உன்னைப்  பெயர்சொல்லி  அழைத்து,  நீ  என்னை  அறியாதிருந்தும்,  உனக்கு  நாமம்  தரித்தேன்.  (ஏசாயா  45:4)

ve'ngalak  kathavuga'lai  udaiththu,  irupputh  thaazhppaa'lga'lai  mu’riththu,  anthagaaraththil  irukki’ra  pokkishangga'laiyum,  o'lippidaththil  irukki’ra  puthaiyalga'laiyum  unakkuk  koduppean;  naan  en  thaasanaagiya  yaakkoabinimiththamum,  naan  therinthuko'nda  isravealinimiththamum,  naan  unnaip  peyarsolli  azhaiththu,  nee  ennai  a’riyaathirunthum,  unakku  naamam  thariththean.  (easaayaa  45:4)

நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை;  என்னைத்தவிரத்  தேவன்  இல்லை.  (ஏசாயா  45:5)

naanea  karththar,  vea’roruvar  illai;  ennaiththavirath  theavan  illai.  (easaayaa  45:5)

என்னைத்தவிர  ஒருவரும்  இல்லையென்று  சூரியன்  உதிக்கிற  திசையிலும்,  அது  அஸ்தமிக்கிற  திசையிலும்  அறியப்படும்படிக்கு  நீ  என்னை  அறியாதிருந்தும்,  நான்  உனக்கு  இடைக்கட்டு  கட்டினேன்;  நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை.  (ஏசாயா  45:6)

ennaiththavira  oruvarum  illaiyen’ru  sooriyan  uthikki’ra  thisaiyilum,  athu  asthamikki’ra  thisaiyilum  a’riyappadumpadikku  nee  ennai  a’riyaathirunthum,  naan  unakku  idaikkattu  kattinean;  naanea  karththar,  vea’roruvar  illai.  (easaayaa  45:6)

ஒளியைப்  படைத்து,  இருளையும்  உண்டாக்கினேன்,  சமாதானத்தைப்  படைத்துத்  தீங்கையும்  உண்டாக்குகிறவர்  நானே;  கர்த்தராகிய  நானே  இவைகளையெல்லாம்  செய்கிறவர்.  (ஏசாயா  45:7)

o'liyaip  padaiththu,  iru'laiyum  u'ndaakkinean,  samaathaanaththaip  padaiththuth  theenggaiyum  u'ndaakkugi’ravar  naanea;  karththaraagiya  naanea  ivaiga'laiyellaam  seygi’ravar.  (easaayaa  45:7)

வானங்களே,  உயர  இருந்து  சொரியுங்கள்;  ஆகாயமண்டலங்கள்  நீதியைப்பொழியக்கடவது;  பூமி  திறவுண்டு,  இரட்சிப்பின்  கனியைத்தந்து,  நீதியுங்கூட  விளைவதாக;  கர்த்தராகிய  நான்  இவைகளை  உண்டாக்குகிறேன்.  (ஏசாயா  45:8)

vaanangga'lea,  uyara  irunthu  soriyungga'l;  aagaayama'ndalangga'l  neethiyaippozhiyakkadavathu;  boomi  thi’ravu'ndu,  iradchippin  kaniyaiththanthu,  neethiyungkooda  vi'laivathaaga;  karththaraagiya  naan  ivaiga'lai  u'ndaakkugi’rean.  (easaayaa  45:8)

மண்ணோடுகளுக்கொத்த  ஓடாயிருந்தும்,  தன்னை  உருவாக்கினவரோடே  வழக்காடுகிறவனுக்கு  ஐயோ!  களிமண்  தன்னை  உருவாக்கினவனை  நோக்கி:  என்ன  செய்கிறாயென்று  சொல்லத்தகுமோ?  உன்  கிரியையானது:  அவருக்குக்  கைகள்  இல்லையென்று  சொல்லலாமோ?  (ஏசாயா  45:9)

ma'n'noaduga'lukkoththa  oadaayirunthum,  thannai  uruvaakkinavaroadea  vazhakkaadugi’ravanukku  aiyoa!  ka'lima'n  thannai  uruvaakkinavanai  noakki:  enna  seygi’raayen’ru  sollaththagumoa?  un  kiriyaiyaanathu:  avarukkuk  kaiga'l  illaiyen’ru  sollalaamoa?  (easaayaa  45:9)

தகப்பனை  நோக்கி:  ஏன்  ஜநிப்பித்தாய்  என்றும்,  தாயை  நோக்கி:  ஏன்  பெற்றாய்  என்றும்  சொல்லுகிறவனுக்கு  ஐயோ!  (ஏசாயா  45:10)

thagappanai  noakki:  ean  janippiththaay  en’rum,  thaayai  noakki:  ean  pet’raay  en’rum  sollugi’ravanukku  aiyoa!  (easaayaa  45:10)

இஸ்ரவேலின்  பரிசுத்தரும்  அவனை  உருவாக்கினவருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  வருங்காரியங்களை  என்னிடத்தில்  கேளுங்கள்;  என்  பிள்ளைகளைக்குறித்தும்,  என்  கரங்களின்  கிரியைகளைக்குறித்தும்  எனக்குக்  கட்டளையிடுங்கள்.  (ஏசாயா  45:11)

isravealin  parisuththarum  avanai  uruvaakkinavarumaagiya  karththar  sollugi’rathaavathu:  varungkaariyangga'lai  ennidaththil  kea'lungga'l;  en  pi'l'laiga'laikku’riththum,  en  karangga'lin  kiriyaiga'laikku’riththum  enakkuk  katta'laiyidungga'l.  (easaayaa  45:11)

நான்  பூமியை  உண்டுபண்ணி,  நானே  அதின்மேல்  இருக்கிற  மனுஷனைச்  சிருஷ்டித்தேன்;  என்  கரங்கள்  வானங்களை  விரித்தன;  அவைகளின்  சர்வசேனையையும்  நான்  கட்டளையிட்டேன்.  (ஏசாயா  45:12)

naan  boomiyai  u'ndupa'n'ni,  naanea  athinmeal  irukki’ra  manushanaich  sirushdiththean;  en  karangga'l  vaanangga'lai  viriththana;  avaiga'lin  sarvaseanaiyaiyum  naan  katta'laiyittean.  (easaayaa  45:12)

நான்  நீதியின்படி  அவனை  எழுப்பினேன்;  அவன்  வழிகளையெல்லாம்  செவ்வைப்படுத்துவேன்;  அவன்  என்  நகரத்தைக்  கட்டி,  சிறைப்பட்டுப்போன  என்னுடையவர்களைக்  கிரயமில்லாமலும்  பரிதானமில்லாமலும்  விடுதலையாக்குவான்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  45:13)

naan  neethiyinpadi  avanai  ezhuppinean;  avan  vazhiga'laiyellaam  sevvaippaduththuvean;  avan  en  nagaraththaik  katti,  si’raippattuppoana  ennudaiyavarga'laik  kirayamillaamalum  parithaanamillaamalum  viduthalaiyaakkuvaan  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (easaayaa  45:13)

எகிப்தின்  சம்பாத்தியமும்,  எத்தியோப்பியாவின்  வர்த்தகலாபமும்,  நெடிய  ஆட்களாகிய  சபேயரின்  வர்த்தகலாபமும்,  உன்னிடத்திற்குத்  தாண்டிவந்து,  உன்னுடையதாகும்;  அவர்கள்  உன்  பின்னே  சென்று,  விலங்கிடப்பட்டு  நடந்துவந்து:  உன்னுடனே  மாத்திரம்  தேவன்  இருக்கிறார்  என்றும்,  அவரையல்லாமல்  வேறே  தேவன்  இல்லையென்றும்  சொல்லி,  உன்னைப்  பணிந்துகொண்டு,  உன்னை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  45:14)

egipthin  sambaaththiyamum,  eththiyoappiyaavin  varththagalaabamum,  nediya  aadka'laagiya  sabeayarin  varththagalaabamum,  unnidaththi’rkuth  thaa'ndivanthu,  unnudaiyathaagum;  avarga'l  un  pinnea  sen’ru,  vilanggidappattu  nadanthuvanthu:  unnudanea  maaththiram  theavan  irukki’raar  en’rum,  avaraiyallaamal  vea’rea  theavan  illaiyen’rum  solli,  unnaip  pa'ninthuko'ndu,  unnai  noakki  vi'n'nappampa'n'nuvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (easaayaa  45:14)

இஸ்ரவேலின்  தேவனும்  இரட்சகருமாகிய  நீர்  மெய்யாகவே  உம்மை  மறைத்துக்கொண்டிருக்கிற  தேவனாயிருக்கிறீர்.  (ஏசாயா  45:15)

isravealin  theavanum  iradchagarumaagiya  neer  meyyaagavea  ummai  ma’raiththukko'ndirukki’ra  theavanaayirukki’reer.  (easaayaa  45:15)

விக்கிரகங்களை  உண்டுபண்ணுகிற  அனைவரும்  வெட்கப்பட்டு  இலச்சையடைந்து,  ஏகமாய்க்  கலங்கிப்போவார்கள்.  (ஏசாயா  45:16)

vikkiragangga'lai  u'ndupa'n'nugi’ra  anaivarum  vedkappattu  ilachchaiyadainthu,  eagamaayk  kalanggippoavaarga'l.  (easaayaa  45:16)

இஸ்ரவேலோ,  கர்த்தராலே  நித்திய  இரட்சிப்பினால்  இரட்சிக்கப்படுவான்;  நீங்கள்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  வெட்கப்படாமலும்  கலங்காமலும்  இருப்பீர்கள்.  (ஏசாயா  45:17)

isravealoa,  karththaraalea  niththiya  iradchippinaal  iradchikkappaduvaan;  neengga'l  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  vedkappadaamalum  kalanggaamalum  iruppeerga'l.  (easaayaa  45:17)

வானங்களைச்  சிருஷ்டித்துப்  பூமியையும்  வெறுமையாயிருக்கச்  சிருஷ்டியாமல்  அதைக்  குடியிருப்புக்காகச்  செய்து  படைத்து,  அதை  உருவேற்படுத்தின  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை.  (ஏசாயா  45:18)

vaanangga'laich  sirushdiththup  boomiyaiyum  ve’rumaiyaayirukkach  sirushdiyaamal  athaik  kudiyiruppukkaagach  seythu  padaiththu,  athai  uruvea’rpaduththina  theavanaagiya  karththar  sollugi’rathaavathu:  naanea  karththar,  vea’roruvar  illai.  (easaayaa  45:18)

நான்  அந்தரங்கத்திலும்,  பூமியின்  அந்தகாரமான  இடத்திலும்  பேசினதில்லை;  விருதாவாக  என்னைத்  தேடுங்களென்று  நான்  யாக்கோபின்  சந்ததிக்குச்  சொன்னதுமில்லை;  நான்  நீதியைப்பேசி,  யதார்த்தமானவைகளை  அறிவிக்கிற  கர்த்தர்.  (ஏசாயா  45:19)

naan  antharanggaththilum,  boomiyin  anthagaaramaana  idaththilum  peasinathillai;  viruthaavaaga  ennaith  theadungga'len’ru  naan  yaakkoabin  santhathikkuch  sonnathumillai;  naan  neethiyaippeasi,  yathaarththamaanavaiga'lai  a’rivikki’ra  karththar.  (easaayaa  45:19)

ஜாதிகளினின்று  தப்பினவர்களே,  கூட்டங்கூடி  வாருங்கள்;  ஏகமாய்ச்  சேருங்கள்;  தங்கள்  விக்கிரகமாகிய  மரத்தைச்  சுமந்து,  இரட்சிக்கமாட்டாத  தேவனைத்  தொழுதுகொள்ளுகிறவர்கள்  அறிவில்லாதவர்கள்.  (ஏசாயா  45:20)

jaathiga'linin’ru  thappinavarga'lea,  koottangkoodi  vaarungga'l;  eagamaaych  searungga'l;  thangga'l  vikkiragamaagiya  maraththaich  sumanthu,  iradchikkamaattaatha  theavanaith  thozhuthuko'l'lugi’ravarga'l  a’rivillaathavarga'l.  (easaayaa  45:20)

நீங்கள்  தெரிவிக்கும்படி  சேர்ந்து,  ஏகமாய்  யோசனைபண்ணுங்கள்;  இதைப்  பூர்வகாலமுதற்கொண்டு  விளங்கப்பண்ணி,  அந்நாள்துவக்கி  இதை  அறிவித்தவர்  யார்?  கர்த்தராகிய  நான்  அல்லவோ?  நீதிபரரும்  இரட்சகருமாகிய  என்னையல்லாமல்  வேறே  தேவன்  இல்லை;  என்னைத்தவிர  வேறொருவரும்  இல்லை.  (ஏசாயா  45:21)

neengga'l  therivikkumpadi  searnthu,  eagamaay  yoasanaipa'n'nungga'l;  ithaip  poorvakaalamutha’rko'ndu  vi'langgappa'n'ni,  annaa'lthuvakki  ithai  a’riviththavar  yaar?  karththaraagiya  naan  allavoa?  neethipararum  iradchagarumaagiya  ennaiyallaamal  vea’rea  theavan  illai;  ennaiththavira  vea’roruvarum  illai.  (easaayaa  45:21)

பூமியின்  எல்லையெங்குமுள்ளவர்களே,  என்னை  நோக்கிப்பாருங்கள்;  அப்பொழுது  இரட்சிக்கப்படுவீர்கள்;  நானே  தேவன்,  வேறொருவரும்  இல்லை.  (ஏசாயா  45:22)

boomiyin  ellaiyenggumu'l'lavarga'lea,  ennai  noakkippaarungga'l;  appozhuthu  iradchikkappaduveerga'l;  naanea  theavan,  vea’roruvarum  illai.  (easaayaa  45:22)

முழங்கால்  யாவும்  எனக்கு  முன்பாக  முடங்கும்,  நாவு  யாவும்  என்னை  முன்னிட்டு  ஆணையிடும்  என்று  நான்  என்னைக்கொண்டே  ஆணையிட்டிருக்கிறேன்;  இந்த  நீதியான  வார்த்தை  என்  வாயிலிருந்து  புறப்பட்டது;  இது  மாறுவது  இல்லையென்கிறார்.  (ஏசாயா  45:23)

muzhangkaal  yaavum  enakku  munbaaga  mudanggum,  naavu  yaavum  ennai  munnittu  aa'naiyidum  en’ru  naan  ennaikko'ndea  aa'naiyittirukki’rean;  intha  neethiyaana  vaarththai  en  vaayilirunthu  pu’rappattathu;  ithu  maa’ruvathu  illaiyengi’raar.  (easaayaa  45:23)

கர்த்தரிடத்தில்மாத்திரம்  நீதியும்  வல்லமையுமுண்டென்று  அவனவன்  சொல்லி  அவரிடத்தில்  வந்து  சேருவான்;  அவருக்கு  விரோதமாய்  எரிச்சல்கொண்டிருக்கிற  யாவரும்  வெட்கப்படுவார்கள்.  (ஏசாயா  45:24)

karththaridaththilmaaththiram  neethiyum  vallamaiyumu'nden’ru  avanavan  solli  avaridaththil  vanthu  searuvaan;  avarukku  viroathamaay  erichchalko'ndirukki’ra  yaavarum  vedkappaduvaarga'l.  (easaayaa  45:24)

இஸ்ரவேலின்  சந்ததியாகிய  யாவரும்  கர்த்தருக்குள்  நீதிமான்களாக்கப்பட்டு  மேன்மைபாராட்டுவார்கள்.  (ஏசாயா  45:25)

isravealin  santhathiyaagiya  yaavarum  karththarukku'l  neethimaanga'laakkappattu  meanmaipaaraattuvaarga'l.  (easaayaa  45:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!