Monday, September 12, 2016

Yoabu 40 | யோபு 40 | Job 40

பின்னும்  கர்த்தர்  யோபுக்கு  உத்தரமாக:  (யோபு  40:1)

pinnum  karththar  yoabukku  uththaramaaga:  (yoabu  40:1)

சர்வவல்லவரோடே  வழக்காடி  அவருக்குப்  புத்தி  படிப்பிக்கிறவன்  யார்?  தேவன்பேரில்  குற்றம்  பிடிக்கிறவன்  இவைகளுக்கு  உத்தரவு  சொல்லக்கடவன்  என்றார்.  (யோபு  40:2)

sarvavallavaroadea  vazhakkaadi  avarukkup  buththi  padippikki’ravan  yaar?  theavanpearil  kut’ram  pidikki’ravan  ivaiga'lukku  uththaravu  sollakkadavan  en’raar.  (yoabu  40:2)

அப்பொழுது  யோபு  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  (யோபு  40:3)

appozhuthu  yoabu  karththarukkup  pirathiyuththaramaaga:  (yoabu  40:3)

இதோ,  நான்  நீசன்;  நான்  உமக்கு  என்ன  மறுஉத்தரவு  சொல்லுவேன்;  என்  கையினால்  என்  வாயைப்  பொத்திக்கொள்ளுகிறேன்.  (யோபு  40:4)

ithoa,  naan  neesan;  naan  umakku  enna  ma’ruuththaravu  solluvean;  en  kaiyinaal  en  vaayaip  poththikko'l'lugi’rean.  (yoabu  40:4)

நான்  இரண்டொருதரம்  பேசினேன்;  இனி  நான்  பிரதியுத்தரம்  கொடாமலும்  பேசாமலும்  இருப்பேன்  என்றான்.  (யோபு  40:5)

naan  ira'ndorutharam  peasinean;  ini  naan  pirathiyuththaram  kodaamalum  peasaamalum  iruppean  en’raan.  (yoabu  40:5)

அப்பொழுது  கர்த்தர்  பெருங்காற்றில்  இருந்து  யோபுக்கு  உத்தரவு  அருளினார்.  (யோபு  40:6)

appozhuthu  karththar  perungkaat’ril  irunthu  yoabukku  uththaravu  aru'linaar.  (yoabu  40:6)

இப்போதும்  புருஷனைப்போல  நீ  அரைகட்டிக்கொள்;  நான்  உன்னைக்  கேட்பேன்;  நீ  எனக்கு  உத்தரவு  சொல்லு.  (யோபு  40:7)

ippoathum  purushanaippoala  nee  araikattikko'l;  naan  unnaik  keadpean;  nee  enakku  uththaravu  sollu.  (yoabu  40:7)

நீ  என்  நியாயத்தை  அவமாக்குவாயோ?  நீ  உன்னை  நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு  என்மேல்  குற்றஞ்சுமத்துவாயோ?  (யோபு  40:8)

nee  en  niyaayaththai  avamaakkuvaayoa?  nee  unnai  neethimaanaakkikko'l'lumpadikku  enmeal  kut’ragnsumaththuvaayoa?  (yoabu  40:8)

தேவனுடைய  புயத்தைப்போல்  உனக்குப்  புயமுண்டோ?  அவரைப்போல்  இடிமுழக்கமாய்ச்  சத்தமிடக்கூடுமோ?  (யோபு  40:9)

theavanudaiya  puyaththaippoal  unakkup  puyamu'ndoa?  avaraippoal  idimuzhakkamaaych  saththamidakkoodumoa?  (yoabu  40:9)

இப்போதும்  நீ  முக்கியத்தாலும்  மகத்துவத்தாலும்  உன்னை  அலங்கரித்து,  மகிமையையும்  கனத்தையும்  தரித்துக்கொண்டு,  (யோபு  40:10)

ippoathum  nee  mukkiyaththaalum  magaththuvaththaalum  unnai  alanggariththu,  magimaiyaiyum  kanaththaiyum  thariththukko'ndu,  (yoabu  40:10)

நீ  உன்  கோபத்தின்  உக்கிரத்தை  வீசி,  அகந்தையுள்ளவனையெல்லாம்  தேடிப்பார்த்துத்  தாழ்த்திவிட்டு,  (யோபு  40:11)

nee  un  koabaththin  ukkiraththai  veesi,  aganthaiyu'l'lavanaiyellaam  theadippaarththuth  thaazhththivittu,  (yoabu  40:11)

பெருமையுள்ளவனையெல்லாம்  கவனித்து,  அவனைப்  பணியப்பண்ணி,  துன்மார்க்கரை  அவர்களிருக்கிற  ஸ்தலத்திலே  மிதித்துவிடு.  (யோபு  40:12)

perumaiyu'l'lavanaiyellaam  kavaniththu,  avanaip  pa'niyappa'n'ni,  thunmaarkkarai  avarga'lirukki’ra  sthalaththilea  mithiththuvidu.  (yoabu  40:12)

நீ  அவர்களை  ஏகமாய்ப்  புழுதியிலே  புதைத்து,  அவர்கள்  முகங்களை  அந்தரங்கத்திலே  கட்டிப்போடு.  (யோபு  40:13)

nee  avarga'lai  eagamaayp  puzhuthiyilea  puthaiththu,  avarga'l  mugangga'lai  antharanggaththilea  kattippoadu.  (yoabu  40:13)

அப்பொழுது  உன்  வலதுகை  உனக்கு  இரட்சிப்பு  உண்டுபண்ணும்  என்று  சொல்லி,  நான்  உன்னைப்  புகழுவேன்.  (யோபு  40:14)

appozhuthu  un  valathukai  unakku  iradchippu  u'ndupa'n'num  en’ru  solli,  naan  unnaip  pugazhuvean.  (yoabu  40:14)

இப்போதும்  பிகெமோத்தை  நீ  கவனித்துப்பார்;  உன்னை  உண்டாக்கினதுபோல  அதையும்  உண்டாக்கினேன்;  அது  மாட்டைப்போல்  புல்லைத்  தின்னும்.  (யோபு  40:15)

ippoathum  bigemoaththai  nee  kavaniththuppaar;  unnai  u'ndaakkinathupoala  athaiyum  u'ndaakkinean;  athu  maattaippoal  pullaith  thinnum.  (yoabu  40:15)

இதோ,  அதினுடைய  பெலன்  அதின்  இடுப்பிலும்,  அதின்  வீரியம்  அதின்  வயிற்றின்  நரம்புகளிலும்  இருக்கிறது.  (யோபு  40:16)

ithoa,  athinudaiya  belan  athin  iduppilum,  athin  veeriyam  athin  vayit’rin  narambuga'lilum  irukki’rathu.  (yoabu  40:16)

அது  தன்  வாலைக்  கேதுருமரத்தைப்போல்  நீட்டுகிறது;  அதின்  இடுப்பு  நரம்புகள்  பின்னிக்கொண்டிருக்கிறது.  (யோபு  40:17)

athu  than  vaalaik  keathurumaraththaippoal  neettugi’rathu;  athin  iduppu  narambuga'l  pinnikko'ndirukki’rathu.  (yoabu  40:17)

அதின்  எலும்புகள்  கெட்டியான  வெண்கலத்தைப்போலவும்,  அதின்  அஸ்திகள்  இருப்புக்  கம்பிகளைப்போலவும்  இருக்கிறது.  (யோபு  40:18)

athin  elumbuga'l  kettiyaana  ve'ngalaththaippoalavum,  athin  asthiga'l  iruppuk  kambiga'laippoalavum  irukki’rathu.  (yoabu  40:18)

அது  தேவனுடைய  கிரியைகளில்  பிரதானமான  ஒரு  கிரியை,  அதை  உண்டாக்கினவர்  அதற்கு  ஒரு  பட்டயத்தையும்  கொடுத்தார்.  (யோபு  40:19)

athu  theavanudaiya  kiriyaiga'lil  pirathaanamaana  oru  kiriyai,  athai  u'ndaakkinavar  atha’rku  oru  pattayaththaiyum  koduththaar.  (yoabu  40:19)

காட்டுமிருகங்கள்  யாவும்  விளையாடுகிற  மலைகள்  அதற்கு  மேய்ச்சலை  விளைவிக்கும்.  (யோபு  40:20)

kaattumirugangga'l  yaavum  vi'laiyaadugi’ra  malaiga'l  atha’rku  meaychchalai  vi'laivikkum.  (yoabu  40:20)

அது  நிழலுள்ள  செடிகளின்  கீழும்,  நாணலின்  மறைவிலும்,  உளையிலும்  படுத்துக்கொள்ளும்.  (யோபு  40:21)

athu  nizhalu'l'la  sediga'lin  keezhum,  naa'nalin  ma’raivilum,  u'laiyilum  paduththukko'l'lum.  (yoabu  40:21)

தழைகளின்  நிழல்  அதைக்  கவிந்து,  நதியின்  அலரிகள்  அதைச்  சூழ்ந்துகொள்ளும்.  (யோபு  40:22)

thazhaiga'lin  nizhal  athaik  kavinthu,  nathiyin  alariga'l  athaich  soozhnthuko'l'lum.  (yoabu  40:22)

இதோ,  நதி  புரண்டுவந்தாலும்  அது  பயந்தோடாது;  யோர்தான்  நதியத்தனை  தண்ணீர்  அதின்  முகத்தில்  மோதினாலும்  அது  அசையாமலிருக்கும்.  (யோபு  40:23)

ithoa,  nathi  pura'nduvanthaalum  athu  bayanthoadaathu;  yoarthaan  nathiyaththanai  tha'n'neer  athin  mugaththil  moathinaalum  athu  asaiyaamalirukkum.  (yoabu  40:23)

அதின்  கண்கள்  பார்த்திருக்க  அதை  யார்  பிடிக்கக்கூடும்?  மூக்கணாங்கயிறுபோட  அதின்  மூக்கை  யார்  குத்தக்கூடும்?  (யோபு  40:24)

athin  ka'nga'l  paarththirukka  athai  yaar  pidikkakkoodum?  mookka'naangkayi’rupoada  athin  mookkai  yaar  kuththakkoodum?  (yoabu  40:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!