Sunday, October 02, 2016

Easaayaa 4 | ஏசாயா 4 | Isaiah 4

அந்நாளில்  ஏழு  ஸ்திரீகள்  ஒரே  புருஷனைப்  பிடித்து:  நாங்கள்  எங்கள்  சொந்த  ஆகாரத்தைப்  புசித்து,  எங்கள்  சொந்த  வஸ்திரத்தை  உடுப்போம்;  எங்கள்  நிந்தை  நீங்கும்படிக்கு  உன்பேர்மாத்திரம்  எங்கள்மேல்  விளங்கட்டும்  என்பார்கள்.  (ஏசாயா  4:1)

annaa'lil  eazhu  sthireega'l  orea  purushanaip  pidiththu:  naangga'l  engga'l  sontha  aagaaraththaip  pusiththu,  engga'l  sontha  vasthiraththai  uduppoam;  engga'l  ninthai  neenggumpadikku  unpearmaaththiram  engga'lmeal  vi'langgattum  enbaarga'l.  (easaayaa  4:1)

இஸ்ரவேலில்  தப்பினவர்களுக்கு  அந்நாளிலே  கர்த்தரின்  கிளை  அலங்காரமும்  மகிமையுமாயிருக்கும்;  பூமியின்  கனி  அவர்களுக்குச்  சிறப்பும்  அலங்காரமுமாயிருக்கும்.  (ஏசாயா  4:2)

isravealil  thappinavarga'lukku  annaa'lilea  karththarin  ki'lai  alanggaaramum  magimaiyumaayirukkum;  boomiyin  kani  avarga'lukkuch  si’rappum  alanggaaramumaayirukkum.  (easaayaa  4:2)

அப்பொழுது  ஆண்டவர்,  சீயோன்  குமாரத்திகளின்  அழுக்கைக்  கழுவி,  நியாயத்தின்  ஆவியினாலும்,  சுட்டெரிப்பின்  ஆவியினாலும்,  எருசலேமின்  இரத்தப்பழிகளை  அதின்  நடுவிலிருந்து  நீக்கிவிடும்போது,  (ஏசாயா  4:3)

appozhuthu  aa'ndavar,  seeyoan  kumaaraththiga'lin  azhukkaik  kazhuvi,  niyaayaththin  aaviyinaalum,  sutterippin  aaviyinaalum,  erusaleamin  iraththappazhiga'lai  athin  naduvilirunthu  neekkividumpoathu,  (easaayaa  4:3)

சீயோனில்  மீதியாயிருந்து,  எருசலேமில்  தரித்திருந்து  ஜீவனுக்கென்று  பேரெழுதப்பட்டவனெவனும்  பரிசுத்தனென்று  சொல்லப்படுவான்.  (ஏசாயா  4:4)

seeyoanil  meethiyaayirunthu,  erusaleamil  thariththirunthu  jeevanukken’ru  pearezhuthappattavanevanum  parisuththanen’ru  sollappaduvaan.  (easaayaa  4:4)

அப்பொழுது  கர்த்தர்  சீயோன்  மலையிலுள்ள  எல்லா  வாசஸ்தலங்களிலும்,  அதின்  சபைகளின்மேலும்,  பகலில்  மேகத்தையும்  புகையையும்,  இரவில்  கொழுந்துவிட்டு  எரியும்  அக்கினிப்பிரகாசத்தையும்  உண்டாக்குவார்;  மகிமையானவைகளின்மேலெல்லாம்  காவல்  உண்டாயிருக்கும்.  (ஏசாயா  4:5)

appozhuthu  karththar  seeyoan  malaiyilu'l'la  ellaa  vaasasthalangga'lilum,  athin  sabaiga'linmealum,  pagalil  meagaththaiyum  pugaiyaiyum,  iravil  kozhunthuvittu  eriyum  akkinippiragaasaththaiyum  u'ndaakkuvaar;  magimaiyaanavaiga'linmealellaam  kaaval  u'ndaayirukkum.  (easaayaa  4:5)

பகலிலே  வெயிலுக்கு  நிழலாகவும்,  பெருங்காற்றுக்கும்  மழைக்கும்  அடைக்கலமாகவும்,  மறைவிடமாகவும்,  ஒரு  கூடாரம்  உண்டாயிருக்கும்.  (ஏசாயா  4:6)

pagalilea  veyilukku  nizhalaagavum,  perungkaat’rukkum  mazhaikkum  adaikkalamaagavum,  ma’raividamaagavum,  oru  koodaaram  u'ndaayirukkum.  (easaayaa  4:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!