Friday, October 07, 2016

Easaayaa 29 | ஏசாயா 29 | Isaiah 29

தாவீது  வாசம்பண்ணின  நகரமாகிய  அரியேலே,  அரியேலே,  ஐயோ!  வருஷாவருஷம்  பண்டிகைகளை  அனுசரித்துவந்தாலும்,  (ஏசாயா  29:1)

thaaveethu  vaasampa'n'nina  nagaramaagiya  ariyealea,  ariyealea,  aiyoa!  varushaavarusham  pa'ndigaiga'lai  anusariththuvanthaalum,  (easaayaa  29:1)

அரியேலுக்கு  இடுக்கம்  உண்டாக்குவேன்;  அப்பொழுது  துக்கமும்  சலிப்பும்  உண்டாகும்;  அது  எனக்கு  அரியேலாகத்தான்  இருக்கும்.  (ஏசாயா  29:2)

ariyealukku  idukkam  u'ndaakkuvean;  appozhuthu  thukkamum  salippum  u'ndaagum;  athu  enakku  ariyealaagaththaan  irukkum.  (easaayaa  29:2)

உன்னைச்  சூழப்  பாளயமிறங்கி,  உன்னைத்  தெற்றுகளால்  முற்றிக்கைபோட்டு,  உனக்கு  விரோதமாகக்  கொத்தளங்களை  எடுப்பிப்பேன்.  (ஏசாயா  29:3)

unnaich  soozhap  paa'layami’ranggi,  unnaith  thet’ruga'laal  mut’rikkaipoattu,  unakku  viroathamaagak  koththa'langga'lai  eduppippean.  (easaayaa  29:3)

அப்பொழுது  நீ  தாழ்த்தப்பட்டுத்  தரையிலிருந்து  பேசுவாய்;  உன்  பேச்சுப்  பணிந்ததாய்  மண்ணிலிருந்து  புறப்பட்டு,  உன்  சத்தம்  அஞ்சனம்  பார்க்கிறவனுடைய  சத்தத்தைப்போல்  தரையிலிருந்து  முணுமுணுத்து,  உன்  வாக்கு  மண்ணிலிருந்து  கசுகுசு  என்று  உரைக்கும்.  (ஏசாயா  29:4)

appozhuthu  nee  thaazhththappattuth  tharaiyilirunthu  peasuvaay;  un  peachchup  pa'ninthathaay  ma'n'nilirunthu  pu’rappattu,  un  saththam  agnchanam  paarkki’ravanudaiya  saththaththaippoal  tharaiyilirunthu  mu'numu'nuththu,  un  vaakku  ma'n'nilirunthu  kasukusu  en’ru  uraikkum.  (easaayaa  29:4)

உன்மேல்  வருகிற  அந்நியரின்  திரள்  பொடித்தூளத்தனையாகவும்,  பலவந்தரின்  திரள்  பறக்கும்  பதர்களத்தனையாகவும்  இருக்கும்;  அது  திடீரென்று  சடிதியாய்ச்  சம்பவிக்கும்.  (ஏசாயா  29:5)

unmeal  varugi’ra  anniyarin  thira'l  podiththoo'laththanaiyaagavum,  balavantharin  thira'l  pa’rakkum  patharga'laththanaiyaagavum  irukkum;  athu  thideeren’ru  sadithiyaaych  sambavikkum.  (easaayaa  29:5)

இடிகளினாலும்,  பூமி  அதிர்ச்சியினாலும்,  பெரிய  இரைச்சலினாலும்,  பெருங்காற்றினாலும்,  புசலினாலும்,  பட்சிக்கிற  அக்கினிஜுவாலையினாலும்,  சேனைகளின்  கர்த்தராலே  விசாரிக்கப்படுவாய்.  (ஏசாயா  29:6)

idiga'linaalum,  boomi  athirchchiyinaalum,  periya  iraichchalinaalum,  perungkaat’rinaalum,  pusalinaalum,  padchikki’ra  akkinijuvaalaiyinaalum,  seanaiga'lin  karththaraalea  visaarikkappaduvaay.  (easaayaa  29:6)

அரியேலின்மேல்  யுத்தம்பண்ணுகிற  திரளான  சகல  ஜாதிகளும்,  அதின்மேலும்  அதின்  அரண்மேலும்  யுத்தம்பண்ணி,  அதற்கு  இடுக்கண்  செய்கிற  அனைவரும்,  இராக்காலத்தரிசனமாகிய  சொப்பனத்தைக்  காண்கிறவர்களுக்கு  ஒப்பாயிருப்பார்கள்.  (ஏசாயா  29:7)

ariyealinmeal  yuththampa'n'nugi’ra  thira'laana  sagala  jaathiga'lum,  athinmealum  athin  ara'nmealum  yuththampa'n'ni,  atha’rku  idukka'n  seygi’ra  anaivarum,  iraakkaalaththarisanamaagiya  soppanaththaik  kaa'ngi’ravarga'lukku  oppaayiruppaarga'l.  (easaayaa  29:7)

அது,  பசியாயிருக்கிறவன்  தான்  புசிக்கிறதாகச்  சொப்பனம்  கண்டும்,  விழிக்கும்போது  அவன்  வெறுமையாயிருக்கிறதுபோலவும்,  தாகமாயிருக்கிறவன்,  தான்  குடிக்கிறதாகச்  சொப்பனம்  கண்டும்,  விழிக்கும்போது  அவன்  விடாய்த்துத்  தவனத்தோடிருக்கிறதுபோலவும்  சீயோன்  மலைக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணுகிற  திரளான  சகல  ஜாதிகளும்  இருக்கும்.  (ஏசாயா  29:8)

athu,  pasiyaayirukki’ravan  thaan  pusikki’rathaagach  soppanam  ka'ndum,  vizhikkumpoathu  avan  ve’rumaiyaayirukki’rathupoalavum,  thaagamaayirukki’ravan,  thaan  kudikki’rathaagach  soppanam  ka'ndum,  vizhikkumpoathu  avan  vidaayththuth  thavanaththoadirukki’rathupoalavum  seeyoan  malaikku  viroathamaaga  yuththampa'n'nugi’ra  thira'laana  sagala  jaathiga'lum  irukkum.  (easaayaa  29:8)

தரித்துநின்று  திகையுங்கள்;  பிரமித்துக்  கூப்பிடுங்கள்;  வெறித்திருக்கிறார்கள்,  திராட்சரசத்தினால்  அல்ல;  தள்ளாடுகிறார்கள்,  மதுபானத்தினால்  அல்ல.  (ஏசாயா  29:9)

thariththunin’ru  thigaiyungga'l;  piramiththuk  kooppidungga'l;  ve’riththirukki’raarga'l,  thiraadcharasaththinaal  alla;  tha'l'laadugi’raarga'l,  mathubaanaththinaal  alla.  (easaayaa  29:9)

கர்த்தர்  உங்கள்மேல்  கனநித்திரையின்  ஆவியை  வரப்பண்ணி,  உங்கள்  கண்களை  அடைத்து,  ஞானதிருஷ்டிக்காரராகிய  உங்கள்  தீர்க்கதரிசிகளுக்கும்  தலைவர்களுக்கும்  முக்காடுபோட்டார்.  (ஏசாயா  29:10)

karththar  ungga'lmeal  kananiththiraiyin  aaviyai  varappa'n'ni,  ungga'l  ka'nga'lai  adaiththu,  gnaanathirushdikkaararaagiya  ungga'l  theerkkatharisiga'lukkum  thalaivarga'lukkum  mukkaadupoattaar.  (easaayaa  29:10)

ஆதலால்  தரிசனமெல்லாம்  உங்களுக்கு  முத்திரிக்கப்பட்ட  புஸ்தகத்தின்  வசனங்களைப்போலிருக்கும்;  வாசிக்க  அறிந்திருக்கிற  ஒருவனுக்கு  அதைக்  கொடுத்து:  நீ  இதை  வாசி  என்றால்,  அவன்:  இது  என்னால்  கூடாது,  இது  முத்திரித்திருக்கிறது  என்பான்.  (ஏசாயா  29:11)

aathalaal  tharisanamellaam  ungga'lukku  muththirikkappatta  pusthagaththin  vasanangga'laippoalirukkum;  vaasikka  a’rinthirukki’ra  oruvanukku  athaik  koduththu:  nee  ithai  vaasi  en’raal,  avan:  ithu  ennaal  koodaathu,  ithu  muththiriththirukki’rathu  enbaan.  (easaayaa  29:11)

அல்லது  வாசிக்கத்  தெரியாதவனிடத்தில்  புஸ்தகத்தைக்  கொடுத்து:  நீ  இதை  வாசி  என்றால்,  அவன்:  எனக்கு  வாசிக்கத்  தெரியாது  என்பான்.  (ஏசாயா  29:12)

allathu  vaasikkath  theriyaathavanidaththil  pusthagaththaik  koduththu:  nee  ithai  vaasi  en’raal,  avan:  enakku  vaasikkath  theriyaathu  enbaan.  (easaayaa  29:12)

இந்த  ஜனங்கள்  தங்கள்  வாயினால்  என்னிடத்தில்  சேர்ந்து,  தங்கள்  உதடுகளினால்  என்னைக்  கனம்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  இருதயமோ  எனக்குத்  தூரமாய்  விலகியிருக்கிறது;  அவர்கள்  எனக்குப்  பயப்படுகிற  பயம்  மனுஷராலே  போதிக்கப்பட்ட  கற்பனையாயிருக்கிறது.  (ஏசாயா  29:13)

intha  janangga'l  thangga'l  vaayinaal  ennidaththil  searnthu,  thangga'l  uthaduga'linaal  ennaik  kanampa'n'nugi’raarga'l;  avarga'l  iruthayamoa  enakkuth  thooramaay  vilagiyirukki’rathu;  avarga'l  enakkup  bayappadugi’ra  bayam  manusharaalea  poathikkappatta  ka’rpanaiyaayirukki’rathu.  (easaayaa  29:13)

ஆதலால்  இதோ,  நான்  அற்புதமும்  ஆச்சரியமுமான  பிரகாரமாக  இந்த  ஜனங்களுக்குள்ளே  ஒரு  அதிசயத்தைச்  செய்வேன்;  அவர்களுடைய  ஞானிகளின்  ஞானம்  கெட்டு,  அவர்களுடைய  விவேகிகளின்  விவேகம்  மறைந்துபோகும்  என்று  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  29:14)

aathalaal  ithoa,  naan  a’rputhamum  aachchariyamumaana  piragaaramaaga  intha  janangga'lukku'l'lea  oru  athisayaththaich  seyvean;  avarga'ludaiya  gnaaniga'lin  gnaanam  kettu,  avarga'ludaiya  viveagiga'lin  viveagam  ma’rainthupoagum  en’ru  aa'ndavar  sollugi’raar.  (easaayaa  29:14)

தங்கள்  ஆலோசனையைக்  கர்த்தருக்கு  மறைக்கும்படிக்கு  மறைவிடங்களில்  ஒளித்து,  தங்கள்  கிரியைகளை  அந்தகாரத்தில்  நடப்பித்து:  நம்மைக்  காண்கிறவர்  யார்?  நம்மை  அறிகிறவர்  யார்?  என்கிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  29:15)

thangga'l  aaloasanaiyaik  karththarukku  ma’raikkumpadikku  ma’raividangga'lil  o'liththu,  thangga'l  kiriyaiga'lai  anthagaaraththil  nadappiththu:  nammaik  kaa'ngi’ravar  yaar?  nammai  a’rigi’ravar  yaar?  engi’ravarga'lukku  aiyoa!  (easaayaa  29:15)

ஆ,  நீங்கள்  எவ்வளவு  மாறுபாடுள்ளவர்கள்!  குயவன்  களிமண்ணுக்குச்  சமானமாக  எண்ணப்படலாமோ?  உண்டாக்கப்பட்டது  தன்னை  உண்டாக்கினவரைக்குறித்து:  அவர்  என்னை  உண்டாக்கினதில்லை  என்றும்;  உருவாக்கப்பட்டது  தன்னை  உருவாக்கினவரைக்குறித்து:  அவருக்குப்  புத்தியில்லையென்றும்  சொல்லத்தகுமோ?  (ஏசாயா  29:16)

aa,  neengga'l  evva'lavu  maa’rupaadu'l'lavarga'l!  kuyavan  ka'lima'n'nukkuch  samaanamaaga  e'n'nappadalaamoa?  u'ndaakkappattathu  thannai  u'ndaakkinavaraikku’riththu:  avar  ennai  u'ndaakkinathillai  en’rum;  uruvaakkappattathu  thannai  uruvaakkinavaraikku’riththu:  avarukkup  buththiyillaiyen’rum  sollaththagumoa?  (easaayaa  29:16)

இன்னும்  கொஞ்சக்காலத்திலல்லவோ  லீபனோன்  செழிப்பான  வயல்வெளியாக  மாறும்;  செழிப்பான  வயல்வெளி  காடாக  எண்ணப்படும்.  (ஏசாயா  29:17)

innum  kognchakkaalaththilallavoa  leebanoan  sezhippaana  vayalve'liyaaga  maa’rum;  sezhippaana  vayalve'li  kaadaaga  e'n'nappadum.  (easaayaa  29:17)

அக்காலத்திலே  செவிடர்  புஸ்தகத்தின்  வசனங்களைக்  கேட்பார்கள்;  குருடரின்  கண்கள்  இருளுக்கும்  அந்தகாரத்துக்கும்  நீங்கலாகிப்  பார்வையடையும்.  (ஏசாயா  29:18)

akkaalaththilea  sevidar  pusthagaththin  vasanangga'laik  keadpaarga'l;  kurudarin  ka'nga'l  iru'lukkum  anthagaaraththukkum  neenggalaagip  paarvaiyadaiyum.  (easaayaa  29:18)

சிறுமையானவர்கள்  கர்த்தருக்குள்  மிகவும்  மகிழ்ந்து,  மனுஷரில்  எளிமையானவர்கள்  இஸ்ரவேலின்  பரிசுத்தருக்குள்  களிகூருவார்கள்.  (ஏசாயா  29:19)

si’rumaiyaanavarga'l  karththarukku'l  migavum  magizhnthu,  manusharil  e'limaiyaanavarga'l  isravealin  parisuththarukku'l  ka'likooruvaarga'l.  (easaayaa  29:19)

கொடியன்  அற்றுப்போவான்,  சக்கந்தக்காரன்  இல்லாமற்போவான்.  (ஏசாயா  29:20)

kodiyan  at’ruppoavaan,  sakkanthakkaaran  illaama’rpoavaan.  (easaayaa  29:20)

ஒரு  வார்த்தையினிமித்தம்  மனுஷனைக்  குற்றப்படுத்தி,  நியாயவாசலில்  தங்களைக்  கடிந்துகொள்ளுகிறவனுக்குக்  கண்ணிவைத்து,  நீதிமானை  நிர்நிமித்தமாய்த்  துரத்தி,  இப்படி  அக்கிரமஞ்செய்ய  வகைதேடுகிற  யாவரும்  சங்கரிக்கப்படுவார்கள்.  (ஏசாயா  29:21)

oru  vaarththaiyinimiththam  manushanaik  kut’rappaduththi,  niyaayavaasalil  thangga'laik  kadinthuko'l'lugi’ravanukkuk  ka'n'nivaiththu,  neethimaanai  nirnimiththamaayth  thuraththi,  ippadi  akkiramagnseyya  vagaitheadugi’ra  yaavarum  sanggarikkappaduvaarga'l.  (easaayaa  29:21)

ஆகையால்,  ஆபிரகாமை  மீட்டுக்கொண்ட  கர்த்தர்  யாக்கோபின்  வம்சத்தைக்  குறித்து:  இனி  யாக்கோபு  வெட்கப்படுவதில்லை;  இனி  அவன்  முகம்  செத்துப்போவதுமில்லை.  (ஏசாயா  29:22)

aagaiyaal,  aabirahaamai  meettukko'nda  karththar  yaakkoabin  vamsaththaik  ku’riththu:  ini  yaakkoabu  vedkappaduvathillai;  ini  avan  mugam  seththuppoavathumillai.  (easaayaa  29:22)

அவன்  என்  கரங்களின்  செயலாகிய  தன்  பிள்ளைகளை  தன்  நடுவிலே  காணும்போது,  என்  நாமத்தைப்  பரிசுத்தப்படுத்துவார்கள்;  யாக்கோபின்  பரிசுத்தரை  அவர்கள்  பரிசுத்தப்படுத்தி,  இஸ்ரவேலின்  தேவனுக்குப்  பயப்படுவார்கள்.  (ஏசாயா  29:23)

avan  en  karangga'lin  seyalaagiya  than  pi'l'laiga'lai  than  naduvilea  kaa'numpoathu,  en  naamaththaip  parisuththappaduththuvaarga'l;  yaakkoabin  parisuththarai  avarga'l  parisuththappaduththi,  isravealin  theavanukkup  bayappaduvaarga'l.  (easaayaa  29:23)

வழுவிப்போகிற  மனதை  உடையவர்கள்  புத்திமான்களாகி,  முறுமுறுக்கிறவர்கள்  உபதேசம்  கற்றுக்கொள்ளுவார்கள்.  (ஏசாயா  29:24)

vazhuvippoagi’ra  manathai  udaiyavarga'l  buththimaanga'laagi,  mu’rumu’rukki’ravarga'l  ubatheasam  kat’rukko'l'luvaarga'l.  (easaayaa  29:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!