Saturday, October 01, 2016

2 Naa'laagamam 36 | 2 நாளாகமம் 36 | 2 Chronicles 36

அப்பொழுது  ஜனங்கள்  யோசியாவின்  குமாரனாகிய  யோவாகாசை  அழைத்து,  அவனை  எருசலேமிலே  அவன்  தகப்பன்  ஸ்தானத்திலே  ராஜாவாக்கினார்கள்.  (2நாளாகமம்  36:1)

appozhuthu  janangga'l  yoasiyaavin  kumaaranaagiya  yoavaagaasai  azhaiththu,  avanai  erusaleamilea  avan  thagappan  sthaanaththilea  raajaavaakkinaarga'l.  (2naa’laagamam  36:1)

யோவாகாஸ்  ராஜாவாகிறபோது  இருபத்துமூன்று  வயதாயிருந்து,  மூன்றுமாதம்  எருசலேமில்  அரசாண்டான்.  (2நாளாகமம்  36:2)

yoavaagaas  raajaavaagi’rapoathu  irubaththumoon’ru  vayathaayirunthu,  moon’rumaatham  erusaleamil  arasaa'ndaan.  (2naa’laagamam  36:2)

அவன்  எருசலேமில்  அரசாளாதபடிக்கு  எகிப்தின்  ராஜா  அவனைத்  தள்ளிவிட்டு,  தேசத்தின்மேல்  நூறு  தாலந்து  வெள்ளியும்  ஒரு  தாலந்து  பொன்னுமான  தண்டத்தைச்  சுமத்தி,  (2நாளாகமம்  36:3)

avan  erusaleamil  arasaa'laathapadikku  egipthin  raajaa  avanaith  tha'l'livittu,  theasaththinmeal  noo’ru  thaalanthu  ve'l'liyum  oru  thaalanthu  ponnumaana  tha'ndaththaich  sumaththi,  (2naa’laagamam  36:3)

அவனுடைய  அண்ணனாகிய  எலியாக்கீமை  யூதாவின்மேலும்  எருசலேமின்மேலும்  ராஜாவாக்கி,  அவன்  பேரை  யோயாக்கீம்  என்று  மாற்றினான்;  அவன்  தம்பியாகிய  யோவாகாசை  எகிப்தின்  ராஜாவாகிய  நேகோ  எகிப்திற்குக்  கொண்டுபோனான்.  (2நாளாகமம்  36:4)

avanudaiya  a'n'nanaagiya  eliyaakkeemai  yoothaavinmealum  erusaleaminmealum  raajaavaakki,  avan  pearai  yoayaakkeem  en’ru  maat’rinaan;  avan  thambiyaagiya  yoavaagaasai  egipthin  raajaavaagiya  neakoa  egipthi’rkuk  ko'ndupoanaan.  (2naa’laagamam  36:4)

யோயாக்கீம்  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டு,  தன்  தேவனாகிய  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  36:5)

yoayaakkeem  raajaavaagi’rapoathu  irubaththainthu  vayathaayirunthu,  pathinoru  varusham  erusaleamil  arasaa'ndu,  than  theavanaagiya  karththarudaiya  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  36:5)

அவனுக்கு  விரோதமாகப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  வந்து,  அவனைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோக  இரண்டு  வெண்கலச்  சங்கிலியால்  அவனைக்  கட்டினான்.  (2நாளாகமம்  36:6)

avanukku  viroathamaagap  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  vanthu,  avanaip  baabiloanukkuk  ko'ndupoaga  ira'ndu  ve'ngalach  sanggiliyaal  avanaik  kattinaan.  (2naa’laagamam  36:6)

கர்த்தருடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளிலும்  சிலவற்றை  நேபுகாத்நேச்சார்  பாபிலோனுக்குக்  கொண்டுபோய்,  அவைகளைப்  பாபிலோனிலுள்ள  தன்னுடைய  கோவிலிலே  வைத்தான்.  (2நாளாகமம்  36:7)

karththarudaiya  aalayaththin  pa'nimuttuga'lilum  silavat’rai  neabukaathneachchaar  baabiloanukkuk  ko'ndupoay,  avaiga'laip  baabiloanilu'l'la  thannudaiya  koavililea  vaiththaan.  (2naa’laagamam  36:7)

யோயாக்கீமுடைய  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்ததும்,  அவனிடத்திலே  கண்டுபிடிக்கப்பட்டதுமான  அவனுடைய  அருவருப்புகளும்,  இஸ்ரவேல்  யூதா  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது;  அவன்  ஸ்தானத்தில்  அவன்  குமாரனாகிய  யோயாக்கீன்  ராஜாவானான்.  (2நாளாகமம்  36:8)

yoayaakkeemudaiya  mat’ra  varththamaanangga'lum,  avan  seythathum,  avanidaththilea  ka'ndupidikkappattathumaana  avanudaiya  aruvaruppuga'lum,  israveal  yoothaa  raajaakka'lin  pusthagaththil  ezhuthiyirukki’rathu;  avan  sthaanaththil  avan  kumaaranaagiya  yoayaakkeen  raajaavaanaan.  (2naa’laagamam  36:8)

யோயாக்கீன்  ராஜாவாகிறபோது  எட்டு  வயதாயிருந்து,  மூன்று  மாதமும்  பத்து  நாளும்  எருசலேமில்  அரசாண்டு,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  36:9)

yoayaakkeen  raajaavaagi’rapoathu  ettu  vayathaayirunthu,  moon’ru  maathamum  paththu  naa'lum  erusaleamil  arasaa'ndu,  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  36:9)

மறுவருஷத்தின்  ஆரம்பத்திலே  நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜா  அவனையும்,  கர்த்தருடைய  ஆலயத்தின்  திவ்வியமான  பணிமுட்டுகளையும்  பாபிலோனுக்குக்  கொண்டுவரப்பண்ணி,  அவன்  சிறிய  தகப்பனாகிய  சிதேக்கியாவை  யூதாவின்மேலும்  எருசலேமின்மேலும்  ராஜாவாக்கினான்.  (2நாளாகமம்  36:10)

ma’ruvarushaththin  aarambaththilea  neabukaathneachchaar  ennum  raajaa  avanaiyum,  karththarudaiya  aalayaththin  thivviyamaana  pa'nimuttuga'laiyum  baabiloanukkuk  ko'nduvarappa'n'ni,  avan  si’riya  thagappanaagiya  sitheakkiyaavai  yoothaavinmealum  erusaleaminmealum  raajaavaakkinaan.  (2naa’laagamam  36:10)

சிதேக்கியா  ராஜாவாகிறபோது  இருபத்தொரு  வயதாயிருந்து,  பதினொருவருஷம்  எருசலேமில்  அரசாண்டு,  (2நாளாகமம்  36:11)

sitheakkiyaa  raajaavaagi’rapoathu  irubaththoru  vayathaayirunthu,  pathinoruvarusham  erusaleamil  arasaa'ndu,  (2naa’laagamam  36:11)

தன்  தேவனாகிய  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  அவன்  கர்த்தருடைய  வாக்கை  உரைத்த  எரேமியா  என்கிற  தீர்க்கதரிசிக்குமுன்பாகத்  தன்னைத்  தாழ்த்தவில்லை.  (2நாளாகமம்  36:12)

than  theavanaagiya  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  avan  karththarudaiya  vaakkai  uraiththa  ereamiyaa  engi’ra  theerkkatharisikkumunbaagath  thannaith  thaazhththavillai.  (2naa’laagamam  36:12)

தேவன்மேல்  தன்னை  ஆணையிடுவித்துக்கொண்ட  நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணி,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரிடத்துக்குத்  திரும்பாதபடிக்கு,  தன்  கழுத்தை  அழுத்தமாக்கி,  தன்  இருதயத்தைக்  கடினப்படுத்தினான்.  (2நாளாகமம்  36:13)

theavanmeal  thannai  aa'naiyiduviththukko'nda  neabukaathneachchaar  ennum  raajaavukku  viroathamaayk  kalagampa'n'ni,  isravealin  theavanaagiya  karththaridaththukkuth  thirumbaathapadikku,  than  kazhuththai  azhuththamaakki,  than  iruthayaththaik  kadinappaduththinaan.  (2naa’laagamam  36:13)

ஆசாரியரில்  பிரதானமானவர்கள்  யாவரும்  ஜனங்களும்  கூடிப்  புறஜாதிகளுடைய  சகல  அருவருப்புகளின்படியும்  மிகவும்  துரோகம்பண்ணி,  கர்த்தர்  எருசலேமிலே  பரிசுத்தம்பண்ணின  அவருடைய  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தினார்கள்.  (2நாளாகமம்  36:14)

aasaariyaril  pirathaanamaanavarga'l  yaavarum  janangga'lum  koodip  pu’rajaathiga'ludaiya  sagala  aruvaruppuga'linpadiyum  migavum  thuroagampa'n'ni,  karththar  erusaleamilea  parisuththampa'n'nina  avarudaiya  aalayaththaith  theettuppaduththinaarga'l.  (2naa’laagamam  36:14)

அவர்களுடைய  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  தமது  ஜனத்தையும்  தமது  வாசஸ்தலத்தையும்  காப்பதற்கான  இரக்கமுள்ளவராயிருந்தபடியால்,  அவர்களிடத்துக்குத்  தம்முடைய  ஸ்தானாபதிகளை  ஏற்கனவே  அனுப்பினார்.  (2நாளாகமம்  36:15)

avarga'ludaiya  pithaakka'lin  theavanaagiya  karththar  thamathu  janaththaiyum  thamathu  vaasasthalaththaiyum  kaappatha’rkaana  irakkamu'l'lavaraayirunthapadiyaal,  avarga'lidaththukkuth  thammudaiya  sthaanaabathiga'lai  ea’rkanavea  anuppinaar.  (2naa’laagamam  36:15)

ஆனாலும்  அவர்கள்  தேவனுடைய  ஸ்தானாபதிகளைப்  பரியாசம்பண்ணி,  அவருடைய  வார்த்தைகளை  அசட்டைசெய்து,  அவருடைய  தீர்க்கதரிசிகளை  நிந்தித்தபடியால்,  கர்த்தருடைய  உக்கிரம்  அவருடைய  ஜனத்தின்மேல்  மூண்டது;  சகாயமில்லாமல்  போயிற்று.  (2நாளாகமம்  36:16)

aanaalum  avarga'l  theavanudaiya  sthaanaabathiga'laip  pariyaasampa'n'ni,  avarudaiya  vaarththaiga'lai  asattaiseythu,  avarudaiya  theerkkatharisiga'lai  ninthiththapadiyaal,  karththarudaiya  ukkiram  avarudaiya  janaththinmeal  moo'ndathu;  sagaayamillaamal  poayit’ru.  (2naa’laagamam  36:16)

ஆதலால்  அவர்  அவர்கள்மேல்  கல்தேயரின்  ராஜாவை  வரப்பண்ணினார்;  அவன்  அவர்கள்  வாலிபரை  அவர்களுடைய  பரிசுத்தமான  ஆலயத்திலே  பட்டயத்தினால்  கொன்று,  வாலிபரையும்  கன்னியாஸ்திரீகளையும்  முதியோரையும்  விருத்தாப்பியரையும்  தப்பவிடவில்லை;  எல்லாரையும்  தேவன்  அவன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  (2நாளாகமம்  36:17)

aathalaal  avar  avarga'lmeal  kaltheayarin  raajaavai  varappa'n'ninaar;  avan  avarga'l  vaalibarai  avarga'ludaiya  parisuththamaana  aalayaththilea  pattayaththinaal  kon’ru,  vaalibaraiyum  kanniyaasthireega'laiyum  muthiyoaraiyum  viruththaappiyaraiyum  thappavidavillai;  ellaaraiyum  theavan  avan  kaiyil  oppukkoduththaar.  (2naa’laagamam  36:17)

அவன்  தேவனுடைய  ஆலயத்தின்  பெரிதும்  சிறிதுமான  பணிமுட்டுகள்  அனைத்தையும்,  கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களும்  ராஜாவுக்கும்  அவன்  பிரபுக்களுக்கும்  இருந்த  பொக்கிஷங்களுமாகிய  அனைத்தையும்  பாபிலோனுக்குக்  கொண்டுபோனான்.  (2நாளாகமம்  36:18)

avan  theavanudaiya  aalayaththin  perithum  si’rithumaana  pa'nimuttuga'l  anaiththaiyum,  karththarudaiya  aalayaththin  pokkishangga'lum  raajaavukkum  avan  pirabukka'lukkum  iruntha  pokkishangga'lumaagiya  anaiththaiyum  baabiloanukkuk  ko'ndupoanaan.  (2naa’laagamam  36:18)

அவர்கள்  தேவனுடைய  ஆலயத்தைத்  தீக்கொளுத்தி,  எருசலேமின்  அலங்கத்தை  இடித்து,  அதின்  மாளிகைகளையெல்லாம்  அக்கினியால்  சுட்டெரித்து,  அதிலிருந்த  திவ்வியமான  பணிமுட்டுகளையெல்லாம்  அழித்தார்கள்.  (2நாளாகமம்  36:19)

avarga'l  theavanudaiya  aalayaththaith  theekko'luththi,  erusaleamin  alanggaththai  idiththu,  athin  maa'ligaiga'laiyellaam  akkiniyaal  sutteriththu,  athiliruntha  thivviyamaana  pa'nimuttuga'laiyellaam  azhiththaarga'l.  (2naa’laagamam  36:19)

பட்டயத்திற்குத்  தப்பின  மீதியானவர்களை  அவன்  பாபிலோனுக்குச்  சிறைபிடித்துப்போனான்;  பெர்சியா  ராஜ்யபாரம்  ஸ்தாபிக்கப்படுமட்டும்  அங்கே  அவர்கள்  அவனுக்கும்  அவன்  குமாரருக்கும்  அடிமைகளாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  36:20)

pattayaththi’rkuth  thappina  meethiyaanavarga'lai  avan  baabiloanukkuch  si’raipidiththuppoanaan;  persiyaa  raajyabaaram  sthaabikkappadumattum  anggea  avarga'l  avanukkum  avan  kumaararukkum  adimaiga'laayirunthaarga'l.  (2naa’laagamam  36:20)

கர்த்தர்  எரேமியாவின்  வாயினாலே  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்படிக்கு,  தேசம்  தன்னுடைய  ஓய்வு  வருஷங்களை  இரம்மியமாய்  அநுபவித்துத்  தீருமட்டும்,  அது  பாழாய்க்கிடந்த  நாளெல்லாம்,  அதாவது,  எழுபதுவருஷம்  முடியுமட்டும்  ஓய்ந்திருந்தது.  (2நாளாகமம்  36:21)

karththar  ereamiyaavin  vaayinaalea  sonna  vaarththai  ni’raivea’rumpadikku,  theasam  thannudaiya  oayvu  varushangga'lai  irammiyamaay  anubaviththuth  theerumattum,  athu  paazhaaykkidantha  naa'lellaam,  athaavathu,  ezhubathuvarusham  mudiyumattum  oaynthirunthathu.  (2naa’laagamam  36:21)

எரேமியாவின்  வாயினாலே  கர்த்தர்  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்படி,  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசின்  முதலாம்  வருஷத்திலே  கர்த்தர்  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசின்  ஆவியை  ஏவினதினாலே,  அவன்:  பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தர்  பூமியின்  ராஜ்யங்களையெல்லாம்  எனக்குத்  தந்தருளி,  யூதாவிலுள்ள  எருசலேமிலே  தமக்கு  ஆலயத்தைக்  கட்டுவிக்கும்படி  எனக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்.  (2நாளாகமம்  36:22)

ereamiyaavin  vaayinaalea  karththar  sonna  vaarththai  ni’raivea’rumpadi,  persiyaavin  raajaavaagiya  koareasin  muthalaam  varushaththilea  karththar  persiyaavin  raajaavaagiya  koareasin  aaviyai  eavinathinaalea,  avan:  paraloagaththin  theavanaagiya  karththar  boomiyin  raajyangga'laiyellaam  enakkuth  thantharu'li,  yoothaavilu'l'la  erusaleamilea  thamakku  aalayaththaik  kattuvikkumpadi  enakkuk  katta'laiyittirukki’raar.  (2naa’laagamam  36:22)

அவருடைய  ஜனங்கள்  எல்லாரிலும்  எவன்  உங்களுக்குள்  இருக்கிறானோ  அவன்  போகட்டும்,  அவனுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவனோடிருப்பாராக  என்று  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேஸ்  அறிவிக்கிறார்  என்று,  தன்  ராஜ்யம்  எங்கும்  எழுதியனுப்பி  விளம்பரம்பண்ணினான்.  (2நாளாகமம்  36:23)

avarudaiya  janangga'l  ellaarilum  evan  ungga'lukku'l  irukki’raanoa  avan  poagattum,  avanudaiya  theavanaagiya  karththar  avanoadiruppaaraaga  en’ru  persiyaavin  raajaavaagiya  koareas  a’rivikki’raar  en’ru,  than  raajyam  enggum  ezhuthiyanuppi  vi'lambarampa'n'ninaan.  (2naa’laagamam  36:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!