Monday, October 10, 2016

Easaayaa 43 | ஏசாயா 43 | Isaiah 43

இப்போதும்  யாக்கோபே,  உன்னைச்  சிருஷ்டித்தவரும்,  இஸ்ரவேலே,  உன்னை  உருவாக்கினவருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  பயப்படாதே;  உன்னை  மீட்டுக்கொண்டேன்;  உன்னைப்  பேர்சொல்லி  அழைத்தேன்;  நீ  என்னுடையவன்.  (ஏசாயா  43:1)

ippoathum  yaakkoabea,  unnaich  sirushdiththavarum,  isravealea,  unnai  uruvaakkinavarumaagiya  karththar  sollugi’rathaavathu:  bayappadaathea;  unnai  meettukko'ndean;  unnaip  pearsolli  azhaiththean;  nee  ennudaiyavan.  (easaayaa  43:1)

நீ  தண்ணீர்களைக்  கடக்கும்போது  நான்  உன்னோடு  இருப்பேன்;  நீ  ஆறுகளைக்  கடக்கும்போது  அவைகள்  உன்மேல்  புரளுவதில்லை;  நீ  அக்கினியில்  நடக்கும்போது  வேகாதிருப்பாய்;  அக்கினிஜுவாலை  உன்பேரில்  பற்றாது.  (ஏசாயா  43:2)

nee  tha'n'neerga'laik  kadakkumpoathu  naan  unnoadu  iruppean;  nee  aa’ruga'laik  kadakkumpoathu  avaiga'l  unmeal  pura'luvathillai;  nee  akkiniyil  nadakkumpoathu  veagaathiruppaay;  akkinijuvaalai  unpearil  pat’raathu.  (easaayaa  43:2)

நான்  இஸ்ரவேலின்  பரிசுத்தரும்,  உன்  இரட்சகருமாயிருக்கிற  உன்  தேவனாகிய  கர்த்தர்;  உன்னை  மீட்கும்பொருளாக  எகிப்தையும்,  உனக்கு  ஈடாக  எத்தியோப்பியாவையும்  சேபாவையும்  கொடுத்தேன்.  (ஏசாயா  43:3)

naan  isravealin  parisuththarum,  un  iradchagarumaayirukki’ra  un  theavanaagiya  karththar;  unnai  meedkumporu'laaga  egipthaiyum,  unakku  eedaaga  eththiyoappiyaavaiyum  seabaavaiyum  koduththean.  (easaayaa  43:3)

நீ  என்  பார்வைக்கு  அருமையானபடியினால்  கனம்பெற்றாய்;  நானும்  உன்னைச்  சிநேகித்தேன்,  ஆதலால்  உனக்குப்  பதிலாக  மனுஷர்களையும்,  உன்  ஜீவனுக்கு  ஈடாக  ஜனங்களையும்  கொடுப்பேன்.  (ஏசாயா  43:4)

nee  en  paarvaikku  arumaiyaanapadiyinaal  kanampet’raay;  naanum  unnaich  sineagiththean,  aathalaal  unakkup  bathilaaga  manusharga'laiyum,  un  jeevanukku  eedaaga  janangga'laiyum  koduppean.  (easaayaa  43:4)

பயப்படாதே,  நான்  உன்னோடே  இருக்கிறேன்;  நான்  உன்  சந்ததியைக்  கிழக்கிலிருந்து  வரப்பண்ணி,  உன்னை  மேற்கிலும்  இருந்து  கூட்டிச்சேர்ப்பேன்.  (ஏசாயா  43:5)

bayappadaathea,  naan  unnoadea  irukki’rean;  naan  un  santhathiyaik  kizhakkilirunthu  varappa'n'ni,  unnai  mea’rkilum  irunthu  koottichsearppean.  (easaayaa  43:5)

நான்  வடக்கை  நோக்கி:  கொடு  என்றும்,  தெற்கை  நோக்கி:  வைத்திராதே  என்றும்  சொல்லி,  தூரத்திலிருந்து  என்  குமாரரையும்,  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  என்  குமாரத்திகளையும்,  (ஏசாயா  43:6)

naan  vadakkai  noakki:  kodu  en’rum,  the’rkai  noakki:  vaiththiraathea  en’rum  solli,  thooraththilirunthu  en  kumaararaiyum,  boomiyin  kadaiyaantharaththilirunthu  en  kumaaraththiga'laiyum,  (easaayaa  43:6)

நான்  என்  மகிமைக்கென்று  சிருஷ்டித்து  உருவாக்கிப்  படைத்து,  என்  நாமந்தரிக்கப்பட்ட  யாவரையும்  கொண்டுவா  என்பேன்.  (ஏசாயா  43:7)

naan  en  magimaikken’ru  sirushdiththu  uruvaakkip  padaiththu,  en  naamantharikkappatta  yaavaraiyum  ko'nduvaa  enbean.  (easaayaa  43:7)

கண்களிருந்தும்  குருடராயிருக்கிற  ஜனத்தையும்,  காதுகளிருந்தும்  செவிடராயிருக்கிறவர்களையும்  புறப்பட்டு  வரப்பண்ணுங்கள்.  (ஏசாயா  43:8)

ka'nga'lirunthum  kurudaraayirukki’ra  janaththaiyum,  kaathuga'lirunthum  sevidaraayirukki’ravarga'laiyum  pu’rappattu  varappa'n'nungga'l.  (easaayaa  43:8)

சகல  ஜாதிகளும்  ஏகமாய்ச்  சேர்ந்துகொண்டு,  சகல  ஜனங்களும்  கூடிவரட்டும்;  இதை  அறிவித்து,  முந்தி  சம்பவிப்பவைகளை  நமக்குத்  தெரிவிக்கிறவன்  யார்?  கேட்டு  மெய்யென்று  சொல்லக்கூடும்படிக்கு,  அவர்கள்  தங்கள்  சாட்சிகளைக்  கொண்டுவந்து  யதார்த்தவான்களாய்  விளங்கட்டும்.  (ஏசாயா  43:9)

sagala  jaathiga'lum  eagamaaych  searnthuko'ndu,  sagala  janangga'lum  koodivarattum;  ithai  a’riviththu,  munthi  sambavippavaiga'lai  namakkuth  therivikki’ravan  yaar?  keattu  meyyen’ru  sollakkoodumpadikku,  avarga'l  thangga'l  saadchiga'laik  ko'nduvanthu  yathaarththavaanga'laay  vi'langgattum.  (easaayaa  43:9)

நானே  அவரென்று  நீங்கள்  உணர்ந்து,  என்னை  அறிந்து  விசுவாசிக்கும்படிக்கு,  நீங்களும்  நான்  தெரிந்துகொண்ட  என்  தாசனும்  எனக்குச்  சாட்சிகளாயிருக்கிறீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  எனக்குமுன்  ஏற்பட்ட  தேவன்  இல்லை;  எனக்குப்பின்  இருப்பதும்  இல்லை.  (ஏசாயா  43:10)

naanea  avaren’ru  neengga'l  u'narnthu,  ennai  a’rinthu  visuvaasikkumpadikku,  neengga'lum  naan  therinthuko'nda  en  thaasanum  enakkuch  saadchiga'laayirukki’reerga'l  en’ru  karththar  sollugi’raar;  enakkumun  ea’rpatta  theavan  illai;  enakkuppin  iruppathum  illai.  (easaayaa  43:10)

நான்,  நானே  கர்த்தர்;  என்னையல்லாமல்  ரட்சகர்  இல்லை.  (ஏசாயா  43:11)

naan,  naanea  karththar;  ennaiyallaamal  radchagar  illai.  (easaayaa  43:11)

நானே  அறிவித்து,  இரட்சித்து,  விளங்கப்பண்ணினேன்;  உங்களில்  இப்படிச்  செய்யத்தக்க  அந்நிய  தேவன்  இல்லை;  நானே  தேவன்  என்பதற்கு  நீங்கள்  எனக்குச்  சாட்சிகள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  43:12)

naanea  a’riviththu,  iradchiththu,  vi'langgappa'n'ninean;  ungga'lil  ippadich  seyyaththakka  anniya  theavan  illai;  naanea  theavan  enbatha’rku  neengga'l  enakkuch  saadchiga'l  en’ru  karththar  sollugi’raar.  (easaayaa  43:12)

நாள்  உண்டாகாததற்கு  முன்னும்  நானே  இருக்கிறேன்;  என்  கைக்குத்  தப்புவிக்கத்தக்கவன்  இல்லை;  நான்  செய்கிறதைத்  தடுப்பவன்  யார்?  (ஏசாயா  43:13)

naa'l  u'ndaagaathatha’rku  munnum  naanea  irukki’rean;  en  kaikkuth  thappuvikkaththakkavan  illai;  naan  seygi’rathaith  thaduppavan  yaar?  (easaayaa  43:13)

நான்  உங்களுக்காக  அரண்களெல்லாம்  இடிந்துவிழவும்,  கல்தேயர்  படவுகளிலிருந்து  அலறவும்  செய்யத்தக்கவர்களைப்  பாபிலோனுக்கு  அனுப்பினேனென்று,  உங்கள்  மீட்பரும்  இஸ்ரவேலின்  பரிசுத்தருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  43:14)

naan  ungga'lukkaaga  ara'nga'lellaam  idinthuvizhavum,  kaltheayar  padavuga'lilirunthu  ala’ravum  seyyaththakkavarga'laip  baabiloanukku  anuppineanen’ru,  ungga'l  meedparum  isravealin  parisuththarumaagiya  karththar  sollugi’raar.  (easaayaa  43:14)

நானே  உங்கள்  பரிசுத்தராகிய  கர்த்தரும்,  இஸ்ரவேலின்  சிருஷ்டிகரும்,  உங்கள்  ராஜாவுமானவர்.  (ஏசாயா  43:15)

naanea  ungga'l  parisuththaraagiya  karththarum,  isravealin  sirushdigarum,  ungga'l  raajaavumaanavar.  (easaayaa  43:15)

சமுத்திரத்திலே  வழியையும்  வலிய  தண்ணீர்களிலே  பாதையையும்  உண்டாக்கி,  (ஏசாயா  43:16)

samuththiraththilea  vazhiyaiyum  valiya  tha'n'neerga'lilea  paathaiyaiyum  u'ndaakki,  (easaayaa  43:16)

இரதங்களையும்  குதிரைகளையும்  இராணுவங்களையும்  பராக்கிரமசாலிகளையும்  புறப்படப்பண்ணி,  அவைகள்  எழுந்திராதபடிக்கு  ஒருமித்து  விழுந்து  கிடக்கவும்,  ஒரு  திரி  அணைகிறதுபோல்  அவைகள்  அணைந்துபோகவும்பண்ணுகிற  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  (ஏசாயா  43:17)

irathangga'laiyum  kuthiraiga'laiyum  iraa'nuvangga'laiyum  baraakkiramasaaliga'laiyum  pu’rappadappa'n'ni,  avaiga'l  ezhunthiraathapadikku  orumiththu  vizhunthu  kidakkavum,  oru  thiri  a'naigi’rathupoal  avaiga'l  a'nainthupoagavumpa'n'nugi’ra  karththar  sollugi’rathaavathu:  (easaayaa  43:17)

முந்தினவைகளை  நினைக்கவேண்டாம்;  பூர்வமானவைகளைச்  சிந்திக்கவேண்டாம்.  (ஏசாயா  43:18)

munthinavaiga'lai  ninaikkavea'ndaam;  poorvamaanavaiga'laich  sinthikkavea'ndaam.  (easaayaa  43:18)

இதோ,  நான்  புதிய  காரியத்தைச்  செய்கிறேன்;  இப்பொழுதே  அது  தோன்றும்;  நீங்கள்  அதை  அறியீர்களா?  நான்  வனாந்தரத்திலே  வழியையும்,  அவாந்தரவெளியிலே  ஆறுகளையும்  உண்டாக்குவேன்.  (ஏசாயா  43:19)

ithoa,  naan  puthiya  kaariyaththaich  seygi’rean;  ippozhuthea  athu  thoan’rum;  neengga'l  athai  a’riyeerga'laa?  naan  vanaantharaththilea  vazhiyaiyum,  avaantharave'liyilea  aa’ruga'laiyum  u'ndaakkuvean.  (easaayaa  43:19)

நான்  தெரிந்துகொண்ட  என்  ஜனத்தின்  தாகத்துக்கு  வனாந்தரத்திலே  தண்ணீர்களையும்  அவாந்தரவெளியிலே  ஆறுகளையும்  உண்டாக்குவதினால்,  காட்டுமிருகங்களும்,  வலுசர்ப்பங்களும்,  கோட்டான்  குஞ்சுகளும்  என்னைக்  கனம்பண்ணும்.  (ஏசாயா  43:20)

naan  therinthuko'nda  en  janaththin  thaagaththukku  vanaantharaththilea  tha'n'neerga'laiyum  avaantharave'liyilea  aa’ruga'laiyum  u'ndaakkuvathinaal,  kaattumirugangga'lum,  valusarppangga'lum,  koattaan  kugnchuga'lum  ennaik  kanampa'n'num.  (easaayaa  43:20)

இந்த  ஜனத்தை  எனக்கென்று  ஏற்படுத்தினேன்;  இவர்கள்  என்  துதியைச்  சொல்லிவருவார்கள்.  (ஏசாயா  43:21)

intha  janaththai  enakken’ru  ea’rpaduththinean;  ivarga'l  en  thuthiyaich  sollivaruvaarga'l.  (easaayaa  43:21)

ஆனாலும்  யாக்கோபே,  நீ  என்னை  நோக்கிக்  கூப்பிடவில்லை;  இஸ்ரவேலே,  நீ  என்னைக்குறித்து  மனஞ்சலித்துப்போனாய்.  (ஏசாயா  43:22)

aanaalum  yaakkoabea,  nee  ennai  noakkik  kooppidavillai;  isravealea,  nee  ennaikku’riththu  managnsaliththuppoanaay.  (easaayaa  43:22)

உன்  ஆடுகளைத்  தகனபலிகளாக  நீ  எனக்குச்  செலுத்தவில்லை;  உன்  பலிகளாலே  நீ  என்னைக்  கனம்பண்ணவுமில்லை;  காணிக்கைகளைச்  செலுத்தும்படி  நான்  உன்னைச்  சங்கடப்படுத்தாமலும்,  தூபங்காட்டும்படி  உன்னை  வருத்தப்படுத்தாமலும்  இருந்தேன்.  (ஏசாயா  43:23)

un  aaduga'laith  thaganabaliga'laaga  nee  enakkuch  seluththavillai;  un  baliga'laalea  nee  ennaik  kanampa'n'navumillai;  kaa'nikkaiga'laich  seluththumpadi  naan  unnaich  sanggadappaduththaamalum,  thoobangkaattumpadi  unnai  varuththappaduththaamalum  irunthean.  (easaayaa  43:23)

நீ  எனக்குப்  பணங்களால்  சுகந்தபட்டையைக்  கொள்ளாமலும்,  உன்  பலிகளின்  நிணத்தினால்  என்னைத்  திருப்தியாக்காமலும்,  உன்  பாவங்களினால்  என்னைச்  சங்கடப்படுத்தி,  உன்  அக்கிரமங்களினால்  என்னை  வருத்தப்படுத்தினாய்.  (ஏசாயா  43:24)

nee  enakkup  pa'nangga'laal  suganthapattaiyaik  ko'l'laamalum,  un  baliga'lin  ni'naththinaal  ennaith  thirupthiyaakkaamalum,  un  paavangga'linaal  ennaich  sanggadappaduththi,  un  akkiramangga'linaal  ennai  varuththappaduththinaay.  (easaayaa  43:24)

நான்,  நானே  உன்  மீறுதல்களை  என்  நிமித்தமாகவே  குலைத்துப்போடுகிறேன்;  உன்  பாவங்களை  நினையாமலும்  இருப்பேன்.  (ஏசாயா  43:25)

naan,  naanea  un  mee’ruthalga'lai  en  nimiththamaagavea  kulaiththuppoadugi’rean;  un  paavangga'lai  ninaiyaamalum  iruppean.  (easaayaa  43:25)

நாம்  ஒருவரோடொருவர்  வழக்காடும்படி  எனக்கு  நினைப்பூட்டு;  நீ  நீதிமானாக  விளங்கும்படி  உன்  காரியத்தைச்  சொல்.  (ஏசாயா  43:26)

naam  oruvaroadoruvar  vazhakkaadumpadi  enakku  ninaippoottu;  nee  neethimaanaaga  vi'langgumpadi  un  kaariyaththaich  sol.  (easaayaa  43:26)

உன்  ஆதிதகப்பன்  பாவஞ்செய்தான்;  உனக்கு  முன்னின்று  பேசுகிறவர்களும்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினார்கள்.  (ஏசாயா  43:27)

un  aathithagappan  paavagnseythaan;  unakku  munnin’ru  peasugi’ravarga'lum  enakku  viroathamaayth  thuroagampa'n'ninaarga'l.  (easaayaa  43:27)

ஆகையால்,  நான்  பரிசுத்த  ஸ்தலத்தின்  தலைவர்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  யாக்கோபைச்  சாபத்துக்கும்,  இஸ்ரவேலை  நிந்தனைக்கும்  ஒப்புக்கொடுப்பேன்.  (ஏசாயா  43:28)

aagaiyaal,  naan  parisuththa  sthalaththin  thalaivarga'laip  parisuththakkulaichchalaakki,  yaakkoabaich  saabaththukkum,  isravealai  ninthanaikkum  oppukkoduppean.  (easaayaa  43:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!