Monday, September 12, 2016

Yoabu 24 | யோபு 24 | Job 24

சர்வவல்லவருக்குக்  காலங்கள்  மறைக்கப்படாதிருக்க,  அவரை  அறிந்தவர்கள்  அவர்  நியமித்த  நாட்களை  அறியாதிருக்கிறதென்ன?  (யோபு  24:1)

sarvavallavarukkuk  kaalangga'l  ma’raikkappadaathirukka,  avarai  a’rinthavarga'l  avar  niyamiththa  naadka'lai  a’riyaathirukki’rathenna?  (yoabu  24:1)

சிலர்  எல்லைக்குறிப்புகளை  ஒற்றி,  மந்தைகளைப்  பலாத்காரமாய்ச்  சாய்த்துக்கொண்டுபோய்ப்  பட்சிக்கிறார்கள்.  (யோபு  24:2)

silar  ellaikku’rippuga'lai  ot’ri,  manthaiga'laip  balaathkaaramaaych  saayththukko'ndupoayp  padchikki’raarga'l.  (yoabu  24:2)

தாய்  தகப்பன்  இல்லாதவர்களின்  கழுதையை  ஓட்டிக்கொண்டுபோய்,  விதவையின்  மாட்டை  ஈடாக  எடுத்துக்கொள்ளுகிறார்கள்.  (யோபு  24:3)

thaay  thagappan  illaathavarga'lin  kazhuthaiyai  oattikko'ndupoay,  vithavaiyin  maattai  eedaaga  eduththukko'l'lugi’raarga'l.  (yoabu  24:3)

தேசத்தில்  சிறுமைப்பட்டவர்கள்  ஏகமாய்  ஒளித்துக்கொள்ளத்தக்கதாக,  எளிமையானவர்களை  வழியைவிட்டு  விலக்குகிறார்கள்.  (யோபு  24:4)

theasaththil  si’rumaippattavarga'l  eagamaay  o'liththukko'l'laththakkathaaga,  e'limaiyaanavarga'lai  vazhiyaivittu  vilakkugi’raarga'l.  (yoabu  24:4)

இதோ,  அவர்கள்  காட்டுக்கழுதைகளைப்போல  இரைதேட  அதிகாலமே  தங்கள்  வேலைக்குப்  புறப்படுகிறார்கள்;  வனாந்தரவெளிதான்  அவர்களுக்கும்  அவர்கள்  பிள்ளைகளுக்கும்  ஆகாரம்  கொடுக்கவேண்டும்.  (யோபு  24:5)

ithoa,  avarga'l  kaattukkazhuthaiga'laippoala  iraitheada  athikaalamea  thangga'l  vealaikkup  pu’rappadugi’raarga'l;  vanaantharave'lithaan  avarga'lukkum  avarga'l  pi'l'laiga'lukkum  aagaaram  kodukkavea'ndum.  (yoabu  24:5)

துன்மார்க்கனுடைய  வயலில்  அவர்கள்  அவனுக்காக  அறுப்பு  அறுத்து,  அவனுடைய  திராட்சத்தோட்டத்தின்  பழங்களைச்  சேர்க்கிறார்கள்.  (யோபு  24:6)

thunmaarkkanudaiya  vayalil  avarga'l  avanukkaaga  a’ruppu  a’ruththu,  avanudaiya  thiraadchaththoattaththin  pazhangga'laich  searkki’raarga'l.  (yoabu  24:6)

குளிரிலே  போர்த்துக்கொள்ளுகிறதற்கு  ஒன்றும்  இல்லாததினால்,  வஸ்திரமில்லாமல்  இராத்தங்கி,  (யோபு  24:7)

ku'lirilea  poarththukko'l'lugi’ratha’rku  on’rum  illaathathinaal,  vasthiramillaamal  iraaththanggi,  (yoabu  24:7)

மலைகளிலிருந்துவரும்  மழைகளிலே  நனைந்து,  ஒதுக்கிடமில்லாததினால்  கன்மலையிலே  அண்டிக்கொள்ளுகிறார்கள்.  (யோபு  24:8)

malaiga'lilirunthuvarum  mazhaiga'lilea  nanainthu,  othukkidamillaathathinaal  kanmalaiyilea  a'ndikko'l'lugi’raarga'l.  (yoabu  24:8)

அவர்களோ  தகப்பனில்லாத  பிள்ளையை  முலையைவிட்டுப்  பறித்து,  தரித்திரன்  போர்த்துக்கொண்டிருக்கிறதை  அடகுவாங்குகிறார்கள்.  (யோபு  24:9)

avarga'loa  thagappanillaatha  pi'l'laiyai  mulaiyaivittup  pa’riththu,  thariththiran  poarththukko'ndirukki’rathai  adaguvaanggugi’raarga'l.  (yoabu  24:9)

அவனை  வஸ்திரமில்லாமல்  நடக்கவும்,  பட்டினியாய்  அரிக்கட்டுகளைச்  சுமக்கவும்,  (யோபு  24:10)

avanai  vasthiramillaamal  nadakkavum,  pattiniyaay  arikkattuga'laich  sumakkavum,  (yoabu  24:10)

தங்கள்  மதில்களுக்குள்ளே  செக்காட்டவும்,  தாகத்தவனமாய்  ஆலையாட்டவும்  பண்ணுகிறார்கள்.  (யோபு  24:11)

thangga'l  mathilga'lukku'l'lea  sekkaattavum,  thaagaththavanamaay  aalaiyaattavum  pa'n'nugi’raarga'l.  (yoabu  24:11)

ஊரில்  மனுஷர்  தவிக்கிறார்கள்,  குற்றுயிராய்க்  கிடக்கிறவர்களின்  ஆத்துமா  கூப்பிடுகிறது;  என்றாலும்,  தேவன்  அதைக்  குற்றமாக  அவர்கள்மேல்  சுமத்துகிறதில்லை.  (யோபு  24:12)

ooril  manushar  thavikki’raarga'l,  kut’ruyiraayk  kidakki’ravarga'lin  aaththumaa  kooppidugi’rathu;  en’raalum,  theavan  athaik  kut’ramaaga  avarga'lmeal  sumaththugi’rathillai.  (yoabu  24:12)

அவர்கள்  வெளிச்சத்துக்கு  விரோதமாய்  நடக்கிறவர்களின்  கூட்டத்தார்;  அவர்கள்  அவருடைய  வழிகளை  அறியாமலும்,  அவருடைய  பாதைகளில்  தரிக்காமலும்  இருக்கிறார்கள்.  (யோபு  24:13)

avarga'l  ve'lichchaththukku  viroathamaay  nadakki’ravarga'lin  koottaththaar;  avarga'l  avarudaiya  vazhiga'lai  a’riyaamalum,  avarudaiya  paathaiga'lil  tharikkaamalum  irukki’raarga'l.  (yoabu  24:13)

கொலைபாதகன்  பொழுது  விடிகிறபோது  எழுந்து,  சிறுமையும்  எளிமையுமானவனைக்  கொன்று,  இராக்காலத்திலே  திருடனைப்போல்  திரிகிறான்.  (யோபு  24:14)

kolaipaathagan  pozhuthu  vidigi’rapoathu  ezhunthu,  si’rumaiyum  e'limaiyumaanavanaik  kon’ru,  iraakkaalaththilea  thirudanaippoal  thirigi’raan.  (yoabu  24:14)

விபசாரனுடைய  கண்  மாலை  மயங்குகிற  வேளைக்குக்  காத்திருந்து:  என்னை  ஒரு  கண்ணும்  காணமாட்டாதென்று  முகத்தை  மூடிக்கொள்ளுகிறான்.  (யோபு  24:15)

vibasaaranudaiya  ka'n  maalai  mayanggugi’ra  vea'laikkuk  kaaththirunthu:  ennai  oru  ka'n'num  kaa'namaattaathen’ru  mugaththai  moodikko'l'lugi’raan.  (yoabu  24:15)

அவர்கள்  பகலில்  அடையாளம்  பார்த்த  வீடுகளை  இருட்டிலே  கன்னமிடுகிறார்கள்;  அவர்கள்  வெளிச்சத்தை  அறியார்கள்.  (யோபு  24:16)

avarga'l  pagalil  adaiyaa'lam  paarththa  veeduga'lai  iruttilea  kannamidugi’raarga'l;  avarga'l  ve'lichchaththai  a’riyaarga'l.  (yoabu  24:16)

விடியுங்காலமும்  அவர்களுக்கு  மரண  இருள்போல்  இருக்கிறது;  அப்படிப்பட்டவன்  மரண  இருளின்  பயங்கரத்தோடு  பழகியிருக்கிறான்.  (யோபு  24:17)

vidiyungkaalamum  avarga'lukku  mara'na  iru'lpoal  irukki’rathu;  appadippattavan  mara'na  iru'lin  bayanggaraththoadu  pazhagiyirukki’raan.  (yoabu  24:17)

நீரோட்டத்தைப்போல்  தீவிரமாய்ப்  போவான்;  தேசத்தில்  அவன்  பங்கு  சபிக்கப்பட்டுப்  போகிறதினால்,  அவன்  திராட்சத்தோட்டங்களின்  வழியை  இனிக்  காண்பதில்லை.  (யோபு  24:18)

neeroattaththaippoal  theeviramaayp  poavaan;  theasaththil  avan  panggu  sabikkappattup  poagi’rathinaal,  avan  thiraadchaththoattangga'lin  vazhiyai  inik  kaa'nbathillai.  (yoabu  24:18)

வறட்சியும்  உஷ்ணமும்  உறைந்த  மழையைப்  பட்சிக்கும்;  அப்படியே  பாதாளமானது  பாவிகளைப்  பட்சிக்கும்.  (யோபு  24:19)

va’radchiyum  ush'namum  u’raintha  mazhaiyaip  padchikkum;  appadiyea  paathaa'lamaanathu  paaviga'laip  padchikkum.  (yoabu  24:19)

அவனைப்  பெற்ற  கர்ப்பம்  அவனை  மறக்கும்;  புழு  திருப்திகரமாய்  அவனைத்  தின்னும்;  அவன்  அப்புறம்  நினைக்கப்படுவதில்லை;  அக்கிரமமானது  பட்டமரத்தைப்போல  முறிந்துவிழும்.  (யோபு  24:20)

avanaip  pet’ra  karppam  avanai  ma’rakkum;  puzhu  thirupthigaramaay  avanaith  thinnum;  avan  appu’ram  ninaikkappaduvathillai;  akkiramamaanathu  pattamaraththaippoala  mu’rinthuvizhum.  (yoabu  24:20)

பிள்ளைபெறாத  மலடியின்  ஆஸ்தியைப்  பட்சித்துவிட்டு,  விதவைக்கு  நன்மை  செய்யாதேபோகிறான்.  (யோபு  24:21)

pi'l'laipe’raatha  maladiyin  aasthiyaip  padchiththuvittu,  vithavaikku  nanmai  seyyaatheapoagi’raan.  (yoabu  24:21)

தன்  பலத்தினாலே  வல்லவர்களைத்  தன்  பாரிசமாக்குகிறான்;  அவன்  எழும்புகிறபோது  ஒருவனுக்கும்  பிராணனைப்பற்றி  நிச்சயமில்லை.  (யோபு  24:22)

than  balaththinaalea  vallavarga'laith  than  paarisamaakkugi’raan;  avan  ezhumbugi’rapoathu  oruvanukkum  piraa'nanaippat’ri  nichchayamillai.  (yoabu  24:22)

தேவன்  அவனுக்குச்  சுகவாழ்வைக்  கட்டளையிட்டால்,  அதின்மேல்  உறுதியாய்  நம்பிக்கை  வைக்கிறான்;  ஆனாலும்  அவருடைய  கண்கள்  அப்படிப்பட்டவர்களின்  வழிகளுக்கு  விரோதமாயிருக்கிறது.  (யோபு  24:23)

theavan  avanukkuch  sugavaazhvaik  katta'laiyittaal,  athinmeal  u’ruthiyaay  nambikkai  vaikki’raan;  aanaalum  avarudaiya  ka'nga'l  appadippattavarga'lin  vazhiga'lukku  viroathamaayirukki’rathu.  (yoabu  24:23)

அவர்கள்  கொஞ்சக்காலம்  உயர்ந்திருந்து,  காணாமற்போய்,  தாழ்த்தப்பட்டு,  மற்ற  எல்லாரைப்போலும்  அடக்கப்படுகிறார்கள்;  கதிர்களின்  நுனியைப்போல  அறுக்கப்படுகிறார்கள்.  (யோபு  24:24)

avarga'l  kognchakkaalam  uyarnthirunthu,  kaa'naama’rpoay,  thaazhththappattu,  mat’ra  ellaaraippoalum  adakkappadugi’raarga'l;  kathirga'lin  nuniyaippoala  a’rukkappadugi’raarga'l.  (yoabu  24:24)

அப்படியில்லையென்று  என்னைப்  பொய்யனாக்கி,  என்  வார்த்தைகளை  வியர்த்தமாக்கத்தக்கவன்  யார்  என்றான்.  (யோபு  24:25)

appadiyillaiyen’ru  ennaip  poyyanaakki,  en  vaarththaiga'lai  viyarththamaakkaththakkavan  yaar  en’raan.  (yoabu  24:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!