Monday, September 12, 2016

Yoabu 34 | யோபு 34 | Job 34

பின்னும்  எலிகூ  மாறுத்தரமாக:  (யோபு  34:1)

pinnum  eligoo  maa’ruththaramaaga:  (yoabu  34:1)

ஞானிகளே,  என்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  அறிவாளிகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்.  (யோபு  34:2)

gnaaniga'lea,  en  vaarththaiga'laik  kea'lungga'l;  a’rivaa'liga'lea,  enakkuch  sevikodungga'l.  (yoabu  34:2)

வாயானது  போஜனத்தை  ருசிபார்க்கிறதுபோல,  செவியானது  வார்த்தைகளைச்  சோதித்துப்பார்க்கும்.  (யோபு  34:3)

vaayaanathu  poajanaththai  rusipaarkki’rathupoala,  seviyaanathu  vaarththaiga'laich  soathiththuppaarkkum.  (yoabu  34:3)

நமக்காக  நியாயமானதைத்  தெரிந்துகொள்வோமாக;  நன்மை  இன்னதென்று  நமக்குள்ளே  அறிந்துகொள்வோமாக.  (யோபு  34:4)

namakkaaga  niyaayamaanathaith  therinthuko'lvoamaaga;  nanmai  innathen’ru  namakku'l'lea  a’rinthuko'lvoamaaga.  (yoabu  34:4)

யோபு:  நான்  நீதிமான்;  தேவன்  என்  நியாயத்தைத்  தள்ளிவிட்டார்  என்றும்,  (யோபு  34:5)

yoabu:  naan  neethimaan;  theavan  en  niyaayaththaith  tha'l'livittaar  en’rum,  (yoabu  34:5)

நியாயம்  என்னிடத்தில்  இருந்தும்  நான்  பொய்யனென்று  எண்ணப்படுகிறேன்;  மீறுதல்  இல்லாதிருந்தும்,  அம்பினால்  எனக்கு  உண்டான  காயம்  ஆறாததாயிருக்கிறதென்றும்  சொன்னாரே.  (யோபு  34:6)

niyaayam  ennidaththil  irunthum  naan  poyyanen’ru  e'n'nappadugi’rean;  mee’ruthal  illaathirunthum,  ambinaal  enakku  u'ndaana  kaayam  aa’raathathaayirukki’rathen’rum  sonnaarea.  (yoabu  34:6)

யோபைப்போலவே,  பரியாசம்பண்ணுதலைத்  தண்ணீரைப்போல்  குடித்து,  (யோபு  34:7)

yoabaippoalavea,  pariyaasampa'n'nuthalaith  tha'n'neeraippoal  kudiththu,  (yoabu  34:7)

அக்கிரமக்காரரோடே  கூடிக்கொண்டு,  துன்மார்க்கரோடே  திரிகிறவன்  யார்?  (யோபு  34:8)

akkiramakkaararoadea  koodikko'ndu,  thunmaarkkaroadea  thirigi’ravan  yaar?  (yoabu  34:8)

எப்படியெனில்,  தேவன்மேல்  பிரியம்  வைக்கிறது  மனுஷனுக்குப்  பிரயோஜனம்  அல்ல  என்றாரே.  (யோபு  34:9)

eppadiyenil,  theavanmeal  piriyam  vaikki’rathu  manushanukkup  pirayoajanam  alla  en’raarea.  (yoabu  34:9)

ஆகையால்  புத்திமான்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  அக்கிரமம்  தேவனுக்கும்,  அநீதி  சர்வவல்லவருக்கும்  தூரமாயிருக்கிறது.  (யோபு  34:10)

aagaiyaal  buththimaanga'lea,  enakkuch  sevikodungga'l;  akkiramam  theavanukkum,  aneethi  sarvavallavarukkum  thooramaayirukki’rathu.  (yoabu  34:10)

மனுஷனுடைய  செய்கைக்குத்தக்கதை  அவனுக்குச்  சரிக்கட்டி,  அவனவன்  நடக்கைக்குத்தக்கதாக  அவனவனுக்குப்  பலனளிக்கிறார்.  (யோபு  34:11)

manushanudaiya  seygaikkuththakkathai  avanukkuch  sarikkatti,  avanavan  nadakkaikkuththakkathaaga  avanavanukkup  palana'likki’raar.  (yoabu  34:11)

தேவன்  அநியாயஞ்  செய்யாமலும்,  சர்வவல்லவர்  நீதியைப்  புரட்டாமலும்  இருக்கிறது  மெய்யே.  (யோபு  34:12)

theavan  aniyaayagn  seyyaamalum,  sarvavallavar  neethiyaip  purattaamalum  irukki’rathu  meyyea.  (yoabu  34:12)

பூமியின்மேல்  மனுஷனுக்கு  அதிகாரம்  கொடுத்தவர்  யார்?  பூச்சக்கரம்  முழுதையும்  ஒழுங்குப்படுத்தினவர்  யார்?  (யோபு  34:13)

boomiyinmeal  manushanukku  athigaaram  koduththavar  yaar?  poochchakkaram  muzhuthaiyum  ozhungguppaduththinavar  yaar?  (yoabu  34:13)

அவர்  தம்முடைய  இருதயத்தை  அவனுக்கு  விரோதமாகத்  திருப்பினாராகில்,  அவனுடைய  ஆவியையும்  அவனுடைய  சுவாசத்தையும்  தம்மிடத்தில்  இழுத்துக்கொள்ளுவார்.  (யோபு  34:14)

avar  thammudaiya  iruthayaththai  avanukku  viroathamaagath  thiruppinaaraagil,  avanudaiya  aaviyaiyum  avanudaiya  suvaasaththaiyum  thammidaththil  izhuththukko'l'luvaar.  (yoabu  34:14)

அப்படியே  மாம்சமான  யாவும்  ஏகமாய்  ஜீவித்துப்போம்,  மனுஷன்  தூளுக்குத்  திரும்புவான்.  (யோபு  34:15)

appadiyea  maamsamaana  yaavum  eagamaay  jeeviththuppoam,  manushan  thoo'lukkuth  thirumbuvaan.  (yoabu  34:15)

உமக்கு  உணர்விருந்தால்  இதைக்  கேளும்,  என்  வார்த்தைகளின்  சத்தத்துக்குச்  செவிகொடும்.  (யோபு  34:16)

umakku  u'narvirunthaal  ithaik  kea'lum,  en  vaarththaiga'lin  saththaththukkuch  sevikodum.  (yoabu  34:16)

நீதியைப்  பகைக்கிற  ஒருவன்  ஆளக்கூடுமோ?  மகா  நீதிபரரைக்  குற்றப்படுத்துவீரோ?  (யோபு  34:17)

neethiyaip  pagaikki’ra  oruvan  aa'lakkoodumoa?  mahaa  neethipararaik  kut’rappaduththuveeroa?  (yoabu  34:17)

ஒரு  ராஜாவைப்  பார்த்து,  நீ  பொல்லாதவன்  என்றும்,  அதிபதிகளைப்  பார்த்து,  நீங்கள்  அக்கிரமக்காரர்  என்றும்  சொல்லத்தகுமோ?  (யோபு  34:18)

oru  raajaavaip  paarththu,  nee  pollaathavan  en’rum,  athibathiga'laip  paarththu,  neengga'l  akkiramakkaarar  en’rum  sollaththagumoa?  (yoabu  34:18)

இப்படியிருக்க,  பிரபுக்களின்  முகத்தைப்பாராமலும்,  ஏழையைப்பார்க்கிலும்  ஐசுவரியவானை  அதிகமாய்  எண்ணாமலும்  இருக்கிறவரை  நோக்கி  இப்படிச்  சொல்லலாமா?  இவர்கள்  எல்லாரும்  அவர்  கரங்களின்  கிரியையே.  (யோபு  34:19)

ippadiyirukka,  pirabukka'lin  mugaththaippaaraamalum,  eazhaiyaippaarkkilum  aisuvariyavaanai  athigamaay  e'n'naamalum  irukki’ravarai  noakki  ippadich  sollalaamaa?  ivarga'l  ellaarum  avar  karangga'lin  kiriyaiyea.  (yoabu  34:19)

இப்படிப்பட்டவர்கள்  சடிதியில்  சாவார்கள்;  ஜனங்கள்  பாதிஜாமத்தில்  கலங்கி  ஒழிந்துபோவார்கள்;  காணாத  கையினால்  பலவந்தர்  அழிந்துபோவார்கள்.  (யோபு  34:20)

ippadippattavarga'l  sadithiyil  saavaarga'l;  janangga'l  paathijaamaththil  kalanggi  ozhinthupoavaarga'l;  kaa'naatha  kaiyinaal  balavanthar  azhinthupoavaarga'l.  (yoabu  34:20)

அவருடைய  கண்கள்  மனுஷருடைய  வழிகளை  நோக்கியிருக்கிறது;  அவர்களுடைய  நடைகளையெல்லாம்  அவர்  பார்க்கிறார்.  (யோபு  34:21)

avarudaiya  ka'nga'l  manusharudaiya  vazhiga'lai  noakkiyirukki’rathu;  avarga'ludaiya  nadaiga'laiyellaam  avar  paarkki’raar.  (yoabu  34:21)

அக்கிரமக்காரர்  ஒளித்துக்கொள்ளத்தக்க  அந்தகாரமுமில்லை,  மரண  இருளுமில்லை.  (யோபு  34:22)

akkiramakkaarar  o'liththukko'l'laththakka  anthagaaramumillai,  mara'na  iru'lumillai.  (yoabu  34:22)

மனுஷன்  தேவனோடே  வழக்காடும்படி  அவர்  அவன்மேல்  மிஞ்சினதொன்றையும்  சுமத்தமாட்டார்.  (யோபு  34:23)

manushan  theavanoadea  vazhakkaadumpadi  avar  avanmeal  mignchinathon’raiyum  sumaththamaattaar.  (yoabu  34:23)

ஆராய்ந்து  முடியாத  நியாயமாய்  அவர்  வல்லமையுள்ளவர்களை  நொறுக்கி,  வேறே  மனுஷரை  அவர்கள்  ஸ்தானத்திலே  நிறுத்துகிறார்.  (யோபு  34:24)

aaraaynthu  mudiyaatha  niyaayamaay  avar  vallamaiyu'l'lavarga'lai  no’rukki,  vea’rea  manusharai  avarga'l  sthaanaththilea  ni’ruththugi’raar.  (yoabu  34:24)

அவர்கள்  கிரியைகளை  அவர்  அறிந்தவரானபடியால்,  அவர்கள்  நசுங்கிப்போகத்தக்கதாய்  இராக்காலத்தில்  அவர்களைக்  கவிழ்த்துப்போடுகிறார்.  (யோபு  34:25)

avarga'l  kiriyaiga'lai  avar  a’rinthavaraanapadiyaal,  avarga'l  nasunggippoagaththakkathaay  iraakkaalaththil  avarga'laik  kavizhththuppoadugi’raar.  (yoabu  34:25)

அவர்கள்  அவரை  விட்டுப்  பின்வாங்கி,  அவருடைய  எல்லா  வழிகளையும்  உணர்ந்துகொள்ளாமல்  போனபடியினாலும்,  (யோபு  34:26)

avarga'l  avarai  vittup  pinvaanggi,  avarudaiya  ellaa  vazhiga'laiyum  u'narnthuko'l'laamal  poanapadiyinaalum,  (yoabu  34:26)

எளியவர்களின்  கூக்குரல்  அவரிடத்தில்  சேரும்படி  செய்ததினாலும்,  சிறுமையானவனுடைய  கூக்குரலைக்  கேட்கிற  அவர்,  (யோபு  34:27)

e'liyavarga'lin  kookkural  avaridaththil  searumpadi  seythathinaalum,  si’rumaiyaanavanudaiya  kookkuralaik  keadki’ra  avar,  (yoabu  34:27)

எல்லாரும்  பார்க்கும்படி  அவர்களைத்  துன்மார்க்கரென்று  அடிக்கிறார்.  (யோபு  34:28)

ellaarum  paarkkumpadi  avarga'laith  thunmaarkkaren’ru  adikki’raar.  (yoabu  34:28)

மாயக்காரன்  ஆளாதபடிக்கும்,  ஜனங்கள்  சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,  (யோபு  34:29)

maayakkaaran  aa'laathapadikkum,  janangga'l  sikkikko'l'lappadaathapadikkum,  (yoabu  34:29)

ஒரு  ஜனத்துக்கானாலும்  ஒரு  மனுஷனுக்கானாலும்,  அவர்  சமாதானத்தை  அருளினால்  யார்  கலங்கப்பண்ணுவான்?  அவர்  தமது  முகத்தை  மறைத்தால்  அவரைக்  காண்கிறவன்  யார்?  (யோபு  34:30)

oru  janaththukkaanaalum  oru  manushanukkaanaalum,  avar  samaathaanaththai  aru'linaal  yaar  kalanggappa'n'nuvaan?  avar  thamathu  mugaththai  ma’raiththaal  avaraik  kaa'ngi’ravan  yaar?  (yoabu  34:30)

நான்  தண்டிக்கப்பட்டேன்;  நான்  இனிப்  பாவஞ்செய்யமாட்டேன்.  (யோபு  34:31)

naan  tha'ndikkappattean;  naan  inip  paavagnseyyamaattean.  (yoabu  34:31)

நான்  காணாத  காரியத்தை  நீர்  எனக்குப்  போதியும்,  நான்  அநியாயம்  பண்ணினேனானால்,  நான்  இனி  அப்படிச்  செய்வதில்லை  என்று  தேவனை  நோக்கிச்  சொல்லத்தகுமே.  (யோபு  34:32)

naan  kaa'naatha  kaariyaththai  neer  enakkup  poathiyum,  naan  aniyaayam  pa'n'nineanaanaal,  naan  ini  appadich  seyvathillai  en’ru  theavanai  noakkich  sollaththagumea.  (yoabu  34:32)

நீர்  அப்படிச்  செய்யமாட்டோமென்கிறபடியினால்,  உம்மோடிருக்கிறவர்களில்  ஒருவனை  உமக்குப்  பதிலாக  அதைச்  செய்யச்சொல்வீரோ?  நான்  அல்ல,  நீரே  தெரிந்துகொள்ளவேண்டும்;  அல்லவென்றால்,  நீர்  அறிந்திருக்கிறதைச்  சொல்லும்.  (யோபு  34:33)

neer  appadich  seyyamaattoamengi’rapadiyinaal,  ummoadirukki’ravarga'lil  oruvanai  umakkup  bathilaaga  athaich  seyyachsolveeroa?  naan  alla,  neerea  therinthuko'l'lavea'ndum;  allaven’raal,  neer  a’rinthirukki’rathaich  sollum.  (yoabu  34:33)

யோபு  அறிவில்லாமல்  பேசினார்;  அவர்  வார்த்தைகள்  ஞானமுள்ளவைகள்  அல்லவென்று,  (யோபு  34:34)

yoabu  a’rivillaamal  peasinaar;  avar  vaarththaiga'l  gnaanamu'l'lavaiga'l  allaven’ru,  (yoabu  34:34)

புத்தியுள்ள  மனுஷர்  என்  பட்சமாய்ப்  பேசுவார்கள்;  ஞானமுள்ள  மனுஷனும்  எனக்குச்  செவிகொடுப்பான்.  (யோபு  34:35)

buththiyu'l'la  manushar  en  padchamaayp  peasuvaarga'l;  gnaanamu'l'la  manushanum  enakkuch  sevikoduppaan.  (yoabu  34:35)

அக்கிரமக்காரர்  சொன்ன  மறுஉத்தரவுகளினிமித்தம்  யோபு  முற்றமுடிய  சோதிக்கப்படவேண்டியதே  என்  அபேட்சை.  (யோபு  34:36)

akkiramakkaarar  sonna  ma’ruuththaravuga'linimiththam  yoabu  mut’ramudiya  soathikkappadavea'ndiyathea  en  abeadchai.  (yoabu  34:36)

தம்முடைய  பாவத்தோடே  மீறுதலைக்  கூட்டினார்;  அவர்  எங்களுக்குள்ளே  கைகொட்டி,  தேவனுக்கு  விரோதமாய்த்  தம்முடைய  வார்த்தைகளை  மிகுதியாக  வசனித்தார்  என்றான்.  (யோபு  34:37)

thammudaiya  paavaththoadea  mee’ruthalaik  koottinaar;  avar  engga'lukku'l'lea  kaikotti,  theavanukku  viroathamaayth  thammudaiya  vaarththaiga'lai  miguthiyaaga  vasaniththaar  en’raan.  (yoabu  34:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!