Monday, September 12, 2016

Yoabu 25 | யோபு 25 | Job 25

அப்பொழுது  சூகியனான  பில்தாத்  பிரதியுத்தரமாக:  (யோபு  25:1)

appozhuthu  soogiyanaana  bilthaath  pirathiyuththaramaaga:  (yoabu  25:1)

அதிகாரமும்  பயங்கரமும்  அவரிடத்தில்  இருக்கிறது;  அவர்  தமது  உன்னதமான  ஸ்தலங்களில்  சமாதானத்தை  உண்டாக்குகிறார்.  (யோபு  25:2)

athigaaramum  bayanggaramum  avaridaththil  irukki’rathu;  avar  thamathu  unnathamaana  sthalangga'lil  samaathaanaththai  u'ndaakkugi’raar.  (yoabu  25:2)

அவருடைய  சேனைகளுக்குத்  தொகையுண்டோ?  அவருடைய  வெளிச்சம்  யார்மேல்  உதிக்காமலிருக்கிறது?  (யோபு  25:3)

avarudaiya  seanaiga'lukkuth  thogaiyu'ndoa?  avarudaiya  ve'lichcham  yaarmeal  uthikkaamalirukki’rathu?  (yoabu  25:3)

இப்படியிருக்க,  மனுஷன்  தேவனுக்கு  முன்பாக  நீதிமானாயிருப்பது  எப்படி?  ஸ்திரீயினிடத்தில்  பிறந்தவன்  சுத்தமாயிருப்பது  எப்படி?  (யோபு  25:4)

ippadiyirukka,  manushan  theavanukku  munbaaga  neethimaanaayiruppathu  eppadi?  sthireeyinidaththil  pi’ranthavan  suththamaayiruppathu  eppadi?  (yoabu  25:4)

சந்திரனை  அண்ணாந்துபாரும்,  அதுவும்  பிரகாசியாமலிருக்கிறது;  நட்சத்திரங்களும்  அவர்  பார்வைக்குச்  சுத்தமானவைகள்  அல்ல.  (யோபு  25:5)

santhiranai  a'n'naanthupaarum,  athuvum  piragaasiyaamalirukki’rathu;  nadchaththirangga'lum  avar  paarvaikkuch  suththamaanavaiga'l  alla.  (yoabu  25:5)

புழுவாயிருக்கிற  மனிதனும்,  பூச்சியாயிருக்கிற  மனுபுத்திரனும்  எம்மாத்திரம்  என்றான்.  (யோபு  25:6)

puzhuvaayirukki’ra  manithanum,  poochchiyaayirukki’ra  manupuththiranum  emmaaththiram  en’raan.  (yoabu  25:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!