Monday, September 12, 2016

Yoabu 35 | யோபு 35 | Job 35

பின்னும்  எலிகூ  மாறுத்தரமாக:  (யோபு  35:1)

pinnum  eligoo  maa’ruththaramaaga:  (yoabu  35:1)

என்  நீதி  தேவனுடைய  நீதியைப்பார்க்கிலும்  பெரியதென்று  நீர்  சொன்னது  நியாயம்  என்று  எண்ணுகிறீரோ?  (யோபு  35:2)

en  neethi  theavanudaiya  neethiyaippaarkkilum  periyathen’ru  neer  sonnathu  niyaayam  en’ru  e'n'nugi’reeroa?  (yoabu  35:2)

நான்  பாவியாயிராததினால்  எனக்குப்  பிரயோஜனமென்ன?  பலன்  என்ன?  என்று  சொன்னீர்.  (யோபு  35:3)

naan  paaviyaayiraathathinaal  enakkup  pirayoajanamenna?  palan  enna?  en’ru  sonneer.  (yoabu  35:3)

உமக்கும்  உம்மோடே  இருக்கிற  உம்முடைய  சிநேகிதருக்கும்  நான்  பிரதியுத்தரம்  சொல்லுகிறேன்.  (யோபு  35:4)

umakkum  ummoadea  irukki’ra  ummudaiya  sineagitharukkum  naan  pirathiyuththaram  sollugi’rean.  (yoabu  35:4)

நீர்  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  உம்மைப்பார்க்கிலும்  உயரமாயிருக்கிற  ஆகாயமண்டலங்களைக்  கண்ணோக்கும்.  (யோபு  35:5)

neer  vaanaththai  a'n'naanthupaarththu,  ummaippaarkkilum  uyaramaayirukki’ra  aagaayama'ndalangga'laik  ka'n'noakkum.  (yoabu  35:5)

நீர்  பாவஞ்செய்தால்  அதினாலே  அவருக்கு  என்ன  நஷ்டம்?  உம்முடைய  மீறுதல்கள்  மிகுதியானாலும்,  அதினாலே  அவருக்கு  என்ன  சேதம்?  (யோபு  35:6)

neer  paavagnseythaal  athinaalea  avarukku  enna  nashdam?  ummudaiya  mee’ruthalga'l  miguthiyaanaalum,  athinaalea  avarukku  enna  seatham?  (yoabu  35:6)

நீர்  நீதிமானாயிருந்தால்,  அதினாலே  அவருக்கு  என்ன  கிடைக்கும்?  அல்லது  அவர்  உம்முடைய  கையில்  என்ன  லாபத்தைப்  பெறுவார்?  (யோபு  35:7)

neer  neethimaanaayirunthaal,  athinaalea  avarukku  enna  kidaikkum?  allathu  avar  ummudaiya  kaiyil  enna  laabaththaip  pe’ruvaar?  (yoabu  35:7)

உம்முடைய  பாவத்தினால்  உம்மைப்போன்ற  மனுஷனுக்கு  நஷ்டமும்,  உம்முடைய  நீதியினால்  மனுபுத்திரனுக்கு  லாபமும்  உண்டாகும்.  (யோபு  35:8)

ummudaiya  paavaththinaal  ummaippoan’ra  manushanukku  nashdamum,  ummudaiya  neethiyinaal  manupuththiranukku  laabamum  u'ndaagum.  (yoabu  35:8)

அநேகரால்  பலவந்தமாய்  ஒடுக்கப்பட்டவர்கள்  முறையிட்டு,  வல்லவர்களுடைய  புயத்தினிமித்தம்  அலறுகிறார்கள்.  (யோபு  35:9)

aneagaraal  balavanthamaay  odukkappattavarga'l  mu’raiyittu,  vallavarga'ludaiya  puyaththinimiththam  ala’rugi’raarga'l.  (yoabu  35:9)

பூமியின்  மிருகங்களைப்பார்க்கிலும்  எங்களைப்  புத்திமான்களும்,  ஆகாசத்துப்  பறவைகளைப்பார்க்கிலும்  எங்களை  ஞானவான்களுமாக்கி,  (யோபு  35:10)

boomiyin  mirugangga'laippaarkkilum  engga'laip  buththimaanga'lum,  aagaasaththup  pa’ravaiga'laippaarkkilum  engga'lai  gnaanavaanga'lumaakki,  (yoabu  35:10)

என்னை  உண்டாக்கினவரும்,  இரவிலும்  கீதம்பாட  அருள்செய்கிறவருமாகிய  என்  சிருஷ்டிகர்த்தாவாகிய  தேவன்  எங்கே  என்று  கேட்பவன்  ஒருவனுமில்லை.  (யோபு  35:11)

ennai  u'ndaakkinavarum,  iravilum  keethampaada  aru'lseygi’ravarumaagiya  en  sirushdikarththaavaagiya  theavan  enggea  en’ru  keadpavan  oruvanumillai.  (yoabu  35:11)

அங்கே  அவர்கள்  பொல்லாதவர்களின்  பெருமையினிமித்தம்  கூப்பிடுகிறார்கள்;  அவரோ  மறுஉத்தரவு  கொடுக்கிறதில்லை.  (யோபு  35:12)

anggea  avarga'l  pollaathavarga'lin  perumaiyinimiththam  kooppidugi’raarga'l;  avaroa  ma’ruuththaravu  kodukki’rathillai.  (yoabu  35:12)

தேவன்  வீண்வார்த்தைக்குச்  செவிகொடார்,  சர்வவல்லவர்  அதைக்  கவனியார்.  (யோபு  35:13)

theavan  vee'nvaarththaikkuch  sevikodaar,  sarvavallavar  athaik  kavaniyaar.  (yoabu  35:13)

அவருடைய  தரிசனம்  உமக்குக்  கிடைக்கிறதில்லை  என்று  நீர்  சொல்லுகிறீரே;  ஆனாலும்  நியாயத்தீர்ப்பு  அவரிடத்தில்  இருக்கிறது;  ஆகையால்  அவருக்குக்  காத்துக்கொண்டிரும்.  (யோபு  35:14)

avarudaiya  tharisanam  umakkuk  kidaikki’rathillai  en’ru  neer  sollugi’reerea;  aanaalum  niyaayaththeerppu  avaridaththil  irukki’rathu;  aagaiyaal  avarukkuk  kaaththukko'ndirum.  (yoabu  35:14)

இப்போது  அவருடைய  கோபமானது  நியாயத்தை  முற்றிலும்  விசாரியாது;  அவர்  இன்னும்  ஒன்றையும்  குறையற்றவிதமாய்த்  தீர்க்கவில்லை.  (யோபு  35:15)

ippoathu  avarudaiya  koabamaanathu  niyaayaththai  mut’rilum  visaariyaathu;  avar  innum  on’raiyum  ku’raiyat’ravithamaayth  theerkkavillai.  (yoabu  35:15)

ஆகையால்  யோபு  வீணாய்த்  தம்முடைய  வாயைத்  திறந்து,  அறிவில்லாமல்  வார்த்தைகளை  மிகுதியாய்  வசனிக்கிறார்  என்றான்.  (யோபு  35:16)

aagaiyaal  yoabu  vee'naayth  thammudaiya  vaayaith  thi’ranthu,  a’rivillaamal  vaarththaiga'lai  miguthiyaay  vasanikki’raar  en’raan.  (yoabu  35:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!