Saturday, September 10, 2016

Yoabu 4 | யோபு 4 | Job 4

அப்பொழுது  தேமானியனாகிய  எலிப்பாஸ்  பிரதியுத்தரமாக:  (யோபு  4:1)

appozhuthu  theamaaniyanaagiya  elippaas  pirathiyuththaramaaga:  (yoabu  4:1)

நாங்கள்  உம்முடனே  பேசத்துணிந்தால்,  ஆயாசப்படுவீரோ?  ஆனாலும்  பேசாமல்  அடக்கிக்கொள்ளத்தக்கவன்  யார்?  (யோபு  4:2)

naangga'l  ummudanea  peasaththu'ninthaal,  aayaasappaduveeroa?  aanaalum  peasaamal  adakkikko'l'laththakkavan  yaar?  (yoabu  4:2)

இதோ,  நீர்  அநேகருக்குப்  புத்திசொல்லி,  இளைத்த  கைகளைத்  திடப்படுத்தினீர்.  (யோபு  4:3)

ithoa,  neer  aneagarukkup  buththisolli,  i'laiththa  kaiga'laith  thidappaduththineer.  (yoabu  4:3)

விழுகிறவனை  உம்முடைய  வார்த்தைகளால்  நிற்கப்பண்ணி,  தள்ளாடுகிற  முழங்கால்களைப்  பலப்படுத்தினீர்.  (யோபு  4:4)

vizhugi’ravanai  ummudaiya  vaarththaiga'laal  ni’rkappa'n'ni,  tha'l'laadugi’ra  muzhangkaalga'laip  balappaduththineer.  (yoabu  4:4)

இப்பொழுதோ  துன்பம்  உமக்கு  நேரிட்டபடியினால்  ஆயாசப்படுகிறீர்;  அது  உம்மைத்  தொட்டதினால்  கலங்குகிறீர்.  (யோபு  4:5)

ippozhuthoa  thunbam  umakku  nearittapadiyinaal  aayaasappadugi’reer;  athu  ummaith  thottathinaal  kalanggugi’reer.  (yoabu  4:5)

உம்முடைய  தேவபக்தி  உம்முடைய  உறுதியாயும்,  உம்முடைய  வழிகளின்  உத்தமம்  உம்முடைய  நம்பிக்கையாயும்  இருக்கவேண்டியதல்லவோ?  (யோபு  4:6)

ummudaiya  theavabakthi  ummudaiya  u’ruthiyaayum,  ummudaiya  vazhiga'lin  uththamam  ummudaiya  nambikkaiyaayum  irukkavea'ndiyathallavoa?  (yoabu  4:6)

குற்றமில்லாமல்  அழிந்தவன்  உண்டோ?  சன்மார்க்கர்  அதம்பண்ணப்பட்டது  எப்போ?  இதை  நினைத்துப்பாரும்.  (யோபு  4:7)

kut’ramillaamal  azhinthavan  u'ndoa?  sanmaarkkar  athampa'n'nappattathu  eppoa?  ithai  ninaiththuppaarum.  (yoabu  4:7)

நான்  கண்டிருக்கிறபடி,  அநியாயத்தை  உழுது,  தீவினையை  விதைத்தவர்கள்,  அதையே  அறுக்கிறார்கள்.  (யோபு  4:8)

naan  ka'ndirukki’rapadi,  aniyaayaththai  uzhuthu,  theevinaiyai  vithaiththavarga'l,  athaiyea  a’rukki’raarga'l.  (yoabu  4:8)

தேவனுடைய  சுவாசத்தினாலே  அவர்கள்  அழிந்து,  அவருடைய  நாசியின்  காற்றினாலே  நிர்மூலமாகிறார்கள்.  (யோபு  4:9)

theavanudaiya  suvaasaththinaalea  avarga'l  azhinthu,  avarudaiya  naasiyin  kaat’rinaalea  nirmoolamaagi’raarga'l.  (yoabu  4:9)

சிங்கத்தின்  கெர்ச்சிப்பும்,  துஷ்டசிங்கத்தின்  முழக்கமும்  அடங்கும்;  பாலசிங்கங்களின்  பற்களும்  தகர்ந்து  போம்.  (யோபு  4:10)

singgaththin  kerchchippum,  thushdasinggaththin  muzhakkamum  adanggum;  baalasinggangga'lin  pa’rka'lum  thagarnthu  poam.  (yoabu  4:10)

கிழச்சிங்கம்  இரையில்லாமையால்  மாண்டுபோம்,  பாலசிங்கங்கள்  சிதறுண்டுபோம்.  (யோபு  4:11)

kizhachsinggam  iraiyillaamaiyaal  maa'ndupoam,  baalasinggangga'l  sitha’ru'ndupoam.  (yoabu  4:11)

இப்போதும்  ஒரு  வார்த்தை  என்னிடத்தில்  இரகசியமாய்  அறிவிக்கப்பட்டது,  அதினுடைய  மெல்லிய  ஓசை  என்  செவியில்  விழுந்தது.  (யோபு  4:12)

ippoathum  oru  vaarththai  ennidaththil  iragasiyamaay  a’rivikkappattathu,  athinudaiya  melliya  oasai  en  seviyil  vizhunthathu.  (yoabu  4:12)

மனுஷர்மேல்  அயர்ந்த  நித்திரை  இறங்குகையில்,  இராத்தரிசனங்களில்  பலவித  தோற்றங்கள்  உண்டாகும்போது,  (யோபு  4:13)

manusharmeal  ayarntha  niththirai  i’ranggugaiyil,  iraaththarisanangga'lil  palavitha  thoat’rangga'l  u'ndaagumpoathu,  (yoabu  4:13)

திகிலும்  நடுக்கமும்  என்னைப்  பிடித்தது,  என்  எலும்புகளெல்லாம்  நடுங்கினது.  (யோபு  4:14)

thigilum  nadukkamum  ennaip  pidiththathu,  en  elumbuga'lellaam  nadungginathu.  (yoabu  4:14)

அப்பொழுது  ஒரு  ஆவி  என்  முகத்துக்கு  முன்பாகக்  கடந்தது,  என்  உடலின்  மயிர்  சிலிர்த்தது.  (யோபு  4:15)

appozhuthu  oru  aavi  en  mugaththukku  munbaagak  kadanthathu,  en  udalin  mayir  silirththathu.  (yoabu  4:15)

அது  ஒரு  உருப்போல  என்  கண்களுக்குமுன்  நின்றது,  ஆனாலும்  அதின்  ரூபம்  இன்னதென்று  விளங்கவில்லை;  அமைதலுண்டாயிற்று,  அப்பொழுது  நான்  கேட்ட  சத்தமாவது:  (யோபு  4:16)

athu  oru  uruppoala  en  ka'nga'lukkumun  nin’rathu,  aanaalum  athin  roobam  innathen’ru  vi'langgavillai;  amaithalu'ndaayit’ru,  appozhuthu  naan  keatta  saththamaavathu:  (yoabu  4:16)

மனுஷன்  தேவனைப்பார்க்கிலும்  நீதிமானாயிருப்பானோ?  மனுபுத்திரன்  தன்னை  உண்டாக்கினவரைப்பார்க்கிலும்  சுத்தமாயிருப்பானோ?  (யோபு  4:17)

manushan  theavanaippaarkkilum  neethimaanaayiruppaanoa?  manupuththiran  thannai  u'ndaakkinavaraippaarkkilum  suththamaayiruppaanoa?  (yoabu  4:17)

கேளும்,  அவர்  தம்முடைய  பணிவிடைக்காரரிடத்தில்  நம்பிக்கை  வைப்பதில்லை;  தம்முடைய  தூதரின்மேலும்  புத்தியீனத்தைச்  சுமத்துகிறாரே,  (யோபு  4:18)

kea'lum,  avar  thammudaiya  pa'nividaikkaararidaththil  nambikkai  vaippathillai;  thammudaiya  thootharinmealum  buththiyeenaththaich  sumaththugi’raarea,  (yoabu  4:18)

புழுதியில்  அஸ்திபாரம்  போட்டு,  மண்  வீடுகளில்  வாசம்பண்ணி,  பொட்டுப்பூச்சியால்  அரிக்கப்படுகிறவர்கள்மேல்  அவர்  நம்பிக்கை  வைப்பது  எப்படி?  (யோபு  4:19)

puzhuthiyil  asthibaaram  poattu,  ma'n  veeduga'lil  vaasampa'n'ni,  pottuppoochchiyaal  arikkappadugi’ravarga'lmeal  avar  nambikkai  vaippathu  eppadi?  (yoabu  4:19)

காலைமுதல்  மாலைவரைக்கும்  மடிந்து,  கவனிப்பார்  ஒருவருமில்லாமல்,  நித்திய  அழிவடைகிறார்கள்.  (யோபு  4:20)

kaalaimuthal  maalaivaraikkum  madinthu,  kavanippaar  oruvarumillaamal,  niththiya  azhivadaigi’raarga'l.  (yoabu  4:20)

அவர்களிலிருக்கிற  அவர்களுடைய  மேன்மை  போய்விடுமல்லவோ?  ஞானமடையாமல்  சாகிறார்களே  என்று  சொன்னான்.  (யோபு  4:21)

avarga'lilirukki’ra  avarga'ludaiya  meanmai  poayvidumallavoa?  gnaanamadaiyaamal  saagi’raarga'lea  en’ru  sonnaan.  (yoabu  4:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!