Saturday, October 08, 2016

Easaayaa 34 | ஏசாயா 34 | Isaiah 34

ஜாதிகளே,  கேட்கிறதற்குக்  கிட்டிவாருங்கள்;  ஜனங்களே,  கவனியுங்கள்;  பூமியும்  அதின்  நிறைவும்,  பூச்சக்கரமும்  அதில்  உற்பத்தியான  யாவும்  கேட்கக்கடவது.  (ஏசாயா  34:1)

jaathiga'lea,  keadki’ratha’rkuk  kittivaarungga'l;  janangga'lea,  kavaniyungga'l;  boomiyum  athin  ni’raivum,  poochchakkaramum  athil  u’rpaththiyaana  yaavum  keadkakkadavathu.  (easaayaa  34:1)

சகல  ஜாதிகளின்மேலும்  கர்த்தருடைய  கடுங்கோபமும்,  அவைகளுடைய  சகல  சேனைகளின்மேலும்  அவருடைய  உக்கிரமும்  மூளுகிறது;  அவர்களைச்  சங்காரத்துக்கு  நியமித்து,  கொலைக்கு  ஒப்புக்கொடுக்கிறார்.  (ஏசாயா  34:2)

sagala  jaathiga'linmealum  karththarudaiya  kadungkoabamum,  avaiga'ludaiya  sagala  seanaiga'linmealum  avarudaiya  ukkiramum  moo'lugi’rathu;  avarga'laich  sanggaaraththukku  niyamiththu,  kolaikku  oppukkodukki’raar.  (easaayaa  34:2)

அவர்களிலே  கொலைசெய்யப்பட்டவர்கள்  வெளியே  எறியுண்டுகிடப்பார்கள்;  அவர்களுடைய  பிரேதங்கள்  நாற்றமெடுக்கும்;  அவர்களுடைய  இரத்தத்தினாலே  மலைகளும்  கரைந்துபோம்.  (ஏசாயா  34:3)

avarga'lilea  kolaiseyyappattavarga'l  ve'liyea  e’riyu'ndukidappaarga'l;  avarga'ludaiya  pireathangga'l  naat’ramedukkum;  avarga'ludaiya  iraththaththinaalea  malaiga'lum  karainthupoam.  (easaayaa  34:3)

வானத்தின்  சர்வ  சேனையும்  கரைந்து,  வானங்கள்  புஸ்தகச்சுருளைப்போல்  சுருட்டப்பட்டு,  அவைகளின்  சர்வசேனையும்  திராட்சச்செடியின்  இலைகள்  உதிருகிறதுபோலவும்,  அத்திமரத்தின்  காய்கள்  உதிருகிறதுபோலவும்  உதிர்ந்து  விழும்.  (ஏசாயா  34:4)

vaanaththin  sarva  seanaiyum  karainthu,  vaanangga'l  pusthagachsuru'laippoal  suruttappattu,  avaiga'lin  sarvaseanaiyum  thiraadchachsediyin  ilaiga'l  uthirugi’rathupoalavum,  aththimaraththin  kaayga'l  uthirugi’rathupoalavum  uthirnthu  vizhum.  (easaayaa  34:4)

வானங்களில்  என்  பட்டயம்  வெறிகொண்டது;  இதோ,  ஏதோமின்மேலும்,  நான்  சங்காரத்துக்கு  நியமித்த  ஜனத்தின்மேலும்,  அது  நியாயஞ்செய்ய  இறங்கும்.  (ஏசாயா  34:5)

vaanangga'lil  en  pattayam  ve’riko'ndathu;  ithoa,  eathoaminmealum,  naan  sanggaaraththukku  niyamiththa  janaththinmealum,  athu  niyaayagnseyya  i’ranggum.  (easaayaa  34:5)

போஸ்றாவிலே  கர்த்தருக்கு  ஒரு  யாகமும்,  ஏதோம்  தேசத்திலே  மகா  சங்காரமும்  உண்டு;  கர்த்தருடைய  பட்டயம்  இரத்தத்தால்  திருப்தியாகி,  நிணத்தினால்  பூரிக்கின்றது;  ஆட்டுக்குட்டிகள்  கடாக்களுடைய  இரத்தத்தினாலும்,  ஆட்டுக்கடாக்களுடைய  குண்டிக்காய்களின்  கொழுப்பினாலும்  திருப்தியாகும்.  (ஏசாயா  34:6)

boas’raavilea  karththarukku  oru  yaagamum,  eathoam  theasaththilea  mahaa  sanggaaramum  u'ndu;  karththarudaiya  pattayam  iraththaththaal  thirupthiyaagi,  ni'naththinaal  poorikkin’rathu;  aattukkuttiga'l  kadaakka'ludaiya  iraththaththinaalum,  aattukkadaakka'ludaiya  ku'ndikkaayga'lin  kozhuppinaalum  thirupthiyaagum.  (easaayaa  34:6)

அவைகளோடே  காண்டாமிருகங்களும்,  ரிஷபங்களோடே  காளைகளும்  வந்து  மடியும்;  அவர்கள்  தேசம்  இரத்தவெறிகொண்டு,  அவர்கள்  மண்  நிணத்தினால்  கொழுத்துப்போம்.  (ஏசாயா  34:7)

avaiga'loadea  kaa'ndaamirugangga'lum,  rishabangga'loadea  kaa'laiga'lum  vanthu  madiyum;  avarga'l  theasam  iraththave’riko'ndu,  avarga'l  ma'n  ni'naththinaal  kozhuththuppoam.  (easaayaa  34:7)

அது  கர்த்தர்  பழிவாங்கும்  நாள்,  சீயோனுடைய  வழக்கினிமித்தம்  பதிலளிக்கும்  வருஷம்.  (ஏசாயா  34:8)

athu  karththar  pazhivaanggum  naa'l,  seeyoanudaiya  vazhakkinimiththam  bathila'likkum  varusham.  (easaayaa  34:8)

அதின்  ஆறுகள்  பிசினாகவும்,  அதின்  மண்  கந்தகமாகவும்  மாறி,  அதின்  நிலம்  எரிகிற  கீலாய்ப்போம்.  (ஏசாயா  34:9)

athin  aa’ruga'l  pisinaagavum,  athin  ma'n  kanthagamaagavum  maa’ri,  athin  nilam  erigi’ra  keelaayppoam.  (easaayaa  34:9)

இரவும்  பகலும்  அது  அவியாது;  அதின்  புகை  என்றென்றைக்கும்  எழும்பும்;  தலைமுறை  தலைமுறையாக  அது  பாழாயிருக்கும்;  சதாகாலம்  சதாகாலமாக  அதை  ஒருவரும்  கடந்துபோவதில்லை.  (ஏசாயா  34:10)

iravum  pagalum  athu  aviyaathu;  athin  pugai  en’ren’raikkum  ezhumbum;  thalaimu’rai  thalaimu’raiyaaga  athu  paazhaayirukkum;  sathaakaalam  sathaakaalamaaga  athai  oruvarum  kadanthupoavathillai.  (easaayaa  34:10)

நாரையும்  முள்ளம்பன்றியும்  அதைச்  சுதந்தரிக்கும்,  ஆந்தையும்  காக்கையும்  அதிலே  குடியிருக்கும்;  அதின்மேல்  வெட்டவெளியின்  நூலையும்,  வெறுமையின்  தூக்கையும்  பிடிப்பார்.  (ஏசாயா  34:11)

naaraiyum  mu'l'lampan’riyum  athaich  suthantharikkum,  aanthaiyum  kaakkaiyum  athilea  kudiyirukkum;  athinmeal  vettave'liyin  noolaiyum,  ve’rumaiyin  thookkaiyum  pidippaar.  (easaayaa  34:11)

ராஜ்யபாரம்பண்ண  அதின்  மேன்மக்களை  அழைத்தால்,  அங்கே  அவர்களில்  ஒருவரும்  இரார்கள்;  அதின்  பிரபுக்கள்  அனைவரும்  இல்லாமற்போவார்கள்.  (ஏசாயா  34:12)

raajyabaarampa'n'na  athin  meanmakka'lai  azhaiththaal,  anggea  avarga'lil  oruvarum  iraarga'l;  athin  pirabukka'l  anaivarum  illaama’rpoavaarga'l.  (easaayaa  34:12)

அதின்  அரமனைகளில்  முட்செடிகளும்,  அதின்  கோட்டைகளில்  காஞ்சொறிகளும்  முட்பூண்டுகளும்  முளைக்கும்;  அது  வலுசர்ப்பங்களின்  தாபரமும்,  கோட்டான்களின்  மாளிகையுமாயிருக்கும்.  (ஏசாயா  34:13)

athin  aramanaiga'lil  mudchediga'lum,  athin  koattaiga'lil  kaagncho’riga'lum  mudpoo'nduga'lum  mu'laikkum;  athu  valusarppangga'lin  thaabaramum,  koattaanga'lin  maa'ligaiyumaayirukkum.  (easaayaa  34:13)

அங்கே  காட்டுமிருகங்களும்  ஓரிகளும்  ஒன்றையொன்று  சந்தித்து,  காட்டாட்டைக்  காட்டாடு  கூப்பிடும்;  அங்கே  சாக்குருவிகளும்  தங்கி,  இளைப்பாறும்  இடத்தைக்  கண்டடையும்.  (ஏசாயா  34:14)

anggea  kaattumirugangga'lum  oariga'lum  on’raiyon’ru  santhiththu,  kaattaattaik  kaattaadu  kooppidum;  anggea  saakkuruviga'lum  thanggi,  i'laippaa’rum  idaththaik  ka'ndadaiyum.  (easaayaa  34:14)

அங்கே  வல்லூறும்  கூடுகட்டி,  முட்டையிட்டு,  குஞ்சுபொரித்து,  அவைகளைத்  தன்  நிழலிலே  கூட்டிக்கொள்ளும்;  அங்கே  கூளிகளும்  ஜோடுஜோடாகச்  சேரும்.  (ஏசாயா  34:15)

anggea  valloo’rum  koodukatti,  muttaiyittu,  kugnchuporiththu,  avaiga'laith  than  nizhalilea  koottikko'l'lum;  anggea  koo'liga'lum  joadujoadaagach  searum.  (easaayaa  34:15)

கர்த்தருடைய  புஸ்தகத்திலே  தேடி  வாசியுங்கள்;  இவைகளில்  ஒன்றும்  குறையாது;  இவைகளில்  ஒன்றும்  ஜோடில்லாதிராது;  அவருடைய  வாய்  இதைச்  சொல்லிற்று;  அவருடைய  ஆவி  அவைகளைச்  சேர்க்கும்.  (ஏசாயா  34:16)

karththarudaiya  pusthagaththilea  theadi  vaasiyungga'l;  ivaiga'lil  on’rum  ku’raiyaathu;  ivaiga'lil  on’rum  joadillaathiraathu;  avarudaiya  vaay  ithaich  sollit’ru;  avarudaiya  aavi  avaiga'laich  searkkum.  (easaayaa  34:16)

அவரே  அவைகளுக்குச்  சீட்டுப்போட்டார்;  அவருடைய  கையே  அதை  அவைகளுக்கு  அளவுநூலால்  பகிர்ந்துகொடுத்தது;  அவைகள்  என்றைக்கும்  அதைச்  சுதந்தரித்துத்  தலைமுறை  தலைமுறையாக  அதிலே  சஞ்சரிக்கும்.  (ஏசாயா  34:17)

avarea  avaiga'lukkuch  seettuppoattaar;  avarudaiya  kaiyea  athai  avaiga'lukku  a'lavunoolaal  pagirnthukoduththathu;  avaiga'l  en’raikkum  athaich  suthanthariththuth  thalaimu’rai  thalaimu’raiyaaga  athilea  sagncharikkum.  (easaayaa  34:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!