Thursday, October 06, 2016

Easaayaa 25 | ஏசாயா 25 | Isaiah 25

கர்த்தாவே,  நீரே  என்  தேவன்;  உம்மை  உயர்த்தி,  உமது  நாமத்தைத்  துதிப்பேன்;  நீர்  அதிசயமானவைகளைச்  செய்தீர்;  உமது  பூர்வ  ஆலோசனைகள்  சத்தியமும்  உறுதியுமானவைகள்.  (ஏசாயா  25:1)

karththaavea,  neerea  en  theavan;  ummai  uyarththi,  umathu  naamaththaith  thuthippean;  neer  athisayamaanavaiga'laich  seytheer;  umathu  poorva  aaloasanaiga'l  saththiyamum  u’ruthiyumaanavaiga'l.  (easaayaa  25:1)

நீர்  நகரத்தை  மண்மேடும்,  அரணான  பட்டணத்தைப்  பாழுமாக்கினீர்;  அந்நியரின்  ராஜதானியை  ஊராயிராதபடிக்கும்,  என்றைக்கும்  கட்டப்படாதபடிக்கும்  செய்தீர்.  (ஏசாயா  25:2)

neer  nagaraththai  ma'nmeadum,  ara'naana  patta'naththaip  paazhumaakkineer;  anniyarin  raajathaaniyai  ooraayiraathapadikkum,  en’raikkum  kattappadaathapadikkum  seytheer.  (easaayaa  25:2)

ஆகையால்  பலத்த  ஜனங்கள்  உம்மை  மகிமைப்படுத்துவார்கள்;  கொடூரமான  ஜாதிகளின்  நகரம்  உமக்குப்  பயப்படும்.  (ஏசாயா  25:3)

aagaiyaal  balaththa  janangga'l  ummai  magimaippaduththuvaarga'l;  kodooramaana  jaathiga'lin  nagaram  umakkup  bayappadum.  (easaayaa  25:3)

கொடூரமானவர்களின்  சீறல்  மதிலை  மோதியடிக்கிற  பெரு  வெள்ளத்தைப்போல்  இருக்கையில்,  நீர்  ஏழைக்குப்  பெலனும்,  நெருக்கப்படுகிற  எளியவனுக்குத்  திடனும்,  பெருவெள்ளத்துக்குத்  தப்பும்  அடைக்கலமும்,  வெயிலுக்கு  ஒதுங்கும்  நிழலுமானீர்.  (ஏசாயா  25:4)

kodooramaanavarga'lin  see’ral  mathilai  moathiyadikki’ra  peru  ve'l'laththaippoal  irukkaiyil,  neer  eazhaikkup  belanum,  nerukkappadugi’ra  e'liyavanukkuth  thidanum,  peruve'l'laththukkuth  thappum  adaikkalamum,  veyilukku  othunggum  nizhalumaaneer.  (easaayaa  25:4)

வறட்சியான  இடத்தின்  காங்கை  மேகத்தினால்  தணிவதுபோல்,  அந்நியரின்  மும்முரத்தைத்  தணியப்பண்ணுவீர்;  மேகத்தின்  நிழலினால்  வெயில்  தணிகிறதுபோல்  பெலவந்தரின்  ஆரவாரம்  தணியும்.  (ஏசாயா  25:5)

va’radchiyaana  idaththin  kaanggai  meagaththinaal  tha'nivathupoal,  anniyarin  mummuraththaith  tha'niyappa'n'nuveer;  meagaththin  nizhalinaal  veyil  tha'nigi’rathupoal  belavantharin  aaravaaram  tha'niyum.  (easaayaa  25:5)

சேனைகளின்  கர்த்தர்  இந்த  மலையிலே  சகல  ஜனங்களுக்கும்  ஒரு  விருந்தை  ஆயத்தப்படுத்துவார்;  அது  கொழுமையான  பதார்த்தங்களும்,  பழமையான  திராட்சரசமும்,  ஊனும்  நிணமுமுள்ள  பதார்த்தங்களும்,  தெளிந்த  பழமையான  திராட்சரசமும்  நிறைந்த  விருந்தாயிருக்கும்.  (ஏசாயா  25:6)

seanaiga'lin  karththar  intha  malaiyilea  sagala  janangga'lukkum  oru  virunthai  aayaththappaduththuvaar;  athu  kozhumaiyaana  pathaarththangga'lum,  pazhamaiyaana  thiraadcharasamum,  oonum  ni'namumu'l'la  pathaarththangga'lum,  the'lintha  pazhamaiyaana  thiraadcharasamum  ni’raintha  virunthaayirukkum.  (easaayaa  25:6)

சகல  ஜனங்கள்மேலுமுள்ள  முக்காட்டையும்,  சகல  ஜாதிகளையும்  மூடியிருக்கிற  மூடலையும்,  இந்த  மலையிலே  அகற்றிப்போடுவார்.  (ஏசாயா  25:7)

sagala  janangga'lmealumu'l'la  mukkaattaiyum,  sagala  jaathiga'laiyum  moodiyirukki’ra  moodalaiyum,  intha  malaiyilea  agat’rippoaduvaar.  (easaayaa  25:7)

அவர்  மரணத்தை  ஜெயமாக  விழுங்குவார்;  கர்த்தராகிய  தேவன்  எல்லா  முகங்களிலுமிருந்து  கண்ணீரைத்  துடைத்து,  தமது  ஜனத்தின்  நிந்தையைப்  பூமியிலிராதபடிக்கு  முற்றிலும்  நீக்கிவிடுவார்;  கர்த்தரே  இதைச்  சொன்னார்.  (ஏசாயா  25:8)


avar  mara'naththai  jeyamaaga  vizhungguvaar;  karththaraagiya  theavan  ellaa  mugangga'lilumirunthu  ka'n'neeraith  thudaiththu,  thamathu  janaththin  ninthaiyaip  boomiyiliraathapadikku  mut’rilum  neekkividuvaar;  karththarea  ithaich  sonnaar.  (easaayaa  25:8)

அக்காலத்திலே:  இதோ,  இவரே  நம்முடைய  தேவன்;  இவருக்காகக்  காத்திருந்தோம்,  இவர்  நம்மை  இரட்சிப்பார்;  இவரே  கர்த்தர்,  இவருக்காகக்  காத்திருந்தோம்;  இவருடைய  இரட்சிப்பினால்  களிகூர்ந்து  மகிழுவோம்  என்று  சொல்லப்படும்.  (ஏசாயா  25:9)

akkaalaththilea:  ithoa,  ivarea  nammudaiya  theavan;  ivarukkaagak  kaaththirunthoam,  ivar  nammai  iradchippaar;  ivarea  karththar,  ivarukkaagak  kaaththirunthoam;  ivarudaiya  iradchippinaal  ka'likoornthu  magizhuvoam  en’ru  sollappadum.  (easaayaa  25:9)

கர்த்தருடைய  கரம்  இந்த  மலையிலே  தங்கும்;  கூளம்  எருக்களத்தில்  மிதிக்கப்படுவதுபோல,  மோவாப்  அவர்கீழ்  மிதிக்கப்பட்டுப்போம்.  (ஏசாயா  25:10)

karththarudaiya  karam  intha  malaiyilea  thanggum;  koo'lam  erukka'laththil  mithikkappaduvathupoala,  moavaab  avarkeezh  mithikkappattuppoam.  (easaayaa  25:10)

நீந்துகிறவன்  நீந்துவதற்காகத்  தன்  கைகளை  விரிப்பதுபோல்  அவர்  தமது  கைகளை  அவர்கள்  நடுவிலே  விரித்து,  அவர்கள்  பெருமையையும்,  அவர்கள்  கைகளின்  சதிசர்ப்பனைகளையும்  தாழ்த்திவிடுவார்.  (ஏசாயா  25:11)

neenthugi’ravan  neenthuvatha’rkaagath  than  kaiga'lai  virippathupoal  avar  thamathu  kaiga'lai  avarga'l  naduvilea  viriththu,  avarga'l  perumaiyaiyum,  avarga'l  kaiga'lin  sathisarppanaiga'laiyum  thaazhththividuvaar.  (easaayaa  25:11)

அவர்  உன்  மதில்களுடைய  உயர்ந்த  அரணைக்  கீழே  தள்ளித்  தாழ்த்தித்  தரையிலே  தூளாக  அழிப்பார்.  (ஏசாயா  25:12)

avar  un  mathilga'ludaiya  uyarntha  ara'naik  keezhea  tha'l'lith  thaazhththith  tharaiyilea  thoo'laaga  azhippaar.  (easaayaa  25:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!