Monday, September 12, 2016

Yoabu 23 | யோபு 23 | Job 23

யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  23:1)

yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  23:1)

இன்றையதினமும்  என்  அங்கலாய்ப்பு  முரண்டுத்தனமாக  எண்ணப்படுகிறது;  என்  தவிப்பைப்பார்க்கிலும்  என்  வாதை  கடினமானது.  (யோபு  23:2)

in’raiyathinamum  en  anggalaayppu  mura'nduththanamaaga  e'n'nappadugi’rathu;  en  thavippaippaarkkilum  en  vaathai  kadinamaanathu.  (yoabu  23:2)

நான்  அவரை  எங்கே  கண்டு  சந்திக்கலாம்  என்பதை  அறிந்தால்  நலமாயிருக்கும்;  அப்பொழுது  நான்  அவர்  ஆசனத்துக்கு  முன்பாக  வந்துசேர்ந்து,  (யோபு  23:3)

naan  avarai  enggea  ka'ndu  santhikkalaam  enbathai  a’rinthaal  nalamaayirukkum;  appozhuthu  naan  avar  aasanaththukku  munbaaga  vanthusearnthu,  (yoabu  23:3)

என்  நியாயத்தை  அவருக்கு  முன்பாக  வரிசையாய்  வைத்து,  காரியத்தை  ரூபிக்கும்  வார்த்தைகளால்  என்  வாயை  நிரப்புவேன்.  (யோபு  23:4)

en  niyaayaththai  avarukku  munbaaga  varisaiyaay  vaiththu,  kaariyaththai  roobikkum  vaarththaiga'laal  en  vaayai  nirappuvean.  (yoabu  23:4)

அவருடைய  மறுமொழிகளை  நான்  அறிந்து,  அவர்  எனக்குச்  சொல்வதை  உணர்ந்துகொள்ளுவேன்.  (யோபு  23:5)

avarudaiya  ma’rumozhiga'lai  naan  a’rinthu,  avar  enakkuch  solvathai  u'narnthuko'l'luvean.  (yoabu  23:5)

அவர்  தம்முடைய  மகா  வல்லமையின்படியே  என்னோடே  வழக்காடுவாரோ?  அவர்  அப்படிச்  செய்யாமல்  என்மேல்  தயை  வைப்பார்.  (யோபு  23:6)

avar  thammudaiya  mahaa  vallamaiyinpadiyea  ennoadea  vazhakkaaduvaaroa?  avar  appadich  seyyaamal  enmeal  thayai  vaippaar.  (yoabu  23:6)

அங்கே  சன்மார்க்கன்  அவரோடே  வழக்காடலாம்;  அப்பொழுது  என்னை  நியாயந்தீர்க்கிறவரின்  கைக்கு  என்றைக்கும்  நீங்கலாய்த்  தப்புவித்துக்கொள்வேன்.  (யோபு  23:7)

anggea  sanmaarkkan  avaroadea  vazhakkaadalaam;  appozhuthu  ennai  niyaayantheerkki’ravarin  kaikku  en’raikkum  neenggalaayth  thappuviththukko'lvean.  (yoabu  23:7)

இதோ,  நான்  முன்னாகப்போனாலும்  அவர்  இல்லை;  பின்னாகப்போனாலும்  அவரைக்  காணேன்.  (யோபு  23:8)

ithoa,  naan  munnaagappoanaalum  avar  illai;  pinnaagappoanaalum  avaraik  kaa'nean.  (yoabu  23:8)

இடதுபுறத்தில்  அவர்  கிரியை  செய்தும்  அவரைக்  காணேன்;  வலதுபுறத்திலும்  நான்  அவரைக்  காணாதபடிக்கு  ஒளித்திருக்கிறார்.  (யோபு  23:9)

idathupu’raththil  avar  kiriyai  seythum  avaraik  kaa'nean;  valathupu’raththilum  naan  avaraik  kaa'naathapadikku  o'liththirukki’raar.  (yoabu  23:9)

ஆனாலும்  நான்  போகும்  வழியை  அவர்  அறிவார்;  அவர்  என்னைச்  சோதித்தபின்  நான்  பொன்னாக  விளங்குவேன்.  (யோபு  23:10)

aanaalum  naan  poagum  vazhiyai  avar  a’rivaar;  avar  ennaich  soathiththapin  naan  ponnaaga  vi'langguvean.  (yoabu  23:10)

என்  கால்கள்  அவர்  அடிகளைப்  பற்றிப்பிடித்தது;  அவருடைய  நெறியைவிட்டு  நான்  சாயாமல்  அதைக்  கைக்கொண்டேன்.  (யோபு  23:11)

en  kaalga'l  avar  adiga'laip  pat’rippidiththathu;  avarudaiya  ne’riyaivittu  naan  saayaamal  athaik  kaikko'ndean.  (yoabu  23:11)

அவர்  உதடுகளின்  கற்பனைகளை  விட்டு  நான்  பின்வாங்குவதில்லை;  அவருடைய  வாயின்  வார்த்தைகளை  எனக்கு  வேண்டிய  ஆகாரத்தைப்பார்க்கிலும்  அதிகமாய்க்  காத்துக்கொண்டேன்.  (யோபு  23:12)

avar  uthaduga'lin  ka’rpanaiga'lai  vittu  naan  pinvaangguvathillai;  avarudaiya  vaayin  vaarththaiga'lai  enakku  vea'ndiya  aagaaraththaippaarkkilum  athigamaayk  kaaththukko'ndean.  (yoabu  23:12)

அவரோவென்றால்  ஒரே  மனமாயிருக்கிறார்;  அவரைத்  திருப்பத்தக்கவர்  யார்?  அவருடைய  சித்தத்தின்படியெல்லாம்  செய்வார்.  (யோபு  23:13)

avaroaven’raal  orea  manamaayirukki’raar;  avaraith  thiruppaththakkavar  yaar?  avarudaiya  siththaththinpadiyellaam  seyvaar.  (yoabu  23:13)

எனக்குக்  குறித்திருக்கிறதை  அவர்  நிறைவேற்றுவார்;  இப்படிப்பட்டவைகள்  இன்னும்  அநேகம்  அவரிடத்தில்  உண்டு.  (யோபு  23:14)

enakkuk  ku’riththirukki’rathai  avar  ni’raiveat’ruvaar;  ippadippattavaiga'l  innum  aneagam  avaridaththil  u'ndu.  (yoabu  23:14)

ஆகையால்  அவருக்கு  முன்பாகக்  கலங்குகிறேன்;  நான்  சிந்திக்கிறபோது,  அவருக்குப்  பயப்படுகிறேன்.  (யோபு  23:15)

aagaiyaal  avarukku  munbaagak  kalanggugi’rean;  naan  sinthikki’rapoathu,  avarukkup  bayappadugi’rean.  (yoabu  23:15)

தேவன்  என்  இருதயத்தை  இளக்கரிக்கப்பண்ணினார்;  சர்வவல்லவர்  என்னைக்  கலங்கப்பண்ணினார்.  (யோபு  23:16)

theavan  en  iruthayaththai  i'lakkarikkappa'n'ninaar;  sarvavallavar  ennaik  kalanggappa'n'ninaar.  (yoabu  23:16)

அந்தகாரம்  வராததற்கு  முன்னே  நான்  சங்கரிக்கப்படாமலும்,  இருளை  அவர்  எனக்கு  மறைக்காமலும்போனதினால்  இப்படியிருக்கிறேன்.  (யோபு  23:17)

anthagaaram  varaathatha’rku  munnea  naan  sanggarikkappadaamalum,  iru'lai  avar  enakku  ma’raikkaamalumpoanathinaal  ippadiyirukki’rean.  (yoabu  23:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!