Monday, October 10, 2016

Easaayaa 42 | ஏசாயா 42 | Isaiah 42


இதோ,  நான்  ஆதரிக்கிற  என்  தாசன்,  நான்  தெரிந்துகொண்டவரும்,  என்  ஆத்துமாவுக்குப்  பிரியமானவரும்  இவரே;  என்  ஆவியை  அவர்மேல்  அமரப்பண்ணினேன்;  அவர்  புறஜாதிகளுக்கு  நியாயத்தை  வெளிப்படுத்துவார்.  (ஏசாயா  42:1)

ithoa,  naan  aatharikki’ra  en  thaasan,  naan  therinthuko'ndavarum,  en  aaththumaavukkup  piriyamaanavarum  ivarea;  en  aaviyai  avarmeal  amarappa'n'ninean;  avar  pu’rajaathiga'lukku  niyaayaththai  ve'lippaduththuvaar.  (easaayaa  42:1)

அவர்  கூக்குரலிடவுமாட்டார்,  தம்முடைய  சத்தத்தை  உயர்த்தவும்  அதை  வீதியிலே  கேட்கப்பண்ணவுமாட்டார்.  (ஏசாயா  42:2)

avar  kookkuralidavumaattaar,  thammudaiya  saththaththai  uyarththavum  athai  veethiyilea  keadkappa'n'navumaattaar.  (easaayaa  42:2)

அவர்  நெரிந்தநாணலை  முறியாமலும்,  மங்கியெரிகிற  திரியை  அணையாமலும்,  நியாயத்தை  உண்மையாக  வெளிப்படுத்துவார்.  (ஏசாயா  42:3)

avar  nerinthanaa'nalai  mu’riyaamalum,  manggiyerigi’ra  thiriyai  a'naiyaamalum,  niyaayaththai  u'nmaiyaaga  ve'lippaduththuvaar.  (easaayaa  42:3)

அவர்  நியாயத்தைப்  பூமியிலே  நிலைப்படுத்துமட்டும்  இளக்கரிப்பதுமில்லை,  பதறுவதுமில்லை;  அவருடைய  வேதத்துக்குத்  தீவுகள்  காத்திருக்கும்.  (ஏசாயா  42:4)

avar  niyaayaththaip  boomiyilea  nilaippaduththumattum  i'lakkarippathumillai,  patha’ruvathumillai;  avarudaiya  veathaththukkuth  theevuga'l  kaaththirukkum.  (easaayaa  42:4)

வானங்களைச்  சிருஷ்டித்து,  அவைகளை  விரித்து,  பூமியையும்,  அதிலே  உற்பத்தியாகிறவைகளையும்  பரப்பினவரும்,  அதில்  இருக்கிற  ஜனத்துக்குச்  சுவாசத்தையும்,  அதில்  நடமாடுகிறவர்களுக்கு  ஆவியையும்  கொடுக்கிறவருமான  கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறதாவது:  (ஏசாயா  42:5)

vaanangga'laich  sirushdiththu,  avaiga'lai  viriththu,  boomiyaiyum,  athilea  u’rpaththiyaagi’ravaiga'laiyum  parappinavarum,  athil  irukki’ra  janaththukkuch  suvaasaththaiyum,  athil  nadamaadugi’ravarga'lukku  aaviyaiyum  kodukki’ravarumaana  karththaraagiya  theavan  sollugi’rathaavathu:  (easaayaa  42:5)

நீர்  குருடருடைய  கண்களைத்  திறக்கவும்,  கட்டுண்டவர்களைக்  காவலிலிருந்தும்,  இருளில்  இருக்கிறவர்களைச்  சிறைச்சாலையிலிருந்தும்  விடுவிக்கவும்,  (ஏசாயா  42:6)

neer  kurudarudaiya  ka'nga'laith  thi’rakkavum,  kattu'ndavarga'laik  kaavalilirunthum,  iru'lil  irukki’ravarga'laich  si’raichsaalaiyilirunthum  viduvikkavum,  (easaayaa  42:6)

கர்த்தராகிய  நான்  நீதியின்படி  உம்மை  அழைத்து,  உம்முடைய  கையைப்  பிடித்து,  உம்மைத்  தற்காத்து,  உம்மை  ஜனத்திற்கு  உடன்படிக்கையாகவும்,  ஜாதிகளுக்கு  ஒளியாகவும்  வைக்கிறேன்.  (ஏசாயா  42:7)

karththaraagiya  naan  neethiyinpadi  ummai  azhaiththu,  ummudaiya  kaiyaip  pidiththu,  ummaith  tha’rkaaththu,  ummai  janaththi’rku  udanpadikkaiyaagavum,  jaathiga'lukku  o'liyaagavum  vaikki’rean.  (easaayaa  42:7)

நான்  கர்த்தர்,  இது  என்  நாமம்;  என்  மகிமையை  வேறொருவனுக்கும்,  என்  துதியை  விக்கிரகங்களுக்கும்  கொடேன்.  (ஏசாயா  42:8)

naan  karththar,  ithu  en  naamam;  en  magimaiyai  vea’roruvanukkum,  en  thuthiyai  vikkiragangga'lukkum  kodean.  (easaayaa  42:8)

பூர்வகாலத்தில்  தெரிவிக்கப்பட்டவைகள்,  இதோ,  நிறைவேறலாயின;  புதியவைகளையும்  நானே  அறிவிக்கிறேன்;  அவைகள்  தோன்றாததற்கு  முன்னே,  அவைகளை  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (ஏசாயா  42:9)

poorvakaalaththil  therivikkappattavaiga'l,  ithoa,  ni’raivea’ralaayina;  puthiyavaiga'laiyum  naanea  a’rivikki’rean;  avaiga'l  thoan’raathatha’rku  munnea,  avaiga'lai  ungga'lukkuch  sollugi’rean.  (easaayaa  42:9)

சமுத்திரத்தில்  யாத்திரை  பண்ணுகிறவர்களே,  அதிலுள்ளவைகளே,  தீவுகளே,  அவைகளின்  குடிகளே,  கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  அவருடைய  துதியைப்  பாடுங்கள்.  (ஏசாயா  42:10)

samuththiraththil  yaaththirai  pa'n'nugi’ravarga'lea,  athilu'l'lavaiga'lea,  theevuga'lea,  avaiga'lin  kudiga'lea,  karththarukkup  puthuppaattaip  paadungga'l;  boomiyin  kadaiyaantharaththilirunthu  avarudaiya  thuthiyaip  paadungga'l.  (easaayaa  42:10)

வனாந்தரமும்,  அதின்  ஊர்களும்,  கேதாரியர்  குடியிருக்கிற  கிராமங்களும்  உரத்த  சத்தமிடக்கடவது;  கன்மலைகளிலே  குடியிருக்கிறவர்கள்  கெம்பீரித்து,  பர்வதங்களின்  கொடுமுடியிலிருந்து  ஆர்ப்பரிப்பார்களாக.  (ஏசாயா  42:11)

vanaantharamum,  athin  oorga'lum,  keathaariyar  kudiyirukki’ra  kiraamangga'lum  uraththa  saththamidakkadavathu;  kanmalaiga'lilea  kudiyirukki’ravarga'l  kembeeriththu,  parvathangga'lin  kodumudiyilirunthu  aarpparippaarga'laaga.  (easaayaa  42:11)

கர்த்தருக்கு  மகிமையைச்  செலுத்தி,  அவர்  துதியைத்  தீவுகளில்  அறிவிப்பார்களாக.  (ஏசாயா  42:12)

karththarukku  magimaiyaich  seluththi,  avar  thuthiyaith  theevuga'lil  a’rivippaarga'laaga.  (easaayaa  42:12)

கர்த்தர்  பராக்கிரமசாலியைப்போல்  புறப்பட்டு,  யுத்தவீரனைப்போல்  வைராக்கியமூண்டு,  முழங்கிக்  கெர்ச்சித்து,  தம்முடைய  சத்துருக்களை  மேற்கொள்ளுவார்.  (ஏசாயா  42:13)

karththar  baraakkiramasaaliyaippoal  pu’rappattu,  yuththaveeranaippoal  vairaakkiyamoo'ndu,  muzhanggik  kerchchiththu,  thammudaiya  saththurukka'lai  mea’rko'l'luvaar.  (easaayaa  42:13)

நான்  வெகுகாலம்  மவுனமாயிருந்தேன்;  சும்மாயிருந்து  எனக்குள்ளே  அடக்கிக்கொண்டிருந்தேன்;  இப்பொழுது  பிள்ளை  பெறுகிறவளைப்போலச்  சத்தமிட்டு,  அவர்களைப்  பாழாக்கி  விழுங்குவேன்.  (ஏசாயா  42:14)

naan  vegukaalam  mavunamaayirunthean;  summaayirunthu  enakku'l'lea  adakkikko'ndirunthean;  ippozhuthu  pi'l'lai  pe’rugi’rava'laippoalach  saththamittu,  avarga'laip  paazhaakki  vizhungguvean.  (easaayaa  42:14)

நான்  மலைகளையும்  குன்றுகளையும்  பாழாக்கி,  அவைகளிலுள்ள  பூண்டுகளையெல்லாம்  வாடப்பண்ணி,  ஆறுகளைத்  திட்டுகளாக்கி,  ஏரிகளை  வற்றிப்போகப்பண்ணுவேன்.  (ஏசாயா  42:15)

naan  malaiga'laiyum  kun’ruga'laiyum  paazhaakki,  avaiga'lilu'l'la  poo'nduga'laiyellaam  vaadappa'n'ni,  aa’ruga'laith  thittuga'laakki,  eariga'lai  vat’rippoagappa'n'nuvean.  (easaayaa  42:15)

குருடரை  அவர்கள்  அறியாத  வழியிலே  நடத்தி,  அவர்களுக்குத்  தெரியாத  பாதைகளில்  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்து,  அவர்களுக்கு  முன்பாக  இருளை  வெளிச்சமும்,  கோணலைச்  செவ்வையுமாக்குவேன்;  இந்தக்  காரியங்களை  நான்  அவர்களுக்குச்  செய்து,  அவர்களைக்  கைவிடாதிருப்பேன்.  (ஏசாயா  42:16)

kurudarai  avarga'l  a’riyaatha  vazhiyilea  nadaththi,  avarga'lukkuth  theriyaatha  paathaiga'lil  avarga'lai  azhaiththukko'nduvanthu,  avarga'lukku  munbaaga  iru'lai  ve'lichchamum,  koa'nalaich  sevvaiyumaakkuvean;  inthak  kaariyangga'lai  naan  avarga'lukkuch  seythu,  avarga'laik  kaividaathiruppean.  (easaayaa  42:16)

சித்திரவேலையான  விக்கிரகங்களை  நம்பி,  வார்ப்பிக்கப்பட்ட  சுரூபங்களை  நோக்கி:  நீங்கள்  எங்கள்  தேவர்கள்  என்று  சொல்லுகிறவர்கள்  பின்னிடைந்து  மிகவும்  வெட்கப்படுவார்கள்.  (ஏசாயா  42:17)

siththiravealaiyaana  vikkiragangga'lai  nambi,  vaarppikkappatta  suroobangga'lai  noakki:  neengga'l  engga'l  theavarga'l  en’ru  sollugi’ravarga'l  pinnidainthu  migavum  vedkappaduvaarga'l.  (easaayaa  42:17)

செவிடரே,  கேளுங்கள்;  குருடரே,  நீங்கள்  காணும்படி  நோக்கிப்பாருங்கள்.  (ஏசாயா  42:18)

sevidarea,  kea'lungga'l;  kurudarea,  neengga'l  kaa'numpadi  noakkippaarungga'l.  (easaayaa  42:18)

என்  தாசனையல்லாமல்  குருடன்  யார்?  நான்  அனுப்பிய  தூதனையல்லாமல்  செவிடன்  யார்?  உத்தமனையல்லாமல்  குருடன்  யார்?  கர்த்தருடைய  ஊழியக்காரனையல்லாமல்  அந்தகன்  யார்?  (ஏசாயா  42:19)

en  thaasanaiyallaamal  kurudan  yaar?  naan  anuppiya  thoothanaiyallaamal  sevidan  yaar?  uththamanaiyallaamal  kurudan  yaar?  karththarudaiya  oozhiyakkaaranaiyallaamal  anthagan  yaar?  (easaayaa  42:19)

நீ  அநேக  காரியங்களைக்  கண்டும்  கவனியாதிருக்கிறாய்;  அவனுக்குச்  செவிகளைத்  திறந்தாலும்  கேளாதே  போகிறான்.  (ஏசாயா  42:20)

nee  aneaga  kaariyangga'laik  ka'ndum  kavaniyaathirukki’raay;  avanukkuch  seviga'laith  thi’ranthaalum  kea'laathea  poagi’raan.  (easaayaa  42:20)

கர்த்தர்  தமது  நீதியினிமித்தம்  அவன்மேல்  பிரியம்  வைத்திருந்தார்;  அவர்  வேதத்தை  முக்கியப்படுத்தி  அதை  மகிமையுள்ளதாக்குவார்.  (ஏசாயா  42:21)

karththar  thamathu  neethiyinimiththam  avanmeal  piriyam  vaiththirunthaar;  avar  veathaththai  mukkiyappaduththi  athai  magimaiyu'l'lathaakkuvaar.  (easaayaa  42:21)

இந்த  ஜனமோ  கொள்ளையிடப்பட்டும்,  சூறையாடப்பட்டும்  இருக்கிறார்கள்;  அவர்கள்  அனைவரும்  கெபிகளிலே  அகப்பட்டு,  காவலறைகளிலே  அடைக்கப்பட்டிருக்கிறார்கள்;  தப்புவிப்பார்  இல்லாமல்  கொள்ளையாகி,  விட்டுவிடு  என்பார்  இல்லாமல்  சூறையாவார்கள்.  (ஏசாயா  42:22)

intha  janamoa  ko'l'laiyidappattum,  soo’raiyaadappattum  irukki’raarga'l;  avarga'l  anaivarum  kebiga'lilea  agappattu,  kaavala’raiga'lilea  adaikkappattirukki’raarga'l;  thappuvippaar  illaamal  ko'l'laiyaagi,  vittuvidu  enbaar  illaamal  soo’raiyaavaarga'l.  (easaayaa  42:22)

உங்களில்  இதற்குச்  செவிகொடுத்துப்  பின்வருகிறதைக்  கவனித்துக்  கேட்கிறவன்  யார்?  (ஏசாயா  42:23)

ungga'lil  itha’rkuch  sevikoduththup  pinvarugi’rathaik  kavaniththuk  keadki’ravan  yaar?  (easaayaa  42:23)

யாக்கோபைச்  சூறையிட்டு  இஸ்ரவேலைக்  கொள்ளைக்காரருக்கு  ஒப்புக்கொடுக்கிறவர்  யார்?  அவர்கள்  பாவஞ்செய்து  விரோதித்த  கர்த்தர்  அல்லவோ?  அவருடைய  வழிகளில்  நடக்க  மனதாயிராமலும்,  அவருடைய  வேதத்துக்குச்  செவிகொடாமலும்  போனார்களே.  (ஏசாயா  42:24)

yaakkoabaich  soo’raiyittu  isravealaik  ko'l'laikkaararukku  oppukkodukki’ravar  yaar?  avarga'l  paavagnseythu  viroathiththa  karththar  allavoa?  avarudaiya  vazhiga'lil  nadakka  manathaayiraamalum,  avarudaiya  veathaththukkuch  sevikodaamalum  poanaarga'lea.  (easaayaa  42:24)

இவர்கள்மேல்  அவர்  தமது  கோபத்தின்  உக்கிரத்தையும்,  யுத்தத்தின்  வலிமையையும்  வரப்பண்ணி,  அவர்களைச்சூழ  அக்கினிஜுவாலைகளைக்  கொளுத்தியிருந்தும்  உணராதிருந்தார்கள்;  அது  அவர்களைத்  தகித்தும்,  அதை  மனதிலே  வைக்காதேபோனார்கள்.  (ஏசாயா  42:25)

ivarga'lmeal  avar  thamathu  koabaththin  ukkiraththaiyum,  yuththaththin  valimaiyaiyum  varappa'n'ni,  avarga'laichsoozha  akkinijuvaalaiga'laik  ko'luththiyirunthum  u'naraathirunthaarga'l;  athu  avarga'laith  thagiththum,  athai  manathilea  vaikkaatheapoanaarga'l.  (easaayaa  42:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!