Monday, September 12, 2016

Yoabu 36 | யோபு 36 | Job 36

பின்னும்  எலிகூ:  (யோபு  36:1)

pinnum  eligoo:  (yoabu  36:1)

நான்  பேசிமுடியுமட்டும்  சற்றே  பொறும்;  இன்னும்  தேவன்பட்சத்தில்  நான்  சொல்லவேண்டிய  நியாயங்களை  உமக்குச்  சொல்லிக்காண்பிப்பேன்.  (யோபு  36:2)

naan  peasimudiyumattum  sat’rea  po’rum;  innum  theavanpadchaththil  naan  sollavea'ndiya  niyaayangga'lai  umakkuch  sollikkaa'nbippean.  (yoabu  36:2)

நான்  தூரத்திலிருந்து  என்  ஞானத்தைக்  கொண்டுவந்து,  என்னை  உண்டாக்கினவருடைய  நீதியை  விளங்கப்பண்ணுவேன்.  (யோபு  36:3)

naan  thooraththilirunthu  en  gnaanaththaik  ko'nduvanthu,  ennai  u'ndaakkinavarudaiya  neethiyai  vi'langgappa'n'nuvean.  (yoabu  36:3)

மெய்யாகவே  என்  வார்த்தைகள்  பொய்யற்றிருக்கும்;  உம்மோடே  பேசுகிறவன்  அறிவில்  தேறினவன்.  (யோபு  36:4)

meyyaagavea  en  vaarththaiga'l  poyyat’rirukkum;  ummoadea  peasugi’ravan  a’rivil  thea’rinavan.  (yoabu  36:4)

இதோ,  தேவன்  மகத்துவமுள்ளவர்,  அவர்  ஒருவரையும்  புறக்கணியார்;  மன  உருக்கத்திலும்  அவர்  மகத்துவமுள்ளவர்.  (யோபு  36:5)

ithoa,  theavan  magaththuvamu'l'lavar,  avar  oruvaraiyum  pu’rakka'niyaar;  mana  urukkaththilum  avar  magaththuvamu'l'lavar.  (yoabu  36:5)

அவர்  துன்மார்க்கரைப்  பிழைக்க  ஒட்டாதிருக்கிறார்;  சிறுமையானவர்களின்  நியாயத்தை  விசாரிக்கிறார்.  (யோபு  36:6)

avar  thunmaarkkaraip  pizhaikka  ottaathirukki’raar;  si’rumaiyaanavarga'lin  niyaayaththai  visaarikki’raar.  (yoabu  36:6)

அவர்  தம்முடைய  கண்களை  நீதிமான்களைவிட்டு  விலக்காமல்,  அவர்களை  ராஜாக்களோடே  கூடச்  சிங்காசனத்தில்  ஏறவும்,  உயர்ந்த  ஸ்தலத்தில்  என்றைக்கும்  உட்கார்ந்திருக்கவும்  செய்கிறார்.  (யோபு  36:7)

avar  thammudaiya  ka'nga'lai  neethimaanga'laivittu  vilakkaamal,  avarga'lai  raajaakka'loadea  koodach  singgaasanaththil  ea’ravum,  uyarntha  sthalaththil  en’raikkum  udkaarnthirukkavum  seygi’raar.  (yoabu  36:7)

அவர்கள்  விலங்குகள்  போடப்பட்டு,  உபத்திரவத்தின்  கயிறுகளால்  கட்டப்பட்டிருந்தாலும்,  (யோபு  36:8)

avarga'l  vilangguga'l  poadappattu,  ubaththiravaththin  kayi’ruga'laal  kattappattirunthaalum,  (yoabu  36:8)

அவர்,  அவர்கள்  கிரியையையும்,  மிஞ்சிப்போன  அவர்களுடைய  மீறுதல்களையும்  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி,  (யோபு  36:9)

avar,  avarga'l  kiriyaiyaiyum,  mignchippoana  avarga'ludaiya  mee’ruthalga'laiyum  avarga'lukkuth  theriyappaduththi,  (yoabu  36:9)

அக்கிரமத்தை  விட்டுத்  திரும்பும்படி  அவர்கள்  செவியைத்  திறந்து  கடிந்துகொள்ளுகிறார்.  (யோபு  36:10)

akkiramaththai  vittuth  thirumbumpadi  avarga'l  seviyaith  thi’ranthu  kadinthuko'l'lugi’raar.  (yoabu  36:10)

அவர்கள்  அடங்கி  அவரைச்  சேவித்தால்,  தங்கள்  நாட்களை  நன்மையாகவும்,  தங்கள்  வருஷங்களைச்  செல்வவாழ்வாகவும்  போக்குவார்கள்.  (யோபு  36:11)

avarga'l  adanggi  avaraich  seaviththaal,  thangga'l  naadka'lai  nanmaiyaagavum,  thangga'l  varushangga'laich  selvavaazhvaagavum  poakkuvaarga'l.  (yoabu  36:11)

அடங்கார்களேயாகில்  பட்டயத்துக்கு  இரையாகி,  ஞானம்  அடையாமல்  மாண்டுபோவார்கள்.  (யோபு  36:12)

adanggaarga'leayaagil  pattayaththukku  iraiyaagi,  gnaanam  adaiyaamal  maa'ndupoavaarga'l.  (yoabu  36:12)

மாயமுள்ள  இருதயத்தார்  குரோதத்தைக்  குவித்துக்கொள்ளுகிறார்கள்;  அவர்களை  அவர்  கட்டிவைக்கும்போது  கெஞ்சிக்  கூப்பிடுவார்கள்.  (யோபு  36:13)

maayamu'l'la  iruthayaththaar  kuroathaththaik  kuviththukko'l'lugi’raarga'l;  avarga'lai  avar  kattivaikkumpoathu  kegnchik  kooppiduvaarga'l.  (yoabu  36:13)

அவர்கள்  வாலவயதிலே  மாண்டுபோவார்கள்;  இலச்சையானவர்களுக்குள்ளே  அவர்கள்  பிராணன்  முடியும்.  (யோபு  36:14)

avarga'l  vaalavayathilea  maa'ndupoavaarga'l;  ilachchaiyaanavarga'lukku'l'lea  avarga'l  piraa'nan  mudiyum.  (yoabu  36:14)

சிறுமைப்பட்டவர்களை  அவர்  சிறுமைக்கு  நீங்கலாக்கி,  அவர்கள்  ஒடுக்கப்பட்டிருக்கையில்  அவர்கள்  செவியைத்  திறக்கிறார்.  (யோபு  36:15)

si’rumaippattavarga'lai  avar  si’rumaikku  neenggalaakki,  avarga'l  odukkappattirukkaiyil  avarga'l  seviyaith  thi’rakki’raar.  (yoabu  36:15)

அப்படியே  அவர்  உம்மையும்  நெருக்கத்தினின்று  விலக்கி,  ஒடுக்கமில்லாத  விசாலத்திலே  வைப்பார்;  உம்முடைய  போஜனபந்தி  கொழுமையான  பதார்த்தங்களால்  நிறைந்திருக்கும்.  (யோபு  36:16)

appadiyea  avar  ummaiyum  nerukkaththinin’ru  vilakki,  odukkamillaatha  visaalaththilea  vaippaar;  ummudaiya  poajanapanthi  kozhumaiyaana  pathaarththangga'laal  ni’rainthirukkum.  (yoabu  36:16)

ஆகாதவன்மேல்  வரும்  நியாயத்தீர்ப்பு  நிறைவேறப்  பார்ப்பீர்;  நியாயமும்  நீதியும்  உம்மை  ஆதரிக்கும்.  (யோபு  36:17)

aagaathavanmeal  varum  niyaayaththeerppu  ni’raivea’rap  paarppeer;  niyaayamum  neethiyum  ummai  aatharikkum.  (yoabu  36:17)

உக்கிரமுண்டாயிருக்கிறதினால்  அவர்  உம்மை  ஒரு  அடியினால்  வாரிக்கொண்டு  போகாதபடிக்கு  எச்சரிக்கையாயிரும்;  அப்பொழுது  மீட்கும்பொருளை  மிகுதியாய்க்  கொடுத்தாலும்  அதற்கு  நீர்  நீங்கலாகமாட்டீர்.  (யோபு  36:18)

ukkiramu'ndaayirukki’rathinaal  avar  ummai  oru  adiyinaal  vaarikko'ndu  poagaathapadikku  echcharikkaiyaayirum;  appozhuthu  meedkumporu'lai  miguthiyaayk  koduththaalum  atha’rku  neer  neenggalaagamaatteer.  (yoabu  36:18)

உம்முடைய  செல்வத்தை  அவர்  மதிப்பாரோ?  உம்முடைய  பொன்னையும்,  பூரண  பராக்கிரமத்தையும்  அவர்  மதிக்கமாட்டாரே.  (யோபு  36:19)

ummudaiya  selvaththai  avar  mathippaaroa?  ummudaiya  ponnaiyum,  poora'na  baraakkiramaththaiyum  avar  mathikkamaattaarea.  (yoabu  36:19)

ஜனங்கள்  தங்கள்  இடத்தைவிட்டு  வாரிக்கொள்ளப்படப்போகிற  இரவை  வாஞ்சிக்காதிரும்.  (யோபு  36:20)

janangga'l  thangga'l  idaththaivittu  vaarikko'l'lappadappoagi’ra  iravai  vaagnchikkaathirum.  (yoabu  36:20)

அக்கிரமத்துக்குத்  திரும்பாதபடிக்கு  எச்சரிக்கையாயிரும்;  உபத்திரவத்தைப்பார்க்கிலும்  அக்கிரமத்தைத்  தெரிந்துகொண்டீரே.  (யோபு  36:21)

akkiramaththukkuth  thirumbaathapadikku  echcharikkaiyaayirum;  ubaththiravaththaippaarkkilum  akkiramaththaith  therinthuko'ndeerea.  (yoabu  36:21)

இதோ,  தேவன்  தம்முடைய  வல்லமையில்  உயர்ந்திருக்கிறார்;  அவரைப்போல்  போதிக்கிறவர்  யார்?  (யோபு  36:22)

ithoa,  theavan  thammudaiya  vallamaiyil  uyarnthirukki’raar;  avaraippoal  poathikki’ravar  yaar?  (yoabu  36:22)

அவருடைய  வழியின்  நியாயத்தை  விசாரிக்கத்தக்கவன்  யார்?  நீர்  அநியாயம்  செய்தீர்  என்று  சொல்லத்தக்கவன்  யார்?  (யோபு  36:23)

avarudaiya  vazhiyin  niyaayaththai  visaarikkaththakkavan  yaar?  neer  aniyaayam  seytheer  en’ru  sollaththakkavan  yaar?  (yoabu  36:23)

மனுஷர்  நோக்கிப்பார்க்கிற  அவருடைய  கிரியையை  நீர்  மகிமைப்படுத்த  நினையும்.  (யோபு  36:24)

manushar  noakkippaarkki’ra  avarudaiya  kiriyaiyai  neer  magimaippaduththa  ninaiyum.  (yoabu  36:24)

எல்லா  மனுஷரும்  அதைக்  காண்கிறார்களே;  தூரத்திலிருந்து  அது  மனுஷருக்கு  வெளிப்படுகிறது.  (யோபு  36:25)

ellaa  manusharum  athaik  kaa'ngi’raarga'lea;  thooraththilirunthu  athu  manusharukku  ve'lippadugi’rathu.  (yoabu  36:25)

இதோ,  தேவன்  மகத்துவமுள்ளவர்;  நாம்  அவரை  அறிய  முடியாது;  அவருடைய  வருஷங்களின்  இலக்கம்  ஆராய்ந்து  முடியாதது.  (யோபு  36:26)

ithoa,  theavan  magaththuvamu'l'lavar;  naam  avarai  a’riya  mudiyaathu;  avarudaiya  varushangga'lin  ilakkam  aaraaynthu  mudiyaathathu.  (yoabu  36:26)

அவர்  நீர்த்துளிகளை  அணுவைப்போல  ஏறப்பண்ணுகிறார்;  அவைகள்  மேகத்திலிருந்து  மழையாய்ச்  சொரிகிறது.  (யோபு  36:27)

avar  neerththu'liga'lai  a'nuvaippoala  ea’rappa'n'nugi’raar;  avaiga'l  meagaththilirunthu  mazhaiyaaych  sorigi’rathu.  (yoabu  36:27)

அதை  மேகங்கள்  பெய்து,  மனுஷர்மேல்  மிகுதியாய்ப்  பொழிகிறது.  (யோபு  36:28)

athai  meagangga'l  peythu,  manusharmeal  miguthiyaayp  pozhigi’rathu.  (yoabu  36:28)

மேகங்களின்  பரவுதலையும்,  அவருடைய  கூடாரத்திலிருந்து  எழும்பும்  குமுறல்களையும்  அறியமுடியுமோ?  (யோபு  36:29)

meagangga'lin  paravuthalaiyum,  avarudaiya  koodaaraththilirunthu  ezhumbum  kumu’ralga'laiyum  a’riyamudiyumoa?  (yoabu  36:29)

இதோ,  அதின்மேல்  தம்முடைய  மின்னலின்  ஒளியை  விரிக்கிறார்;  சமுத்திரத்தின்  ஆழங்களையும்  மூடுகிறார்.  (யோபு  36:30)

ithoa,  athinmeal  thammudaiya  minnalin  o'liyai  virikki’raar;  samuththiraththin  aazhangga'laiyum  moodugi’raar.  (yoabu  36:30)

அவைகளால்  ஜனங்களை  தண்டிக்கிறவரும்,  ஆகாரங்கொடுத்து  இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.  (யோபு  36:31)

avaiga'laal  janangga'lai  tha'ndikki’ravarum,  aagaarangkoduththu  iradchikki’ravarumaayirukki’raar.  (yoabu  36:31)

அவர்  மின்னலின்  ஒளியைத்  தமது  கைக்குள்ளே  மூடி,  அது  இன்னின்னதை  அடிக்கவேண்டுமென்று  கட்டளையிடுகிறார்.  (யோபு  36:32)

avar  minnalin  o'liyaith  thamathu  kaikku'l'lea  moodi,  athu  inninnathai  adikkavea'ndumen’ru  katta'laiyidugi’raar.  (yoabu  36:32)

அதினால்  அவர்  செய்ய  நினைக்கிறதையும்,  மந்தாரம்  எழும்பப்போகிறதையும்,  ஆடுமாடுகள்  அறியப்படுத்தும்.  (யோபு  36:33)

athinaal  avar  seyya  ninaikki’rathaiyum,  manthaaram  ezhumbappoagi’rathaiyum,  aadumaaduga'l  a’riyappaduththum.  (yoabu  36:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!