Saturday, October 01, 2016

2 Naa'laagamam 33 | 2 நாளாகமம் 33 | 2 Chronicles 33

மனாசே  ராஜாவாகிறபோது  பன்னிரண்டு  வயதாயிருந்து,  ஐம்பத்தைந்து  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்.  (2நாளாகமம்  33:1)

manaasea  raajaavaagi’rapoathu  pannira'ndu  vayathaayirunthu,  aimbaththainthu  varusham  erusaleamil  arasaa'ndaan.  (2naa’laagamam  33:1)

கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியே,  அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  33:2)

karththar  israveal  puththirarukku  munbaagath  thuraththina  jaathiga'ludaiya  aruvaruppuga'linpadiyea,  avan  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  33:2)

அவன்  தன்  தகப்பனாகிய  எசேக்கியா  தகர்த்துப்போட்ட  மேடைகளைத்  திரும்பவும்  கட்டி,  பாகால்களுக்குப்  பலிபீடங்களை  எடுப்பித்து,  விக்கிரகத்தோப்புகளை  உண்டாக்கி,  வானத்தின்  சேனையையெல்லாம்  பணிந்துகொண்டு,  அவைகளைச்  சேவித்து,  (2நாளாகமம்  33:3)

avan  than  thagappanaagiya  eseakkiyaa  thagarththuppoatta  meadaiga'laith  thirumbavum  katti,  baagaalga'lukkup  balipeedangga'lai  eduppiththu,  vikkiragaththoappuga'lai  u'ndaakki,  vaanaththin  seanaiyaiyellaam  pa'ninthuko'ndu,  avaiga'laich  seaviththu,  (2naa’laagamam  33:3)

எருசலேமிலே  என்  நாமம்  என்றென்றைக்கும்  விளங்கும்  என்று  கர்த்தர்  சொன்ன  தம்முடைய  ஆலயத்திலே  பலிபீடங்களைக்  கட்டி,  (2நாளாகமம்  33:4)

erusaleamilea  en  naamam  en’ren’raikkum  vi'langgum  en’ru  karththar  sonna  thammudaiya  aalayaththilea  balipeedangga'laik  katti,  (2naa’laagamam  33:4)

கர்த்தருடைய  ஆலயத்தின்  இரண்டு  பிராகாரங்களிலும்  வானத்தின்  சேனைகளுக்கெல்லாம்  பலிபீடங்களைக்  கட்டினான்.  (2நாளாகமம்  33:5)

karththarudaiya  aalayaththin  ira'ndu  piraagaarangga'lilum  vaanaththin  seanaiga'lukkellaam  balipeedangga'laik  kattinaan.  (2naa’laagamam  33:5)

அவன்  இன்னோம்  குமாரரின்  பள்ளத்தாக்கிலே  தன்  குமாரரைத்  தீமிதிக்கப்பண்ணி,  நாளும்  நிமித்தமும்  பார்த்து,  பில்லிசூனியங்களை  அநுசரித்து,  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  வைத்து,  கர்த்தருக்குக்  கோபமுண்டாக  அவர்  பார்வைக்கு  மிகுதியும்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  33:6)

avan  innoam  kumaararin  pa'l'laththaakkilea  than  kumaararaith  theemithikkappa'n'ni,  naa'lum  nimiththamum  paarththu,  pillisooniyangga'lai  anusariththu,  agnchanam  paarkki’ravarga'laiyum  ku’risollugi’ravarga'laiyum  vaiththu,  karththarukkuk  koabamu'ndaaga  avar  paarvaikku  miguthiyum  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  33:6)

இந்த  ஆலயத்திலும்,  இஸ்ரவேல்  கோத்திரங்களிலெல்லாம்  நான்  தெரிந்துகொண்ட  எருசலேமிலும்,  என்  நாமத்தை  என்றென்றைக்கும்  விளங்கப்பண்ணுவேன்  என்றும்,  (2நாளாகமம்  33:7)

intha  aalayaththilum,  israveal  koaththirangga'lilellaam  naan  therinthuko'nda  erusaleamilum,  en  naamaththai  en’ren’raikkum  vi'langgappa'n'nuvean  en’rum,  (2naa’laagamam  33:7)

நான்  மோசேயைக்கொண்டு  இஸ்ரவேலுக்குக்  கொடுத்த  சகல  நியாயப்பிரமாணத்திற்கும்  கட்டளைகளுக்கும்  நியாயங்களுக்கும்  ஒத்தபடியே  அவர்களுக்கு  நான்  கற்பித்தவைகளையெல்லாம்  அவர்கள்  செய்யச்  சாவதானமாய்  இருந்தார்களேயாகில்,  நான்  இனி  அவர்கள்  காலை  அவர்கள்  பிதாக்களுக்கு  நிலைப்படுத்திவைத்த  தேசத்திலிருந்து  விலகப்பண்ணுவதில்லையென்றும்,  தேவன்  தாவீதோடும்  அவன்  குமாரனாகிய  சாலொமோனோடும்  சொல்லியிருந்த  தேவனுடைய  ஆலயத்தில்தானே,  அவன்  தான்  பண்ணுவித்த  விக்கிரகமாகிய  சிலையை  ஸ்தாபித்தான்.  (2நாளாகமம்  33:8)

naan  moaseayaikko'ndu  isravealukkuk  koduththa  sagala  niyaayappiramaa'naththi’rkum  katta'laiga'lukkum  niyaayangga'lukkum  oththapadiyea  avarga'lukku  naan  ka’rpiththavaiga'laiyellaam  avarga'l  seyyach  saavathaanamaay  irunthaarga'leayaagil,  naan  ini  avarga'l  kaalai  avarga'l  pithaakka'lukku  nilaippaduththivaiththa  theasaththilirunthu  vilagappa'n'nuvathillaiyen’rum,  theavan  thaaveethoadum  avan  kumaaranaagiya  saalomoanoadum  solliyiruntha  theavanudaiya  aalayaththilthaanea,  avan  thaan  pa'n'nuviththa  vikkiragamaagiya  silaiyai  sthaabiththaan.  (2naa’laagamam  33:8)

அப்படியே  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாக  அழித்த  ஜாதிகளைப்பார்க்கிலும்,  யூதாவும்  எருசலேமின்  குடிகளும்  பொல்லாப்புச்  செய்யத்தக்கதாய்,  மனாசே  அவர்களை  வழிதப்பிப்போகப்பண்ணினான்.  (2நாளாகமம்  33:9)

appadiyea  karththar  israveal  puththirarukku  munbaaga  azhiththa  jaathiga'laippaarkkilum,  yoothaavum  erusaleamin  kudiga'lum  pollaappuch  seyyaththakkathaay,  manaasea  avarga'lai  vazhithappippoagappa'n'ninaan.  (2naa’laagamam  33:9)

கர்த்தர்  மனாசேயோடும்  அவனுடைய  ஜனத்தோடும்  பேசினபோதிலும்,  அவர்கள்  கவனிக்காதேபோனார்கள்.  (2நாளாகமம்  33:10)

karththar  manaaseayoadum  avanudaiya  janaththoadum  peasinapoathilum,  avarga'l  kavanikkaatheapoanaarga'l.  (2naa’laagamam  33:10)

ஆகையால்  கர்த்தர்:  அசீரியா  ராஜாவின்  சேனாபதிகளை  அவர்கள்மேல்  வரப்பண்ணினார்;  அவர்கள்  மனாசேயை  முட்செடிகளில்  பிடித்து,  இரண்டு  வெண்கலச்  சங்கிலியால்  அவனைக்  கட்டிப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோனார்கள்.  (2நாளாகமம்  33:11)

aagaiyaal  karththar:  aseeriyaa  raajaavin  seanaabathiga'lai  avarga'lmeal  varappa'n'ninaar;  avarga'l  manaaseayai  mudchediga'lil  pidiththu,  ira'ndu  ve'ngalach  sanggiliyaal  avanaik  kattip  baabiloanukkuk  ko'ndupoanaarga'l.  (2naa’laagamam  33:11)

இப்படி  அவன்  நெருக்கப்படுகையில்,  தன்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கிக்  கெஞ்சி,  தன்  பிதாக்களின்  தேவனுக்கு  முன்பாக  மிகவும்  தன்னைத்  தாழ்த்தினான்.  (2நாளாகமம்  33:12)

ippadi  avan  nerukkappadugaiyil,  than  theavanaagiya  karththarai  noakkik  kegnchi,  than  pithaakka'lin  theavanukku  munbaaga  migavum  thannaith  thaazhththinaan.  (2naa’laagamam  33:12)

அவரை  நோக்கி,  அவன்  விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது,  அவர்  அவன்  கெஞ்சுதலுக்கு  இரங்கி,  அவன்  ஜெபத்தைக்  கேட்டு,  அவனைத்  திரும்ப  எருசலேமிலுள்ள  தன்னுடைய  ராஜ்யத்திற்கு  வரப்பண்ணினார்;  கர்த்தரே  தேவன்  என்று  அப்பொழுது  மனாசே  அறிந்தான்.  (2நாளாகமம்  33:13)

avarai  noakki,  avan  vi'n'nappampa'n'nikko'ndirukki’rapoathu,  avar  avan  kegnchuthalukku  iranggi,  avan  jebaththaik  keattu,  avanaith  thirumba  erusaleamilu'l'la  thannudaiya  raajyaththi’rku  varappa'n'ninaar;  karththarea  theavan  en’ru  appozhuthu  manaasea  a’rinthaan.  (2naa’laagamam  33:13)

பின்பு  அவன்  தாவீதுடைய  நகரத்தின்  வெளி  அலங்கத்தைக்  கீயோனுக்கு  மேற்கேயிருக்கிற  பள்ளத்தாக்குதொடங்கி  மீன்வாசல்மட்டும்  கட்டி,  ஓபேலைச்  சுற்றிலும்  அதை  வளைத்து,  அதை  மிகவும்  உயர்த்தி,  யூதாவிலுள்ள  அரணான  பட்டணங்களிலெல்லாம்  இராணுவத்தலைவரை  வைத்து,  (2நாளாகமம்  33:14)

pinbu  avan  thaaveethudaiya  nagaraththin  ve'li  alanggaththaik  keeyoanukku  mea’rkeayirukki’ra  pa'l'laththaakkuthodanggi  meenvaasalmattum  katti,  oapealaich  sut’rilum  athai  va'laiththu,  athai  migavum  uyarththi,  yoothaavilu'l'la  ara'naana  patta'nangga'lilellaam  iraa'nuvaththalaivarai  vaiththu,  (2naa’laagamam  33:14)

கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  அந்நிய  தேவர்களையும்  அந்த  விக்கிரகத்தையும்  எடுத்துப்போட்டு,  கர்த்தருடைய  ஆலயமுள்ள  மலையிலும்  எருசலேமிலும்  தான்  கட்டியிருந்த  எல்லாப்  பலிபீடங்களையும்  அகற்றி,  பட்டணத்திற்குப்  புறம்பாகப்  போடுவித்து,  (2நாளாகமம்  33:15)

karththarudaiya  aalayaththilirunthu  anniya  theavarga'laiyum  antha  vikkiragaththaiyum  eduththuppoattu,  karththarudaiya  aalayamu'l'la  malaiyilum  erusaleamilum  thaan  kattiyiruntha  ellaap  balipeedangga'laiyum  agat’ri,  patta'naththi’rkup  pu’rambaagap  poaduviththu,  (2naa’laagamam  33:15)

கர்த்தருடைய  பலிபீடத்தைச்  செப்பனிட்டு,  அதின்மேல்  சமாதானபலிகளையும்  ஸ்தோத்திரபலிகளையும்  செலுத்தி,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரைச்  சேவிக்கவேண்டும்  என்று  யூதாவுக்குக்  கட்டளையிட்டான்.  (2நாளாகமம்  33:16)

karththarudaiya  balipeedaththaich  seppanittu,  athinmeal  samaathaanabaliga'laiyum  sthoaththirabaliga'laiyum  seluththi,  isravealin  theavanaagiya  karththaraich  seavikkavea'ndum  en’ru  yoothaavukkuk  katta'laiyittaan.  (2naa’laagamam  33:16)

ஆகிலும்  ஜனங்கள்  இன்னும்  மேடைகளில்  பலியிட்டுவந்தார்கள்;  என்றாலும்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கென்றே  அப்படிச்  செய்தார்கள்.  (2நாளாகமம்  33:17)

aagilum  janangga'l  innum  meadaiga'lil  baliyittuvanthaarga'l;  en’raalum  thangga'l  theavanaagiya  karththarukken’rea  appadich  seythaarga'l.  (2naa’laagamam  33:17)

மனாசேயின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  தன்  தேவனை  நோக்கிப்  பண்ணின  விண்ணப்பமும்,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்தில்  அவனோடே  பேசின  ஞானதிருஷ்டிக்காரரின்  வார்த்தைகளும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  33:18)

manaaseayin  mat’ra  varththamaanangga'lum,  avan  than  theavanai  noakkip  pa'n'nina  vi'n'nappamum,  isravealin  theavanaagiya  karththarin  naamaththil  avanoadea  peasina  gnaanathirushdikkaararin  vaarththaiga'lum,  israveal  raajaakka'lin  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  33:18)

அவனுடைய  விண்ணப்பமும்,  அவன்  கெஞ்சுதலுக்குக்  கர்த்தர்  இரங்கினதும்,  அவன்  தன்னைத்  தாழ்த்தினதற்கு  முன்னே  பண்ணின  அவனுடைய  எல்லாப்  பாவமும்  துரோகமும்,  அவன்  மேடைகளைக்  கட்டி  விக்கிரகத்  தோப்புகளையும்  சிலைகளையும்  ஸ்தாபித்த  இடங்களும்,  ஓசாயின்  பிரபந்தத்தில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  33:19)

avanudaiya  vi'n'nappamum,  avan  kegnchuthalukkuk  karththar  irangginathum,  avan  thannaith  thaazhththinatha’rku  munnea  pa'n'nina  avanudaiya  ellaap  paavamum  thuroagamum,  avan  meadaiga'laik  katti  vikkiragath  thoappuga'laiyum  silaiga'laiyum  sthaabiththa  idangga'lum,  oasaayin  pirabanthaththil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  33:19)

மனாசே  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்பு,  அவனை  அவன்  வீட்டிலே  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  ஆமோன்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2நாளாகமம்  33:20)

manaasea  than  pithaakka'loadea  niththiraiyadainthapinbu,  avanai  avan  veettilea  adakkampa'n'ninaarga'l;  avan  kumaaranaagiya  aamoan  avan  sthaanaththil  raajaavaanaan.  (2naa’laagamam  33:20)

ஆமோன்  ராஜாவாகிறபோது  இருபத்திரண்டு  வயதாயிருந்து,  இரண்டு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்.  (2நாளாகமம்  33:21)

aamoan  raajaavaagi’rapoathu  irubaththira'ndu  vayathaayirunthu,  ira'ndu  varusham  erusaleamil  arasaa'ndaan.  (2naa’laagamam  33:21)

அவன்  தன்  தகப்பனாகிய  மனாசே  செய்ததுபோலக்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  தன்  தகப்பனாகிய  மனாசே  பண்ணுவித்திருந்த  விக்கிரகங்களுக்கெல்லாம்  ஆமோன்  பலியிட்டு,  அவைகளைச்  சேவித்தான்.  (2நாளாகமம்  33:22)

avan  than  thagappanaagiya  manaasea  seythathupoalak  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  than  thagappanaagiya  manaasea  pa'n'nuviththiruntha  vikkiragangga'lukkellaam  aamoan  baliyittu,  avaiga'laich  seaviththaan.  (2naa’laagamam  33:22)

தன்  தகப்பனாகிய  மனாசே  தன்னைத்  தாழ்த்திக்கொண்டதுபோல,  இந்த  ஆமோன்  என்பவன்  கர்த்தருக்கு  முன்பாகத்  தன்னைத்  தாழ்த்தாமல்  மேன்மேலும்  அக்கிரமம்  செய்துவந்தான்.  (2நாளாகமம்  33:23)

than  thagappanaagiya  manaasea  thannaith  thaazhththikko'ndathupoala,  intha  aamoan  enbavan  karththarukku  munbaagath  thannaith  thaazhththaamal  meanmealum  akkiramam  seythuvanthaan.  (2naa’laagamam  33:23)

அவன்  ஊழியக்காரர்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  அவன்  அரமனையிலே  அவனைக்  கொன்றுபோட்டார்கள்.  (2நாளாகமம்  33:24)

avan  oozhiyakkaarar  avanukku  viroathamaayk  kattuppaadupa'n'ni,  avan  aramanaiyilea  avanaik  kon’rupoattaarga'l.  (2naa’laagamam  33:24)

அப்பொழுது  தேசத்து  ஜனங்கள்  ஆமோன்  என்னும்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணின  யாவரையும்  வெட்டிப்போட்டு,  அவன்  குமாரனாகிய  யோசியாவை  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவாக்கினார்கள்.  (2நாளாகமம்  33:25)

appozhuthu  theasaththu  janangga'l  aamoan  ennum  raajaavukku  viroathamaayk  kattuppaadupa'n'nina  yaavaraiyum  vettippoattu,  avan  kumaaranaagiya  yoasiyaavai  avan  sthaanaththil  raajaavaakkinaarga'l.  (2naa’laagamam  33:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!