Monday, September 12, 2016

Yoabu 28 | யோபு 28 | Job 28

வெள்ளிக்கு  விளைவிடம்  உண்டு,  பொன்னுக்குப்  புடமிடும்  ஸ்தலமுமுண்டு.  (யோபு  28:1)

ve'l'likku  vi'laividam  u'ndu,  ponnukkup  pudamidum  sthalamumu'ndu.  (yoabu  28:1)

இரும்பு  மண்ணிலிருந்து  எடுக்கப்படும்;  செம்பு  கற்களில்  உருக்கி  எடுக்கப்படும்.  (யோபு  28:2)

irumbu  ma'n'nilirunthu  edukkappadum;  sembu  ka’rka'lil  urukki  edukkappadum.  (yoabu  28:2)

மனிதன்  அந்தகாரத்திலும்  மரண  இருளிலும்  இருக்கிற  கற்களைக்  கடையாந்தரமட்டும்  ஆராய்ந்து  தேடி,  இருளுக்கும்  அங்கே  முடிவுண்டாக்குகிறான்.  (யோபு  28:3)

manithan  anthagaaraththilum  mara'na  iru'lilum  irukki’ra  ka’rka'laik  kadaiyaantharamattum  aaraaynthu  theadi,  iru'lukkum  anggea  mudivu'ndaakkugi’raan.  (yoabu  28:3)

கடக்கக்கூடாததும்  நிலையாததுமான  ஆறு  எழும்பினாலும்,  உழைப்பாளியானவன்  அதை  மனுஷரால்  வற்றிப்போகப்பண்ணிச்  செல்லுகிறான்.  (யோபு  28:4)

kadakkakkoodaathathum  nilaiyaathathumaana  aa’ru  ezhumbinaalum,  uzhaippaa'liyaanavan  athai  manusharaal  vat’rippoagappa'n'nich  sellugi’raan.  (yoabu  28:4)

பூமியின்மேல்  ஆகாரம்  விளையும்;  அதின்  கீழிடங்களிலிருக்கிறவைகளோ,  அக்கினியால்  மாறினதுபோலிருக்கும்.  (யோபு  28:5)

boomiyinmeal  aagaaram  vi'laiyum;  athin  keezhidangga'lilirukki’ravaiga'loa,  akkiniyaal  maa’rinathupoalirukkum.  (yoabu  28:5)

அதின்  கல்லுகளில்  இந்திரநீலம்  விளையும்;  அதின்  பொடியில்  பொன்பொடிகளும்  உண்டாயிருக்கும்.  (யோபு  28:6)

athin  kalluga'lil  inthiraneelam  vi'laiyum;  athin  podiyil  ponpodiga'lum  u'ndaayirukkum.  (yoabu  28:6)

ஒரு  வழியுண்டு,  அது  ஒரு  பட்சிக்கும்  தெரியாது;  வல்லூறின்  கண்ணும்  அதைக்  கண்டதில்லை;  (யோபு  28:7)

oru  vazhiyu'ndu,  athu  oru  padchikkum  theriyaathu;  valloo’rin  ka'n'num  athaik  ka'ndathillai;  (yoabu  28:7)

துஷ்டமிருகங்களின்  கால்  அதில்  படவில்லை;  சிங்கம்  அதைக்  கடந்ததில்லை.  (யோபு  28:8)

thushdamirugangga'lin  kaal  athil  padavillai;  singgam  athaik  kadanthathillai.  (yoabu  28:8)

அவன்  தன்  கைகளைக்  கற்பாறையின்மேல்  நீட்டி,  மலைகளை  வேரோடே  புரட்டுகிறான்.  (யோபு  28:9)

avan  than  kaiga'laik  ka’rpaa’raiyinmeal  neetti,  malaiga'lai  vearoadea  purattugi’raan.  (yoabu  28:9)

கன்மலைகளுக்குள்ளும்  நீர்க்கால்களை  வெட்டுகிறான்;  அவன்  கண்  விலையுயர்ந்த  எல்லாவற்றையும்  காணும்.  (யோபு  28:10)

kanmalaiga'lukku'l'lum  neerkkaalga'lai  vettugi’raan;  avan  ka'n  vilaiyuyarntha  ellaavat’raiyum  kaa'num.  (yoabu  28:10)

ஒரு  துளியும்  கசியாதபடி  ஆறுகளை  அடைக்கிறான்;  மறைவிடத்திலிருக்கிறதை  வெளிச்சத்திலே  கொண்டுவருகிறான்.  (யோபு  28:11)

oru  thu'liyum  kasiyaathapadi  aa’ruga'lai  adaikki’raan;  ma’raividaththilirukki’rathai  ve'lichchaththilea  ko'nduvarugi’raan.  (yoabu  28:11)

ஆனாலும்  ஞானம்  கண்டெடுக்கப்படுவது  எங்கே?  புத்தி  விளைகிற  இடம்  எது?  (யோபு  28:12)

aanaalum  gnaanam  ka'ndedukkappaduvathu  enggea?  buththi  vi'laigi’ra  idam  ethu?  (yoabu  28:12)

அதின்  விலை  மனுஷனுக்குத்  தெரியாது;  அது  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  அகப்படுகிறதில்லை.  (யோபு  28:13)

athin  vilai  manushanukkuth  theriyaathu;  athu  jeevanu'l'loarudaiya  theasaththilea  agappadugi’rathillai.  (yoabu  28:13)

ஆழமானது:  அது  என்னிடத்தில்  இல்லையென்கிறது;  சமுத்திரமானதும்,  அது  என்னிடத்தில்  இல்லையென்கிறது.  (யோபு  28:14)

aazhamaanathu:  athu  ennidaththil  illaiyengi’rathu;  samuththiramaanathum,  athu  ennidaththil  illaiyengi’rathu.  (yoabu  28:14)

அதற்கு  ஈடாகத்  தங்கத்தைக்  கொடுக்கவும்,  அதற்குக்  கிரயமாக  வெள்ளியை  நிறுக்கவும்  கூடாது.  (யோபு  28:15)

atha’rku  eedaagath  thanggaththaik  kodukkavum,  atha’rkuk  kirayamaaga  ve'l'liyai  ni’rukkavum  koodaathu.  (yoabu  28:15)

ஓப்பீரின்  தங்கமும்,  விலையேறப்பெற்ற  கோமேதகமும்,  இந்திர  நீலக்கல்லும்  அதற்கு  ஈடல்ல.  (யோபு  28:16)

oappeerin  thanggamum,  vilaiyea’rappet’ra  koameathagamum,  inthira  neelakkallum  atha’rku  eedalla.  (yoabu  28:16)

பொன்னும்  பளிங்கும்  அதற்கு  ஒப்பல்ல;  பசும்பொன்னாபரணங்களுக்கு  அதை  மாற்றக்கூடாது.  (யோபு  28:17)

ponnum  pa'linggum  atha’rku  oppalla;  pasumponnaabara'nangga'lukku  athai  maat’rakkoodaathu.  (yoabu  28:17)

பவளத்தையும்  ஸ்படிகத்தையும்  அத்தோடே  ஒப்பிட்டுப்  பேசலாகாது;  முத்துக்களைப்பார்க்கிலும்  ஞானத்தின்  விலை  உயர்ந்தது.  (யோபு  28:18)

pava'laththaiyum  spadigaththaiyum  aththoadea  oppittup  peasalaagaathu;  muththukka'laippaarkkilum  gnaanaththin  vilai  uyarnthathu.  (yoabu  28:18)

எத்தியோப்பியாவின்  புஷ்பராகம்  அதற்கு  நிகரல்ல;  பசும்பொன்னும்  அதற்குச்  சரியல்ல.  (யோபு  28:19)

eththiyoappiyaavin  pushparaagam  atha’rku  nigaralla;  pasumponnum  atha’rkuch  sariyalla.  (yoabu  28:19)

இப்படியிருக்க,  ஞானம்  எங்கேயிருந்து  வரும்;  புத்தி  தங்கும்  இடம்  எங்கே?  (யோபு  28:20)

ippadiyirukka,  gnaanam  enggeayirunthu  varum;  buththi  thanggum  idam  enggea?  (yoabu  28:20)

அது  ஜீவனுள்ள  சகலருடைய  கண்களுக்கும்  ஒளித்தும்,  ஆகாசத்துப்  பறவைகளுக்கு  மறைந்தும்  இருக்கிறது.  (யோபு  28:21)

athu  jeevanu'l'la  sagalarudaiya  ka'nga'lukkum  o'liththum,  aagaasaththup  pa’ravaiga'lukku  ma’rainthum  irukki’rathu.  (yoabu  28:21)

நாசமும்  மரணமும்,  நாங்கள்  எங்கள்  காதுகளினாலேமாத்திரம்  அதின்  கீர்த்தியைக்  கேட்டோம்  என்கிறது.  (யோபு  28:22)

naasamum  mara'namum,  naangga'l  engga'l  kaathuga'linaaleamaaththiram  athin  keerththiyaik  keattoam  engi’rathu.  (yoabu  28:22)

தேவனோ  அதின்  வழியை  அறிவார்,  அதின்  ஸ்தானம்  அவருக்கே  தெரியும்.  (யோபு  28:23)

theavanoa  athin  vazhiyai  a’rivaar,  athin  sthaanam  avarukkea  theriyum.  (yoabu  28:23)

அவர்  பூமியின்  கடையாந்தரங்களைப்  பார்த்து,  வானங்களின்கீழ்  இருக்கிறதையெல்லாம்  காண்கிறார்.  (யோபு  28:24)

avar  boomiyin  kadaiyaantharangga'laip  paarththu,  vaanangga'linkeezh  irukki’rathaiyellaam  kaa'ngi’raar.  (yoabu  28:24)

அவர்  காற்றுக்கு  அதின்  நிறையை  நியமித்து,  ஜலத்துக்கு  அதின்  அளவைப்  பிரமாணித்து,  (யோபு  28:25)

avar  kaat’rukku  athin  ni’raiyai  niyamiththu,  jalaththukku  athin  a'lavaip  piramaa'niththu,  (yoabu  28:25)

மழைக்குத்  திட்டத்தையும்,  இடிமுழக்கத்தோடே  கூடிய  மின்னலுக்கு  வழியையும்  ஏற்படுத்துகிறார்.  (யோபு  28:26)

mazhaikkuth  thittaththaiyum,  idimuzhakkaththoadea  koodiya  minnalukku  vazhiyaiyum  ea’rpaduththugi’raar.  (yoabu  28:26)

அவர்  அதைப்  பார்த்துக்  கணக்கிட்டார்;  அதை  ஆராய்ந்து  ஆயத்தப்படுத்தி,  (யோபு  28:27)

avar  athaip  paarththuk  ka'nakkittaar;  athai  aaraaynthu  aayaththappaduththi,  (yoabu  28:27)

மனுஷனை  நோக்கி:  இதோ,  ஆண்டவருக்குப்  பயப்படுவதே  ஞானம்;  பொல்லாப்பை  விட்டு  விலகுவதே  புத்தி  என்றார்  என்று  சொன்னான்.  (யோபு  28:28)

manushanai  noakki:  ithoa,  aa'ndavarukkup  bayappaduvathea  gnaanam;  pollaappai  vittu  vilaguvathea  buththi  en’raar  en’ru  sonnaan.  (yoabu  28:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!