அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே,
நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும்
உம்முடைய கோபம் நீங்கிற்று;
நீர் என்னைத் தேற்றுகிறீர்.
(ஏசாயா 12:1)
akkaalaththilea nee solvathu: karththaavea,
naan ummaith thuthippean;
neer enmeal koabamaayiruntheer; aanaalum
ummudaiya koabam neenggit’ru; neer ennaith
theat’rugi’reer. (easaayaa
12:1)
இதோ,
தேவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய
யேகோவா என் பெலனும்,
என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். (ஏசாயா
12:2)
ithoa, theavanea en iradchippu; naan bayappadaamal nambikkaiyaayiruppean; karththaraagiya yeagoavaa en belanum, en keethamumaanavar; avarea
enakku iradchippumaanavar.
(easaayaa 12:2)
நீங்கள் இரட்சிப்பின்
ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்
மொண்டுகொள்வீர்கள். (ஏசாயா 12:3)
neengga'l iradchippin oot’ruga'lilirunthu magizhchchiyoadea tha'n'neer mo'nduko'lveerga'l. (easaayaa
12:3)
அக்காலத்திலே நீங்கள்
சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்;
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய
செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்;
அவருடைய நாமம் உயர்ந்ததென்று
பிரஸ்தாபம்பண்ணுங்கள். (ஏசாயா 12:4)
akkaalaththilea neengga'l solvathu: karththaraith
thuthiyungga'l; avar naamaththaith thozhuthuko'l'lungga'l; avarudaiya seygaiga'lai janangga'lukku'l'lea a’riviyungga'l; avarudaiya naamam
uyarnthathen’ru pirasthaabampa'n'nungga'l. (easaayaa 12:4)
கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச்
செய்தார்; இது பூமியெங்கும்
அறியப்படக்கடவது என்பீர்கள். (ஏசாயா
12:5)
karththaraik keerththanampa'n'nungga'l, avar magaththuvamaana kiriyaiga'laich seythaar; ithu boomiyenggum a’riyappadakkadavathu enbeerga'l. (easaayaa 12:5)
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி;
இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். (ஏசாயா
12:6)
seeyoanil vaasamaayirukki’rava'lea, nee saththamittuk kembeeri; isravealin
parisuththar un naduvil periyavaraayirukki’raar. (easaayaa
12:6)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!