Saturday, September 10, 2016

Yoabu 6 | யோபு 6 | Job 6

யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  6:1)

yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  6:1)

என்  சஞ்சலம்  நிறுக்கப்பட்டு,  என்  நிர்ப்பந்தம்  எல்லாம்  தராசிலே  வைக்கப்பட்டால்  நலமாயிருக்கும்.  (யோபு  6:2)

en  sagnchalam  ni’rukkappattu,  en  nirppantham  ellaam  tharaasilea  vaikkappattaal  nalamaayirukkum.  (yoabu  6:2)

அப்பொழுது  அது  கடற்கரை  மணலைப்பார்க்கிலும்  பாரமாயிருக்கும்;  ஆகையால்  என்  துக்கம்  சொல்லிமுடியாது.  (யோபு  6:3)

appozhuthu  athu  kada’rkarai  ma'nalaippaarkkilum  baaramaayirukkum;  aagaiyaal  en  thukkam  sollimudiyaathu.  (yoabu  6:3)

சர்வவல்லவரின்  அம்புகள்  எனக்குள்  தைத்திருக்கிறது;  அவைகளின்  விஷம்  என்  உயிரைக்  குடிக்கிறது;  தேவனால்  உண்டாகும்  பயங்கரங்கள்  எனக்கு  முன்பாக  அணியணியாய்  நிற்கிறது.  (யோபு  6:4)

sarvavallavarin  ambuga'l  enakku'l  thaiththirukki’rathu;  avaiga'lin  visham  en  uyiraik  kudikki’rathu;  theavanaal  u'ndaagum  bayanggarangga'l  enakku  munbaaga  a'niya'niyaay  ni’rki’rathu.  (yoabu  6:4)

புல்லிருக்கிற  இடத்திலே  காட்டுக்கழுதை  கத்துமோ?  தனக்குத்  தீவனமிருக்கிற  இடத்திலே  எருது  கதறுமோ?  (யோபு  6:5)

pullirukki’ra  idaththilea  kaattukkazhuthai  kaththumoa?  thanakkuth  theevanamirukki’ra  idaththilea  eruthu  katha’rumoa?  (yoabu  6:5)

ருசியில்லாத  பதார்த்தத்தை  உப்பில்லாமல்  சாப்பிடக்கூடுமோ?  முட்டையின்  வெள்ளைக்கருவில்  சுவை  உண்டோ?  (யோபு  6:6)

rusiyillaatha  pathaarththaththai  uppillaamal  saappidakkoodumoa?  muttaiyin  ve'l'laikkaruvil  suvai  u'ndoa?  (yoabu  6:6)

உங்கள்  வார்த்தைகளை  என்  ஆத்துமா  தொடமாட்டேன்  என்கிறது;  அவைகள்  அரோசிகமான  போஜனம்போல்  இருக்கிறது.  (யோபு  6:7)

ungga'l  vaarththaiga'lai  en  aaththumaa  thodamaattean  engi’rathu;  avaiga'l  aroasigamaana  poajanampoal  irukki’rathu.  (yoabu  6:7)

ஆ,  என்  மன்றாட்டு  எனக்கு  அருளப்பட்டு,  நான்  வாஞ்சிப்பதைத்  தேவன்  எனக்குத்  தந்து,  (யோபு  6:8)

aa,  en  man’raattu  enakku  aru'lappattu,  naan  vaagnchippathaith  theavan  enakkuth  thanthu,  (yoabu  6:8)

தேவன்  என்னை  நொறுக்கச்  சித்தமாய்,  தம்முடைய  கையை  நீட்டி  என்னைத்  துண்டித்துப்போட்டால்  நலமாயிருக்கும்.  (யோபு  6:9)

theavan  ennai  no’rukkach  siththamaay,  thammudaiya  kaiyai  neetti  ennaith  thu'ndiththuppoattaal  nalamaayirukkum.  (yoabu  6:9)

அப்பொழுதாவது  எனக்கு  ஆறுதல்  இருக்குமே;  அப்பொழுது  என்னைத்  தப்பவிடாத  நோவிலே  மரத்திருப்பேன்;  பரிசுத்தருடைய  வார்த்தைகளை  நான்  மறைத்துவைக்கவில்லை,  அவர்  என்னைத்  தப்பவிடாராக.  (யோபு  6:10)

appozhuthaavathu  enakku  aa’ruthal  irukkumea;  appozhuthu  ennaith  thappavidaatha  noavilea  maraththiruppean;  parisuththarudaiya  vaarththaiga'lai  naan  ma’raiththuvaikkavillai,  avar  ennaith  thappavidaaraaga.  (yoabu  6:10)

நான்  காத்துக்கொண்டிருக்க  என்  பெலன்  எம்மாத்திரம்?  என்  ஜீவனை  நீடித்திருக்கப்பண்ண  என்  முடிவு  எப்படிப்பட்டது?  (யோபு  6:11)

naan  kaaththukko'ndirukka  en  belan  emmaaththiram?  en  jeevanai  neediththirukkappa'n'na  en  mudivu  eppadippattathu?  (yoabu  6:11)

என்  பெலன்  கற்களின்  பெலனோ?  என்  மாம்சம்  வெண்கலமோ?  (யோபு  6:12)

en  belan  ka’rka'lin  belanoa?  en  maamsam  ve'ngalamoa?  (yoabu  6:12)

எனக்கு  உதவியானது  ஒன்றும்  இல்லையல்லவோ?  சகாயம்  என்னைவிட்டு  நீங்கிற்றே.  (யோபு  6:13)

enakku  uthaviyaanathu  on’rum  illaiyallavoa?  sagaayam  ennaivittu  neenggit’rea.  (yoabu  6:13)

உபாதிக்கப்படுகிறவனுக்கு  அவனுடைய  சிநேகிதனால்  தயைகிடைக்கவேண்டும்;  அவனோ  சர்வவல்லவருக்குப்  பயப்படாதேபோகிறான்.  (யோபு  6:14)

ubaathikkappadugi’ravanukku  avanudaiya  sineagithanaal  thayaikidaikkavea'ndum;  avanoa  sarvavallavarukkup  bayappadaatheapoagi’raan.  (yoabu  6:14)

என்  சகோதரர்  காட்டாறுபோல  மோசம்பண்ணுகிறார்கள்;  ஆறுகளின்  வெள்ளத்தைப்போலக்  கடந்துபோகிறார்கள்.  (யோபு  6:15)

en  sagoatharar  kaattaa’rupoala  moasampa'n'nugi’raarga'l;  aa’ruga'lin  ve'l'laththaippoalak  kadanthupoagi’raarga'l.  (yoabu  6:15)

அவைகள்  குளிர்காலப்  பனிக்கட்டியினாலும்,  அதில்  விழுந்திருக்கிற  உறைந்த  மழையினாலும்  கலங்கலாகி,  (யோபு  6:16)

avaiga'l  ku'lirkaalap  panikkattiyinaalum,  athil  vizhunthirukki’ra  u’raintha  mazhaiyinaalum  kalanggalaagi,  (yoabu  6:16)

உஷ்ணங்கண்டவுடனே  உருகி  வற்றி,  அனல்பட்டவுடனே  தங்கள்  ஸ்தலத்தில்  உருவழிந்துபோகின்றன.  (யோபு  6:17)

ush'nangka'ndavudanea  urugi  vat’ri,  analpattavudanea  thangga'l  sthalaththil  uruvazhinthupoagin’rana.  (yoabu  6:17)

அவைகளுடைய  வழிகளின்  போக்குகள்  இங்குமங்கும்  பிரியும்;  அவைகள்  விருதாவிலே  பரவி  ஒன்றும்  இல்லாமற்போகும்.  (யோபு  6:18)

avaiga'ludaiya  vazhiga'lin  poakkuga'l  inggumanggum  piriyum;  avaiga'l  viruthaavilea  paravi  on’rum  illaama’rpoagum.  (yoabu  6:18)

தேமாவின்  பயணக்காரர்  தேடி,  சேபாவின்  பயணக்கூட்டங்கள்  அவைகள்மேல்  நம்பிக்கை  வைத்து,  (யோபு  6:19)

theamaavin  paya'nakkaarar  theadi,  seabaavin  paya'nakkoottangga'l  avaiga'lmeal  nambikkai  vaiththu,  (yoabu  6:19)

தாங்கள்  இப்படி  நம்பினதினாலே  வெட்கப்படுகிறார்கள்;  அவ்விடமட்டும்  வந்து  கலங்கிப்போகிறார்கள்.  (யோபு  6:20)

thaangga'l  ippadi  nambinathinaalea  vedkappadugi’raarga'l;  avvidamattum  vanthu  kalanggippoagi’raarga'l.  (yoabu  6:20)

அப்படியே  நீங்களும்  இப்பொழுது  ஒன்றுக்கும்  உதவாமற்போனீர்கள்;  என்  ஆபத்தைக்  கண்டு  பயப்படுகிறீர்கள்.  (யோபு  6:21)

appadiyea  neengga'lum  ippozhuthu  on’rukkum  uthavaama’rpoaneerga'l;  en  aabaththaik  ka'ndu  bayappadugi’reerga'l.  (yoabu  6:21)

எனக்கு  ஏதாகிலும்  கொண்டுவாருங்கள்  என்றும்,  உங்கள்  ஆஸ்தியிலிருந்து  எனக்கு  யாதொரு  வெகுமானம்  கொடுங்கள்  என்றும்;  (யோபு  6:22)

enakku  eathaagilum  ko'nduvaarungga'l  en’rum,  ungga'l  aasthiyilirunthu  enakku  yaathoru  vegumaanam  kodungga'l  en’rum;  (yoabu  6:22)

அல்லது  சத்துருவின்  கைக்கு  என்னைத்  தப்புவியுங்கள்,  வல்லடிக்காரரின்  கைக்கு  என்னை  நீங்கலாக்கி  மீட்டு  விடுங்கள்  என்றும்  நான்  சொன்னதுண்டோ?  (யோபு  6:23)

allathu  saththuruvin  kaikku  ennaith  thappuviyungga'l,  valladikkaararin  kaikku  ennai  neenggalaakki  meettu  vidungga'l  en’rum  naan  sonnathu'ndoa?  (yoabu  6:23)

எனக்கு  உபதேசம்பண்ணுங்கள்,  நான்  மவுனமாயிருப்பேன்;  நான்  எதிலே  தவறினேனோ  அதை  எனக்குத்  தெரியப்படுத்துங்கள்.  (யோபு  6:24)

enakku  ubatheasampa'n'nungga'l,  naan  mavunamaayiruppean;  naan  ethilea  thava’rineanoa  athai  enakkuth  theriyappaduththungga'l.  (yoabu  6:24)

செம்மையான  வார்த்தைகளில்  எவ்வளவு  வல்லமை  உண்டு?  உங்கள்  கடிந்துகொள்ளுதலினால்  காரியம்  என்ன?  (யோபு  6:25)

semmaiyaana  vaarththaiga'lil  evva'lavu  vallamai  u'ndu?  ungga'l  kadinthuko'l'luthalinaal  kaariyam  enna?  (yoabu  6:25)

கடிந்துகொள்ள  நீங்கள்  வார்த்தைகளை  யோசித்து,  நம்பிக்கையற்றவனுடைய  வார்த்தைகளைக்  காற்றிலே  விட்டுவிடுகிறீர்களோ?  (யோபு  6:26)

kadinthuko'l'la  neengga'l  vaarththaiga'lai  yoasiththu,  nambikkaiyat’ravanudaiya  vaarththaiga'laik  kaat’rilea  vittuvidugi’reerga'loa?  (yoabu  6:26)

இப்படிச்  செய்து  திக்கற்றவன்மேல்  நீங்கள்  விழுந்து,  உங்கள்  சிநேகிதனுக்குப்  படுகுழியை  வெட்டுகிறீர்கள்.  (யோபு  6:27)

ippadich  seythu  thikkat’ravanmeal  neengga'l  vizhunthu,  ungga'l  sineagithanukkup  padukuzhiyai  vettugi’reerga'l.  (yoabu  6:27)

இப்போதும்  உங்களுக்குச்  சித்தமானால்  என்னை  நோக்கிப்  பாருங்கள்;  அப்பொழுது  நான்  பொய்சொல்லுகிறேனோ  என்று  உங்களுக்குப்  பிரத்தியட்சமாய்  விளங்கும்.  (யோபு  6:28)

ippoathum  ungga'lukkuch  siththamaanaal  ennai  noakkip  paarungga'l;  appozhuthu  naan  poysollugi’reanoa  en’ru  ungga'lukkup  piraththiyadchamaay  vi'langgum.  (yoabu  6:28)

நீங்கள்  திரும்புங்கள்,  அக்கிரமம்  காணப்படாதிருக்கும்;  திரும்புங்கள்  என்  நீதி  அதிலே  விளங்கும்.  (யோபு  6:29)

neengga'l  thirumbungga'l,  akkiramam  kaa'nappadaathirukkum;  thirumbungga'l  en  neethi  athilea  vi'langgum.  (yoabu  6:29)

என்  நாவிலே  அக்கிரமம்  உண்டோ?  என்  வாய்  ஆகாதவைகளைப்  பகுத்தறியாதோ?  (யோபு  6:30)

en  naavilea  akkiramam  u'ndoa?  en  vaay  aagaathavaiga'laip  paguththa’riyaathoa?  (yoabu  6:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!