Wednesday, October 05, 2016

Easaayaa 16 | ஏசாயா 16 | Isaiah 16

தேசாதிபதிக்குச்  செலுத்தும்  ஆட்டுக்குட்டிகளை  நீங்கள்  சேலாபட்டணந்துவக்கி  வனாந்தரமட்டும்  சேர்த்துச்  சீயோன்  குமாரத்தியின்  மலைக்கு  அனுப்புங்கள்.  (ஏசாயா  16:1)

theasaathibathikkuch  seluththum  aattukkuttiga'lai  neengga'l  sealaapatta'nanthuvakki  vanaantharamattum  searththuch  seeyoan  kumaaraththiyin  malaikku  anuppungga'l.  (easaayaa  16:1)

இல்லாவிட்டால்  கூட்டைவிட்டுத்  துரத்தப்பட்டு  அலைகிற  குருவியைப்போல  மோவாபின்  குமாரத்திகள்  அர்னோன்  நதியின்  துறைகளிடத்திலிருப்பார்கள்.  (ஏசாயா  16:2)

illaavittaal  koottaivittuth  thuraththappattu  alaigi’ra  kuruviyaippoala  moavaabin  kumaaraththiga'l  arnoan  nathiyin  thu’raiga'lidaththiliruppaarga'l.  (easaayaa  16:2)

நீ  ஆலோசனைபண்ணி,  நியாயஞ்செய்து,  மத்தியானத்திலே  உன்  நிழலை  இரவைப்போலாக்கி,  துரத்தப்பட்டவர்களை  மறைத்துக்கொள்,  ஓடிவருகிறவர்களைக்  காட்டிக்கொடாதிரு.  (ஏசாயா  16:3)

nee  aaloasanaipa'n'ni,  niyaayagnseythu,  maththiyaanaththilea  un  nizhalai  iravaippoalaakki,  thuraththappattavarga'lai  ma’raiththukko'l,  oadivarugi’ravarga'laik  kaattikkodaathiru.  (easaayaa  16:3)

மோவாபே,  துரத்திவிடப்பட்ட  என்  ஜனங்கள்  உன்னிடத்தில்  தங்கட்டும்;  சங்கரிக்கிறவனுக்குத்  தப்ப  அவர்களுக்கு  அடைக்கலமாயிரு;  ஒடுக்குகிறவன்  இல்லாதேபோவான்;  சங்கரிப்பு  ஒழிந்துபோம்;  மிதிக்கிறவர்கள்  தேசத்தில்  இராதபடிக்கு  அழிந்துபோவார்கள்.  (ஏசாயா  16:4)

moavaabea,  thuraththividappatta  en  janangga'l  unnidaththil  thanggattum;  sanggarikki’ravanukkuth  thappa  avarga'lukku  adaikkalamaayiru;  odukkugi’ravan  illaatheapoavaan;  sanggarippu  ozhinthupoam;  mithikki’ravarga'l  theasaththil  iraathapadikku  azhinthupoavaarga'l.  (easaayaa  16:4)

கிருபையினாலே  சிங்காசனம்  ஸ்தாபிக்கப்படும்;  நியாயம்  விசாரித்துத்  துரிதமாய்  நீதிசெய்கிற  ஒருவர்  அதின்மேல்  தாவீதின்  கூடாரத்திலே  நியாயாதிபதியாய்  உண்மையோடே  வீற்றிருப்பார்.  (ஏசாயா  16:5)

kirubaiyinaalea  singgaasanam  sthaabikkappadum;  niyaayam  visaariththuth  thurithamaay  neethiseygi’ra  oruvar  athinmeal  thaaveethin  koodaaraththilea  niyaayaathibathiyaay  u'nmaiyoadea  veet’riruppaar.  (easaayaa  16:5)

மோவாபின்  பெருமையையும்,  அவன்  மேட்டிமையையும்,  அவன்  அகங்காரத்தையும்,  அவன்  உக்கிரத்தையும்  குறித்துக்  கேட்டோம்;  அவன்  மெத்தப்  பெருமைக்காரன்;  ஆனாலும்  அவன்  வீம்பு  செல்லாது.  (ஏசாயா  16:6)

moavaabin  perumaiyaiyum,  avan  meattimaiyaiyum,  avan  aganggaaraththaiyum,  avan  ukkiraththaiyum  ku’riththuk  keattoam;  avan  meththap  perumaikkaaran;  aanaalum  avan  veembu  sellaathu.  (easaayaa  16:6)

ஆகையால்,  மோவாபியர்  ஒருவருக்காக  ஒருவர்  அலறுவார்கள்,  எல்லாரும்  ஏகமாய்  அலறுவார்கள்;  கிராரேசேத்  ஊரின்  அஸ்திபாரங்கள்  தகர்க்கப்பட்டதே  என்று  அவைகளுக்காகப்  பெருமூச்சு  விடுவார்கள்.  (ஏசாயா  16:7)

aagaiyaal,  moavaabiyar  oruvarukkaaga  oruvar  ala’ruvaarga'l,  ellaarum  eagamaay  ala’ruvaarga'l;  kiraareaseath  oorin  asthibaarangga'l  thagarkkappattathea  en’ru  avaiga'lukkaagap  perumoochchu  viduvaarga'l.  (easaayaa  16:7)

எஸ்போன்  ஊர்  வயல்கள்  வாடிப்போயின;  சிப்மாஊர்த்  திராட்சச்செடியின்  நல்ல  கொடிகளை  ஜாதிகளின்  அதிபதிகள்  நறுக்கிப்போட்டார்கள்;  அவைகள்  யாசேர்மட்டும்  சென்று  வனாந்தரத்தில்  படர்ந்திருந்தது;  அவைகளின்  கொடிகள்  நீண்டு  கடலுக்கப்பாலே  எட்டியிருந்தது.  (ஏசாயா  16:8)

esboan  oor  vayalga'l  vaadippoayina;  sibmaaoorth  thiraadchachsediyin  nalla  kodiga'lai  jaathiga'lin  athibathiga'l  na’rukkippoattaarga'l;  avaiga'l  yaasearmattum  sen’ru  vanaantharaththil  padarnthirunthathu;  avaiga'lin  kodiga'l  nee'ndu  kadalukkappaalea  ettiyirunthathu.  (easaayaa  16:8)

ஆகையால்  யாசேருக்காக  அழுததுபோல,  சிப்மாஊர்த்  திராட்சச்செடிக்காகவும்  மிகவும்  அழுவேன்;  எஸ்போனே,  எலெயாலேயே,  உனக்கு  என்  கண்ணீரைப்  பாய்ச்சுவேன்;  உன்  வசந்தகாலத்துப்  பழங்களுக்காகவும்,  உன்  திராட்சப்பழ  அறுப்புக்காகவும்  ஆரவாரிக்கிற  சந்தோஷ  சத்தம்  விழுந்துபோயிற்று.  (ஏசாயா  16:9)

aagaiyaal  yaasearukkaaga  azhuthathupoala,  sibmaaoorth  thiraadchachsedikkaagavum  migavum  azhuvean;  esboanea,  eleyaaleayea,  unakku  en  ka'n'neeraip  paaychchuvean;  un  vasanthakaalaththup  pazhangga'lukkaagavum,  un  thiraadchappazha  a’ruppukkaagavum  aaravaarikki’ra  santhoasha  saththam  vizhunthupoayit’ru.  (easaayaa  16:9)

பயிர்வெளியிலிருந்து  சந்தோஷமும்  களிப்பும்  அற்றுப்போயின;  திராட்சத்தோட்டங்களில்  பாடலுமில்லை  ஆர்ப்பரிப்புமில்லை;  ஆலையில்  இரசத்தை  மிதிக்கிறவனுமில்லை;  சந்தோஷ  ஆரவாரத்தை  ஓயப்பண்ணினேன்.  (ஏசாயா  16:10)

payirve'liyilirunthu  santhoashamum  ka'lippum  at’ruppoayina;  thiraadchaththoattangga'lil  paadalumillai  aarpparippumillai;  aalaiyil  irasaththai  mithikki’ravanumillai;  santhoasha  aaravaaraththai  oayappa'n'ninean.  (easaayaa  16:10)

ஆகையால்  மோவாபினிமித்தம்  என்  குடல்களும்,  கிராரேசினிமித்தம்  என்  உள்ளமும்  சுரமண்டலத்தைப்  போலத்  தொனிக்கிறது.  (ஏசாயா  16:11)

aagaiyaal  moavaabinimiththam  en  kudalga'lum,  kiraareasinimiththam  en  u'l'lamum  surama'ndalaththaip  poalath  thonikki’rathu.  (easaayaa  16:11)

மோவாப்  மேடைகளின்மேல்  சலித்துப்போனான்  என்று  காணப்படும்போது,  பிரார்த்தனைசெய்யத்  தன்  பரிசுத்த  ஸ்தானத்திலே  பிரவேசிப்பான்;  ஆனாலும்  அநுகூலப்படமாட்டான்.  (ஏசாயா  16:12)

moavaab  meadaiga'linmeal  saliththuppoanaan  en’ru  kaa'nappadumpoathu,  piraarththanaiseyyath  than  parisuththa  sthaanaththilea  piraveasippaan;  aanaalum  anugoolappadamaattaan.  (easaayaa  16:12)

மோவாபைக்குறித்து  அக்காலத்திலே  கர்த்தர்  சொன்ன  வார்த்தை  இதுவே.  (ஏசாயா  16:13)

moavaabaikku’riththu  akkaalaththilea  karththar  sonna  vaarththai  ithuvea.  (easaayaa  16:13)

ஒரு  கூலிக்காரனுடைய  வருஷங்களுக்கொத்த  மூன்று  வருஷங்களுக்குள்ளே  மோவாபின்  மகிமையும்  அதின்  மகா  ஜனக்கூட்டமும்  சீரழிந்துபோம்;  அதில்  மீதியாயிருப்பது  மிகவும்  சிறிதும்  அற்பமுமாயிருக்கும்  என்று  கர்த்தர்  இப்பொழுது  சொல்லுகிறார்.  (ஏசாயா  16:14)

oru  koolikkaaranudaiya  varushangga'lukkoththa  moon’ru  varushangga'lukku'l'lea  moavaabin  magimaiyum  athin  mahaa  janakkoottamum  seerazhinthupoam;  athil  meethiyaayiruppathu  migavum  si’rithum  a’rpamumaayirukkum  en’ru  karththar  ippozhuthu  sollugi’raar.  (easaayaa  16:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!