Sunday, October 02, 2016

Easaayaa 2 | ஏசாயா 2 | Isaiah 2

ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  யூதாவையும்  எருசலேமையும்  குறித்துக்  கண்ட  தரிசனம்.  (ஏசாயா  2:1)

aamoathsin  kumaaranaagiya  easaayaa  yoothaavaiyum  erusaleamaiyum  ku’riththuk  ka'nda  tharisanam.  (easaayaa  2:1)

கடைசிநாட்களில்  கர்த்தருடைய  ஆலயமாகிய  பர்வதம்  பர்வதங்களின்  கொடுமுடியில்  ஸ்தாபிக்கப்பட்டு,  மலைகளுக்கு  மேலாய்  உயர்த்தப்படும்;  எல்லா  ஜாதிகளும்  அதற்கு  ஓடிவருவார்கள்.  (ஏசாயா  2:2)

kadaisinaadka'lil  karththarudaiya  aalayamaagiya  parvatham  parvathangga'lin  kodumudiyil  sthaabikkappattu,  malaiga'lukku  mealaay  uyarththappadum;  ellaa  jaathiga'lum  atha’rku  oadivaruvaarga'l.  (easaayaa  2:2)

திரளான  ஜனங்கள்  புறப்பட்டு  வந்து:  நாம்  கர்த்தரின்  பர்வதத்துக்கும்,  யாக்கோபின்  தேவனுடைய  ஆலயத்துக்கும்  போவோம்  வாருங்கள்;  அவர்  தமது  வழிகளை  நமக்குப்  போதிப்பார்,  நாம்  அவர்  பாதைகளில்  நடப்போம்  என்பார்கள்;  ஏனெனில்  சீயோனிலிருந்து  வேதமும்,  எருசலேமிலிருந்து  கர்த்தரின்  வசனமும்  வெளிப்படும்.  (ஏசாயா  2:3)

thira'laana  janangga'l  pu’rappattu  vanthu:  naam  karththarin  parvathaththukkum,  yaakkoabin  theavanudaiya  aalayaththukkum  poavoam  vaarungga'l;  avar  thamathu  vazhiga'lai  namakkup  poathippaar,  naam  avar  paathaiga'lil  nadappoam  enbaarga'l;  eanenil  seeyoanilirunthu  veathamum,  erusaleamilirunthu  karththarin  vasanamum  ve'lippadum.  (easaayaa  2:3)

அவர்  ஜாதிகளுக்குள்  நியாயந்தீர்த்து,  திரளான  ஜனங்களைக்  கடிந்துகொள்வார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  பட்டயங்களை  மண்வெட்டிகளாகவும்,  தங்கள்  ஈட்டிகளை  அரிவாள்களாகவும்  அடிப்பார்கள்;  ஜாதிக்கு  விரோதமாய்  ஜாதி  பட்டயம்  எடுப்பதில்லை,  இனி  அவர்கள்  யுத்தத்தைக்  கற்பதுமில்லை.  (ஏசாயா  2:4)

avar  jaathiga'lukku'l  niyaayantheerththu,  thira'laana  janangga'laik  kadinthuko'lvaar;  appozhuthu  avarga'l  thangga'l  pattayangga'lai  ma'nvettiga'laagavum,  thangga'l  eettiga'lai  arivaa'lga'laagavum  adippaarga'l;  jaathikku  viroathamaay  jaathi  pattayam  eduppathillai,  ini  avarga'l  yuththaththaik  ka’rpathumillai.  (easaayaa  2:4)

யாக்கோபின்  வம்சத்தாரே,  கர்த்தரின்  வெளிச்சத்திலே  நடப்போம்  வாருங்கள்.  (ஏசாயா  2:5)

yaakkoabin  vamsaththaarea,  karththarin  ve'lichchaththilea  nadappoam  vaarungga'l.  (easaayaa  2:5)

யாக்கோபின்  வம்சத்தாராகிய  உம்முடைய  ஜனத்தைக்  கைநெகிழ்ந்தீர்;  அவர்கள்  கீழ்த்திசையாரின்  போதகத்தால்  நிறைந்து,  பெலிஸ்தரைப்போல்  நாள்பார்க்கிறவர்களாயிருந்து,  அந்நிய  புத்திரர்மேல்  பிரியப்படுகிறார்களே.  (ஏசாயா  2:6)

yaakkoabin  vamsaththaaraagiya  ummudaiya  janaththaik  kainegizhntheer;  avarga'l  keezhththisaiyaarin  poathagaththaal  ni’rainthu,  pelistharaippoal  naa'lpaarkki’ravarga'laayirunthu,  anniya  puththirarmeal  piriyappadugi’raarga'lea.  (easaayaa  2:6)

அவர்கள்  தேசம்  வெள்ளியினாலும்  பொன்னினாலும்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  பொக்கிஷங்களுக்கு  முடிவில்லை;  அவர்கள்  தேசம்  குதிரைகளாலும்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  இரதங்களுக்கும்  முடிவில்லை.  (ஏசாயா  2:7)

avarga'l  theasam  ve'l'liyinaalum  ponninaalum  ni’rainthirukki’rathu;  avarga'l  pokkishangga'lukku  mudivillai;  avarga'l  theasam  kuthiraiga'laalum  ni’rainthirukki’rathu;  avarga'l  irathangga'lukkum  mudivillai.  (easaayaa  2:7)

அவர்கள்  தேசம்  விக்கிரகங்களாலும்  நிறைந்திருக்கிறது;  தங்கள்  கைகளின்  கிரியையையும்,  தங்கள்  விரல்கள்  உண்டுபண்ணினதையும்  பணிந்துகொள்ளுகிறார்கள்.  (ஏசாயா  2:8)

avarga'l  theasam  vikkiragangga'laalum  ni’rainthirukki’rathu;  thangga'l  kaiga'lin  kiriyaiyaiyum,  thangga'l  viralga'l  u'ndupa'n'ninathaiyum  pa'ninthuko'l'lugi’raarga'l.  (easaayaa  2:8)

சிறியவனும்  குனிகிறான்,  பெரியவனும்  பணிகிறான்;  ஆகையால்  அவர்களுக்கு  மன்னியாதிருப்பீர்.  (ஏசாயா  2:9)

si’riyavanum  kunigi’raan,  periyavanum  pa'nigi’raan;  aagaiyaal  avarga'lukku  manniyaathiruppeer.  (easaayaa  2:9)

கர்த்தரின்  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  நீ  கன்மலையில்  ஒதுங்கி,  மண்ணில்  ஒளித்துக்கொள்.  (ஏசாயா  2:10)

karththarin  bayanggaraththi’rkum,  avarudaiya  magimaippirathaabaththi’rkum  vilagi,  nee  kanmalaiyil  othunggi,  ma'n'nil  o'liththukko'l.  (easaayaa  2:10)

நரரின்  மேட்டிமையான  கண்கள்  தாழ்த்தப்படும்,  மனுஷரின்  வீறாப்பும்  தணியும்;  கர்த்தர்  ஒருவரே  அந்நாளில்  உயர்ந்திருப்பார்.  (ஏசாயா  2:11)

nararin  meattimaiyaana  ka'nga'l  thaazhththappadum,  manusharin  vee’raappum  tha'niyum;  karththar  oruvarea  annaa'lil  uyarnthiruppaar.  (easaayaa  2:11)

எல்லாம்  தாழ்த்தப்படும்பொருட்டுச்  சேனைகளுடைய  கர்த்தரின்  நாளானது  பெருமையும்  மேட்டிமையுமானவை  எல்லாவற்றின்மேலும்,  உயர்ந்தவை  எல்லாவற்றின்மேலும்,  (ஏசாயா  2:12)

ellaam  thaazhththappadumporuttuch  seanaiga'ludaiya  karththarin  naa'laanathu  perumaiyum  meattimaiyumaanavai  ellaavat’rinmealum,  uyarnthavai  ellaavat’rinmealum,  (easaayaa  2:12)

லீபனோனிலுள்ள  உயரமும்  ஓங்கலுமான  எல்லாக்  கேதுருக்களின்மேலும்,  பாசானிலுள்ள  எல்லாக்  கர்வாலி  மரங்களின்மேலும்,  (ஏசாயா  2:13)

leebanoanilu'l'la  uyaramum  oanggalumaana  ellaak  keathurukka'linmealum,  baasaanilu'l'la  ellaak  karvaali  marangga'linmealum,  (easaayaa  2:13)

உன்னதமான  எல்லாப்  பர்வதங்களின்மேலும்,  உயரமான  எல்லா  மலைகளின்மேலும்,  (ஏசாயா  2:14)

unnathamaana  ellaap  parvathangga'linmealum,  uyaramaana  ellaa  malaiga'linmealum,  (easaayaa  2:14)

உயர்ந்த  எல்லாக்  கோபுரத்தின்மேலும்,  அரணான  எல்லா  மதிலின்மேலும்,  (ஏசாயா  2:15)

uyarntha  ellaak  koapuraththinmealum,  ara'naana  ellaa  mathilinmealum,  (easaayaa  2:15)

தர்ஷீசின்  கப்பல்கள்  எல்லாவற்றின்மேலும்,  எல்லாச்  சித்திர  விநோதங்களின்மேலும்  வரும்.  (ஏசாயா  2:16)

tharsheesin  kappalga'l  ellaavat’rinmealum,  ellaach  siththira  vinoathangga'linmealum  varum.  (easaayaa  2:16)

அப்பொழுது  நரரின்  மேட்டிமை  தாழ்ந்து,  மனுஷரின்  வீறாப்புத்  தணியும்;  கர்த்தர்  ஒருவரே  அந்நாளில்  உயர்ந்திருப்பார்.  (ஏசாயா  2:17)

appozhuthu  nararin  meattimai  thaazhnthu,  manusharin  vee’raapputh  tha'niyum;  karththar  oruvarea  annaa'lil  uyarnthiruppaar.  (easaayaa  2:17)

விக்கிரகங்கள்  கட்டோடே  ஒழிந்துபோம்.  (ஏசாயா  2:18)

vikkiragangga'l  kattoadea  ozhinthupoam.  (easaayaa  2:18)

பூமியைத்  தத்தளிக்கப்பண்ணக்  கர்த்தர்  எழும்பும்போது,  அவருடைய  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  கன்மலைகளின்  கெபிகளிலும்,  பூமியின்  குகைகளிலும்  புகுந்துகொள்வார்கள்.  (ஏசாயா  2:19)

boomiyaith  thaththa'likkappa'n'nak  karththar  ezhumbumpoathu,  avarudaiya  bayanggaraththi’rkum,  avarudaiya  magimaippirathaabaththi’rkum  vilagi,  kanmalaiga'lin  kebiga'lilum,  boomiyin  kugaiga'lilum  pugunthuko'lvaarga'l.  (easaayaa  2:19)

பூமியைத்  தத்தளிக்கப்பண்ணக்  கர்த்தர்  எழும்பும்  அந்நாளிலே,  அவருடைய  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  கன்மலைகளின்  வெடிப்புகளிலும்  குன்றுகளின்  சந்துகளிலும்  புகுந்துகொள்ளும்படிக்கு,  (ஏசாயா  2:20)

boomiyaith  thaththa'likkappa'n'nak  karththar  ezhumbum  annaa'lilea,  avarudaiya  bayanggaraththi’rkum,  avarudaiya  magimaippirathaabaththi’rkum  vilagi,  kanmalaiga'lin  vedippuga'lilum  kun’ruga'lin  santhuga'lilum  pugunthuko'l'lumpadikku,  (easaayaa  2:20)

மனுஷன்  பணிந்துகொள்ளத்  தனக்கு  உண்டாக்கியிருந்த  தன்  வெள்ளி  விக்கிரகங்களையும்,  தன்  பொன்  விக்கிரகங்களையும்,  மூஞ்சூறுகளுக்கும்  துரிஞ்சில்களுக்கும்  எறிந்துவிடுவான்.  (ஏசாயா  2:21)

manushan  pa'ninthuko'l'lath  thanakku  u'ndaakkiyiruntha  than  ve'l'li  vikkiragangga'laiyum,  than  pon  vikkiragangga'laiyum,  moognchoo’ruga'lukkum  thurignchilga'lukkum  e’rinthuviduvaan.  (easaayaa  2:21)

நாசியிலே  சுவாசமுள்ள  மனுஷனை  நம்புவதை  விட்டுவிடுங்கள்;  எண்ணப்படுவதற்கு  அவன்  எம்மாத்திரம்.  (ஏசாயா  2:22)

naasiyilea  suvaasamu'l'la  manushanai  nambuvathai  vittuvidungga'l;  e'n'nappaduvatha’rku  avan  emmaaththiram.  (easaayaa  2:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!