Sunday, October 09, 2016

Easaayaa 40 | ஏசாயா 40 | Isaiah 40

என்  ஜனத்தை  ஆற்றுங்கள்,  தேற்றுங்கள்;  (ஏசாயா  40:1)

en  janaththai  aat’rungga'l,  theat’rungga'l;  (easaayaa  40:1)

எருசலேமுடன்  பட்சமாய்ப்பேசி,  அதின்  போர்  முடிந்தது  என்றும்,  அதின்  அக்கிரமம்  நிவிர்த்தியாயிற்று  என்றும்,  அது  தன்  சகல  பாவங்களினிமித்தமும்  கர்த்தரின்  கையில்  இரட்டிப்பாய்  அடைந்து  தீர்ந்தது  என்றும்,  அதற்குக்  கூறுங்கள்  என்று  உங்கள்  தேவன்  சொல்லுகிறார்.  (ஏசாயா  40:2)

erusaleamudan  padchamaayppeasi,  athin  poar  mudinthathu  en’rum,  athin  akkiramam  nivirththiyaayit’ru  en’rum,  athu  than  sagala  paavangga'linimiththamum  karththarin  kaiyil  irattippaay  adainthu  theernthathu  en’rum,  atha’rkuk  koo’rungga'l  en’ru  ungga'l  theavan  sollugi’raar.  (easaayaa  40:2)

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்,  அவாந்தரவெளியிலே  நம்முடைய  தேவனுக்குப்  பாதையைச்  செவ்வைபண்ணுங்கள்  என்றும்,  (ஏசாயா  40:3)

karththarukku  vazhiyai  aayaththappaduththungga'l,  avaantharave'liyilea  nammudaiya  theavanukkup  paathaiyaich  sevvaipa'n'nungga'l  en’rum,  (easaayaa  40:3)

பள்ளமெல்லாம்  உயர்த்தப்பட்டு,  சகல  மலையும்  குன்றும்  தாழ்த்தப்பட்டு,  கோணலானது  செவ்வையாகி,  கரடுமுரடானவைச்  சமமாக்கப்படும்  என்றும்,  (ஏசாயா  40:4)

pa'l'lamellaam  uyarththappattu,  sagala  malaiyum  kun’rum  thaazhththappattu,  koa'nalaanathu  sevvaiyaagi,  karadumuradaanavaich  samamaakkappadum  en’rum,  (easaayaa  40:4)

கர்த்தரின்  மகிமை  வெளியரங்கமாகும்,  மாம்சமான  யாவும்  அதை  ஏகமாய்க்  காணும்,  கர்த்தரின்  வாக்கு  அதை  உரைத்தது  என்றும்  வனாந்தரத்திலே  கூப்பிடுகிற  சத்தம்  உண்டாயிற்று.  (ஏசாயா  40:5)

karththarin  magimai  ve'liyaranggamaagum,  maamsamaana  yaavum  athai  eagamaayk  kaa'num,  karththarin  vaakku  athai  uraiththathu  en’rum  vanaantharaththilea  kooppidugi’ra  saththam  u'ndaayit’ru.  (easaayaa  40:5)

பின்னும்  கூப்பிட்டுச்  சொல்  என்று  ஒரு  சத்தம்  உண்டாயிற்று;  என்னத்தைக்  கூப்பிட்டுச்  சொல்வேன்  என்றேன்.  அதற்கு:  மாம்சமெல்லாம்  புல்லைப்போலவும்,  அதின்  மேன்மையெல்லாம்  வெளியின்  பூவைப்போலவும்  இருக்கிறது.  (ஏசாயா  40:6)

pinnum  kooppittuch  sol  en’ru  oru  saththam  u'ndaayit’ru;  ennaththaik  kooppittuch  solvean  en’rean.  atha’rku:  maamsamellaam  pullaippoalavum,  athin  meanmaiyellaam  ve'liyin  poovaippoalavum  irukki’rathu.  (easaayaa  40:6)

கர்த்தரின்  ஆவி  அதின்மேல்  ஊதும்போது,  புல்  உலர்ந்து,  பூ  உதிரும்;  ஜனமே  புல்.  (ஏசாயா  40:7)

karththarin  aavi  athinmeal  oothumpoathu,  pul  ularnthu,  poo  uthirum;  janamea  pul.  (easaayaa  40:7)

புல்  உலர்ந்து  பூ  உதிரும்;  நமது  தேவனுடைய  வசனமோ  என்றென்றைக்கும்  நிற்கும்  என்பதையே  சொல்  என்று  உரைத்தது.  (ஏசாயா  40:8)

pul  ularnthu  poo  uthirum;  namathu  theavanudaiya  vasanamoa  en’ren’raikkum  ni’rkum  enbathaiyea  sol  en’ru  uraiththathu.  (easaayaa  40:8)

சீயோன்  என்னும்  சுவிசேஷகியே,  நீ  உயர்ந்த  பர்வதத்தில்  ஏறு;  எருசலேம்  என்னும்  சுவிசேஷகியே,  நீ  உரத்த  சத்தமிட்டுக்  கூப்பிடு,  பயப்படாமல்  சத்தமிட்டு,  யூதா  பட்டணங்களை  நோக்கி:  இதோ,  உங்கள்  தேவன்  என்று  கூறு.  (ஏசாயா  40:9)

seeyoan  ennum  suviseashagiyea,  nee  uyarntha  parvathaththil  ea’ru;  erusaleam  ennum  suviseashagiyea,  nee  uraththa  saththamittuk  kooppidu,  bayappadaamal  saththamittu,  yoothaa  patta'nangga'lai  noakki:  ithoa,  ungga'l  theavan  en’ru  koo’ru.  (easaayaa  40:9)

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவர்  பராக்கிரமசாலியாக  வருவார்;  அவர்  தமது  புயத்தினால்  அரசாளுவார்;  இதோ,  அவர்  அளிக்கும்  பலன்  அவரோடேகூட  வருகிறது;  அவர்  கொடுக்கும்  பிரதிபலன்  அவருடைய  முகத்துக்கு  முன்பாகச்  செல்லுகிறது.  (ஏசாயா  40:10)

ithoa,  karththaraagiya  aa'ndavar  baraakkiramasaaliyaaga  varuvaar;  avar  thamathu  puyaththinaal  arasaa'luvaar;  ithoa,  avar  a'likkum  palan  avaroadeakooda  varugi’rathu;  avar  kodukkum  pirathipalan  avarudaiya  mugaththukku  munbaagach  sellugi’rathu.  (easaayaa  40:10)

மேய்ப்பனைப்போலத்  தமது  மந்தையை  மேய்ப்பார்;  ஆட்டுக்குட்டிகளைத்  தமது  புயத்தினால்  சேர்த்து,  தமது  மடியிலே  சுமந்து,  கறவலாடுகளை  மெதுவாய்  நடத்துவார்.  (ஏசாயா  40:11)

meayppanaippoalath  thamathu  manthaiyai  meayppaar;  aattukkuttiga'laith  thamathu  puyaththinaal  searththu,  thamathu  madiyilea  sumanthu,  ka’ravalaaduga'lai  methuvaay  nadaththuvaar.  (easaayaa  40:11)

தண்ணீர்களைத்  தமது  கைப்பிடியால்  அளந்து,  வானங்களை  ஜாணளவாய்ப்  பிரமாணித்து,  பூமியின்  மண்ணை  மரக்காலில்  அடக்கி,  பர்வதங்களைத்  துலாக்கோலாலும்,  மலைகளைத்  தராசாலும்  நிறுத்தவர்  யார்?  (ஏசாயா  40:12)

tha'n'neerga'laith  thamathu  kaippidiyaal  a'lanthu,  vaanangga'lai  jaa'na'lavaayp  piramaa'niththu,  boomiyin  ma'n'nai  marakkaalil  adakki,  parvathangga'laith  thulaakkoalaalum,  malaiga'laith  tharaasaalum  ni’ruththavar  yaar?  (easaayaa  40:12)

கர்த்தருடைய  ஆவியை  அளவிட்டு,  அவருக்கு  ஆலோசனைக்காரனாயிருந்து,  அவருக்குப்  போதித்தவன்  யார்?  (ஏசாயா  40:13)

karththarudaiya  aaviyai  a'lavittu,  avarukku  aaloasanaikkaaranaayirunthu,  avarukkup  poathiththavan  yaar?  (easaayaa  40:13)

தமக்கு  அறிவை  உணர்த்தவும்,  தம்மை  நியாயவழியிலே  உபதேசிக்கவும்,  தமக்கு  ஞானத்தைக்  கற்றுக்கொடுக்கவும்,  தமக்கு  விவேகத்தின்  வழியை  அறிவிக்கவும்,  அவர்  யாரோடே  ஆலோசனைபண்ணினார்?  (ஏசாயா  40:14)

thamakku  a’rivai  u'narththavum,  thammai  niyaayavazhiyilea  ubatheasikkavum,  thamakku  gnaanaththaik  kat’rukkodukkavum,  thamakku  viveagaththin  vazhiyai  a’rivikkavum,  avar  yaaroadea  aaloasanaipa'n'ninaar?  (easaayaa  40:14)

இதோ,  ஜாதிகள்  ஏற்றச்சாலில்  தொங்கும்  துளிபோலவும்,  தராசிலே  படியும்  தூசிபோலவும்  எண்ணப்படுகிறார்கள்;  இதோ,  தீவுகளை  ஒரு  அணுவைப்போல்  தூக்குகிறார்.  (ஏசாயா  40:15)

ithoa,  jaathiga'l  eat’rachsaalil  thonggum  thu'lipoalavum,  tharaasilea  padiyum  thoosipoalavum  e'n'nappadugi’raarga'l;  ithoa,  theevuga'lai  oru  a'nuvaippoal  thookkugi’raar.  (easaayaa  40:15)

லீபனோன்  எரிக்கும்  விறகுக்குப்  போதாது;  அதிலுள்ள  மிருகஜீவன்கள்  தகனபலிக்கும்  போதாது.  (ஏசாயா  40:16)

leebanoan  erikkum  vi’ragukkup  poathaathu;  athilu'l'la  mirugajeevanga'l  thaganabalikkum  poathaathu.  (easaayaa  40:16)

சகல  ஜாதிகளும்  அவருக்கு  முன்பாக  ஒன்றுமில்லை,  அவர்கள்  சூனியத்தில்  சூனியமாகவும்,  மாயையாகவும்  எண்ணப்படுகிறார்கள்.  (ஏசாயா  40:17)

sagala  jaathiga'lum  avarukku  munbaaga  on’rumillai,  avarga'l  sooniyaththil  sooniyamaagavum,  maayaiyaagavum  e'n'nappadugi’raarga'l.  (easaayaa  40:17)

இப்படியிருக்க,  தேவனை  யாருக்கு  ஒப்பிடுவீர்கள்?  எந்தச்  சாயலை  அவருக்கு  ஒப்பிடுவீர்கள்?  (ஏசாயா  40:18)

ippadiyirukka,  theavanai  yaarukku  oppiduveerga'l?  enthach  saayalai  avarukku  oppiduveerga'l?  (easaayaa  40:18)

கன்னான்  ஒரு  சுரூபத்தை  வார்க்கிறான்,  தட்டான்  பொன்தகட்டால்  அதை  மூடி,  அதற்கு  வெள்ளிச்சங்கிலிகளைப்  பொருந்தவைக்கிறான்.  (ஏசாயா  40:19)

kannaan  oru  suroobaththai  vaarkki’raan,  thattaan  ponthagattaal  athai  moodi,  atha’rku  ve'l'lichsanggiliga'laip  porunthavaikki’raan.  (easaayaa  40:19)

அதற்குக்  கொடுக்க  வகையில்லாதவன்  உளுத்துப்போகாத  மரத்தைத்  தெரிந்துகொண்டு,  அசையாத  ஒரு  சுரூபத்தைச்  செய்யும்படி  நிபுணனான  ஒரு  தச்சனைத்  தேடுகிறான்.  (ஏசாயா  40:20)

atha’rkuk  kodukka  vagaiyillaathavan  u'luththuppoagaatha  maraththaith  therinthuko'ndu,  asaiyaatha  oru  suroobaththaich  seyyumpadi  nibu'nanaana  oru  thachchanaith  theadugi’raan.  (easaayaa  40:20)

நீங்கள்  அறியீர்களா?  நீங்கள்  கேள்விப்படவில்லையா?  ஆதிமுதல்  உங்களுக்குத்  தெரிவிக்கப்படவில்லையா?  பூமி  அஸ்திபாரப்பட்டதுமுதல்  உணராதிருக்கிறீர்களா?  (ஏசாயா  40:21)

neengga'l  a’riyeerga'laa?  neengga'l  kea'lvippadavillaiyaa?  aathimuthal  ungga'lukkuth  therivikkappadavillaiyaa?  boomi  asthibaarappattathumuthal  u'naraathirukki’reerga'laa?  (easaayaa  40:21)

அவர்  பூமி  உருண்டையின்மேல்  வீற்றிருக்கிறவர்;  அதின்  குடிகள்  வெட்டுக்கிளிகளைப்போல  இருக்கிறார்கள்;  அவர்  வானங்களை  மெல்லிய  திரையாகப்  பரப்பி,  அவைகளைக்  குடியிருக்கிறதற்கான  கூடாரமாக  விரிக்கிறார்.  (ஏசாயா  40:22)

avar  boomi  uru'ndaiyinmeal  veet’rirukki’ravar;  athin  kudiga'l  vettukki'liga'laippoala  irukki’raarga'l;  avar  vaanangga'lai  melliya  thiraiyaagap  parappi,  avaiga'laik  kudiyirukki’ratha’rkaana  koodaaramaaga  virikki’raar.  (easaayaa  40:22)

அவர்  பிரபுக்களை  மாயையாக்கி,  பூமியின்  நியாயாதிபதிகளை  அவாந்தரமாக்குகிறார்.  (ஏசாயா  40:23)

avar  pirabukka'lai  maayaiyaakki,  boomiyin  niyaayaathibathiga'lai  avaantharamaakkugi’raar.  (easaayaa  40:23)

அவர்கள்  திரும்ப  நாட்டப்படுவதுமில்லை,  விதைக்கப்படுவதுமில்லை;  அவர்களுடைய  அடிமரம்  திரும்பப்  பூமியிலே  வேர்விடுவதுமில்லை;  அவர்கள்மேல்  அவர்  ஊதவே  பட்டுப்போவார்கள்;  பெருங்காற்று  அவர்களை  ஒரு  துரும்பைப்போல்  அடித்துக்கொண்டுபோம்.  (ஏசாயா  40:24)

avarga'l  thirumba  naattappaduvathumillai,  vithaikkappaduvathumillai;  avarga'ludaiya  adimaram  thirumbap  boomiyilea  vearviduvathumillai;  avarga'lmeal  avar  oothavea  pattuppoavaarga'l;  perungkaat’ru  avarga'lai  oru  thurumbaippoal  adiththukko'ndupoam.  (easaayaa  40:24)

இப்படியிருக்க,  என்னை  யாருக்கு  ஒப்பிடுவீர்கள்?  எனக்கு  யாரை  நிகராக்குவீர்கள்?  என்று  பரிசுத்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  40:25)

ippadiyirukka,  ennai  yaarukku  oppiduveerga'l?  enakku  yaarai  nigaraakkuveerga'l?  en’ru  parisuththar  sollugi’raar.  (easaayaa  40:25)

உங்கள்  கண்களை  ஏறெடுத்துப்பாருங்கள்;  அவைகளைச்  சிருஷ்டித்தவர்  யார்?  அவர்  அவைகளின்  சேனையை  இலக்கத்திட்டமாகப்  புறப்படப்பண்ணி,  அவைகளையெல்லாம்  பேர்பேராக  அழைக்கிறவராமே;  அவருடைய  மகா  பெலத்தினாலும்,  அவருடைய  மகா  வல்லமையினாலும்,  அவைகளில்  ஒன்றும்  குறையாமலிருக்கிறது.  (ஏசாயா  40:26)

ungga'l  ka'nga'lai  ea’reduththuppaarungga'l;  avaiga'laich  sirushdiththavar  yaar?  avar  avaiga'lin  seanaiyai  ilakkaththittamaagap  pu’rappadappa'n'ni,  avaiga'laiyellaam  pearpearaaga  azhaikki’ravaraamea;  avarudaiya  mahaa  belaththinaalum,  avarudaiya  mahaa  vallamaiyinaalum,  avaiga'lil  on’rum  ku’raiyaamalirukki’rathu.  (easaayaa  40:26)

யாக்கோபே,  இஸ்ரவேலே:  என்  வழி  கர்த்தருக்கு  மறைவாயிற்று  என்றும்,  என்  நியாயம்  என்  தேவனிடத்தில்  எட்டாமல்  போகிறது  என்றும்  நீ  சொல்வானேன்?  (ஏசாயா  40:27)

yaakkoabea,  isravealea:  en  vazhi  karththarukku  ma’raivaayit’ru  en’rum,  en  niyaayam  en  theavanidaththil  ettaamal  poagi’rathu  en’rum  nee  solvaanean?  (easaayaa  40:27)

பூமியின்  கடையாந்தரங்களைச்  சிருஷ்டித்த  கர்த்தராகிய  அநாதிதேவன்  சோர்ந்துபோவதுமில்லை,  இளைப்படைவதுமில்லை;  இதை  நீ  அறியாயோ?  இதை  நீ  கேட்டதில்லையோ?  அவருடைய  புத்தி  ஆராய்ந்து  முடியாதது.  (ஏசாயா  40:28)

boomiyin  kadaiyaantharangga'laich  sirushdiththa  karththaraagiya  anaathitheavan  soarnthupoavathumillai,  i'laippadaivathumillai;  ithai  nee  a’riyaayoa?  ithai  nee  keattathillaiyoa?  avarudaiya  buththi  aaraaynthu  mudiyaathathu.  (easaayaa  40:28)

சோர்ந்துபோகிறவனுக்கு  அவர்  பெலன்  கொடுத்து,  சத்துவமில்லாதவனுக்குச்  சத்துவத்தைப்  பெருகப்பண்ணுகிறார்.  (ஏசாயா  40:29)

soarnthupoagi’ravanukku  avar  belan  koduththu,  saththuvamillaathavanukkuch  saththuvaththaip  perugappa'n'nugi’raar.  (easaayaa  40:29)

இளைஞர்  இளைப்படைந்து  சோர்ந்துபோவார்கள்,  வாலிபரும்  இடறிவிழுவார்கள்.  (ஏசாயா  40:30)

i'laignar  i'laippadainthu  soarnthupoavaarga'l,  vaalibarum  ida’rivizhuvaarga'l.  (easaayaa  40:30)

கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களோ  புதுப்பெலன்  அடைந்து,  கழுகுகளைப்போலச்  செட்டைகளை  அடித்து  எழும்புவார்கள்;  அவர்கள்  ஓடினாலும்  இளைப்படையார்கள்,  நடந்தாலும்  சோர்ந்துபோகார்கள்.  (ஏசாயா  40:31)

karththarukkuk  kaaththirukki’ravarga'loa  puthupbelan  adainthu,  kazhuguga'laippoalach  settaiga'lai  adiththu  ezhumbuvaarga'l;  avarga'l  oadinaalum  i'laippadaiyaarga'l,  nadanthaalum  soarnthupoagaarga'l.  (easaayaa  40:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!