Monday, September 12, 2016

Yoabu 37 | யோபு 37 | Job 37

இதினால்  என்  இருதயம்  தத்தளித்து,  தன்னிடத்தைவிட்டுத்  தெறிக்கிறது.  (யோபு  37:1)

ithinaal  en  iruthayam  thaththa'liththu,  thannidaththaivittuth  the’rikki’rathu.  (yoabu  37:1)

அவருடைய  சத்தத்தினால்  உண்டாகிற  அதிர்ச்சியையும்,  அவர்  வாயிலிருந்து  புறப்படுகிற  முழக்கத்தையும்  கவனமாய்க்  கேளுங்கள்.  (யோபு  37:2)

avarudaiya  saththaththinaal  u'ndaagi’ra  athirchchiyaiyum,  avar  vaayilirunthu  pu’rappadugi’ra  muzhakkaththaiyum  kavanamaayk  kea'lungga'l.  (yoabu  37:2)

அவர்  வானத்தின்  கீழெங்கும்  அந்தத்  தொனியையும்,  பூமியின்  கடையாந்தரங்கள்மேல்  அதின்  மின்னலையும்  செல்லவிடுகிறார்.  (யோபு  37:3)

avar  vaanaththin  keezhenggum  anthath  thoniyaiyum,  boomiyin  kadaiyaantharangga'lmeal  athin  minnalaiyum  sellavidugi’raar.  (yoabu  37:3)

அதற்குப்பின்பு  அவர்  சத்தமாய்  முழங்கி,  தம்முடைய  மகத்துவத்தின்  சத்தத்தைக்  குமுறப்பண்ணுகிறார்;  அவருடைய  சத்தம்  கேட்கப்படும்போது  அதைத்  தவிர்க்கமுடியாது.  (யோபு  37:4)

atha’rkuppinbu  avar  saththamaay  muzhanggi,  thammudaiya  magaththuvaththin  saththaththaik  kumu’rappa'n'nugi’raar;  avarudaiya  saththam  keadkappadumpoathu  athaith  thavirkkamudiyaathu.  (yoabu  37:4)

தேவன்  தம்முடைய  சத்தத்தை  ஆச்சரியமானவிதமாய்க்  குமுறப்பண்ணுகிறார்;  நாம்  கிரகிக்கக்கூடாத  பெரியகாரியங்களை  அவர்  செய்கிறார்.  (யோபு  37:5)

theavan  thammudaiya  saththaththai  aachchariyamaanavithamaayk  kumu’rappa'n'nugi’raar;  naam  kiragikkakkoodaatha  periyakaariyangga'lai  avar  seygi’raar.  (yoabu  37:5)

அவர்  உறைந்த  மழையையும்,  கல்மழையையும்,  தம்முடைய  வல்லமையின்  பெருமழையையும்  பார்த்து:  பூமியின்மேல்  பெய்யுங்கள்  என்று  கட்டளையிடுகிறார்.  (யோபு  37:6)

avar  u’raintha  mazhaiyaiyum,  kalmazhaiyaiyum,  thammudaiya  vallamaiyin  perumazhaiyaiyum  paarththu:  boomiyinmeal  peyyungga'l  en’ru  katta'laiyidugi’raar.  (yoabu  37:6)

தாம்  உண்டாக்கின  சகல  மனுஷரும்  தம்மை  அறியும்படிக்கு,  அவர்  சகல  மனுஷருடைய  கையையும்  முத்திரித்துப்போடுகிறார்.  (யோபு  37:7)

thaam  u'ndaakkina  sagala  manusharum  thammai  a’riyumpadikku,  avar  sagala  manusharudaiya  kaiyaiyum  muththiriththuppoadugi’raar.  (yoabu  37:7)

அப்பொழுது  காட்டுமிருகங்கள்  தங்கள்  குகைகளில்  புகுந்து,  தங்கள்  கெபிகளில்  தங்கும்.  (யோபு  37:8)

appozhuthu  kaattumirugangga'l  thangga'l  kugaiga'lil  pugunthu,  thangga'l  kebiga'lil  thanggum.  (yoabu  37:8)

தெற்கேயிருந்து  சூறாவளியும்,  வடகாற்றினால்  குளிரும்  வரும்.  (யோபு  37:9)

the’rkeayirunthu  soo’raava'liyum,  vadakaat’rinaal  ku'lirum  varum.  (yoabu  37:9)

தம்முடைய  சுவாசத்தினால்  தேவன்  குளிரைக்  கொடுக்கிறார்;  அப்பொழுது  ஜலத்தின்  மேற்பரப்பானது  உறைந்துபோம்.  (யோபு  37:10)

thammudaiya  suvaasaththinaal  theavan  ku'liraik  kodukki’raar;  appozhuthu  jalaththin  mea’rparappaanathu  u’rainthupoam.  (yoabu  37:10)

அவர்  நீர்த்துளிகளை  மேகத்தில்  ஏற்றி,  மின்னலினால்  மேகத்தைச்  சிதறப்பண்ணுகிறார்.  (யோபு  37:11)

avar  neerththu'liga'lai  meagaththil  eat’ri,  minnalinaal  meagaththaich  sitha’rappa'n'nugi’raar.  (yoabu  37:11)

அவர்  அவைகளுக்குக்  கட்டளையிடுகிற  யாவையும்,  அவைகள்  பூச்சக்கரத்தில்  நடப்பிக்கும்படி,  அவர்  அவைகளைத்  தம்முடைய  ஞான  ஆலோசனைகளின்படியே  சுற்றித்  திரியப்பண்ணுகிறார்.  (யோபு  37:12)

avar  avaiga'lukkuk  katta'laiyidugi’ra  yaavaiyum,  avaiga'l  poochchakkaraththil  nadappikkumpadi,  avar  avaiga'laith  thammudaiya  gnaana  aaloasanaiga'linpadiyea  sut’rith  thiriyappa'n'nugi’raar.  (yoabu  37:12)

ஒன்றில்  தண்டனையாகவும்,  ஒன்றில்  தம்முடைய  பூமிக்கு  உபயோகமாகவும்,  ஒன்றில்  கிருபையாகவும்,  அவைகளை  வரப்பண்ணுகிறார்.  (யோபு  37:13)

on’ril  tha'ndanaiyaagavum,  on’ril  thammudaiya  boomikku  ubayoagamaagavum,  on’ril  kirubaiyaagavum,  avaiga'lai  varappa'n'nugi’raar.  (yoabu  37:13)

யோபே,  இதற்குச்  செவிகொடும்;  தரித்துநின்று  தேவனுடைய  ஆச்சரியமான  கிரியைகளைத்  தியானித்துப்பாரும்.  (யோபு  37:14)

yoabea,  itha’rkuch  sevikodum;  thariththunin’ru  theavanudaiya  aachchariyamaana  kiriyaiga'laith  thiyaaniththuppaarum.  (yoabu  37:14)

தேவன்  அவைகளைத்  திட்டம்பண்ணி,  தம்முடைய  மேகத்தின்  மின்னலைப்  பிரகாசிக்கப்பண்ணும்  விதத்தை  அறிவீரோ?  (யோபு  37:15)

theavan  avaiga'laith  thittampa'n'ni,  thammudaiya  meagaththin  minnalaip  piragaasikkappa'n'num  vithaththai  a’riveeroa?  (yoabu  37:15)

மேகங்கள்  தொங்கும்படி  வைக்கும்  நிறையையும்,  பூரண  ஞானமுள்ளவரின்  அற்புதமான  செய்கைகளையும்,  (யோபு  37:16)

meagangga'l  thonggumpadi  vaikkum  ni’raiyaiyum,  poora'na  gnaanamu'l'lavarin  a’rputhamaana  seygaiga'laiyum,  (yoabu  37:16)

தென்றலினால்  அவர்  பூமியை  அமையப்பண்ணும்போது,  உம்முடைய  வஸ்திரங்கள்  உஷ்ணமாயிருக்கும்  வகையையும்  அறிவீரோ?  (யோபு  37:17)

then’ralinaal  avar  boomiyai  amaiyappa'n'numpoathu,  ummudaiya  vasthirangga'l  ush'namaayirukkum  vagaiyaiyum  a’riveeroa?  (yoabu  37:17)

வார்க்கப்பட்ட  கண்ணாடியைப்போல்  கெட்டியான  ஆகாயமண்டலங்களை  நீர்  அவரோடேகூட  இருந்து  விரித்தீரோ?  (யோபு  37:18)

vaarkkappatta  ka'n'naadiyaippoal  kettiyaana  aagaayama'ndalangga'lai  neer  avaroadeakooda  irunthu  viriththeeroa?  (yoabu  37:18)

அவருக்கு  நாம்  சொல்லத்தக்கதை  எங்களுக்குப்  போதியும்;  அந்தகாரத்தினிமித்தம்  முறைதப்பிப்  பேசுகிறோம்.  (யோபு  37:19)

avarukku  naam  sollaththakkathai  engga'lukkup  poathiyum;  anthagaaraththinimiththam  mu’raithappip  peasugi’roam.  (yoabu  37:19)

நான்  பேசத்துணிந்தேன்  என்று  யாதாமொருவன்  அவருக்கு  முன்பாகச்  சொல்லத்தகுமோ?  ஒருவன்  பேசத்துணிந்தால்  அவன்  விழுங்கப்பட்டுப்போவானே.  (யோபு  37:20)

naan  peasaththu'ninthean  en’ru  yaathaamoruvan  avarukku  munbaagach  sollaththagumoa?  oruvan  peasaththu'ninthaal  avan  vizhunggappattuppoavaanea.  (yoabu  37:20)

இப்போதும்  காற்று  வீசி  ஆகாயமண்டலங்களிலுள்ள  மப்பு  நீங்கப்பண்ணியிருக்கிற  சமயத்தில்  வடக்கேயிருந்து  பொன்மயமான  காந்தி  வருகிறபோது,  (யோபு  37:21)

ippoathum  kaat’ru  veesi  aagaayama'ndalangga'lilu'l'la  mappu  neenggappa'n'niyirukki’ra  samayaththil  vadakkeayirunthu  ponmayamaana  kaanthi  varugi’rapoathu,  (yoabu  37:21)

ஆகாயமண்டலத்திலே  பிரகாசிக்கிற  சூரியனை  முதலாய்  ஒருவரும்  நோக்கிப்  பார்க்கக்கூடாதே;  தேவனிடத்திலோ  பயங்கரமான  மகத்துவமுண்டு.  (யோபு  37:22)

aagaayama'ndalaththilea  piragaasikki’ra  sooriyanai  muthalaay  oruvarum  noakkip  paarkkakkoodaathea;  theavanidaththiloa  bayanggaramaana  magaththuvamu'ndu.  (yoabu  37:22)

சர்வவல்லவரை  நாம்  கண்டுபிடிக்கக்கூடாது;  அவர்  வல்லமையிலும்  நியாயத்திலும்  பெருத்தவர்;  அவர்  மகாநீதிபரர்;  அவர்  ஒடுக்கமாட்டார்.  (யோபு  37:23)

sarvavallavarai  naam  ka'ndupidikkakkoodaathu;  avar  vallamaiyilum  niyaayaththilum  peruththavar;  avar  mahaaneethiparar;  avar  odukkamaattaar.  (yoabu  37:23)

ஆகையால்  மனுஷர்  அவருக்குப்  பயப்படவேண்டும்;  தங்கள்  எண்ணத்தில்  ஞானிகளாயிருக்கிற  எவர்களையும்  அவர்  மதிக்கமாட்டார்  என்றான்.  (யோபு  37:24)

aagaiyaal  manushar  avarukkup  bayappadavea'ndum;  thangga'l  e'n'naththil  gnaaniga'laayirukki’ra  evarga'laiyum  avar  mathikkamaattaar  en’raan.  (yoabu  37:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!