Monday, September 12, 2016

Yoabu 27 | யோபு 27 | Job 27

யோபு  பின்னும்  தன்  பிரசங்கவாக்கியத்தைத்  தொடர்ந்து  சொன்னது:  (யோபு  27:1)

yoabu  pinnum  than  pirasanggavaakkiyaththaith  thodarnthu  sonnathu:  (yoabu  27:1)

என்  சுவாசம்  என்னிலும்,  தேவன்  தந்த  ஆவி  என்  நாசியிலும்  இருக்குமட்டும்,  (யோபு  27:2)

en  suvaasam  ennilum,  theavan  thantha  aavi  en  naasiyilum  irukkumattum,  (yoabu  27:2)

என்  உதடுகள்  தீமையைச்  சொல்வதுமில்லை;  என்  நாக்கு  கபடம்  பேசுவதுமில்லையென்று,  (யோபு  27:3)

en  uthaduga'l  theemaiyaich  solvathumillai;  en  naakku  kabadam  peasuvathumillaiyen’ru,  (yoabu  27:3)

என்  நியாயத்தைத்  தள்ளிவிடுகிற  தேவனும்,  என்  ஆத்துமாவைக்  கசப்பாக்குகிற  சர்வவல்லவருமானவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (யோபு  27:4)

en  niyaayaththaith  tha'l'lividugi’ra  theavanum,  en  aaththumaavaik  kasappaakkugi’ra  sarvavallavarumaanavarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean.  (yoabu  27:4)

நீங்கள்  பேசுகிறது  நீதியென்று  நான்  ஒத்துக்கொள்வது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  என்  ஆவி  பிரியுமட்டும்  என்  உத்தமத்தை  என்னைவிட்டு  விலக்கேன்.  (யோபு  27:5)

neengga'l  peasugi’rathu  neethiyen’ru  naan  oththukko'lvathu  enakkuth  thooramaayiruppathaaga;  en  aavi  piriyumattum  en  uththamaththai  ennaivittu  vilakkean.  (yoabu  27:5)

என்  நீதியைக்  கெட்டியாய்ப்  பிடித்திருக்கிறேன்;  அதை  நான்  விட்டுவிடேன்;  நான்  உயிரோடிருக்குமளவும்  என்  இருதயம்  என்னை  நிந்திக்காது.  (யோபு  27:6)

en  neethiyaik  kettiyaayp  pidiththirukki’rean;  athai  naan  vittuvidean;  naan  uyiroadirukkuma'lavum  en  iruthayam  ennai  ninthikkaathu.  (yoabu  27:6)

என்  பகைஞன்  ஆகாதவனைப்போலும்,  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவன்  அக்கிரமக்காரனைப்போலும்  இருப்பானாக.  (யோபு  27:7)

en  pagaignan  aagaathavanaippoalum,  enakku  viroathamaay  ezhumbugi’ravan  akkiramakkaaranaippoalum  iruppaanaaga.  (yoabu  27:7)

மாயக்காரன்  பொருளைத்  தேடி  வைத்திருந்தாலும்,  தேவன்  அவன்  ஆத்துமாவை  எடுத்துக்கொள்ளும்போது,  அவன்  நம்பிக்கை  என்ன?  (யோபு  27:8)

maayakkaaran  poru'laith  theadi  vaiththirunthaalum,  theavan  avan  aaththumaavai  eduththukko'l'lumpoathu,  avan  nambikkai  enna?  (yoabu  27:8)

ஆபத்து  அவன்மேல்  வரும்போது,  தேவன்  அவன்  கூப்பிடுதலைக்  கேட்பாரோ?  (யோபு  27:9)

aabaththu  avanmeal  varumpoathu,  theavan  avan  kooppiduthalaik  keadpaaroa?  (yoabu  27:9)

அவன்  சர்வவல்லவர்மேல்  மனமகிழ்ச்சியாயிருப்பானோ?  அவன்  எப்பொழுதும்  தேவனைத்  தொழுதுகொண்டிருப்பானோ?  (யோபு  27:10)

avan  sarvavallavarmeal  manamagizhchchiyaayiruppaanoa?  avan  eppozhuthum  theavanaith  thozhuthuko'ndiruppaanoa?  (yoabu  27:10)

தேவனுடைய  கரத்தின்  கிரியையைக்  குறித்து  உங்களுக்கு  உபதேசிப்பேன்;  சர்வவல்லவரிடத்தில்  இருக்கிறதை  நான்  மறைக்கமாட்டேன்.  (யோபு  27:11)

theavanudaiya  karaththin  kiriyaiyaik  ku’riththu  ungga'lukku  ubatheasippean;  sarvavallavaridaththil  irukki’rathai  naan  ma’raikkamaattean.  (yoabu  27:11)

இதோ,  நீங்கள்  எல்லாரும்  அதைக்  கண்டிருந்தும்,  நீங்கள்  இத்தனை  வீண்  எண்ணங்கொண்டிருக்கிறது  என்ன?  (யோபு  27:12)

ithoa,  neengga'l  ellaarum  athaik  ka'ndirunthum,  neengga'l  iththanai  vee'n  e'n'nangko'ndirukki’rathu  enna?  (yoabu  27:12)

பொல்லாத  மனுஷனுக்குத்  தேவனிடத்திலிருந்து  வருகிற  பங்கும்,  கொடூரக்காரர்  சர்வவல்லவரால்  அடைகிற  சுதந்தரமும்  என்னவெனில்,  (யோபு  27:13)

pollaatha  manushanukkuth  theavanidaththilirunthu  varugi’ra  panggum,  kodoorakkaarar  sarvavallavaraal  adaigi’ra  suthantharamum  ennavenil,  (yoabu  27:13)

அவனுடைய  குமாரர்  பெருகினால்  பட்டயத்துக்கு  இரையாவார்கள்;  அவன்  கர்ப்பப்பிறப்புகள்  ஆகாரத்தினால்  திருப்தியாவதில்லை.  (யோபு  27:14)

avanudaiya  kumaarar  peruginaal  pattayaththukku  iraiyaavaarga'l;  avan  karppappi’rappuga'l  aagaaraththinaal  thirupthiyaavathillai.  (yoabu  27:14)

அவனுக்கு  மீதியானவர்கள்  செத்துப்  புதைக்கப்படுவார்கள்;  அவனுடைய  விதவைகள்  புலம்புவதில்லை.  (யோபு  27:15)

avanukku  meethiyaanavarga'l  seththup  puthaikkappaduvaarga'l;  avanudaiya  vithavaiga'l  pulambuvathillai.  (yoabu  27:15)

அவன்  புழுதியைப்போலப்  பணத்தைக்  குவித்துக்கொண்டாலும்,  மண்ணைப்போல  வஸ்திரங்களைச்  சவதரித்தாலும்,  (யோபு  27:16)

avan  puzhuthiyaippoalap  pa'naththaik  kuviththukko'ndaalum,  ma'n'naippoala  vasthirangga'laich  savathariththaalum,  (yoabu  27:16)

அவன்  சவதரித்ததை  நீதிமான்  உடுத்திக்கொண்டு,  குற்றமில்லாதவன்  அவன்  பணத்தைப்  பகிர்ந்துகொள்ளுவான்.  (யோபு  27:17)

avan  savathariththathai  neethimaan  uduththikko'ndu,  kut’ramillaathavan  avan  pa'naththaip  pagirnthuko'l'luvaan.  (yoabu  27:17)

அவனுடைய  வீடு  பொட்டுப்பூச்சி  கட்டின  வீட்டைப்போலும்,  காவல்காக்கிறவன்  போட்ட  குடிசையைப்போலுமாகும்.  (யோபு  27:18)

avanudaiya  veedu  pottuppoochchi  kattina  veettaippoalum,  kaavalkaakki’ravan  poatta  kudisaiyaippoalumaagum.  (yoabu  27:18)

அவன்  ஐசுவரியவானாய்த்  தூங்கிக்  கிடந்து,  ஒன்றும்  பறிகொடாதேபோனாலும்,  அவன்  தன்  கண்களைத்  திறக்கும்போது  ஒன்றுமில்லாதிருக்கும்.  (யோபு  27:19)

avan  aisuvariyavaanaayth  thoonggik  kidanthu,  on’rum  pa’rikodaatheapoanaalum,  avan  than  ka'nga'laith  thi’rakkumpoathu  on’rumillaathirukkum.  (yoabu  27:19)

வெள்ளத்தைப்போலத்  திகில்கள்  அவனை  வாரிக்கொண்டுபோகும்;  இராக்காலத்தில்  பெருங்காற்று  அவனை  அடித்துக்கொண்டுபோகும்.  (யோபு  27:20)

ve'l'laththaippoalath  thigilga'l  avanai  vaarikko'ndupoagum;  iraakkaalaththil  perungkaat’ru  avanai  adiththukko'ndupoagum.  (yoabu  27:20)

கொண்டல்காற்று  அவனைத்  தூக்கிக்கொண்டுபோக,  அவன்  போய்விடுவான்;  அது  அவனை  அவன்  ஸ்தலத்திலிருந்து  தள்ளிக்கொண்டுபோகும்.  (யோபு  27:21)

ko'ndalkaat’ru  avanaith  thookkikko'ndupoaga,  avan  poayviduvaan;  athu  avanai  avan  sthalaththilirunthu  tha'l'likko'ndupoagum.  (yoabu  27:21)

அவர்  இவைகளை  அவன்மேல்  வரப்பண்ணி  அவனைத்  தப்பவிடாதிருப்பார்;  அவருடைய  கைக்குத்  தப்பியோடப்  பார்ப்பான்.  (யோபு  27:22)

avar  ivaiga'lai  avanmeal  varappa'n'ni  avanaith  thappavidaathiruppaar;  avarudaiya  kaikkuth  thappiyoadap  paarppaan.  (yoabu  27:22)

ஜனங்கள்  அவனைப்  பார்த்துக்  கைகொட்டி,  அவனை  அவன்  ஸ்தலத்தைவிட்டு  வெருட்டிவிடுவார்கள்.  (யோபு  27:23)

janangga'l  avanaip  paarththuk  kaikotti,  avanai  avan  sthalaththaivittu  veruttividuvaarga'l.  (yoabu  27:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!