Monday, September 12, 2016

Yoabu 32 | யோபு 32 | Job 32

யோபு  தன்  பார்வைக்கு  நீதிமானாயிருந்தபடியினால்,  அவனுக்கு  அந்த  மூன்று  மனுஷரும்  பிரதியுத்தரம்  சொல்லி  ஓய்ந்தார்கள்.  (யோபு  32:1)

yoabu  than  paarvaikku  neethimaanaayirunthapadiyinaal,  avanukku  antha  moon’ru  manusharum  pirathiyuththaram  solli  oaynthaarga'l.  (yoabu  32:1)

அதினால்  ராமின்  வம்சத்தானான  பூசியனாகிய  பரகெயேலின்  குமாரன்  எலிகூவுக்குக்  கோபம்  மூண்டது;  யோபு,  தேவனைப்பார்க்கிலும்  தன்னைத்தான்  நீதிமானாக்கினதினிமித்தம்,  அவன்மேலும்  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  (யோபு  32:2)

athinaal  raamin  vamsaththaanaana  boosiyanaagiya  barakeyealin  kumaaran  eligoovukkuk  koabam  moo'ndathu;  yoabu,  theavanaippaarkkilum  thannaiththaan  neethimaanaakkinathinimiththam,  avanmealum  avanukkuk  koabam  moo'ndathu.  (yoabu  32:2)

கொடுக்கத்தக்க  மறுமொழி  யோபின்  மூன்று  சிநேகிதருக்கும்  அகப்படாதிருந்தும்,  அவர்கள்  அவனை  ஆகாதவனென்று  தீர்த்ததினிமித்தம்,  அவர்கள்மேலும்  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  (யோபு  32:3)

kodukkaththakka  ma’rumozhi  yoabin  moon’ru  sineagitharukkum  agappadaathirunthum,  avarga'l  avanai  aagaathavanen’ru  theerththathinimiththam,  avarga'lmealum  avanukkuk  koabam  moo'ndathu.  (yoabu  32:3)

அவர்கள்  தன்னைப்பார்க்கிலும்  வயதுசென்றவர்களானபடியினால்,  எலிகூ  யோபின்  வார்த்தைகள்  முடிந்து  தீருமட்டும்  காத்திருந்தான்.  (யோபு  32:4)

avarga'l  thannaippaarkkilum  vayathusen’ravarga'laanapadiyinaal,  eligoo  yoabin  vaarththaiga'l  mudinthu  theerumattum  kaaththirunthaan.  (yoabu  32:4)

அந்த  மூன்று  மனுஷரின்  வாயிலும்  மறுஉத்தரவு  பிறக்கவில்லையென்று  எலிகூ  கண்டபோது,  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  (யோபு  32:5)

antha  moon’ru  manusharin  vaayilum  ma’ruuththaravu  pi’rakkavillaiyen’ru  eligoo  ka'ndapoathu,  avanukkuk  koabam  moo'ndathu.  (yoabu  32:5)

ஆதலால்  பரகெயேலின்  குமாரன்  எலிகூ  என்னும்  பூசியன்  பிரதியுத்தரமாக:  நான்  இளவயதுள்ளவன்,  நீங்களோ  விருத்தாப்பியர்;  ஆகையால்  நான்  அஞ்சி,  என்  அபிப்பிராயத்தை  உங்களுக்கு  முன்பாக  வெளிப்படுத்தப்  பயந்திருந்தேன்.  (யோபு  32:6)

aathalaal  barakeyealin  kumaaran  eligoo  ennum  boosiyan  pirathiyuththaramaaga:  naan  i'lavayathu'l'lavan,  neengga'loa  viruththaappiyar;  aagaiyaal  naan  agnchi,  en  abippiraayaththai  ungga'lukku  munbaaga  ve'lippaduththap  bayanthirunthean.  (yoabu  32:6)

முதியோர்  பேசட்டும்,  வயதுசென்றவர்கள்  ஞானத்தை  அறிவிக்கட்டும்  என்றிருந்தேன்.  (யோபு  32:7)

muthiyoar  peasattum,  vayathusen’ravarga'l  gnaanaththai  a’rivikkattum  en’rirunthean.  (yoabu  32:7)

ஆனாலும்  மனுஷரில்  ஒரு  ஆவியுண்டு;  சர்வவல்லவருடைய  சுவாசமே  அவர்களை  உணர்வுள்ளவர்களாக்கும்.  (யோபு  32:8)

aanaalum  manusharil  oru  aaviyu'ndu;  sarvavallavarudaiya  suvaasamea  avarga'lai  u'narvu'l'lavarga'laakkum.  (yoabu  32:8)

பெரியோரெல்லாம்  ஞானிகளல்ல;  முதியோரெல்லாம்  நீதியை  அறிந்தவர்களுமல்ல.  (யோபு  32:9)

periyoarellaam  gnaaniga'lalla;  muthiyoarellaam  neethiyai  a’rinthavarga'lumalla.  (yoabu  32:9)

ஆகையால்  எனக்குச்  செவிகொடுங்கள்;  நானும்  என்  அபிப்பிராயத்தை  வெளிப்படுத்துவேன்  என்றேன்.  (யோபு  32:10)

aagaiyaal  enakkuch  sevikodungga'l;  naanum  en  abippiraayaththai  ve'lippaduththuvean  en’rean.  (yoabu  32:10)

இதோ,  உங்கள்  வசனங்கள்  முடியுமட்டும்  காத்திருந்தேன்;  நீங்கள்  சொல்லத்தக்கதை  ஆராய்ந்து  தேடுமட்டும்,  உங்கள்  நியாயங்களுக்குச்  செவிகொடுத்தேன்.  (யோபு  32:11)

ithoa,  ungga'l  vasanangga'l  mudiyumattum  kaaththirunthean;  neengga'l  sollaththakkathai  aaraaynthu  theadumattum,  ungga'l  niyaayangga'lukkuch  sevikoduththean.  (yoabu  32:11)

நான்  உங்கள்  சொல்லைக்  கவனித்தேன்;  ஆனாலும்  இதோ,  உங்களில்  யோபுக்கு  நியாயத்தைத்  தெரியக்காட்டி,  அவருடைய  வசனங்களுக்கு  ஏற்ற  பிரதியுத்தரம்  சொல்லுகிறவனில்லை.  (யோபு  32:12)

naan  ungga'l  sollaik  kavaniththean;  aanaalum  ithoa,  ungga'lil  yoabukku  niyaayaththaith  theriyakkaatti,  avarudaiya  vasanangga'lukku  eat’ra  pirathiyuththaram  sollugi’ravanillai.  (yoabu  32:12)

ஞானத்தைக்  கண்டுபிடித்தோம்  என்று  நீங்கள்  சொல்லாதபடி  பாருங்கள்;  மனுஷனல்ல,  தேவனே  அவரை  ஜெயங்கொள்ளவேண்டும்.  (யோபு  32:13)

gnaanaththaik  ka'ndupidiththoam  en’ru  neengga'l  sollaathapadi  paarungga'l;  manushanalla,  theavanea  avarai  jeyangko'l'lavea'ndum.  (yoabu  32:13)

அவர்  என்னைப்பார்த்துப்  பேசினதில்லை;  நீங்கள்  சொன்ன  வார்த்தைகளினால்  நான்  அவருக்குப்  பிரதியுத்தரம்  சொல்வதுமில்லை.  (யோபு  32:14)

avar  ennaippaarththup  peasinathillai;  neengga'l  sonna  vaarththaiga'linaal  naan  avarukkup  pirathiyuththaram  solvathumillai.  (yoabu  32:14)

அவர்கள்  கலங்கி,  அப்புறம்  பிரதியுத்தரம்  சொல்லாதிருக்கிறார்கள்;  அவர்களுக்குப்  பேச்சு  அற்றுப்போயிற்று.  (யோபு  32:15)

avarga'l  kalanggi,  appu’ram  pirathiyuththaram  sollaathirukki’raarga'l;  avarga'lukkup  peachchu  at’ruppoayit’ru.  (yoabu  32:15)

அவர்கள்  பேசார்களோ  என்று  காத்திருந்தேன்;  ஆனாலும்  அவர்கள்  அப்புறம்  மறுமொழி  கொடாமலிருந்தபடியினால்,  (யோபு  32:16)

avarga'l  peasaarga'loa  en’ru  kaaththirunthean;  aanaalum  avarga'l  appu’ram  ma’rumozhi  kodaamalirunthapadiyinaal,  (yoabu  32:16)

நானும்  பிரதியுத்தரமாக  எனக்குத்  தோன்றியமட்டும்  சொல்லுவேன்;  நானும்  என்  அபிப்பிராயத்தை  வெளிப்படுத்துவேன்.  (யோபு  32:17)

naanum  pirathiyuththaramaaga  enakkuth  thoan’riyamattum  solluvean;  naanum  en  abippiraayaththai  ve'lippaduththuvean.  (yoabu  32:17)

வார்த்தைகள்  எனக்குள்  நிறைந்திருக்கிறது;  என்  உள்ளத்திலுள்ள  ஆவி  என்னை  நெருக்கி  ஏவுகிறது.  (யோபு  32:18)

vaarththaiga'l  enakku'l  ni’rainthirukki’rathu;  en  u'l'laththilu'l'la  aavi  ennai  nerukki  eavugi’rathu.  (yoabu  32:18)

இதோ,  என்  உள்ளம்  அடைக்கப்பட்டிருந்து,  புதுத்  துருத்திகளை  முதலாய்ப்  பீறப்பண்ணுகிற  புது  ரசத்தைப்போலிருக்கிறது.  (யோபு  32:19)

ithoa,  en  u'l'lam  adaikkappattirunthu,  puthuth  thuruththiga'lai  muthalaayp  pee’rappa'n'nugi’ra  puthu  rasaththaippoalirukki’rathu.  (yoabu  32:19)

நான்  ஆறுதலடையும்படி  பேசுவேன்;  என்  உதடுகளைத்  திறந்து  பிரதியுத்தரம்  சொல்லுவேன்.  (யோபு  32:20)

naan  aa’ruthaladaiyumpadi  peasuvean;  en  uthaduga'laith  thi’ranthu  pirathiyuththaram  solluvean.  (yoabu  32:20)

நான்  ஒருவனுடைய  முகத்தைப்  பாராமலும்,  ஒரு  மனுஷனுக்கும்  இச்சகம்  பேசாமலும்  இருப்பேனாக.  (யோபு  32:21)

naan  oruvanudaiya  mugaththaip  paaraamalum,  oru  manushanukkum  ichchagam  peasaamalum  iruppeanaaga.  (yoabu  32:21)

நான்  இச்சகம்  பேச  அறியேன்;  பேசினால்  என்னை  உண்டாக்கினவர்  சீக்கிரமாய்  என்னை  எடுத்துக்கொள்வார்.  (யோபு  32:22)

naan  ichchagam  peasa  a’riyean;  peasinaal  ennai  u'ndaakkinavar  seekkiramaay  ennai  eduththukko'lvaar.  (yoabu  32:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!