Tuesday, October 04, 2016

Easaayaa 11 | ஏசாயா 11 | Isaiah 11

ஈசாயென்னும்  அடிமரத்திலிருந்து  ஒரு  துளிர்  தோன்றி,  அவன்  வேர்களிலிருந்து  ஒரு  கிளை  எழும்பிச்  செழிக்கும்.  (ஏசாயா  11:1)

eesaayennum  adimaraththilirunthu  oru  thu'lir  thoan’ri,  avan  vearga'lilirunthu  oru  ki'lai  ezhumbich  sezhikkum.  (easaayaa  11:1)

ஞானத்தையும்  உணர்வையும்  அருளும்  ஆவியும்,  ஆலோசனையையும்  பெலனையும்  அருளும்  ஆவியும்,  அறிவையும்  கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயத்தையும்  அருளும்  ஆவியுமாகிய  கர்த்தருடைய  ஆவியானவர்  அவர்மேல்  தங்கியிருப்பார்.  (ஏசாயா  11:2)

gnaanaththaiyum  u'narvaiyum  aru'lum  aaviyum,  aaloasanaiyaiyum  belanaiyum  aru'lum  aaviyum,  a’rivaiyum  karththarukkup  bayappadugi’ra  bayaththaiyum  aru'lum  aaviyumaagiya  karththarudaiya  aaviyaanavar  avarmeal  thanggiyiruppaar.  (easaayaa  11:2)

கர்த்தருக்குப்  பயப்படுதல்  அவருக்கு  உகந்த  வாசனையாயிருக்கும்;  அவர்  தமது  கண்  கண்டபடி  நியாயந்தீர்க்காமலும்,  தமது  காது  கேட்டபடி  தீர்ப்புச்செய்யாமலும்,  (ஏசாயா  11:3)

karththarukkup  bayappaduthal  avarukku  ugantha  vaasanaiyaayirukkum;  avar  thamathu  ka'n  ka'ndapadi  niyaayantheerkkaamalum,  thamathu  kaathu  keattapadi  theerppuchseyyaamalum,  (easaayaa  11:3)

நீதியின்படி  ஏழைகளை  நியாயம்  விசாரித்து,  யதார்த்தத்தின்படி  பூமியிலுள்ள  சிறுமையானவர்களுக்குத்  தீர்ப்புச்செய்து,  பூமியைத்  தமது  வாக்கின்  கோலால்  அடித்து,  தமது  வாயின்  சுவாசத்தால்  துன்மார்க்கரைச்  சங்கரிப்பார்.  (ஏசாயா  11:4)

neethiyinpadi  eazhaiga'lai  niyaayam  visaariththu,  yathaarththaththinpadi  boomiyilu'l'la  si’rumaiyaanavarga'lukkuth  theerppuchseythu,  boomiyaith  thamathu  vaakkin  koalaal  adiththu,  thamathu  vaayin  suvaasaththaal  thunmaarkkaraich  sanggarippaar.  (easaayaa  11:4)

நீதி  அவருக்கு  அரைக்கட்டும்,  சத்தியம்  அவருக்கு  இடைக்கச்சையுமாயிருக்கும்.  (ஏசாயா  11:5)

neethi  avarukku  araikkattum,  saththiyam  avarukku  idaikkachchaiyumaayirukkum.  (easaayaa  11:5)

அப்பொழுது  ஓனாய்  ஆட்டுக்குட்டியோடே  தங்கும்,  புலி  வெள்ளாட்டுக்குட்டியோடே  படுத்துக்கொள்ளும்;  கன்றுக்குட்டியும்,  பாலசிங்கமும்,  காளையும்,  ஒருமித்திருக்கும்;  ஒரு  சிறு  பையன்  அவைகளை  நடத்துவான்.  (ஏசாயா  11:6)

appozhuthu  oanaay  aattukkuttiyoadea  thanggum,  puli  ve'l'laattukkuttiyoadea  paduththukko'l'lum;  kan’rukkuttiyum,  baalasinggamum,  kaa'laiyum,  orumiththirukkum;  oru  si’ru  paiyan  avaiga'lai  nadaththuvaan.  (easaayaa  11:6)

பசுவும்  கரடியும்  கூடிமேயும்,  அவைகளின்  குட்டிகள்  ஒருமித்துப்  படுத்துக்கொள்ளும்;  சிங்கம்  மாட்டைப்போல்  வைக்கோல்  தின்னும்.  (ஏசாயா  11:7)

pasuvum  karadiyum  koodimeayum,  avaiga'lin  kuttiga'l  orumiththup  paduththukko'l'lum;  singgam  maattaippoal  vaikkoal  thinnum.  (easaayaa  11:7)

பால்  குடிக்குங்குழந்தை  விரியன்பாம்பு  வளையின்மேல்  விளையாடும்,  பால்  மறந்த  பிள்ளை  கட்டுவிரியன்  புற்றிலே  தன்  கையை  வைக்கும்.  (ஏசாயா  11:8)

paal  kudikkungkuzhanthai  viriyanpaambu  va'laiyinmeal  vi'laiyaadum,  paal  ma’rantha  pi'l'lai  kattuviriyan  put’rilea  than  kaiyai  vaikkum.  (easaayaa  11:8)

என்  பரிசுத்த  பர்வதமெங்கும்  தீங்குசெய்வாருமில்லை;  கேடுசெய்வாருமில்லை;  சமுத்திரம்  ஜலத்தினால்  நிறைந்திருக்கிறதுபோல்,  பூமி  கர்த்தரை  அறிகிற  அறிவினால்  நிறைந்திருக்கும்.  (ஏசாயா  11:9)

en  parisuththa  parvathamenggum  theengguseyvaarumillai;  keaduseyvaarumillai;  samuththiram  jalaththinaal  ni’rainthirukki’rathupoal,  boomi  karththarai  a’rigi’ra  a’rivinaal  ni’rainthirukkum.  (easaayaa  11:9)

அக்காலத்திலே,  ஜனங்களுக்குக்  கொடியாக  நிற்கும்  ஈசாயின்  வேருக்காக  ஜாதிகள்  விசாரித்துக்  கேட்பார்கள்;  அவருடைய  தாபரஸ்தலம்  மகிமையாயிருக்கும்.  (ஏசாயா  11:10)

akkaalaththilea,  janangga'lukkuk  kodiyaaga  ni’rkum  eesaayin  vearukkaaga  jaathiga'l  visaariththuk  keadpaarga'l;  avarudaiya  thaabarasthalam  magimaiyaayirukkum.  (easaayaa  11:10)

அக்காலத்திலே,  ஆண்டவர்  அசீரியாவிலும்,  எகிப்திலும்,  பத்ரோசிலும்,  எத்தியோப்பியாவிலும்,  பெர்சியாவிலும்,  சிநேயாரிலும்,  ஆமாத்திலும்,  சமுத்திரத்  தீவுகளிலும்,  தம்முடைய  ஜனத்தில்  மீதியானவர்களை  மீட்டுக்கொள்ளத்  திரும்ப  இரண்டாம்விசை  தமது  கரத்தை  நீட்டி,  (ஏசாயா  11:11)

akkaalaththilea,  aa'ndavar  aseeriyaavilum,  egipthilum,  pathroasilum,  eththiyoappiyaavilum,  persiyaavilum,  sineayaarilum,  aamaaththilum,  samuththirath  theevuga'lilum,  thammudaiya  janaththil  meethiyaanavarga'lai  meettukko'l'lath  thirumba  ira'ndaamvisai  thamathu  karaththai  neetti,  (easaayaa  11:11)

ஜாதிகளுக்கு  ஒரு  கொடியை  ஏற்றி,  இஸ்ரவேலில்  துரத்துண்டவர்களைச்  சேர்த்து,  யூதாவில்  சிதறடிக்கப்பட்டவர்களை  பூமியின்  நான்கு  திசைகளிலுமிருந்து  கூட்டுவார்.  (ஏசாயா  11:12)

jaathiga'lukku  oru  kodiyai  eat’ri,  isravealil  thuraththu'ndavarga'laich  searththu,  yoothaavil  sitha’radikkappattavarga'lai  boomiyin  naangu  thisaiga'lilumirunthu  koottuvaar.  (easaayaa  11:12)

எப்பிராயீமின்  பொறாமை  நீங்கும்,  யூதாவின்  சத்துருக்கள்  சங்கரிக்கப்படுவார்கள்;  எப்பிராயீம்  யூதாவின்மேல்  பொறாமையாயிரான்,  யூதா  எப்பிராயீமைத்  துன்பப்படுத்தான்.  (ஏசாயா  11:13)

eppiraayeemin  po’raamai  neenggum,  yoothaavin  saththurukka'l  sanggarikkappaduvaarga'l;  eppiraayeem  yoothaavinmeal  po’raamaiyaayiraan,  yoothaa  eppiraayeemaith  thunbappaduththaan.  (easaayaa  11:13)

அவர்கள்  இருவரும்  ஏகமாய்க்  கூடி  மேற்கேயிருக்கிற  பெலிஸ்தருடைய  எல்லைகளின்மேல்  பாய்ந்து,  கீழ்த்திசையாரைக்  கொள்ளையிட்டு,  ஏதோமின்மேலும்  மோவாபின்மேலும்  கைபோடுவார்கள்;  அம்மோன்  புத்திரர்  அவர்களுக்குக்  கீழ்ப்படிவார்கள்.  (ஏசாயா  11:14)

avarga'l  iruvarum  eagamaayk  koodi  mea’rkeayirukki’ra  pelistharudaiya  ellaiga'linmeal  paaynthu,  keezhththisaiyaaraik  ko'l'laiyittu,  eathoaminmealum  moavaabinmealum  kaipoaduvaarga'l;  ammoan  puththirar  avarga'lukkuk  keezhppadivaarga'l.  (easaayaa  11:14)

எகிப்தின்  சமுத்திரமுனையைக்  கர்த்தர்  முற்றிலும்  அழித்து,  தம்முடைய  காற்றின்  வலுமையினால்  நதியின்மேல்  தமது  கையை  நீட்டி,  ஏழாறுகளாகப்  பிரித்து,  ஜனங்கள்  கால்நனையாமல்  கடந்துபோகும்படி  பண்ணுவார்.  (ஏசாயா  11:15)

egipthin  samuththiramunaiyaik  karththar  mut’rilum  azhiththu,  thammudaiya  kaat’rin  valumaiyinaal  nathiyinmeal  thamathu  kaiyai  neetti,  eazhaa’ruga'laagap  piriththu,  janangga'l  kaalnanaiyaamal  kadanthupoagumpadi  pa'n'nuvaar.  (easaayaa  11:15)

இஸ்ரவேலர்  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்டநாளில்  அவர்களுக்கு  இருந்ததுபோல,  அசீரியாவிலே  அவருடைய  ஜனத்தில்  மீதியானவர்களுக்கு  ஒரு  பெரும்பாதையிருக்கும்.  (ஏசாயா  11:16)

isravealar  egipthu  theasaththilirunthu  pu’rappattanaa'lil  avarga'lukku  irunthathupoala,  aseeriyaavilea  avarudaiya  janaththil  meethiyaanavarga'lukku  oru  perumpaathaiyirukkum.  (easaayaa  11:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!