Monday, September 12, 2016

Yoabu 9 | யோபு 9 | Job 9

அதற்கு  யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  9:1)

atha’rku  yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  9:1)

ஆம்,  காரியம்  இப்படியிருக்கிறது  என்று  அறிவேன்;  தேவனுக்கு  முன்பாக  மனுஷன்  நீதிமானாயிருப்பதெப்படி?  (யோபு  9:2)

aam,  kaariyam  ippadiyirukki’rathu  en’ru  a’rivean;  theavanukku  munbaaga  manushan  neethimaanaayiruppatheppadi?  (yoabu  9:2)

அவர்  அவனோடே  வழக்காடச்  சித்தமாயிருந்தால்,  ஆயிரத்தில்  ஒன்றுக்காகிலும்  அவருக்கு  உத்தரவு  சொல்லமாட்டானே.  (யோபு  9:3)

avar  avanoadea  vazhakkaadach  siththamaayirunthaal,  aayiraththil  on’rukkaagilum  avarukku  uththaravu  sollamaattaanea.  (yoabu  9:3)

அவர்  இருதயத்தில்  ஞானமுள்ளவர்,  பெலத்தில்  பராக்கிரமமுள்ளவர்;  அவருக்கு  விரோதமாகத்  தன்னைக்  கடினப்படுத்தி  வாழ்ந்தவன்  யார்?  (யோபு  9:4)

avar  iruthayaththil  gnaanamu'l'lavar,  belaththil  baraakkiramamu'l'lavar;  avarukku  viroathamaagath  thannaik  kadinappaduththi  vaazhnthavan  yaar?  (yoabu  9:4)

அவர்  பர்வதங்களைச்  சடிதியாய்ப்  பேர்க்கிறார்;  தம்முடைய  கோபத்தில்  அவைகளைப்  புரட்டிப்போடுகிறார்.  (யோபு  9:5)

avar  parvathangga'laich  sadithiyaayp  pearkki’raar;  thammudaiya  koabaththil  avaiga'laip  purattippoadugi’raar.  (yoabu  9:5)

பூமியின்  தூண்கள்  அதிரத்தக்கதாய்  அதை  அதின்  ஸ்தானத்தினின்று  அசையப்பண்ணுகிறார்.  (யோபு  9:6)

boomiyin  thoo'nga'l  athiraththakkathaay  athai  athin  sthaanaththinin’ru  asaiyappa'n'nugi’raar.  (yoabu  9:6)

அவர்  சூரியனுக்குக்  கட்டளையிட  அது  உதிக்காதிருக்கும்;  அவர்  நட்சத்திரங்களை  மறைத்துப்போடுகிறார்.  (யோபு  9:7)

avar  sooriyanukkuk  katta'laiyida  athu  uthikkaathirukkum;  avar  nadchaththirangga'lai  ma’raiththuppoadugi’raar.  (yoabu  9:7)

அவர்  ஒருவரே  வானங்களை  விரித்து,  சமுத்திர  அலைகளின்மேல்  நடக்கிறவர்.  (யோபு  9:8)

avar  oruvarea  vaanangga'lai  viriththu,  samuththira  alaiga'linmeal  nadakki’ravar.  (yoabu  9:8)

அவர்  துருவச்சக்கர  நட்சத்திரங்களையும்,  மிருகசீரிஷத்தையும்,  அறுமீனையும்,  தட்சண  மண்டலங்களையும்  உண்டாக்கினவர்.  (யோபு  9:9)

avar  thuruvachchakkara  nadchaththirangga'laiyum,  mirugaseerishaththaiyum,  a’rumeenaiyum,  thadcha'na  ma'ndalangga'laiyum  u'ndaakkinavar.  (yoabu  9:9)

ஆராய்ந்து  முடியாத  பெரிய  காரியங்களையும்,  எண்ணிமுடியாத  அதிசயங்களையும்  அவர்  செய்கிறார்.  (யோபு  9:10)

aaraaynthu  mudiyaatha  periya  kaariyangga'laiyum,  e'n'nimudiyaatha  athisayangga'laiyum  avar  seygi’raar.  (yoabu  9:10)

இதோ,  அவர்  என்  அருகில்  போகிறார்,  நான்  அவரைக்  காணேன்;  அவர்  கடந்துபோகிறார்,  நான்  அவரை  அறியேன்.  (யோபு  9:11)

ithoa,  avar  en  arugil  poagi’raar,  naan  avaraik  kaa'nean;  avar  kadanthupoagi’raar,  naan  avarai  a’riyean.  (yoabu  9:11)

இதோ,  அவர்  பறித்துக்கொண்டுபோகிறார்,  அவரை  மறிப்பவன்  யார்?  நீர்  என்ன  செய்கிறீர்  என்று  அவரைக்  கேட்பவன்  யார்?  (யோபு  9:12)

ithoa,  avar  pa’riththukko'ndupoagi’raar,  avarai  ma’rippavan  yaar?  neer  enna  seygi’reer  en’ru  avaraik  keadpavan  yaar?  (yoabu  9:12)

தேவன்  தம்முடைய  கோபத்தைத்  திருப்பமாட்டார்;  ஒருவருக்கொருவர்  துணைநிற்கிற  அகங்காரிகள்  அவருக்கு  அடங்கவேண்டும்.  (யோபு  9:13)

theavan  thammudaiya  koabaththaith  thiruppamaattaar;  oruvarukkoruvar  thu'naini’rki’ra  aganggaariga'l  avarukku  adanggavea'ndum.  (yoabu  9:13)

இப்படியிருக்க,  அவருக்கு  மறுமொழி  கொடுக்கவும்,  அவரோடே  வழக்காடும்  வார்த்தைகளைத்  தெரிந்துகொள்ளவும்  நான்  எம்மாத்திரம்?  (யோபு  9:14)

ippadiyirukka,  avarukku  ma’rumozhi  kodukkavum,  avaroadea  vazhakkaadum  vaarththaiga'laith  therinthuko'l'lavum  naan  emmaaththiram?  (yoabu  9:14)

நான்  நீதிமானாயிருந்தாலும்  அவரோடே  வழக்காடாமல்,  என்  நியாயாதிபதியினிடத்தில்  இரக்கத்துக்குக்  கெஞ்சுவேன்.  (யோபு  9:15)

naan  neethimaanaayirunthaalum  avaroadea  vazhakkaadaamal,  en  niyaayaathibathiyinidaththil  irakkaththukkuk  kegnchuvean.  (yoabu  9:15)

நான்  கெஞ்ச,  அவர்  எனக்கு  உத்தரவு  அருளினாலும்,  அவர்  என்  விண்ணப்பத்துக்குச்  செவிகொடுத்தார்  என்று  நம்பேன்.  (யோபு  9:16)

naan  kegncha,  avar  enakku  uththaravu  aru'linaalum,  avar  en  vi'n'nappaththukkuch  sevikoduththaar  en’ru  nambean.  (yoabu  9:16)

அவர்  புசலினால்  என்னை  முறிக்கிறார்;  முகாந்தரமில்லாமல்  அநேகம்  காயங்களை  எனக்கு  உண்டாக்குகிறார்.  (யோபு  9:17)

avar  pusalinaal  ennai  mu’rikki’raar;  mugaantharamillaamal  aneagam  kaayangga'lai  enakku  u'ndaakkugi’raar.  (yoabu  9:17)

நான்  மூச்சுவிட  எனக்கு  இடங்கொடாமல்,  கசப்பினால்  என்னை  நிரப்புகிறார்.  (யோபு  9:18)

naan  moochchuvida  enakku  idangkodaamal,  kasappinaal  ennai  nirappugi’raar.  (yoabu  9:18)

பெலத்தைப்  பார்த்தால்,  அவரே  பெலத்தவர்;  நியாயத்தைப்  பார்த்தால்,  என்  பட்சத்தில்  சாட்சி  சொல்லுகிறவன்  யார்?  (யோபு  9:19)

belaththaip  paarththaal,  avarea  belaththavar;  niyaayaththaip  paarththaal,  en  padchaththil  saadchi  sollugi’ravan  yaar?  (yoabu  9:19)

நான்  என்னை  நீதிமானாக்கினாலும்  என்  வாயே  என்னைக்  குற்றவாளியாக்கும்;  நான்  உத்தமன்  என்று  சொன்னாலும்,  நான்  மாறுபாடானவன்  என்று  அது  சாட்சிகொடுக்கும்.  (யோபு  9:20)

naan  ennai  neethimaanaakkinaalum  en  vaayea  ennaik  kut’ravaa'liyaakkum;  naan  uththaman  en’ru  sonnaalum,  naan  maa’rupaadaanavan  en’ru  athu  saadchikodukkum.  (yoabu  9:20)

நான்  உத்தமனென்றாலும்  என்  உள்ளத்தை  நான்  அறியேன்;  என்  ஜீவனை  அரோசிப்பேன்.  (யோபு  9:21)

naan  uththamanen’raalum  en  u'l'laththai  naan  a’riyean;  en  jeevanai  aroasippean.  (yoabu  9:21)

ஒரு  காரியம்  உண்டு,  அதைச்  சொல்லுகிறேன்;  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  அவர்  அழிக்கிறார்.  (யோபு  9:22)

oru  kaariyam  u'ndu,  athaich  sollugi’rean;  sanmaarkkanaiyum  thunmaarkkanaiyum  avar  azhikki’raar.  (yoabu  9:22)

சவுக்கானது  அசுப்பிலே  வாதித்துக்  கொல்லும்போது,  அவர்  குற்றமில்லாதவர்களின்  சோதனையைப்பார்த்து  நகைக்கிறார்.  (யோபு  9:23)

savukkaanathu  asuppilea  vaathiththuk  kollumpoathu,  avar  kut’ramillaathavarga'lin  soathanaiyaippaarththu  nagaikki’raar.  (yoabu  9:23)

உலகம்  துன்மார்க்கர்  கையில்  விடப்பட்டிருக்கிறது;  அதிலிருக்கிற  நியாயாதிபதிகளின்  முகத்தை  மூடிப்போடுகிறார்;  அவர்  இதைச்  செய்கிறதில்லையென்றால்,  பின்னை  யார்  இதைச்  செய்கிறார்.  (யோபு  9:24)

ulagam  thunmaarkkar  kaiyil  vidappattirukki’rathu;  athilirukki’ra  niyaayaathibathiga'lin  mugaththai  moodippoadugi’raar;  avar  ithaich  seygi’rathillaiyen’raal,  pinnai  yaar  ithaich  seygi’raar.  (yoabu  9:24)

என்  நாட்கள்  அஞ்சற்காரர்  ஓட்டத்திலும்  தீவிரமாயிருக்கிறது;  அவைகள்  நன்மையைக்  காணாமல்  பறந்துபோம்.  (யோபு  9:25)

en  naadka'l  agncha’rkaarar  oattaththilum  theeviramaayirukki’rathu;  avaiga'l  nanmaiyaik  kaa'naamal  pa’ranthupoam.  (yoabu  9:25)

அவைகள்  வேகமாய்  ஓடுகிற  கப்பல்களைப்போலவும்,  இரையின்மேல்  பாய்கிற  கழுகைப்போலவும்  கடந்துபோகிறது.  (யோபு  9:26)

avaiga'l  veagamaay  oadugi’ra  kappalga'laippoalavum,  iraiyinmeal  paaygi’ra  kazhugaippoalavum  kadanthupoagi’rathu.  (yoabu  9:26)

என்  அங்கலாய்ப்பை  நான்  மறந்து,  என்  முகத்தின்  துக்கத்தை  மாற்றி,  திடன்கொள்வேன்  என்று  சொன்னால்,  (யோபு  9:27)

en  anggalaayppai  naan  ma’ranthu,  en  mugaththin  thukkaththai  maat’ri,  thidanko'lvean  en’ru  sonnaal,  (yoabu  9:27)

என்  வருத்தங்களைப்பற்றிப்  பயமாயிருக்கிறேன்;  என்னைக்  குற்றமில்லாதவனாக  எண்ணமாட்டீர்  என்று  அறிவேன்.  (யோபு  9:28)

en  varuththangga'laippat’rip  bayamaayirukki’rean;  ennaik  kut’ramillaathavanaaga  e'n'namaatteer  en’ru  a’rivean.  (yoabu  9:28)

நான்  பொல்லாதவனாயிருந்தால்,  விருதாவாய்ப்  போராடவேண்டியது  என்ன?  (யோபு  9:29)

naan  pollaathavanaayirunthaal,  viruthaavaayp  poaraadavea'ndiyathu  enna?  (yoabu  9:29)

நான்  உறைந்த  மழைத்  தண்ணீரில்  முழுகி,  என்  கைகளைச்  சவுக்காரத்தினால்  சுத்தம்பண்ணினாலும்,  (யோபு  9:30)

naan  u’raintha  mazhaith  tha'n'neeril  muzhugi,  en  kaiga'laich  savukkaaraththinaal  suththampa'n'ninaalum,  (yoabu  9:30)

நீர்  என்னைச்  சேற்றுப்பள்ளத்திலே  அமிழ்த்துவீர்.  அப்பொழுது  என்  வஸ்திரமே  என்னை  அருவருக்கும்.  (யோபு  9:31)

neer  ennaich  seat’ruppa'l'laththilea  amizhththuveer.  appozhuthu  en  vasthiramea  ennai  aruvarukkum.  (yoabu  9:31)

நான்  அவருக்குப்  பிரதியுத்தரம்  சொல்லுகிறதற்கும்,  நாங்கள்  கூடி  நியாயத்திற்கு  வருகிறதற்கும்,  அவர்  என்னைப்போல  மனுஷன்  அல்லவே.  (யோபு  9:32)

naan  avarukkup  pirathiyuththaram  sollugi’ratha’rkum,  naangga'l  koodi  niyaayaththi’rku  varugi’ratha’rkum,  avar  ennaippoala  manushan  allavea.  (yoabu  9:32)

எங்கள்  இருவர்மேலும்  தன்  கையை  வைக்கத்தக்க  மத்தியஸ்தன்  எங்களுக்குள்  இல்லையே.  (யோபு  9:33)

engga'l  iruvarmealum  than  kaiyai  vaikkaththakka  maththiyasthan  engga'lukku'l  illaiyea.  (yoabu  9:33)

அவர்  தமது  மிலாற்றை  என்னை  விட்டு  அகற்றுவாராக;  அவருடைய  பயங்கரம்  என்னைக்  கலங்கப்பண்ணாதிருப்பதாக.  (யோபு  9:34)

avar  thamathu  milaat’rai  ennai  vittu  agat’ruvaaraaga;  avarudaiya  bayanggaram  ennaik  kalanggappa'n'naathiruppathaaga.  (yoabu  9:34)

அப்பொழுது  நான்  அவருக்குப்  பயப்படாமல்  பேசுவேன்;  இப்பொழுதோ  அப்படிச்  செய்ய  இடமில்லை.  (யோபு  9:35)

appozhuthu  naan  avarukkup  bayappadaamal  peasuvean;  ippozhuthoa  appadich  seyya  idamillai.  (yoabu  9:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!