Monday, September 12, 2016

Yoabu 29 | யோபு 29 | Job 29

பின்னும்  யோபு  தன்  பிரசங்கவாக்கியத்தைத்  தொடர்ந்து  சொன்னது:  (யோபு  29:1)

pinnum  yoabu  than  pirasanggavaakkiyaththaith  thodarnthu  sonnathu:  (yoabu  29:1)

சென்றுபோன  மாதங்களிலும்,  தேவன்  என்னைக்  காப்பாற்றிவந்த  நாட்களிலும்  எனக்கு  உண்டாயிருந்த  சீர்  இப்பொழுது  இருந்தால்  நலமாயிருக்கும்.  (யோபு  29:2)

sen’rupoana  maathangga'lilum,  theavan  ennaik  kaappaat’rivantha  naadka'lilum  enakku  u'ndaayiruntha  seer  ippozhuthu  irunthaal  nalamaayirukkum.  (yoabu  29:2)

அப்பொழுது  அவர்  தீபம்  என்  தலையின்மேல்  பிரகாசித்தது;  அவர்  அருளின  வெளிச்சத்தினால்  இருளைக்  கடந்துபோனேன்.  (யோபு  29:3)

appozhuthu  avar  theebam  en  thalaiyinmeal  piragaasiththathu;  avar  aru'lina  ve'lichchaththinaal  iru'laik  kadanthupoanean.  (yoabu  29:3)

தேவனுடைய  இரகசியச்செயல்  என்  கூடாரத்தின்மேல்  இருந்தது.  (யோபு  29:4)

theavanudaiya  iragasiyachseyal  en  koodaaraththinmeal  irunthathu.  (yoabu  29:4)

அப்பொழுது  சர்வவல்லவர்  என்னோடிருந்தார்;  என்  பிள்ளைகள்  என்னைச்  சூழ்ந்திருந்தார்கள்.  (யோபு  29:5)

appozhuthu  sarvavallavar  ennoadirunthaar;  en  pi'l'laiga'l  ennaich  soozhnthirunthaarga'l.  (yoabu  29:5)

என்  பாதங்களை  நான்  நெய்யினால்  கழுவினேன்;  கன்மலைகளிலிருந்து  எனக்காக  எண்ணெய்  நதிபோல  ஓடிவந்தது;  அந்தச்  செல்வநாட்களின்  சீர்  இப்போதிருந்தால்  நலமாயிருக்கும்.  (யோபு  29:6)

en  paathangga'lai  naan  neyyinaal  kazhuvinean;  kanmalaiga'lilirunthu  enakkaaga  e'n'ney  nathipoala  oadivanthathu;  anthach  selvanaadka'lin  seer  ippoathirunthaal  nalamaayirukkum.  (yoabu  29:6)

நான்  பட்டணவீதியால்  வாசலுக்குள்  புறப்பட்டுப்போய்,  வீதியில்  என்  ஆசனத்தைப்  போடும்போது,  (யோபு  29:7)

naan  patta'naveethiyaal  vaasalukku'l  pu’rappattuppoay,  veethiyil  en  aasanaththaip  poadumpoathu,  (yoabu  29:7)

வாலிபர்  என்னைக்  கண்டு  ஒளித்துக்கொள்வார்கள்;  முதியோர்  எழுந்திருந்து  நிற்பார்கள்.  (யோபு  29:8)

vaalibar  ennaik  ka'ndu  o'liththukko'lvaarga'l;  muthiyoar  ezhunthirunthu  ni’rpaarga'l.  (yoabu  29:8)

பிரபுக்கள்  பேசுகிறதை  நிறுத்தி,  கையினால்  தங்கள்  வாயைப்  பொத்திக்கொள்வார்கள்.  (யோபு  29:9)

pirabukka'l  peasugi’rathai  ni’ruththi,  kaiyinaal  thangga'l  vaayaip  poththikko'lvaarga'l.  (yoabu  29:9)

பெரியோரின்  சத்தம்  அடங்கி,  அவர்கள்  நாக்கு  அவர்கள்  மேல்வாயோடு  ஒட்டிக்கொள்ளும்.  (யோபு  29:10)

periyoarin  saththam  adanggi,  avarga'l  naakku  avarga'l  mealvaayoadu  ottikko'l'lum.  (yoabu  29:10)

என்னைக்  கேட்ட  காது  என்னைப்  பாக்கியவான்  என்றது;  என்னைக்  கண்ட  கண்  எனக்குச்  சாட்சியிட்டது.  (யோபு  29:11)

ennaik  keatta  kaathu  ennaip  baakkiyavaan  en’rathu;  ennaik  ka'nda  ka'n  enakkuch  saadchiyittathu.  (yoabu  29:11)

முறையிடுகிற  ஏழையையும்,  திக்கற்ற  பிள்ளையையும்,  உதவியற்றவனையும்  இரட்சித்தேன்.  (யோபு  29:12)

mu’raiyidugi’ra  eazhaiyaiyum,  thikkat’ra  pi'l'laiyaiyum,  uthaviyat’ravanaiyum  iradchiththean.  (yoabu  29:12)

கெட்டுப்போக  இருந்தவனுடைய  ஆசீர்வாதம்  என்மேல்  வந்தது;  விதவையின்  இருதயத்தைக்  கெம்பீரிக்கப்பண்ணினேன்.  (யோபு  29:13)

kettuppoaga  irunthavanudaiya  aaseervaatham  enmeal  vanthathu;  vithavaiyin  iruthayaththaik  kembeerikkappa'n'ninean.  (yoabu  29:13)

நீதியைத்  தரித்துக்கொண்டேன்;  அது  என்  உடுப்பாயிருந்தது;  என்  நியாயம்  எனக்குச்  சால்வையும்  பாகையுமாய்  இருந்தது.  (யோபு  29:14)

neethiyaith  thariththukko'ndean;  athu  en  uduppaayirunthathu;  en  niyaayam  enakkuch  saalvaiyum  paagaiyumaay  irunthathu.  (yoabu  29:14)

நான்  குருடனுக்குக்  கண்ணும்,  சப்பாணிக்குக்  காலுமாயிருந்தேன்.  (யோபு  29:15)

naan  kurudanukkuk  ka'n'num,  sappaa'nikkuk  kaalumaayirunthean.  (yoabu  29:15)

நான்  எளியவர்களுக்குத்  தகப்பனாயிருந்து,  நான்  அறியாத  வழக்கை  ஆராய்ந்துபார்த்தேன்.  (யோபு  29:16)

naan  e'liyavarga'lukkuth  thagappanaayirunthu,  naan  a’riyaatha  vazhakkai  aaraaynthupaarththean.  (yoabu  29:16)

நான்  அநியாயக்காரருடைய  கடைவாய்ப்  பற்களை  உடைத்து,  அவர்கள்  பறித்ததை  அவர்கள்  பற்களிலிருந்து  பிடுங்கினேன்.  (யோபு  29:17)

naan  aniyaayakkaararudaiya  kadaivaayp  pa’rka'lai  udaiththu,  avarga'l  pa’riththathai  avarga'l  pa’rka'lilirunthu  pidungginean.  (yoabu  29:17)

என்  கூட்டிலே  நான்  ஜீவித்துப்போவேன்;  என்  நாட்களை  மணலத்தனையாய்ப்  பெருகப்பண்ணுவேன்  என்றேன்.  (யோபு  29:18)

en  koottilea  naan  jeeviththuppoavean;  en  naadka'lai  ma'nalaththanaiyaayp  perugappa'n'nuvean  en’rean.  (yoabu  29:18)

என்  வேர்  தண்ணீர்களின்  ஓரமாய்ப்  படர்ந்தது;  என்  கிளையின்மேல்  பனி  இராமுழுதும்  தங்கியிருந்தது.  (யோபு  29:19)

en  vear  tha'n'neerga'lin  oaramaayp  padarnthathu;  en  ki'laiyinmeal  pani  iraamuzhuthum  thanggiyirunthathu.  (yoabu  29:19)

என்  மகிமை  என்னில்  செழித்தோங்கி,  என்  கையிலுள்ள  என்  வில்  புதுப்பெலன்  கொண்டது.  (யோபு  29:20)

en  magimai  ennil  sezhiththoanggi,  en  kaiyilu'l'la  en  vil  puthupbelan  ko'ndathu.  (yoabu  29:20)

எனக்குச்  செவிகொடுத்துக்  காத்திருந்தார்கள்;  என்  ஆலோசனையைக்  கேட்டு  மவுனமாயிருந்தார்கள்.  (யோபு  29:21)

enakkuch  sevikoduththuk  kaaththirunthaarga'l;  en  aaloasanaiyaik  keattu  mavunamaayirunthaarga'l.  (yoabu  29:21)

என்  பேச்சுக்குப்  பேசாமலிருந்தார்கள்;  என்  வசனம்  அவர்கள்மேல்  துளிதுளியாய்  விழுந்தது.  (யோபு  29:22)

en  peachchukkup  peasaamalirunthaarga'l;  en  vasanam  avarga'lmeal  thu'lithu'liyaay  vizhunthathu.  (yoabu  29:22)

மழைக்குக்  காத்திருக்கிறதுபோல்  எனக்குக்  காத்திருந்து,  பின்மாரிக்கு  ஆசையுள்ளவர்கள்போல்  தங்கள்  வாயை  ஆவென்று  திறந்திருந்தார்கள்.  (யோபு  29:23)

mazhaikkuk  kaaththirukki’rathupoal  enakkuk  kaaththirunthu,  pinmaarikku  aasaiyu'l'lavarga'lpoal  thangga'l  vaayai  aaven’ru  thi’ranthirunthaarga'l.  (yoabu  29:23)

நான்  அவர்களைப்  பார்த்து  நகைக்கும்போது,  அவர்கள்  துணிகரங்கொள்ளவில்லை;  என்  முகக்களையை  மாறச்செய்யவும்  இல்லை.  (யோபு  29:24)

naan  avarga'laip  paarththu  nagaikkumpoathu,  avarga'l  thu'nigarangko'l'lavillai;  en  mugakka'laiyai  maa’rachseyyavum  illai.  (yoabu  29:24)

அவர்கள்  வழியேபோக  எனக்குச்  சித்தமாகும்போது,  நான்  தலைவனாய்  உட்கார்ந்து,  இராணுவத்துக்குள்  ராஜாவைப்போலும்,  துக்கித்தவர்களைத்  தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும்  இருந்தேன்.  (யோபு  29:25)

avarga'l  vazhiyeapoaga  enakkuch  siththamaagumpoathu,  naan  thalaivanaay  udkaarnthu,  iraa'nuvaththukku'l  raajaavaippoalum,  thukkiththavarga'laith  theat’raravupa'n'nugi’ravanaippoalum  irunthean.  (yoabu  29:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!