Saturday, October 08, 2016

Easaayaa 33 | ஏசாயா 33 | Isaiah 33

கொள்ளையிடப்படாதிருந்தும்,  கொள்ளையிடுகிறவனும்,  துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத்  துரோகம்பண்ணுகிறவனுமாகிய  உனக்கு  ஐயோ!  நீ  கொள்ளையிட்டு  முடிந்தபின்பு  கொள்ளையிடப்படுவாய்;  நீ  துரோகம்பண்ணித்  தீர்ந்தபின்பு  உனக்குத்  துரோகம்பண்ணுவார்கள்.  (ஏசாயா  33:1)

ko'l'laiyidappadaathirunthum,  ko'l'laiyidugi’ravanum,  thuroagampa'n'naathirukki’ravarga'lukkuth  thuroagampa'n'nugi’ravanumaagiya  unakku  aiyoa!  nee  ko'l'laiyittu  mudinthapinbu  ko'l'laiyidappaduvaay;  nee  thuroagampa'n'nith  theernthapinbu  unakkuth  thuroagampa'n'nuvaarga'l.  (easaayaa  33:1)

கர்த்தாவே,  எங்களுக்கு  இரங்கும்,  உமக்குக்  காத்திருக்கிறோம்;  தேவரீர்  காலையில்  அவர்கள்  புயமும்,  இக்கட்டுக்காலத்தில்  எங்கள்  இரட்சிப்புமாயிரும்.  (ஏசாயா  33:2)

karththaavea,  engga'lukku  iranggum,  umakkuk  kaaththirukki’roam;  theavareer  kaalaiyil  avarga'l  puyamum,  ikkattukkaalaththil  engga'l  iradchippumaayirum.  (easaayaa  33:2)

அமளியின்  சத்தத்தினாலே  ஜனங்கள்  அலைந்தோடி,  நீர்  எழுந்திருக்கும்போது  ஜாதிகள்  சிதறடிக்கப்படுவார்கள்.  (ஏசாயா  33:3)

ama'liyin  saththaththinaalea  janangga'l  alainthoadi,  neer  ezhunthirukkumpoathu  jaathiga'l  sitha’radikkappaduvaarga'l.  (easaayaa  33:3)

வெட்டுக்கிளிகள்  சேர்க்கிறதுபோல  உங்கள்  கொள்ளை  சேர்க்கப்படும்;  வெட்டுக்கிளிகள்  குதித்துத்  திரிகிறதுபோல  மனுஷர்  அதின்மேல்  குதித்துத்  திரிவார்கள்.  (ஏசாயா  33:4)

vettukki'liga'l  searkki’rathupoala  ungga'l  ko'l'lai  searkkappadum;  vettukki'liga'l  kuthiththuth  thirigi’rathupoala  manushar  athinmeal  kuthiththuth  thirivaarga'l.  (easaayaa  33:4)

கர்த்தர்  உயர்ந்தவர்,  அவர்  உன்னதத்தில்  வாசமாயிருக்கிறார்;  அவர்  சீயோனை  நியாயத்தினாலும்  நீதியினாலும்  நிரப்புகிறார்.  (ஏசாயா  33:5)

karththar  uyarnthavar,  avar  unnathaththil  vaasamaayirukki’raar;  avar  seeyoanai  niyaayaththinaalum  neethiyinaalum  nirappugi’raar.  (easaayaa  33:5)

பூரணரட்சிப்பும்  ஞானமும்  அறிவும்  உன்  காலங்களுடைய  உறுதியாயிருக்கும்;  கர்த்தருக்குப்  பயப்படுதலே  அதின்  பொக்கிஷம்.  (ஏசாயா  33:6)

poora'naradchippum  gnaanamum  a’rivum  un  kaalangga'ludaiya  u’ruthiyaayirukkum;  karththarukkup  bayappaduthalea  athin  pokkisham.  (easaayaa  33:6)

இதோ,  அவர்களுடைய  பராக்கிரமசாலிகள்  வெளியிலே  அலறுகிறார்கள்;  சமாதானத்து  ஸ்தானாபதிகள்  மனங்கசந்து  அழுகிறார்கள்.  (ஏசாயா  33:7)

ithoa,  avarga'ludaiya  baraakkiramasaaliga'l  ve'liyilea  ala’rugi’raarga'l;  samaathaanaththu  sthaanaabathiga'l  manangkasanthu  azhugi’raarga'l.  (easaayaa  33:7)

பாதைகள்  பாழாயின;  வழிப்போக்கர்  இல்லை;  உடன்படிக்கையை  மீறுகிறான்;  நகரங்களை  இகழ்ச்சிபண்ணுகிறான்;  மனுஷனை  எண்ணாதேபோகிறான்.  (ஏசாயா  33:8)

paathaiga'l  paazhaayina;  vazhippoakkar  illai;  udanpadikkaiyai  mee’rugi’raan;  nagarangga'lai  igazhchchipa'n'nugi’raan;  manushanai  e'n'naatheapoagi’raan.  (easaayaa  33:8)

தேசம்  துக்கித்து  விடாய்த்திருக்கிறது;  லீபனோன்  வெட்கி  வாடுகிறது;  சாரோன்  வனாந்தரத்துக்கு  ஒப்பாகிறது;  பாசானும்  கர்மேலும்  பாழாக்கப்படுகிறது.  (ஏசாயா  33:9)

theasam  thukkiththu  vidaayththirukki’rathu;  leebanoan  vedki  vaadugi’rathu;  saaroan  vanaantharaththukku  oppaagi’rathu;  baasaanum  karmealum  paazhaakkappadugi’rathu.  (easaayaa  33:9)

இப்பொழுது  எழுந்தருளுவேன்,  இப்பொழுது  உயருவேன்,  இப்பொழுது  மேன்மைப்படுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  33:10)

ippozhuthu  ezhuntharu'luvean,  ippozhuthu  uyaruvean,  ippozhuthu  meanmaippaduvean  en’ru  karththar  sollugi’raar.  (easaayaa  33:10)

பதரைக்  கர்ப்பந்தரித்துத்  தாளடியைப்  பெறுவீர்கள்;  அக்கினியைப்போல்  உங்கள்  சுவாசமே  உங்களைப்  பட்சிக்கும்.  (ஏசாயா  33:11)

patharaik  karppanthariththuth  thaa'ladiyaip  pe’ruveerga'l;  akkiniyaippoal  ungga'l  suvaasamea  ungga'laip  padchikkum.  (easaayaa  33:11)

ஜனங்கள்  சுண்ணாம்பைப்போல  நீற்றப்படுவார்கள்;  வெட்டப்பட்ட  முட்செடிகளைப்போலத்  தீயில்  எரிக்கப்படுவார்கள்.  (ஏசாயா  33:12)

janangga'l  su'n'naambaippoala  neet’rappaduvaarga'l;  vettappatta  mudchediga'laippoalath  theeyil  erikkappaduvaarga'l.  (easaayaa  33:12)

தூரத்திலுள்ளவர்களே,  நான்  செய்கிறதைக்  கேளுங்கள்;  சமீபத்திலிருக்கிறவர்களே,  என்  பராக்கிரமத்தை  அறிந்துகொள்ளுங்கள்  என்கிறார்.  (ஏசாயா  33:13)

thooraththilu'l'lavarga'lea,  naan  seygi’rathaik  kea'lungga'l;  sameebaththilirukki’ravarga'lea,  en  baraakkiramaththai  a’rinthuko'l'lungga'l  engi’raar.  (easaayaa  33:13)

சீயோனிலுள்ள  பாவிகள்  திகைக்கிறார்கள்;  மாயக்காரரை  நடுக்கம்  பிடிக்கிறது;  பட்சிக்கும்  அக்கினிக்கு  முன்பாக  நம்மில்  தரித்திருப்பவன்  யார்?  நித்தியஜுவாலைக்கு  முன்பாக  நம்மில்  தாபரிப்பவன்  யார்  என்கிறார்கள்.  (ஏசாயா  33:14)

seeyoanilu'l'la  paaviga'l  thigaikki’raarga'l;  maayakkaararai  nadukkam  pidikki’rathu;  padchikkum  akkinikku  munbaaga  nammil  thariththiruppavan  yaar?  niththiyajuvaalaikku  munbaaga  nammil  thaabarippavan  yaar  engi’raarga'l.  (easaayaa  33:14)

நீதியாய்  நடந்து,  செம்மையானவைகளைப்  பேசி,  இடுக்கண்  செய்வதால்  வரும்  ஆதாயத்தை  வெறுத்து,  பரிதானங்களை  வாங்காதபடிக்குத்  தன்  கைகளை  உதறி,  இரத்தஞ்சிந்துவதற்கான  யோசனைகளைக்  கேளாதபடிக்குத்  தன்  செவியை  அடைத்து,  பொல்லாப்பைக்  காணாதபடிக்குத்  தன்  கண்களை  மூடுகிறவனெவனோ,  (ஏசாயா  33:15)

neethiyaay  nadanthu,  semmaiyaanavaiga'laip  peasi,  idukka'n  seyvathaal  varum  aathaayaththai  ve’ruththu,  parithaanangga'lai  vaanggaathapadikkuth  than  kaiga'lai  utha’ri,  iraththagnsinthuvatha’rkaana  yoasanaiga'laik  kea'laathapadikkuth  than  seviyai  adaiththu,  pollaappaik  kaa'naathapadikkuth  than  ka'nga'lai  moodugi’ravanevanoa,  (easaayaa  33:15)

அவன்  உயர்ந்த  இடங்களில்  வாசம்பண்ணுவான்;  கன்மலைகளின்  அரண்கள்  அவனுடைய  உயர்ந்த  அடைக்கலமாகும்;  அவன்  அப்பம்  அவனுக்குக்  கொடுக்கப்படும்;  அவன்  தண்ணீர்  அவனுக்கு  நிச்சயமாய்க்  கிடைக்கும்.  (ஏசாயா  33:16)

avan  uyarntha  idangga'lil  vaasampa'n'nuvaan;  kanmalaiga'lin  ara'nga'l  avanudaiya  uyarntha  adaikkalamaagum;  avan  appam  avanukkuk  kodukkappadum;  avan  tha'n'neer  avanukku  nichchayamaayk  kidaikkum.  (easaayaa  33:16)

உன்  கண்கள்  ராஜாவை  மகிமை  பொருந்தினவராகக்  காணும்,  தூரத்திலுள்ள  தேசத்தையும்  பார்க்கும்.  (ஏசாயா  33:17)

un  ka'nga'l  raajaavai  magimai  porunthinavaraagak  kaa'num,  thooraththilu'l'la  theasaththaiyum  paarkkum.  (easaayaa  33:17)

உன்  மனம்  பயங்கரத்தை  நினைவுகூரும்;  கணக்கன்  எங்கே?  தண்டல்காரன்  எங்கே?  கோபுரங்களை  எண்ணினவன்  எங்கே?  (ஏசாயா  33:18)

un  manam  bayanggaraththai  ninaivukoorum;  ka'nakkan  enggea?  tha'ndalkaaran  enggea?  koapurangga'lai  e'n'ninavan  enggea?  (easaayaa  33:18)

உனக்கு  விளங்காத  பாஷையையும்,  அறிதற்கரிய  ஒருவிதமான  பேச்சையுமுடைய  அந்தக்  குரூர  ஜனங்களை  இனி  நீ  காணாய்.  (ஏசாயா  33:19)

unakku  vi'langgaatha  baashaiyaiyum,  a’ritha’rkariya  oruvithamaana  peachchaiyumudaiya  anthak  kuroora  janangga'lai  ini  nee  kaa'naay.  (easaayaa  33:19)

நம்முடைய  பண்டிகைகள்  ஆசரிக்கப்படும்  நகரமாகிய  சீயோனை  நோக்கிப்பார்;  உன்  கண்கள்  எருசலேமை  அமரிக்கையான  தாபரமாகவும்,  பெயர்க்கப்படாத  கூடாரமாகவும்  காணும்;  இனி  அதின்  முளைகள்  என்றைக்கும்  பிடுங்கப்படுவதுமில்லை,  அதின்  கயிறுகளில்  ஒன்றும்  அறுந்து  போவதுமில்லை.  (ஏசாயா  33:20)

nammudaiya  pa'ndigaiga'l  aasarikkappadum  nagaramaagiya  seeyoanai  noakkippaar;  un  ka'nga'l  erusaleamai  amarikkaiyaana  thaabaramaagavum,  peyarkkappadaatha  koodaaramaagavum  kaa'num;  ini  athin  mu'laiga'l  en’raikkum  pidunggappaduvathumillai,  athin  kayi’ruga'lil  on’rum  a’runthu  poavathumillai.  (easaayaa  33:20)

மகிமையுள்ள  கர்த்தர்  அங்கே  நமக்கு  மகா  விசாலமான  நதிகளும்  ஆறுகளுமுள்ள  ஸ்தலம்போலிருப்பார்;  வலிக்கிற  படவு  அங்கே  ஓடுவதும்  இல்லை;  பெரிய  கப்பல்  அங்கே  கடந்துவருவதும்  இல்லை.  (ஏசாயா  33:21)

magimaiyu'l'la  karththar  anggea  namakku  mahaa  visaalamaana  nathiga'lum  aa’ruga'lumu'l'la  sthalampoaliruppaar;  valikki’ra  padavu  anggea  oaduvathum  illai;  periya  kappal  anggea  kadanthuvaruvathum  illai.  (easaayaa  33:21)

கர்த்தர்  நம்முடைய  நியாயாதிபதி,  கர்த்தர்  நம்முடைய  நியாயப்பிரமாணிகர்,  கர்த்தர்  நம்முடைய  ராஜா,  அவர்  நம்மை  இரட்சிப்பார்.  (ஏசாயா  33:22)

karththar  nammudaiya  niyaayaathibathi,  karththar  nammudaiya  niyaayappiramaa'nigar,  karththar  nammudaiya  raajaa,  avar  nammai  iradchippaar.  (easaayaa  33:22)

உன்  கயிறுகள்  தளர்ந்துபோம்;  பாய்மரத்தைக்  கெட்டிப்படுத்தவும்,  பாயை  விரிக்கவுங்  கூடாமற்போம்;  அப்பொழுது  திரளான  கொள்ளைப்பொருள்  பங்கிடப்படும்;  சப்பாணிகளும்  கொள்ளையாடுவார்கள்.  (ஏசாயா  33:23)

un  kayi’ruga'l  tha'larnthupoam;  paaymaraththaik  kettippaduththavum,  paayai  virikkavung  koodaama’rpoam;  appozhuthu  thira'laana  ko'l'laipporu'l  panggidappadum;  sappaa'niga'lum  ko'l'laiyaaduvaarga'l.  (easaayaa  33:23)

வியாதிப்பட்டிருக்கிறேன்  என்று  நகரவாசிகள்  சொல்வதில்லை;  அதில்  வாசமாயிருக்கிற  ஜனத்தின்  அக்கிரமம்  மன்னிக்கப்பட்டிருக்கும்.  (ஏசாயா  33:24)

viyaathippattirukki’rean  en’ru  nagaravaasiga'l  solvathillai;  athil  vaasamaayirukki’ra  janaththin  akkiramam  mannikkappattirukkum.  (easaayaa  33:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!