Wednesday, October 05, 2016

Easaayaa 20 | ஏசாயா 20 | Isaiah 20

தர்த்தான்,  அசீரியா  ராஜாவாகிய  சர்கோனாலே  அனுப்பப்பட்டு,  அஸ்தோத்துக்கு  வந்து,  அஸ்தோத்தின்மேல்  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்த  வருஷத்திலே,  (ஏசாயா  20:1)

tharththaan,  aseeriyaa  raajaavaagiya  sargoanaalea  anuppappattu,  asthoaththukku  vanthu,  asthoaththinmeal  yuththampa'n'ni,  athaip  pidiththa  varushaththilea,  (easaayaa  20:1)

கர்த்தர்  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயாவை  நோக்கி:  நீ  போய்  உன்  அரையிலிருக்கிற  இரட்டை  அவிழ்த்து,  உன்  கால்களிலிருக்கிற  பாதரட்சைகளைக்  கழற்று  என்றார்;  அவன்  அப்படியே  செய்து,  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  நடந்தான்.  (ஏசாயா  20:2)

karththar  aamoathsin  kumaaranaagiya  easaayaavai  noakki:  nee  poay  un  araiyilirukki’ra  irattai  avizhththu,  un  kaalga'lilirukki’ra  paatharadchaiga'laik  kazhat’ru  en’raar;  avan  appadiyea  seythu,  vasthiramillaamalum  ve’rungkaalumaay  nadanthaan.  (easaayaa  20:2)

அப்பொழுது  கர்த்தர்:  எகிப்தின்மேலும்  எத்தியோப்பியாவின்மேலும்  வரும்  மூன்றுவருஷத்துக்  காரியங்களுக்கு  அடையாளமும்  குறிப்புமாக  என்  ஊழியக்காரனாகிய  ஏசாயா  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  நடக்கிறதுபோல,  (ஏசாயா  20:3)

appozhuthu  karththar:  egipthinmealum  eththiyoappiyaavinmealum  varum  moon’ruvarushaththuk  kaariyangga'lukku  adaiyaa'lamum  ku’rippumaaga  en  oozhiyakkaaranaagiya  easaayaa  vasthiramillaamalum  ve’rungkaalumaay  nadakki’rathupoala,  (easaayaa  20:3)

அசீரியா  ராஜா,  தான்  சிறைபிடிக்கப்போகிற  எகிப்தியரும்,  தான்  குடிவிலக்கப்போகிற  எத்தியோப்பியருமாகிய  இளைஞரையும்  கிழவரையும்,  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  எகிப்தியருக்கு  வெட்கமுண்டாகும்படி,  இருப்பிடம்  மூடப்படாதவர்களாய்க்  கொண்டுபோவான்.  (ஏசாயா  20:4)

aseeriyaa  raajaa,  thaan  si’raipidikkappoagi’ra  egipthiyarum,  thaan  kudivilakkappoagi’ra  eththiyoappiyarumaagiya  i'laignaraiyum  kizhavaraiyum,  vasthiramillaamalum  ve’rungkaalumaay  egipthiyarukku  vedkamu'ndaagumpadi,  iruppidam  moodappadaathavarga'laayk  ko'ndupoavaan.  (easaayaa  20:4)

அப்பொழுது  இந்தக்  கடற்கரைக்  குடிகள்  தாங்கள்  நம்பியிருந்த  எத்தியோப்பியாவைக்குறித்தும்,  தாங்கள்  பெருமைபாராட்டின  எகிப்தைக்குறித்தும்  கலங்கி  வெட்கி:  (ஏசாயா  20:5)

appozhuthu  inthak  kada’rkaraik  kudiga'l  thaangga'l  nambiyiruntha  eththiyoappiyaavaikku’riththum,  thaangga'l  perumaipaaraattina  egipthaikku’riththum  kalanggi  vedki:  (easaayaa  20:5)

இதோ,  அசீரிய  ராஜாவின்  முகத்துக்குத்  தப்பும்படிக்கு  நாங்கள்  நம்பி,  சகாயத்துக்கென்று  ஓடிவந்து  அண்டினவன்  இப்படியானானே;  நாங்கள்  எப்படி  விடுவிக்கப்படுவோம்  என்று  அக்காலத்திலே  சொல்லுவார்கள்  என்றார்.  (ஏசாயா  20:6)

ithoa,  aseeriya  raajaavin  mugaththukkuth  thappumpadikku  naangga'l  nambi,  sagaayaththukken’ru  oadivanthu  a'ndinavan  ippadiyaanaanea;  naangga'l  eppadi  viduvikkappaduvoam  en’ru  akkaalaththilea  solluvaarga'l  en’raar.  (easaayaa  20:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!