Saturday, October 01, 2016

2 Naa'laagamam 32 | 2 நாளாகமம் 32 | 2 Chronicles 32

இக்காரியங்கள்  நடந்தேறிவருகையில்  அசீரியா  ராஜாவாகிய  சனகெரிப்  வந்து,  யூதாவுக்குள்  பிரவேசித்து,  அரணான  பட்டணங்களுக்கு  எதிராகப்  பாளயமிறங்கி,  அவைகளைத்  தன்  வசமாக்கிக்கொள்ள  நினைத்தான்.  (2நாளாகமம்  32:1)

ikkaariyangga'l  nadanthea’rivarugaiyil  aseeriyaa  raajaavaagiya  sanakerib  vanthu,  yoothaavukku'l  piraveasiththu,  ara'naana  patta'nangga'lukku  ethiraagap  paa'layami’ranggi,  avaiga'laith  than  vasamaakkikko'l'la  ninaiththaan.  (2naa’laagamam  32:1)

சனகெரிப்  வந்து,  எருசலேமின்மேல்  யுத்தம்பண்ண  நோக்கங்கொண்டிருப்பதை  எசேக்கியா  கண்டபோது,  (2நாளாகமம்  32:2)

sanakerib  vanthu,  erusaleaminmeal  yuththampa'n'na  noakkangko'ndiruppathai  eseakkiyaa  ka'ndapoathu,  (2naa’laagamam  32:2)

நகரத்திற்குப்  புறம்பேயிருக்கிற  ஊற்றுகளைத்  தூர்த்துப்போட,  தன்  பிரபுக்களோடும்  தன்  பராக்கிரமசாலிகளோடும்  ஆலோசனைபண்ணினான்;  அதற்கு  அவர்கள்  உதவியாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  32:3)

nagaraththi’rkup  pu’rambeayirukki’ra  oot’ruga'laith  thoorththuppoada,  than  pirabukka'loadum  than  baraakkiramasaaliga'loadum  aaloasanaipa'n'ninaan;  atha’rku  avarga'l  uthaviyaayirunthaarga'l.  (2naa’laagamam  32:3)

அசீரியா  ராஜாக்கள்  வந்து,  அதிக  தண்ணீரைக்  கண்டுபிடிப்பானேன்  என்று  சொல்லி,  அநேகம்  ஜனங்கள்  கூடி,  எல்லா  ஊற்றுகளையும்  நாட்டின்  நடுவில்  பாயும்  ஓடையையும்  தூர்த்துப்போட்டார்கள்.  (2நாளாகமம்  32:4)

aseeriyaa  raajaakka'l  vanthu,  athiga  tha'n'neeraik  ka'ndupidippaanean  en’ru  solli,  aneagam  janangga'l  koodi,  ellaa  oot’ruga'laiyum  naattin  naduvil  paayum  oadaiyaiyum  thoorththuppoattaarga'l.  (2naa’laagamam  32:4)

அவன்  திடன்கொண்டு,  இடிந்துபோன  மதிலையெல்லாம்  கட்டி,  அவைகளையும்  வெளியிலுள்ள  மற்ற  மதிலையும்  கொத்தளங்கள்மட்டும்  உயர்த்தி,  தாவீது  நகரத்தின்  கோட்டையைப்  பலப்படுத்தி,  திரளான  ஆயுதங்களையும்  கேடகங்களையும்பண்ணி,  (2நாளாகமம்  32:5)

avan  thidanko'ndu,  idinthupoana  mathilaiyellaam  katti,  avaiga'laiyum  ve'liyilu'l'la  mat’ra  mathilaiyum  koththa'langga'lmattum  uyarththi,  thaaveethu  nagaraththin  koattaiyaip  balappaduththi,  thira'laana  aayuthangga'laiyum  keadagangga'laiyumpa'n'ni,  (2naa’laagamam  32:5)

ஜனத்தின்மேல்  படைத்தலைவரை  வைத்து,  அவர்களை  நகரவாசலின்  வீதியிலே  தன்னண்டையில்  கூடிவரச்செய்து,  அவர்களை  நோக்கி:  (2நாளாகமம்  32:6)

janaththinmeal  padaiththalaivarai  vaiththu,  avarga'lai  nagaravaasalin  veethiyilea  thanna'ndaiyil  koodivarachseythu,  avarga'lai  noakki:  (2naa’laagamam  32:6)

நீங்கள்  திடன்கொண்டு  தைரியமாயிருங்கள்;  அசீரியா  ராஜாவுக்கும்  அவனோடிருக்கிற  ஏராளமான  கூட்டத்திற்கும்  பயப்படாமலும்  கலங்காமலுமிருங்கள்;  அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும்  நம்மோடிருக்கிறவர்கள்  அதிகம்.  (2நாளாகமம்  32:7)

neengga'l  thidanko'ndu  thairiyamaayirungga'l;  aseeriyaa  raajaavukkum  avanoadirukki’ra  earaa'lamaana  koottaththi’rkum  bayappadaamalum  kalanggaamalumirungga'l;  avanoadirukki’ravarga'laippaarkkilum  nammoadirukki’ravarga'l  athigam.  (2naa’laagamam  32:7)

அவனோடிருக்கிறது  மாம்ச  புயம்,  நமக்குத்  துணைநின்று  நம்முடைய  யுத்தங்களை  நடத்த  நம்மோடிருக்கிறவர்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்தானே  என்று  சொல்லி,  அவர்களைத்  தேற்றினான்;  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியா  சொன்ன  இந்த  வார்த்தைகளின்மேல்  ஜனங்கள்  நம்பிக்கை  வைத்தார்கள்.  (2நாளாகமம்  32:8)

avanoadirukki’rathu  maamsa  puyam,  namakkuth  thu'nainin’ru  nammudaiya  yuththangga'lai  nadaththa  nammoadirukki’ravar  nammudaiya  theavanaagiya  karththarthaanea  en’ru  solli,  avarga'laith  theat’rinaan;  yoothaavin  raajaavaagiya  eseakkiyaa  sonna  intha  vaarththaiga'linmeal  janangga'l  nambikkai  vaiththaarga'l.  (2naa’laagamam  32:8)

இதின்பின்பு  அசீரியா  ராஜாவாகிய  சனகெரிப்  தன்  முழுச்  சேனையுடன்  லாகீசுக்கு  எதிராய்  முற்றிக்கைபோட்டிருக்கையில்,  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவிடத்துக்கும்,  எருசலேமிலுள்ள  யூதா  ஜனங்கள்  யாவரிடத்துக்கும்  தன்  ஊழியக்காரரை  அனுப்பி:  (2நாளாகமம்  32:9)

ithinpinbu  aseeriyaa  raajaavaagiya  sanakerib  than  muzhuch  seanaiyudan  laageesukku  ethiraay  mut’rikkaipoattirukkaiyil,  yoothaavin  raajaavaagiya  eseakkiyaavidaththukkum,  erusaleamilu'l'la  yoothaa  janangga'l  yaavaridaththukkum  than  oozhiyakkaararai  anuppi:  (2naa’laagamam  32:9)

அசீரியா  ராஜாவாகிய  சனகெரிப்  சொல்லுகிறது  என்னவென்றால்,  முற்றிக்கை  போடப்பட்ட  எருசலேமிலே  நீங்கள்  இருக்கும்படிக்கு,  நீங்கள்  எதின்மேல்  நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?  (2நாளாகமம்  32:10)

aseeriyaa  raajaavaagiya  sanakerib  sollugi’rathu  ennaven’raal,  mut’rikkai  poadappatta  erusaleamilea  neengga'l  irukkumpadikku,  neengga'l  ethinmeal  nambikkaiyaayirukki’reerga'l?  (2naa’laagamam  32:10)

நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  நம்மை  அசீரியருடைய  ராஜாவின்  கைக்குத்  தப்புவிப்பார்  என்று  எசேக்கியா  சொல்லி,  நீங்கள்  பசியினாலும்  தாகத்தினாலும்  சாகும்படி  உங்களைப்  போதிக்கிறான்  அல்லவா?  (2நாளாகமம்  32:11)

nammudaiya  theavanaagiya  karththar  nammai  aseeriyarudaiya  raajaavin  kaikkuth  thappuvippaar  en’ru  eseakkiyaa  solli,  neengga'l  pasiyinaalum  thaagaththinaalum  saagumpadi  ungga'laip  poathikki’raan  allavaa?  (2naa’laagamam  32:11)

அவருடைய  மேடைகளையும்  அவருடைய  பலிபீடங்களையும்  தள்ளிவிட்டவனும்,  ஒரே  பலிபீடத்திற்கு  முன்பாகப்  பணிந்து,  அதின்மேல்  தூபங்காட்டுங்கள்  என்று  யூதாவுக்கும்  எருசலேமியருக்கும்  சொன்னவனும்  அந்த  எசேக்கியாதான்  அல்லவா?  (2நாளாகமம்  32:12)

avarudaiya  meadaiga'laiyum  avarudaiya  balipeedangga'laiyum  tha'l'livittavanum,  orea  balipeedaththi’rku  munbaagap  pa'ninthu,  athinmeal  thoobangkaattungga'l  en’ru  yoothaavukkum  erusaleamiyarukkum  sonnavanum  antha  eseakkiyaathaan  allavaa?  (2naa’laagamam  32:12)

நானும்  என்  பிதாக்களும்  தேசத்துச்  சகல  ஜனங்களுக்கும்  செய்ததை  அறியீர்களோ?  அந்தத்  தேசங்களுடைய  ஜாதிகளின்  தேவர்கள்  அவர்கள்  தேசத்தை  நம்முடைய  கைக்குத்  தப்புவிக்க  அவர்களுக்குப்  பெலன்  இருந்ததோ?  (2நாளாகமம்  32:13)

naanum  en  pithaakka'lum  theasaththuch  sagala  janangga'lukkum  seythathai  a’riyeerga'loa?  anthath  theasangga'ludaiya  jaathiga'lin  theavarga'l  avarga'l  theasaththai  nammudaiya  kaikkuth  thappuvikka  avarga'lukkup  belan  irunthathoa?  (2naa’laagamam  32:13)

உங்கள்  தேவன்  உங்களை  என்  கைக்குத்  தப்புவிக்கக்கூடும்படிக்கு,  என்  பிதாக்கள்  பாழாக்கின  அந்த  ஜாதிகளுடைய  எல்லா  தேவர்களிலும்  எவன்  தன்  ஜனத்தை  என்  கைக்குத்  தப்புவிக்கப்  பலவானாயிருந்தான்?  (2நாளாகமம்  32:14)

ungga'l  theavan  ungga'lai  en  kaikkuth  thappuvikkakkoodumpadikku,  en  pithaakka'l  paazhaakkina  antha  jaathiga'ludaiya  ellaa  theavarga'lilum  evan  than  janaththai  en  kaikkuth  thappuvikkap  balavaanaayirunthaan?  (2naa’laagamam  32:14)

இப்போதும்  எசேக்கியா  உங்களை  வஞ்சிக்கவும்,  இப்படி  உங்களைப்  போதிக்கவும்  இடங்கொடுக்கவேண்டாம்;  நீங்கள்  அவனை  நம்பவும்  வேண்டாம்;  ஏனென்றால்  எந்த  ஜாதியின்  தேவனும்,  எந்த  ராஜ்யத்தின்  தேவனும்  தன்  ஜனத்தை  என்  கைக்கும்  என்  பிதாக்களின்  கைக்கும்  தப்புவிக்கக்கூடாதிருந்ததே;  உங்கள்  தேவன்  உங்களை  என்  கைக்குத்  தப்புவிப்பது  எப்படி  என்கிறார்  என்று  சொல்லி,  (2நாளாகமம்  32:15)

ippoathum  eseakkiyaa  ungga'lai  vagnchikkavum,  ippadi  ungga'laip  poathikkavum  idangkodukkavea'ndaam;  neengga'l  avanai  nambavum  vea'ndaam;  eanen’raal  entha  jaathiyin  theavanum,  entha  raajyaththin  theavanum  than  janaththai  en  kaikkum  en  pithaakka'lin  kaikkum  thappuvikkakkoodaathirunthathea;  ungga'l  theavan  ungga'lai  en  kaikkuth  thappuvippathu  eppadi  engi’raar  en’ru  solli,  (2naa’laagamam  32:15)

அவனுடைய  ஊழியக்காரர்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாகவும்,  அவருடைய  தாசனாகிய  எசேக்கியாவுக்கு  விரோதமாகவும்  பின்னும்  அதிகமாய்ப்  பேசினார்கள்.  (2நாளாகமம்  32:16)

avanudaiya  oozhiyakkaarar  theavanaagiya  karththarukku  viroathamaagavum,  avarudaiya  thaasanaagiya  eseakkiyaavukku  viroathamaagavum  pinnum  athigamaayp  peasinaarga'l.  (2naa’laagamam  32:16)

தேசங்களுடைய  ஜாதிகளின்  தேவர்கள்  தங்கள்  ஜனங்களை  என்  கைக்குத்  தப்புவிக்காதிருந்ததுபோல,  எசேக்கியாவின்  தேவனும்  தன்  ஜனங்களை  என்  கைக்குத்  தப்புவிப்பதில்லையென்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரை  நிந்திக்கவும்,  அவருக்கு  விரோதமாகப்  பேசவும்  அவன்  நிருபங்களையும்  எழுதினான்.  (2நாளாகமம்  32:17)

theasangga'ludaiya  jaathiga'lin  theavarga'l  thangga'l  janangga'lai  en  kaikkuth  thappuvikkaathirunthathupoala,  eseakkiyaavin  theavanum  than  janangga'lai  en  kaikkuth  thappuvippathillaiyen’ru  isravealin  theavanaagiya  karththarai  ninthikkavum,  avarukku  viroathamaagap  peasavum  avan  nirubangga'laiyum  ezhuthinaan.  (2naa’laagamam  32:17)

அவர்கள்  அலங்கத்தின்மேலிருக்கிற  எருசலேமின்  ஜனங்களைப்  பயப்படுத்தி,  கலங்கப்பண்ணி,  தாங்கள்  நகரத்தைப்  பிடிக்கும்படி,  அவர்களைப்  பார்த்து:  யூதபாஷையிலே  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டு,  (2நாளாகமம்  32:18)

avarga'l  alanggaththinmealirukki’ra  erusaleamin  janangga'laip  bayappaduththi,  kalanggappa'n'ni,  thaangga'l  nagaraththaip  pidikkumpadi,  avarga'laip  paarththu:  yoothabaashaiyilea  mahaa  saththamaayk  kooppittu,  (2naa’laagamam  32:18)

மனுஷர்  கைவேலையினால்  செய்யப்பட்டதும்,  பூச்சக்கரத்து  ஜனங்களால்  தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற  தேவர்களைக்  குறித்துப்  பேசுகிறபிரகாரமாக  எருசலேமின்  தேவனையும்  குறித்துப்  பேசினார்கள்.  (2நாளாகமம்  32:19)

manushar  kaivealaiyinaal  seyyappattathum,  poochchakkaraththu  janangga'laal  thozhuthuko'l'lappattathumaayirukki’ra  theavarga'laik  ku’riththup  peasugi’rapiragaaramaaga  erusaleamin  theavanaiyum  ku’riththup  peasinaarga'l.  (2naa’laagamam  32:19)

இதினிமித்தம்  ராஜாவாகிய  எசேக்கியாவும்  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  தீர்க்கதரிசியும்  பிரார்த்தித்து,  வானத்தை  நோக்கி  அபயமிட்டார்கள்.  (2நாளாகமம்  32:20)

ithinimiththam  raajaavaagiya  eseakkiyaavum  aamoathsin  kumaaranaagiya  easaayaa  theerkkatharisiyum  piraarththiththu,  vaanaththai  noakki  abayamittaarga'l.  (2naa’laagamam  32:20)

அப்பொழுது  கர்த்தர்  ஒரு  தூதனை  அனுப்பினார்;  அவன்  அசீரியருடைய  ராஜாவின்  பாளயத்திலுள்ள  சகல  பராக்கிரமசாலிகளையும்,  தலைவரையும்,  சேனாபதிகளையும்  அதம்பண்ணினான்;  அப்படியே  சனகெரிப்  செத்தமுகமாய்த்  தன்  தேசத்திற்குத்  திரும்பினான்;  அங்கே  அவன்  தன்  தேவனுடைய  கோவிலுக்குள்  பிரவேசிக்கிறபோது,  அவனுடைய  கர்ப்பப்பிறப்பான  சிலர்  அவனைப்  பட்டயத்தால்  வெட்டிப்போட்டார்கள்.  (2நாளாகமம்  32:21)

appozhuthu  karththar  oru  thoothanai  anuppinaar;  avan  aseeriyarudaiya  raajaavin  paa'layaththilu'l'la  sagala  baraakkiramasaaliga'laiyum,  thalaivaraiyum,  seanaabathiga'laiyum  athampa'n'ninaan;  appadiyea  sanakerib  seththamugamaayth  than  theasaththi’rkuth  thirumbinaan;  anggea  avan  than  theavanudaiya  koavilukku'l  piraveasikki’rapoathu,  avanudaiya  karppappi’rappaana  silar  avanaip  pattayaththaal  vettippoattaarga'l.  (2naa’laagamam  32:21)

இப்படிக்  கர்த்தர்  எசேக்கியாவையும்  எருசலேமின்  குடிகளையும்  அசீரியருடைய  ராஜாவாகிய  சனகெரிபின்  கைக்கும்  மற்ற  எல்லாருடைய  கைக்கும்  நீங்கலாக்கி  இரட்சித்து,  அவர்களைச்  சுற்றுப்புறத்தாருக்கு  விலக்கி  ஆதரித்து  நடத்தினார்.  (2நாளாகமம்  32:22)

ippadik  karththar  eseakkiyaavaiyum  erusaleamin  kudiga'laiyum  aseeriyarudaiya  raajaavaagiya  sanakeribin  kaikkum  mat’ra  ellaarudaiya  kaikkum  neenggalaakki  iradchiththu,  avarga'laich  sut’ruppu’raththaarukku  vilakki  aathariththu  nadaththinaar.  (2naa’laagamam  32:22)

அநேகம்பேர்  கர்த்தருக்கென்று  எருசலேமுக்குக்  காணிக்கைகளையும்,  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவுக்கு  உச்சிதங்களையும்  கொண்டுவந்தார்கள்;  அவன்  இதற்குப்பிற்பாடு  சகல  ஜாதிகளின்  பார்வைக்கும்  மேன்மைப்பட்டவனாயிருந்தான்.  (2நாளாகமம்  32:23)

aneagampear  karththarukken’ru  erusaleamukkuk  kaa'nikkaiga'laiyum,  yoothaavin  raajaavaagiya  eseakkiyaavukku  uchchithangga'laiyum  ko'nduvanthaarga'l;  avan  itha’rkuppi’rpaadu  sagala  jaathiga'lin  paarvaikkum  meanmaippattavanaayirunthaan.  (2naa’laagamam  32:23)

அந்நாட்களில்  எசேக்கியா  வியாதிப்பட்டு  மரணத்துக்கு  ஏதுவாயிருந்தான்;  அவன்  கர்த்தரை  நோக்கி  ஜெபம்பண்ணும்போது,  அவர்  அவனுக்கு  வாக்குத்தத்தம்பண்ணி,  அவனுக்கு  ஒரு  அற்புதத்தைக்  கட்டளையிட்டார்.  (2நாளாகமம்  32:24)

annaadka'lil  eseakkiyaa  viyaathippattu  mara'naththukku  eathuvaayirunthaan;  avan  karththarai  noakki  jebampa'n'numpoathu,  avar  avanukku  vaakkuththaththampa'n'ni,  avanukku  oru  a’rputhaththaik  katta'laiyittaar.  (2naa’laagamam  32:24)

எசேக்கியா  தனக்குச்  செய்யப்பட்ட  உபகாரத்திற்குத்தக்கதாய்  நடவாமல்  மனமேட்டிமையானான்;  ஆகையால்  அவன்மேலும்,  யூதாவின்மேலும்,  எருசலேமின்மேலும்  கடுங்கோபம்  மூண்டது.  (2நாளாகமம்  32:25)

eseakkiyaa  thanakkuch  seyyappatta  ubagaaraththi’rkuththakkathaay  nadavaamal  manameattimaiyaanaan;  aagaiyaal  avanmealum,  yoothaavinmealum,  erusaleaminmealum  kadungkoabam  moo'ndathu.  (2naa’laagamam  32:25)

எசேக்கியாவின்  மனமேட்டிமையினிமித்தம்  அவனும்  எருசலேமின்  குடிகளும்  தங்களைத்  தாழ்த்தினபடியினால்,  கர்த்தருடைய  கடுங்கோபம்  எசேக்கியாவின்  நாட்களிலே  அவர்கள்மேல்  வரவில்லை.  (2நாளாகமம்  32:26)

eseakkiyaavin  manameattimaiyinimiththam  avanum  erusaleamin  kudiga'lum  thangga'laith  thaazhththinapadiyinaal,  karththarudaiya  kadungkoabam  eseakkiyaavin  naadka'lilea  avarga'lmeal  varavillai.  (2naa’laagamam  32:26)

எசேக்கியாவுக்கு  மிகுதியான  ஐசுவரியமும்  கனமும்  உண்டாயிருந்தது;  வெள்ளியும்  பொன்னும்  இரத்தினங்களும்  கந்தவர்க்கங்களும்  கேடகங்களும்  விநோதமான  ஆபரணங்களும்  வைக்கும்படியான  பொக்கிஷசாலைகளையும்,  (2நாளாகமம்  32:27)

eseakkiyaavukku  miguthiyaana  aisuvariyamum  kanamum  u'ndaayirunthathu;  ve'l'liyum  ponnum  iraththinangga'lum  kanthavarkkangga'lum  keadagangga'lum  vinoathamaana  aabara'nangga'lum  vaikkumpadiyaana  pokkishasaalaiga'laiyum,  (2naa’laagamam  32:27)

தனக்கு  வந்துகொண்டிருந்த  தானியமும்  திராட்சரசமும்  எண்ணெயும்  வைக்கும்படியான  பண்டகசாலைகளையும்,  சகல  வகையுள்ள  மிருகஜீவன்களுக்குக்  கொட்டாரங்களையும்,  மந்தைகளுக்குத்  தொழுவங்களையும்  உண்டாக்கினான்.  (2நாளாகமம்  32:28)

thanakku  vanthuko'ndiruntha  thaaniyamum  thiraadcharasamum  e'n'neyum  vaikkumpadiyaana  pa'ndagasaalaiga'laiyum,  sagala  vagaiyu'l'la  mirugajeevanga'lukkuk  kottaarangga'laiyum,  manthaiga'lukkuth  thozhuvangga'laiyum  u'ndaakkinaan.  (2naa’laagamam  32:28)

அவன்  தனக்குப்  பட்டணங்களைக்  கட்டுவித்து  ஏராளமான  ஆடுமாடுகளை  வைத்திருந்தான்;  தேவன்  அவனுக்கு  மகா  திரளான  ஆஸ்தியைக்  கொடுத்தார்.  (2நாளாகமம்  32:29)

avan  thanakkup  patta'nangga'laik  kattuviththu  earaa'lamaana  aadumaaduga'lai  vaiththirunthaan;  theavan  avanukku  mahaa  thira'laana  aasthiyaik  koduththaar.  (2naa’laagamam  32:29)

இந்த  எசேக்கியா  கீயோன்  என்னும்  ஆற்றிலே  அணைகட்டி,  அதின்  தண்ணீரை  மேற்கேயிருந்து  தாழத்  தாவீதின்  நகரத்திற்கு  நேராகத்  திருப்பினான்;  எசேக்கியா  செய்ததெல்லாம்  வாய்த்தது.  (2நாளாகமம்  32:30)

intha  eseakkiyaa  keeyoan  ennum  aat’rilea  a'naikatti,  athin  tha'n'neerai  mea’rkeayirunthu  thaazhath  thaaveethin  nagaraththi’rku  nearaagath  thiruppinaan;  eseakkiyaa  seythathellaam  vaayththathu.  (2naa’laagamam  32:30)

ஆகிலும்  பாபிலோன்  பிரபுக்களின்  ஸ்தானாபதிகள்  தேசத்திலே  நடந்த  அற்புதத்தைக்  கேட்க  அவனிடத்துக்கு  அனுப்பப்பட்ட  விஷயத்தில்  அவன்  இருதயத்தில்  உண்டான  எல்லாவற்றையும்  அறியும்படி  அவனைச்  சோதிக்கிறதற்காக  தேவன்  அவனைக்  கைவிட்டார்.  (2நாளாகமம்  32:31)

aagilum  baabiloan  pirabukka'lin  sthaanaabathiga'l  theasaththilea  nadantha  a’rputhaththaik  keadka  avanidaththukku  anuppappatta  vishayaththil  avan  iruthayaththil  u'ndaana  ellaavat’raiyum  a’riyumpadi  avanaich  soathikki’ratha’rkaaga  theavan  avanaik  kaivittaar.  (2naa’laagamam  32:31)

எசேக்கியாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்த  நன்மைகளும்  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  தீர்க்கதரிசியின்  புஸ்தகத்திலும்,  யூதா  இஸ்ரவேல்  ராஜாக்களின்  புஸ்தகத்திலும்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  32:32)

eseakkiyaavin  mat’ra  varththamaanangga'lum,  avan  seytha  nanmaiga'lum  aamoathsin  kumaaranaagiya  easaayaa  theerkkatharisiyin  pusthagaththilum,  yoothaa  israveal  raajaakka'lin  pusthagaththilum  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  32:32)

எசேக்கியா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்பு,  அவனைத்  தாவீது  வம்சத்தாரின்  கல்லறைகளில்  பிரதானமான  கல்லறையில்  அடக்கம்பண்ணினார்கள்;  யூதாவனைத்தும்  எருசலேமின்  குடிகளும்  அவன்  மரித்தபோது  அவனைக்  கனம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  மனாசே  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2நாளாகமம்  32:33)

eseakkiyaa  than  pithaakka'loadea  niththiraiyadainthapinbu,  avanaith  thaaveethu  vamsaththaarin  kalla’raiga'lil  pirathaanamaana  kalla’raiyil  adakkampa'n'ninaarga'l;  yoothaavanaiththum  erusaleamin  kudiga'lum  avan  mariththapoathu  avanaik  kanampa'n'ninaarga'l;  avan  kumaaranaagiya  manaasea  avan  sthaanaththil  raajaavaanaan.  (2naa’laagamam  32:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!