Monday, September 12, 2016

Yoabu 30 | யோபு 30 | Job 30

இப்போதோ  என்னிலும்  இளவயதானவர்கள்  என்னைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்;  இவர்களுடைய  பிதாக்களை  நான்  என்  மந்தையைக்  காக்கும்  நாய்களோடே  வைக்கவுங்கூட  வெட்கப்பட்டிருப்பேன்.  (யோபு  30:1)

ippoathoa  ennilum  i'lavayathaanavarga'l  ennaip  pariyaasampa'n'nugi’raarga'l;  ivarga'ludaiya  pithaakka'lai  naan  en  manthaiyaik  kaakkum  naayga'loadea  vaikkavungkooda  vedkappattiruppean.  (yoabu  30:1)

விருத்தாப்பியத்தினாலே  பெலனற்றுப்போன  அவர்கள்  கைகளினால்  எனக்கு  என்ன  உதவியிருந்தது.  (யோபு  30:2)

viruththaappiyaththinaalea  belanat’ruppoana  avarga'l  kaiga'linaal  enakku  enna  uthaviyirunthathu.  (yoabu  30:2)

குறைச்சலினாலும்  பசியினாலும்  அவர்கள்  வாடி,  வெகுநாளாய்ப்  பாழும்  வெறுமையுமான  அந்தரவெளிக்கு  ஓடிப்போய்,  (யோபு  30:3)

ku’raichchalinaalum  pasiyinaalum  avarga'l  vaadi,  vegunaa'laayp  paazhum  ve’rumaiyumaana  antharave'likku  oadippoay,  (yoabu  30:3)

செடிகளுக்குள்  இருக்கிற  தழைகளைப்  பிடுங்குவார்கள்;  காட்டுப்பூண்டுகளின்  கிழங்குகள்  அவர்களுக்கு  ஆகாரமாயிருந்தது.  (யோபு  30:4)

sediga'lukku'l  irukki’ra  thazhaiga'laip  pidungguvaarga'l;  kaattuppoo'nduga'lin  kizhangguga'l  avarga'lukku  aagaaramaayirunthathu.  (yoabu  30:4)

அவர்கள்  மனுஷரின்  நடுவிலிருந்து  துரத்தப்பட்டார்கள்;  கள்ளனைத்  துரத்துகிறதுபோல்:  கள்ளன்  கள்ளன்  என்று  அவர்களைத்  துரத்திவிட்டார்கள்.  (யோபு  30:5)

avarga'l  manusharin  naduvilirunthu  thuraththappattaarga'l;  ka'l'lanaith  thuraththugi’rathupoal:  ka'l'lan  ka'l'lan  en’ru  avarga'laith  thuraththivittaarga'l.  (yoabu  30:5)

அவர்கள்  பள்ளத்தாக்குகளின்  வெடிப்புகளிலும்,  பூமியின்  கெபிகளிலும்,  கன்மலைகளிலும்  போய்  குடியிருந்தார்கள்.  (யோபு  30:6)

avarga'l  pa'l'laththaakkuga'lin  vedippuga'lilum,  boomiyin  kebiga'lilum,  kanmalaiga'lilum  poay  kudiyirunthaarga'l.  (yoabu  30:6)

செடிகளுக்குள்ளிருந்து  கதறி,  காஞ்சொறிகளின்கீழ்  ஒதுங்கினார்கள்.  (யோபு  30:7)

sediga'lukku'l'lirunthu  katha’ri,  kaagncho’riga'linkeezh  othungginaarga'l.  (yoabu  30:7)

அவர்கள்  மூடரின்  மக்களும்,  நீசரின்  பிள்ளைகளும்,  தேசத்திலிருந்து  துரத்துண்டவர்களுமாய்  இருந்தார்கள்.  (யோபு  30:8)

avarga'l  moodarin  makka'lum,  neesarin  pi'l'laiga'lum,  theasaththilirunthu  thuraththu'ndavarga'lumaay  irunthaarga'l.  (yoabu  30:8)

ஆனாலும்  இப்போது  நான்  அவர்களுக்குப்  பாட்டும்  பழமொழியும்  ஆனேன்.  (யோபு  30:9)

aanaalum  ippoathu  naan  avarga'lukkup  paattum  pazhamozhiyum  aanean.  (yoabu  30:9)

என்னை  அருவருத்து,  எனக்குத்  தூரமாகி,  என்  முகத்துக்கு  முன்பாகத்  துப்பக்  கூசாதிருக்கிறார்கள்.  (யோபு  30:10)

ennai  aruvaruththu,  enakkuth  thooramaagi,  en  mugaththukku  munbaagath  thuppak  koosaathirukki’raarga'l.  (yoabu  30:10)

நான்  கட்டின  கட்டை  அவர்  அவிழ்த்து,  என்னைச்  சிறுமைப்படுத்தினபடியினால்,  அவர்களும்  கடிவாளத்தை  என்  முகத்துக்கு  முன்பாக  உதறிவிட்டார்கள்.  (யோபு  30:11)

naan  kattina  kattai  avar  avizhththu,  ennaich  si’rumaippaduththinapadiyinaal,  avarga'lum  kadivaa'laththai  en  mugaththukku  munbaaga  utha’rivittaarga'l.  (yoabu  30:11)

வலதுபாரிசத்தில்  வாலிபர்  எழும்பி,  என்  கால்களைத்  தவறிவிழப்பண்ணி,  தங்கள்  கேடான  வழிகளை  எனக்கு  நேராக  ஆயத்தப்படுத்துகிறார்கள்.  (யோபு  30:12)

valathupaarisaththil  vaalibar  ezhumbi,  en  kaalga'laith  thava’rivizhappa'n'ni,  thangga'l  keadaana  vazhiga'lai  enakku  nearaaga  aayaththappaduththugi’raarga'l.  (yoabu  30:12)

என்  பாதையைக்  கெடுத்து,  என்  ஆபத்தை  வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்;  அதற்கு  அவர்களுக்கு  ஒத்தாசைபண்ணுகிறவர்கள்  தேவையில்லை.  (யோபு  30:13)

en  paathaiyaik  keduththu,  en  aabaththai  varththikkappa'n'nugi’raarga'l;  atha’rku  avarga'lukku  oththaasaipa'n'nugi’ravarga'l  theavaiyillai.  (yoabu  30:13)

பெரிதான  திறப்புண்டாக்கி,  தாங்கள்  கெடுத்த  வழியில்  புரண்டுவருகிறார்கள்.  (யோபு  30:14)

perithaana  thi’rappu'ndaakki,  thaangga'l  keduththa  vazhiyil  pura'nduvarugi’raarga'l.  (yoabu  30:14)

பயங்கரங்கள்  என்மேல்  திரும்பிவருகிறது,  அவைகள்  காற்றைப்போல  என்  ஆத்துமாவைப்  பின்தொடருகிறது;  என்  சுகவாழ்வு  ஒரு  மேகத்தைப்போல்  கடந்துபோயிற்று.  (யோபு  30:15)

bayanggarangga'l  enmeal  thirumbivarugi’rathu,  avaiga'l  kaat’raippoala  en  aaththumaavaip  pinthodarugi’rathu;  en  sugavaazhvu  oru  meagaththaippoal  kadanthupoayit’ru.  (yoabu  30:15)

ஆகையால்  இப்போது  என்  ஆத்துமா  என்னில்  முறிந்துபோயிற்று;  உபத்திரவத்தின்  நாட்கள்  என்னைப்  பிடித்துக்கொண்டது.  (யோபு  30:16)

aagaiyaal  ippoathu  en  aaththumaa  ennil  mu’rinthupoayit’ru;  ubaththiravaththin  naadka'l  ennaip  pidiththukko'ndathu.  (yoabu  30:16)

இராக்காலத்திலே  என்  எலும்புகள்  துளைக்கப்பட்டு,  என்  நரம்புகளுக்கு  இளைப்பாறுதல்  இல்லாதிருக்கிறது.  (யோபு  30:17)

iraakkaalaththilea  en  elumbuga'l  thu'laikkappattu,  en  narambuga'lukku  i'laippaa’ruthal  illaathirukki’rathu.  (yoabu  30:17)

நோயின்  உக்கிரத்தினால்  என்  உடுப்பு  வேறுபட்டுப்போயிற்று;  அது  என்  அங்கியின்  கழுத்துப்பட்டையைப்போல,  என்னைச்  சுற்றிக்கொண்டது.  (யோபு  30:18)

noayin  ukkiraththinaal  en  uduppu  vea’rupattuppoayit’ru;  athu  en  anggiyin  kazhuththuppattaiyaippoala,  ennaich  sut’rikko'ndathu.  (yoabu  30:18)

சேற்றிலே  தள்ளப்பட்டேன்;  தூளுக்கும்  சாம்பலுக்கும்  ஒப்பானேன்.  (யோபு  30:19)

seat’rilea  tha'l'lappattean;  thoo'lukkum  saambalukkum  oppaanean.  (yoabu  30:19)

உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீர்  எனக்கு  மறுஉத்தரவு  கொடாதிருக்கிறீர்;  கெஞ்சிநிற்கிறேன்,  என்மேல்  பாராமுகமாயிருக்கிறீர்.  (யோபு  30:20)

ummai  noakkik  kooppidugi’rean;  neer  enakku  ma’ruuththaravu  kodaathirukki’reer;  kegnchini’rki’rean,  enmeal  paaraamugamaayirukki’reer.  (yoabu  30:20)

என்மேல்  கொடூரமுள்ளவராக  மாறினீர்;  உம்முடைய  கரத்தின்  வல்லமையால்  என்னை  விரோதிக்கிறீர்.  (யோபு  30:21)

enmeal  kodooramu'l'lavaraaga  maa’rineer;  ummudaiya  karaththin  vallamaiyaal  ennai  viroathikki’reer.  (yoabu  30:21)

நீர்  என்னைத்  தூக்கி,  என்னைக்  காற்றிலே  பறக்கவிட்டு,  என்னைப்  பயத்தினால்  உருகிப்போகப்பண்ணுகிறீர்.  (யோபு  30:22)

neer  ennaith  thookki,  ennaik  kaat’rilea  pa’rakkavittu,  ennaip  bayaththinaal  urugippoagappa'n'nugi’reer.  (yoabu  30:22)

சகல  ஜீவாத்துமாக்களுக்கும்  குறிக்கப்பட்ட  தாவரமாகிய  மரணத்துக்கு  என்னை  ஒப்புக்கொடுப்பீர்  என்று  அறிவேன்.  (யோபு  30:23)

sagala  jeevaaththumaakka'lukkum  ku’rikkappatta  thaavaramaagiya  mara'naththukku  ennai  oppukkoduppeer  en’ru  a’rivean.  (yoabu  30:23)

ஆனாலும்  நான்  யாதொருவனை  அவன்  ஆபத்திலே  தவிக்கப்பண்ணினதும்,  (யோபு  30:24)

aanaalum  naan  yaathoruvanai  avan  aabaththilea  thavikkappa'n'ninathum,  (yoabu  30:24)

துன்னாளைக்  கண்டவனுக்காக  நான்  அழாதிருந்ததும்,  எளியவனுக்காக  என்  ஆத்துமா  வியாகுலப்படாதிருந்ததும்  உண்டானால்,  அவர்  என்  மனுவுக்கு  இடங்கொடாமல்,  எனக்கு  விரோதமாய்த்  தமது  கையை  நீட்டுவாராக.  (யோபு  30:25)

thunnaa'laik  ka'ndavanukkaaga  naan  azhaathirunthathum,  e'liyavanukkaaga  en  aaththumaa  viyaagulappadaathirunthathum  u'ndaanaal,  avar  en  manuvukku  idangkodaamal,  enakku  viroathamaayth  thamathu  kaiyai  neettuvaaraaga.  (yoabu  30:25)

நன்மைக்குக்  காத்திருந்த  எனக்குத்  தீமை  வந்தது;  வெளிச்சத்தை  வரப்  பார்த்துக்கொண்டிருந்த  எனக்கு  இருள்  வந்தது.  (யோபு  30:26)

nanmaikkuk  kaaththiruntha  enakkuth  theemai  vanthathu;  ve'lichchaththai  varap  paarththukko'ndiruntha  enakku  iru'l  vanthathu.  (yoabu  30:26)

என்  குடல்கள்  கொதித்து,  அமராதிருக்கிறது;  உபத்திரவநாட்கள்  என்மேல்  வந்தது.  (யோபு  30:27)

en  kudalga'l  kothiththu,  amaraathirukki’rathu;  ubaththiravanaadka'l  enmeal  vanthathu.  (yoabu  30:27)

வெயில்  படாதிருந்தும்,  நான்  கறுகறுத்துத்  திரிகிறேன்;  நான்  சபையிலிருந்து  எழுந்திருக்கும்போது  அலறுகிறேன்.  (யோபு  30:28)

veyil  padaathirunthum,  naan  ka’ruka’ruththuth  thirigi’rean;  naan  sabaiyilirunthu  ezhunthirukkumpoathu  ala’rugi’rean.  (yoabu  30:28)

நான்  மலைப்பாம்புகளுக்குச்  சகோதரனும்,  கோட்டான்களுக்குத்  தோழனுமானேன்.  (யோபு  30:29)

naan  malaippaambuga'lukkuch  sagoatharanum,  koattaanga'lukkuth  thoazhanumaanean.  (yoabu  30:29)

என்  தோல்  என்மேல்  கறுத்துப்போயிற்று;  என்  எலும்புகள்  உஷ்ணத்தினால்  காய்ந்துபோயிற்று.  (யோபு  30:30)

en  thoal  enmeal  ka’ruththuppoayit’ru;  en  elumbuga'l  ush'naththinaal  kaaynthupoayit’ru.  (yoabu  30:30)

என்  சுரமண்டலம்  புலம்பலாகவும்,  என்  கின்னரம்  அழுகிறவர்களின்  ஓலமாகவும்  மாறின.  (யோபு  30:31)

en  surama'ndalam  pulambalaagavum,  en  kinnaram  azhugi’ravarga'lin  oalamaagavum  maa’rina.  (yoabu  30:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!