Sunday, October 09, 2016

Easaayaa 38 | ஏசாயா 38 | Isaiah 38

அந்நாட்களில்  எசேக்கியா  வியாதிப்பட்டு  மரணத்துக்கு  ஏதுவாயிருந்தான்;  அப்பொழுது  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  என்னும்  தீர்க்கதரிசி  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  உமது  வீட்டுக்காரியத்தை  ஒழுங்குப்படுத்தும்,  நீர்  பிழைக்கமாட்டீர்,  மரித்துப்போவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (ஏசாயா  38:1)

annaadka'lil  eseakkiyaa  viyaathippattu  mara'naththukku  eathuvaayirunthaan;  appozhuthu  aamoathsin  kumaaranaagiya  easaayaa  ennum  theerkkatharisi  avanidaththil  vanthu,  avanai  noakki:  neer  umathu  veettukkaariyaththai  ozhungguppaduththum,  neer  pizhaikkamaatteer,  mariththuppoaveer  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (easaayaa  38:1)

அப்பொழுது  எசேக்கியா  தன்  முகத்தைச்  சுவர்ப்புறமாகத்  திருப்பிக்கொண்டு,  கர்த்தரை  நோக்கி:  (ஏசாயா  38:2)

appozhuthu  eseakkiyaa  than  mugaththaich  suvarppu’ramaagath  thiruppikko'ndu,  karththarai  noakki:  (easaayaa  38:2)

  கர்த்தாவே,  நான்  உமக்கு  முன்பாக  உண்மையும்  மன  உத்தமமுமாய்  நடந்து,  உமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்தேன்  என்பதை  நினைத்தருளும்  என்று  விண்ணப்பம்பண்ணி,  எசேக்கியா  மிகவும்  அழுதான்.  (ஏசாயா  38:3)

aa  karththaavea,  naan  umakku  munbaaga  u'nmaiyum  mana  uththamamumaay  nadanthu,  umathu  paarvaikku  nalamaanathaich  seythean  enbathai  ninaiththaru'lum  en’ru  vi'n'nappampa'n'ni,  eseakkiyaa  migavum  azhuthaan.  (easaayaa  38:3)

அப்பொழுது  ஏசாயாவுக்கு  உண்டான  கர்த்தருடைய  வார்த்தையாவது:  (ஏசாயா  38:4)

appozhuthu  easaayaavukku  u'ndaana  karththarudaiya  vaarththaiyaavathu:  (easaayaa  38:4)

நீ  போய்  எசேக்கியாவை  நோக்கி:  உன்  தகப்பனாகிய  தாவீதின்  தேவனாயிருக்கிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டேன்;  உன்  கண்ணீரைக்  கண்டேன்;  இதோ,  உன்  நாட்களோடே  பதினைந்து  வருஷம்  கூட்டுவேன்.  (ஏசாயா  38:5)

nee  poay  eseakkiyaavai  noakki:  un  thagappanaagiya  thaaveethin  theavanaayirukki’ra  karththar  sollugi’rathu  ennaven’raal,  un  vi'n'nappaththaik  keattean;  un  ka'n'neeraik  ka'ndean;  ithoa,  un  naadka'loadea  pathinainthu  varusham  koottuvean.  (easaayaa  38:5)

நான்  உன்னையும்  இந்த  நகரத்தையும்  அசீரியா  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்து,  இந்த  நகரத்துக்கு  ஆதரவாயிருப்பேன்.  (ஏசாயா  38:6)

naan  unnaiyum  intha  nagaraththaiyum  aseeriyaa  raajaavin  kaikkuth  thappuviththu,  intha  nagaraththukku  aatharavaayiruppean.  (easaayaa  38:6)

இதோ,  ஆகாசுடைய  சூரிய  கடியாரத்தில்  பாகைக்குப்  பாகை  இறங்கின  சாயையைப்  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திருப்புவேன்  என்றார்.  (ஏசாயா  38:7)

ithoa,  aagaasudaiya  sooriya  kadiyaaraththil  paagaikkup  paagai  i’ranggina  saayaiyaip  paththuppaagai  pinnittuth  thiruppuvean  en’raar.  (easaayaa  38:7)

தாம்  சொன்ன  இந்த  வார்த்தையின்படி  கர்த்தர்  செய்வார்  என்பதற்கு  இது  கர்த்தரால்  உனக்கு  அடையாளமாயிருக்கும்  என்று  சொல்  என்றார்;  அப்படியே  கடியாரத்தில்  இறங்கியிருந்த  சூரியசாயை  பத்துப்பாகை  திரும்பிற்று.  (ஏசாயா  38:8)

thaam  sonna  intha  vaarththaiyinpadi  karththar  seyvaar  enbatha’rku  ithu  karththaraal  unakku  adaiyaa'lamaayirukkum  en’ru  sol  en’raar;  appadiyea  kadiyaaraththil  i’ranggiyiruntha  sooriyasaayai  paththuppaagai  thirumbit’ru.  (easaayaa  38:8)

யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியா  வியாதிப்பட்டு,  தன்  வியாதி  நீங்கிச்  சொஸ்தமானபோது  எழுதிவைத்ததாவது:  (ஏசாயா  38:9)

yoothaavin  raajaavaagiya  eseakkiyaa  viyaathippattu,  than  viyaathi  neenggich  sosthamaanapoathu  ezhuthivaiththathaavathu:  (easaayaa  38:9)

நான்  என்  பூரண  ஆயுசின்  வருஷங்களுக்குச்  சேராமல்  பாதாளத்தின்  வாசல்களுக்குட்படுவேன்  என்று  என்  நாட்கள்  அறுப்புண்கிறபோது  சொன்னேன்.  (ஏசாயா  38:10)

naan  en  poora'na  aayusin  varushangga'lukkuch  searaamal  paathaa'laththin  vaasalga'lukkudpaduvean  en’ru  en  naadka'l  a’ruppu'ngi’rapoathu  sonnean.  (easaayaa  38:10)

கர்த்தரை,  கர்த்தரை,  நான்  இனி  உயிரோடிருக்கிறவர்களின்  தேசத்திலே  தரிசிப்பதில்லை;  இனி  பூலோகக்  குடிகளோடே  இருந்து  மனுஷரை  நான்  காண்பதில்லை.  (ஏசாயா  38:11)

karththarai,  karththarai,  naan  ini  uyiroadirukki’ravarga'lin  theasaththilea  tharisippathillai;  ini  booloagak  kudiga'loadea  irunthu  manusharai  naan  kaa'nbathillai.  (easaayaa  38:11)

என்  ஆயுசு  மேய்ப்பனுடைய  கூடாரத்தைப்போல  என்னைவிட்டுப்  பெயர்ந்துபோகிறது;  நெய்கிறவன்  பாவை  அறுக்கிறதுபோல  என்  ஜீவனை  அறுக்கக்  கொடுக்கிறேன்;  என்னைப்  பாவிலிருந்து  அறுத்துவிடுகிறார்;  இன்று  இரவுக்குள்ளே  என்னை  முடிவடையப்பண்ணுவீர்.  (ஏசாயா  38:12)

en  aayusu  meayppanudaiya  koodaaraththaippoala  ennaivittup  peyarnthupoagi’rathu;  neygi’ravan  paavai  a’rukki’rathupoala  en  jeevanai  a’rukkak  kodukki’rean;  ennaip  paavilirunthu  a’ruththuvidugi’raar;  in’ru  iravukku'l'lea  ennai  mudivadaiyappa'n'nuveer.  (easaayaa  38:12)

விடியற்காலமட்டும்  நான்  எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்;  அவர்  சிங்கம்போல  என்  எலும்புகளையெல்லாம்  நொறுக்குவார்;  இன்று  இரவுக்குள்ளே  என்னை  முடிவடையப்பண்ணுவீர்  என்று  சொல்லி,  (ஏசாயா  38:13)

vidiya’rkaalamattum  naan  e'n'namittukko'ndirunthean;  avar  singgampoala  en  elumbuga'laiyellaam  no’rukkuvaar;  in’ru  iravukku'l'lea  ennai  mudivadaiyappa'n'nuveer  en’ru  solli,  (easaayaa  38:13)

நமுட்டைப்போலும்,  தகைவிலான்  குருவியைப்போலும்  கூவினேன்,  புறாவைப்போல்  புலம்பினேன்;  என்  கண்கள்  உயரப்  பார்க்கிறதினால்  பூத்துப்போயின;  கர்த்தாவே,  ஒடுங்கிப்போகிறேன்;  என்  காரியத்தை  மேற்போட்டுக்  கொள்ளும்  என்றேன்.  (ஏசாயா  38:14)

namuttaippoalum,  thagaivilaan  kuruviyaippoalum  koovinean,  pu’raavaippoal  pulambinean;  en  ka'nga'l  uyarap  paarkki’rathinaal  pooththuppoayina;  karththaavea,  odunggippoagi’rean;  en  kaariyaththai  mea’rpoattuk  ko'l'lum  en’rean.  (easaayaa  38:14)

நான்  என்னசொல்லுவேன்?  அவர்  எனக்கு  வாக்கு  அருளினார்;  அந்தப்பிரகாரமே  செய்தார்;  என்  ஆயுசின்  வருஷங்களிலெல்லாம்  என்  ஆத்துமாவின்  கசப்பை  நினைத்து  நடந்துகொள்வேன்.  (ஏசாயா  38:15)

naan  ennasolluvean?  avar  enakku  vaakku  aru'linaar;  anthappiragaaramea  seythaar;  en  aayusin  varushangga'lilellaam  en  aaththumaavin  kasappai  ninaiththu  nadanthuko'lvean.  (easaayaa  38:15)

ஆண்டவரே,  இவைகளினால்  மனுஷர்  பிழைக்கிறார்கள்;  இவைகளெல்லாம்  என்  உயிர்க்கு  உயிராயிருக்கிறது;  என்னைச்  சொஸ்தப்படவும்  பிழைக்கவும்பண்ணினீர்.  (ஏசாயா  38:16)

aa'ndavarea,  ivaiga'linaal  manushar  pizhaikki’raarga'l;  ivaiga'lellaam  en  uyirkku  uyiraayirukki’rathu;  ennaich  sosthappadavum  pizhaikkavumpa'n'nineer.  (easaayaa  38:16)

இதோ,  சமாதானத்துக்குப்  பதிலாக  மகா  கசப்பு  வந்திருந்தது,  தேவரீரோ  என்  ஆத்துமாவை  நேசித்து  அழிவின்  குழிக்கு  விலக்கினீர்;  என்  பாவங்களையெல்லாம்  உமது  முதுகுக்குப்  பின்னாக  எறிந்துவிட்டீர்.  (ஏசாயா  38:17)

ithoa,  samaathaanaththukkup  bathilaaga  mahaa  kasappu  vanthirunthathu,  theavareeroa  en  aaththumaavai  neasiththu  azhivin  kuzhikku  vilakkineer;  en  paavangga'laiyellaam  umathu  muthugukkup  pinnaaga  e’rinthuvitteer.  (easaayaa  38:17)

பாதாளம்  உம்மைத்  துதியாது,  மரணம்  உம்மைப்  போற்றாது;  குழியில்  இறங்குகிறவர்கள்  உம்முடைய  சத்தியத்தைத்  தியானிப்பதில்லை.  (ஏசாயா  38:18)

paathaa'lam  ummaith  thuthiyaathu,  mara'nam  ummaip  poat’raathu;  kuzhiyil  i’ranggugi’ravarga'l  ummudaiya  saththiyaththaith  thiyaanippathillai.  (easaayaa  38:18)

நான்  இன்று  செய்கிறதுபோல,  உயிரோடிருக்கிறவன்,  உயிரோடிருக்கிறவனே,  உம்மைத்  துதிப்பான்,  தகப்பன்  பிள்ளைகளுக்கு  உமது  சத்தியத்தைத்  தெரிவிப்பான்.  (ஏசாயா  38:19)

naan  in’ru  seygi’rathupoala,  uyiroadirukki’ravan,  uyiroadirukki’ravanea,  ummaith  thuthippaan,  thagappan  pi'l'laiga'lukku  umathu  saththiyaththaith  therivippaan.  (easaayaa  38:19)

கர்த்தர்  என்னை  இரட்சிக்கவந்தார்;  ஆகையால்  எங்கள்  ஜீவநாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்திலே  என்  கீதவாத்தியங்களை  வாசித்துப்  பாடுவோம்  என்று  எழுதிவைத்தான்.  (ஏசாயா  38:20)

karththar  ennai  iradchikkavanthaar;  aagaiyaal  engga'l  jeevanaa'lellaam  karththarudaiya  aalayaththilea  en  keethavaaththiyangga'lai  vaasiththup  paaduvoam  en’ru  ezhuthivaiththaan.  (easaayaa  38:20)

அத்திப்பழத்து  அடையைக்  கொண்டுவந்து,  பிளவையின்மேல்  பற்றுப்போடுங்கள்;  அப்பொழுது  பிழைப்பார்  என்று  ஏசாயா  சொல்லியிருந்தான்.  (ஏசாயா  38:21)

aththippazhaththu  adaiyaik  ko'nduvanthu,  pi'lavaiyinmeal  pat’ruppoadungga'l;  appozhuthu  pizhaippaar  en’ru  easaayaa  solliyirunthaan.  (easaayaa  38:21)

அப்பொழுது  எசேக்கியா:  நான்  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போவதற்கு  அடையாளம்  என்னவென்று  கேட்டிருந்தான்.  (ஏசாயா  38:22)

appozhuthu  eseakkiyaa:  naan  karththarudaiya  aalayaththukkup  poavatha’rku  adaiyaa'lam  ennaven’ru  keattirunthaan.  (easaayaa  38:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!