Monday, October 10, 2016

Easaayaa 41 | ஏசாயா 41 | Isaiah 41

தீவுகளே,  எனக்கு  முன்பாக  மவுனமாயிருங்கள்;  ஜனங்கள்  தங்கள்  பெலனைப்  புதிதாக்கிக்கொண்டு,  சமீபித்து  வந்து,  பின்பு  பேசக்கடவர்கள்;  நாம்  ஒருமிக்க  நியாயாசனத்துக்கு  முன்பாகச்  சேருவோம்.  (ஏசாயா  41:1)

theevuga'lea,  enakku  munbaaga  mavunamaayirungga'l;  janangga'l  thangga'l  belanaip  puthithaakkikko'ndu,  sameebiththu  vanthu,  pinbu  peasakkadavarga'l;  naam  orumikka  niyaayaasanaththukku  munbaagach  searuvoam.  (easaayaa  41:1)

கிழக்கிலிருந்து  நீதிமானை  எழுப்பி,  தமது  பாதபடியிலே  வரவழைத்தவர்  யார்?  ஜாதிகளை  அவனுக்கு  ஒப்புக்கொடுத்து,  அவனை  ராஜாக்களுக்கு  ஆண்டவனாக்கி,  அவர்களை  அவன்  பட்டயத்துக்குத்  தூசியும்,  அவன்  வில்லுக்குச்  சிதறடிக்கப்பட்ட  தாளடியுமாக்கி,  (ஏசாயா  41:2)

kizhakkilirunthu  neethimaanai  ezhuppi,  thamathu  paathapadiyilea  varavazhaiththavar  yaar?  jaathiga'lai  avanukku  oppukkoduththu,  avanai  raajaakka'lukku  aa'ndavanaakki,  avarga'lai  avan  pattayaththukkuth  thoosiyum,  avan  villukkuch  sitha’radikkappatta  thaa'ladiyumaakki,  (easaayaa  41:2)

அவன்  அவர்களைத்  துரத்தவும்,  தன்  கால்கள்  நடவாதிருந்த  பாதையிலே  சமாதானத்தோடே  நடக்கவும்  பண்ணினவர்  யார்?  (ஏசாயா  41:3)

avan  avarga'laith  thuraththavum,  than  kaalga'l  nadavaathiruntha  paathaiyilea  samaathaanaththoadea  nadakkavum  pa'n'ninavar  yaar?  (easaayaa  41:3)

அதைச்  செய்து  நிறைவேற்றி,  ஆதிமுதற்கொண்டு  தலைமுறைகளை  வரவழைக்கிறவர்  யார்?  முந்தினவராயிருக்கிற  கர்த்தராகிய  நான்தானே;  பிந்தினவர்களோடும்  இருப்பவராகிய  நான்தானே.  (ஏசாயா  41:4)

athaich  seythu  ni’raiveat’ri,  aathimutha’rko'ndu  thalaimu’raiga'lai  varavazhaikki’ravar  yaar?  munthinavaraayirukki’ra  karththaraagiya  naanthaanea;  pinthinavarga'loadum  iruppavaraagiya  naanthaanea.  (easaayaa  41:4)

தீவுகள்  அதைக்  கண்டு  பயப்படும்,  பூமியின்  கடையாந்தரங்கள்  நடுங்கும்;  அவர்கள்  சேர்ந்துவந்து,  (ஏசாயா  41:5)

theevuga'l  athaik  ka'ndu  bayappadum,  boomiyin  kadaiyaantharangga'l  nadunggum;  avarga'l  searnthuvanthu,  (easaayaa  41:5)

ஒருவருக்கு  ஒருவர்  ஒத்தாசை  செய்து  திடன்கொள்  என்று  சகோதரனுக்குச்  சகோதரன்  சொல்லுகிறான்.  (ஏசாயா  41:6)

oruvarukku  oruvar  oththaasai  seythu  thidanko'l  en’ru  sagoatharanukkuch  sagoatharan  sollugi’raan.  (easaayaa  41:6)

சித்திரவேலைக்காரன்  தட்டானையும்,  சுத்தியாலே  மெல்லிய  தகடு  தட்டுகிறவன்  அடைகல்லின்மேல்  அடிக்கிறவனையும்  உற்சாகப்படுத்தி,  இசைக்கிறதற்கான  பக்குவமென்று  சொல்லி,  அது  அசையாதபடிக்கு  அவன்  ஆணிகளால்  அதை  இறுக்குகிறான்.  (ஏசாயா  41:7)

siththiravealaikkaaran  thattaanaiyum,  suththiyaalea  melliya  thagadu  thattugi’ravan  adaikallinmeal  adikki’ravanaiyum  u’rchaagappaduththi,  isaikki’ratha’rkaana  pakkuvamen’ru  solli,  athu  asaiyaathapadikku  avan  aa'niga'laal  athai  i’rukkugi’raan.  (easaayaa  41:7)

என்  தாசனாகிய  இஸ்ரவேலே,  நான்  தெரிந்துகொண்ட  யாக்கோபே,  என்  சிநேகிதனான  ஆபிரகாமின்  சந்ததியே,  (ஏசாயா  41:8)

en  thaasanaagiya  isravealea,  naan  therinthuko'nda  yaakkoabea,  en  sineagithanaana  aabirahaamin  santhathiyea,  (easaayaa  41:8)

நான்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து,  உன்னை  எடுத்து,  அதின்  எல்லைகளிலிருந்து  அழைத்துவந்து:  நீ  என்  தாசன்,  நான்  உன்னைத்  தெரிந்துகொண்டேன்,  நான்  உன்னை  வெறுத்துவிடவில்லை  என்று  சொன்னேன்.  (ஏசாயா  41:9)

naan  boomiyin  kadaiyaantharangga'lilirunthu,  unnai  eduththu,  athin  ellaiga'lilirunthu  azhaiththuvanthu:  nee  en  thaasan,  naan  unnaith  therinthuko'ndean,  naan  unnai  ve’ruththuvidavillai  en’ru  sonnean.  (easaayaa  41:9)

நீ  பயப்படாதே,  நான்  உன்னுடனே  இருக்கிறேன்;  திகையாதே,  நான்  உன்  தேவன்;  நான்  உன்னைப்  பலப்படுத்தி  உனக்குச்  சகாயம்பண்ணுவேன்;  என்  நீதியின்  வலதுகரத்தினால்  உன்னைத்  தாங்குவேன்.  (ஏசாயா  41:10)

nee  bayappadaathea,  naan  unnudanea  irukki’rean;  thigaiyaathea,  naan  un  theavan;  naan  unnaip  balappaduththi  unakkuch  sagaayampa'n'nuvean;  en  neethiyin  valathukaraththinaal  unnaith  thaangguvean.  (easaayaa  41:10)

இதோ,  உன்மேல்  எரிச்சலாயிருக்கிற  யாவரும்  வெட்கி  இலச்சையடைவார்கள்;  உன்னோடே  வழக்காடுகிறவர்கள்  நாசமாகி  ஒன்றுமில்லாமற்போவார்கள்.  (ஏசாயா  41:11)

ithoa,  unmeal  erichchalaayirukki’ra  yaavarum  vedki  ilachchaiyadaivaarga'l;  unnoadea  vazhakkaadugi’ravarga'l  naasamaagi  on’rumillaama’rpoavaarga'l.  (easaayaa  41:11)

உன்னோடே  போராடினவர்களைத்  தேடியும்  காணாதிருப்பாய்;  உன்னோடே  யுத்தம்பண்ணின  மனுஷர்  ஒன்றுமில்லாமல்  இல்பொருளாவார்கள்.  (ஏசாயா  41:12)

unnoadea  poaraadinavarga'laith  theadiyum  kaa'naathiruppaay;  unnoadea  yuththampa'n'nina  manushar  on’rumillaamal  ilporu'laavaarga'l.  (easaayaa  41:12)

உன்  தேவனாயிருக்கிற  கர்த்தராகிய  நான்  உன்  வலதுகையைப்  பிடித்து:  பயப்படாதே,  நான்  உனக்குத்  துணைநிற்கிறேன்  என்று  சொல்லுகிறேன்.  (ஏசாயா  41:13)

un  theavanaayirukki’ra  karththaraagiya  naan  un  valathukaiyaip  pidiththu:  bayappadaathea,  naan  unakkuth  thu'naini’rki’rean  en’ru  sollugi’rean.  (easaayaa  41:13)

யாக்கோபு  என்னும்  பூச்சியே,  இஸ்ரவேலின்  சிறுகூட்டமே,  பயப்படாதே;  நான்  உனக்குத்  துணைநிற்கிறேன்  என்று  கர்த்தரும்  இஸ்ரவேலின்  பரிசுத்தருமாகிய  உன்  மீட்பர்  உரைக்கிறார்.  (ஏசாயா  41:14)

yaakkoabu  ennum  poochchiyea,  isravealin  si’rukoottamea,  bayappadaathea;  naan  unakkuth  thu'naini’rki’rean  en’ru  karththarum  isravealin  parisuththarumaagiya  un  meedpar  uraikki’raar.  (easaayaa  41:14)

இதோ,  போரடிக்கிறதற்கு  நான்  உன்னைப்  புதிதும்  கூர்மையுமான  பற்களுள்ள  யந்தரமாக்குகிறேன்;  நீ  மலைகளை  மிதித்து  நொறுக்கி,  குன்றுகளைப்  பதருக்கு  ஒப்பாக்கிவிடுவாய்.  (ஏசாயா  41:15)

ithoa,  poaradikki’ratha’rku  naan  unnaip  puthithum  koormaiyumaana  pa’rka'lu'l'la  yantharamaakkugi’rean;  nee  malaiga'lai  mithiththu  no’rukki,  kun’ruga'laip  patharukku  oppaakkividuvaay.  (easaayaa  41:15)

அவைகளைத்  தூற்றுவாய்,  அப்பொழுது  காற்று  அவைகளைக்  கொண்டுபோய்,  சுழல்காற்று  அவைகளைப்  பறக்கடிக்கும்;  நீயோ  கர்த்தருக்குள்ளே  களிகூர்ந்து,  இஸ்ரவேலின்  பரிசுத்தருக்குள்ளே  மேன்மைபாராட்டிக்  கொண்டிருப்பாய்.  (ஏசாயா  41:16)

avaiga'laith  thoot’ruvaay,  appozhuthu  kaat’ru  avaiga'laik  ko'ndupoay,  suzhalkaat’ru  avaiga'laip  pa’rakkadikkum;  neeyoa  karththarukku'l'lea  ka'likoornthu,  isravealin  parisuththarukku'l'lea  meanmaipaaraattik  ko'ndiruppaay.  (easaayaa  41:16)

சிறுமையும்  எளிமையுமானவர்கள்  தண்ணீரைத்  தேடி,  அது  கிடையாமல்,  அவர்கள்  நாவு  தாகத்தால்  வறளும்போது,  கர்த்தராகிய  நான்  அவர்களுக்குச்  செவிகொடுத்து,  இஸ்ரவேலின்  தேவனாகிய  நான்  அவர்களைக்  கைவிடாதிருப்பேன்.  (ஏசாயா  41:17)

si’rumaiyum  e'limaiyumaanavarga'l  tha'n'neeraith  theadi,  athu  kidaiyaamal,  avarga'l  naavu  thaagaththaal  va’ra'lumpoathu,  karththaraagiya  naan  avarga'lukkuch  sevikoduththu,  isravealin  theavanaagiya  naan  avarga'laik  kaividaathiruppean.  (easaayaa  41:17)

உயர்ந்த  மேடுகளில்  ஆறுகளையும்,  பள்ளத்தாக்குகளின்  நடுவே  ஊற்றுகளையும்  திறந்து,  வனாந்தரத்தைத்  தண்ணீர்த்  தடாகமும்,  வறண்ட  பூமியை  நீர்க்கேணிகளுமாக்கி,  (ஏசாயா  41:18)

uyarntha  meaduga'lil  aa’ruga'laiyum,  pa'l'laththaakkuga'lin  naduvea  oot’ruga'laiyum  thi’ranthu,  vanaantharaththaith  tha'n'neerth  thadaagamum,  va’ra'nda  boomiyai  neerkkea'niga'lumaakki,  (easaayaa  41:18)

வனாந்தரத்திலே  கேதுருமரங்களையும்,  சீத்தீம்மரங்களையும்,  மிருதுச்செடிகளையும்,  ஒலிவமரங்களையும்  நட்டு,  அவாந்தரவெளியிலே  தேவதாரு  விருட்சங்களையும்,  பாய்மரவிருட்சங்களையும்,  புன்னைமரங்களையும்  உண்டுபண்ணுவேன்.  (ஏசாயா  41:19)

vanaantharaththilea  keathurumarangga'laiyum,  seeththeemmarangga'laiyum,  miruthuchsediga'laiyum,  olivamarangga'laiyum  nattu,  avaantharave'liyilea  theavathaaru  virudchangga'laiyum,  paaymaravirudchangga'laiyum,  punnaimarangga'laiyum  u'ndupa'n'nuvean.  (easaayaa  41:19)

கர்த்தருடைய  கரம்  அதைச்  செய்தது  என்றும்,  இஸ்ரவேலின்  பரிசுத்தர்  அதைப்  படைத்தார்  என்றும்,  யாவரும்  கண்டு  உணர்ந்து  சிந்தித்து  அறிவார்கள்.  (ஏசாயா  41:20)

karththarudaiya  karam  athaich  seythathu  en’rum,  isravealin  parisuththar  athaip  padaiththaar  en’rum,  yaavarum  ka'ndu  u'narnthu  sinthiththu  a’rivaarga'l.  (easaayaa  41:20)

உங்கள்  வழக்கைக்  கொண்டுவாருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்கள்  பலமான  நியாயங்களை  வெளிப்படுத்துங்கள்  என்று  யாக்கோபின்  ராஜா  உரைக்கிறார்.  (ஏசாயா  41:21)

ungga'l  vazhakkaik  ko'nduvaarungga'l  en’ru  karththar  sollugi’raar;  ungga'l  balamaana  niyaayangga'lai  ve'lippaduththungga'l  en’ru  yaakkoabin  raajaa  uraikki’raar.  (easaayaa  41:21)

அவர்கள்  அவைகளைக்  கொண்டுவந்து,  சம்பவிக்கப்போகிறவைகளை  நமக்குத்  தெரிவிக்கட்டும்;  அவைகளில்  முந்தி  சம்பவிப்பவைகள்  இன்னவைகளென்று  சொல்லி,  நாம்  நம்முடைய  மனதை  அவைகளின்மேல்  வைக்கும்படிக்கும்,  பிந்தி  சம்பவிப்பவைகளையும்  நாம்  அறியும்படிக்கும்  நமக்குத்  தெரிவிக்கட்டும்;  வருங்காரியங்களை  நமக்கு  அறிவிக்கட்டும்.  (ஏசாயா  41:22)

avarga'l  avaiga'laik  ko'nduvanthu,  sambavikkappoagi’ravaiga'lai  namakkuth  therivikkattum;  avaiga'lil  munthi  sambavippavaiga'l  innavaiga'len’ru  solli,  naam  nammudaiya  manathai  avaiga'linmeal  vaikkumpadikkum,  pinthi  sambavippavaiga'laiyum  naam  a’riyumpadikkum  namakkuth  therivikkattum;  varungkaariyangga'lai  namakku  a’rivikkattum.  (easaayaa  41:22)

பின்வரும்  காரியங்களை  எங்களுக்குத்  தெரிவியுங்கள்;  அப்பொழுது  நீங்கள்  தேவர்கள்  என்று  அறிவோம்;  அல்லது  நன்மையாவது  தீமையாவது  செய்யுங்கள்;  அப்பொழுது  நாங்கள்  திகைத்து  ஏகமாய்க்  கூடி  அதைப்  பார்ப்போம்.  (ஏசாயா  41:23)

pinvarum  kaariyangga'lai  engga'lukkuth  theriviyungga'l;  appozhuthu  neengga'l  theavarga'l  en’ru  a’rivoam;  allathu  nanmaiyaavathu  theemaiyaavathu  seyyungga'l;  appozhuthu  naangga'l  thigaiththu  eagamaayk  koodi  athaip  paarppoam.  (easaayaa  41:23)

இதோ,  நீங்கள்  சூனியத்திலும்  சூனியமாயிருக்கிறீர்கள்;  உங்கள்  செயல்  வெறுமையிலும்  வெறுமையானது;  உங்களைத்  தெரிந்துகொள்ளுகிறவன்  அருவருப்பானவன்.  (ஏசாயா  41:24)

ithoa,  neengga'l  sooniyaththilum  sooniyamaayirukki’reerga'l;  ungga'l  seyal  ve’rumaiyilum  ve’rumaiyaanathu;  ungga'laith  therinthuko'l'lugi’ravan  aruvaruppaanavan.  (easaayaa  41:24)

நான்  வடக்கேயிருந்து  ஒருவனை  எழும்பப்பண்ணுவேன்,  அவன்  வருவான்;  சூரியோதய  திசையிலிருந்து  என்  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவான்;  அவன்  வந்து  அதிபதிகளைச்  சேற்றைப்போலவும்,  குயவன்  களிமண்ணை  மிதிப்பதுபோலவும்  மிதிப்பான்.  (ஏசாயா  41:25)

naan  vadakkeayirunthu  oruvanai  ezhumbappa'n'nuvean,  avan  varuvaan;  sooriyoathaya  thisaiyilirunthu  en  naamaththaith  thozhuthuko'l'luvaan;  avan  vanthu  athibathiga'laich  seat’raippoalavum,  kuyavan  ka'lima'n'nai  mithippathupoalavum  mithippaan.  (easaayaa  41:25)

நாம்  அதை  அறியும்படியாக  ஆதியில்  சொன்னவன்  யார்?  நாம்  அவனை  யதார்த்தவான்  என்று  சொல்லும்படி  பூர்வகாலத்தில்  அறிவித்தவன்  யார்?  அறிவிக்கிறவன்  ஒருவனும்  இல்லையே;  உரைக்கிறவனும்  இல்லையே;  உங்கள்  வார்த்தைகளைக்  கேட்டிருக்கிறவனும்  இல்லையே.  (ஏசாயா  41:26)

naam  athai  a’riyumpadiyaaga  aathiyil  sonnavan  yaar?  naam  avanai  yathaarththavaan  en’ru  sollumpadi  poorvakaalaththil  a’riviththavan  yaar?  a’rivikki’ravan  oruvanum  illaiyea;  uraikki’ravanum  illaiyea;  ungga'l  vaarththaiga'laik  keattirukki’ravanum  illaiyea.  (easaayaa  41:26)

முதல்  முதல்,  நானே,  சீயோனை  நோக்கி:  இதோ,  அவைகளைப்  பார்  என்று  சொல்லி,  எருசலேமுக்குச்  சுவிசேஷகரைக்  கொடுக்கிறேன்.  (ஏசாயா  41:27)

muthal  muthal,  naanea,  seeyoanai  noakki:  ithoa,  avaiga'laip  paar  en’ru  solli,  erusaleamukkuch  suviseashagaraik  kodukki’rean.  (easaayaa  41:27)

நான்  பார்த்தேன்,  அவர்களில்  அறிவிக்கிறவன்  ஒருவனுமில்லை;  நான்  கேட்குங்  காரியத்துக்குப்  பிரதியுத்தரம்  கொடுக்கத்தக்க  ஒரு  ஆலோசனைக்காரனும்  அவர்களில்  இல்லை.  (ஏசாயா  41:28)

naan  paarththean,  avarga'lil  a’rivikki’ravan  oruvanumillai;  naan  keadkung  kaariyaththukkup  pirathiyuththaram  kodukkaththakka  oru  aaloasanaikkaaranum  avarga'lil  illai.  (easaayaa  41:28)

இதோ,  அவர்கள்  எல்லாரும்  மாயை,  அவர்கள்  கிரியைகள்  விருதா;  அவர்களுடைய  விக்கிரகங்கள்  காற்றும்  வெறுமையுந்தானே.  (ஏசாயா  41:29)

ithoa,  avarga'l  ellaarum  maayai,  avarga'l  kiriyaiga'l  viruthaa;  avarga'ludaiya  vikkiragangga'l  kaat’rum  ve’rumaiyunthaanea.  (easaayaa  41:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!