Monday, September 12, 2016

Yoabu 20 | யோபு 20 | Job 20

அப்பொழுது  நாகமாத்தியனான  சோப்பார்  பிரதியுத்தரமாக:  (யோபு  20:1)

appozhuthu  naagamaaththiyanaana  soappaar  pirathiyuththaramaaga:  (yoabu  20:1)

இதற்காக  மறுஉத்தரவு  கொடுக்க  என்  சிந்தனைகள்  என்னை  ஏவுகிறபடியால்  நான்  தீவிரித்துச்  சொல்லுகிறேன்.  (யோபு  20:2)

itha’rkaaga  ma’ruuththaravu  kodukka  en  sinthanaiga'l  ennai  eavugi’rapadiyaal  naan  theeviriththuch  sollugi’rean.  (yoabu  20:2)

நிந்தித்தேன்  என்று  நான்  கடிந்துகொள்ளப்பட்டதைக்  கேட்டேன்;  ஆனாலும்  உணர்வினால்  என்  ஆவி  பிரதியுத்தரம்  சொல்ல  என்னை  ஏவுகிறது.  (யோபு  20:3)

ninthiththean  en’ru  naan  kadinthuko'l'lappattathaik  keattean;  aanaalum  u'narvinaal  en  aavi  pirathiyuththaram  solla  ennai  eavugi’rathu.  (yoabu  20:3)

துன்மார்க்கனின்  கெம்பீரம்  குறுகினது  என்பதையும்,  மாயக்காரனின்  சந்தோஷம்  ஒரு  நிமிஷம்மாத்திரம்  நிற்கும்  என்பதையும்,  (யோபு  20:4)

thunmaarkkanin  kembeeram  ku’ruginathu  enbathaiyum,  maayakkaaranin  santhoasham  oru  nimishammaaththiram  ni’rkum  enbathaiyum,  (yoabu  20:4)

அவர்  மனுஷனைப்  பூமியில்  வைத்த  ஆதிகாலமுதல்  இப்படியிருக்கிறது  என்பதையும்  நீர்  அறியீரோ?  (யோபு  20:5)

avar  manushanaip  boomiyil  vaiththa  aathikaalamuthal  ippadiyirukki’rathu  enbathaiyum  neer  a’riyeeroa?  (yoabu  20:5)

அவனுடைய  மேன்மை  வானபரியந்தம்  உயர்ந்தாலும்,  அவனுடைய  தலை  மேகங்கள்மட்டும்  எட்டினாலும்,  (யோபு  20:6)

avanudaiya  meanmai  vaanapariyantham  uyarnthaalum,  avanudaiya  thalai  meagangga'lmattum  ettinaalum,  (yoabu  20:6)

அவன்  தன்  மலத்தைப்போல  என்றைக்கும்  அழிந்துபோவான்;  அவனைக்  கண்டவர்கள்,  அவன்  எங்கே?  என்பார்கள்.  (யோபு  20:7)

avan  than  malaththaippoala  en’raikkum  azhinthupoavaan;  avanaik  ka'ndavarga'l,  avan  enggea?  enbaarga'l.  (yoabu  20:7)

அவன்  ஒரு  சொப்பனத்தைப்போல்  பறந்துபோய்க்  காணப்படாதவனாவான்;  இரவில்  தோன்றும்  தரிசனத்தைப்போல்  பறக்கடிக்கப்படுவான்.  (யோபு  20:8)

avan  oru  soppanaththaippoal  pa’ranthupoayk  kaa'nappadaathavanaavaan;  iravil  thoan’rum  tharisanaththaippoal  pa’rakkadikkappaduvaan.  (yoabu  20:8)

அவனைப்  பார்த்த  கண்  இனி  அவனைப்  பார்ப்பதில்லை;  அவன்  இருந்த  ஸ்தலம்  இனி  அவனைக்  காண்பதில்லை.  (யோபு  20:9)

avanaip  paarththa  ka'n  ini  avanaip  paarppathillai;  avan  iruntha  sthalam  ini  avanaik  kaa'nbathillai.  (yoabu  20:9)

அவன்  பிள்ளைகள்  எளிமையானவர்களின்  சகாயத்தைத்  தேடுவார்கள்;  அவன்  பறித்ததை  அவன்  கைகள்  திரும்பக்  கொடுக்கவேண்டியதாகும்.  (யோபு  20:10)

avan  pi'l'laiga'l  e'limaiyaanavarga'lin  sagaayaththaith  theaduvaarga'l;  avan  pa’riththathai  avan  kaiga'l  thirumbak  kodukkavea'ndiyathaagum.  (yoabu  20:10)

அவன்  எலும்புகள்  அவனுடைய  வாலவயதின்  பாவங்களினால்  நிறைந்திருந்து,  அவனோடேகூட  மண்ணிலே  படுத்துக்கொள்ளும்.  (யோபு  20:11)

avan  elumbuga'l  avanudaiya  vaalavayathin  paavangga'linaal  ni’rainthirunthu,  avanoadeakooda  ma'n'nilea  paduththukko'l'lum.  (yoabu  20:11)

பொல்லாப்பு  அவன்  வாயிலே  இனிமையாயிருப்பதால்,  அவன்  அதைத்  தன்  நாவின்கீழ்  அடக்கி,  (யோபு  20:12)

pollaappu  avan  vaayilea  inimaiyaayiruppathaal,  avan  athaith  than  naavinkeezh  adakki,  (yoabu  20:12)

அதை  விடாமல்  பதனம்பண்ணி,  தன்  வாய்க்குள்ளே  வைத்துக்கொண்டிருந்தாலும்,  (யோபு  20:13)

athai  vidaamal  pathanampa'n'ni,  than  vaaykku'l'lea  vaiththukko'ndirunthaalum,  (yoabu  20:13)

அவன்  போஜனம்  அவன்  குடல்களில்  மாறி,  அவனுக்குள்  விரியன்பாம்புகளின்  பிச்சாய்ப்போகும்.  (யோபு  20:14)

avan  poajanam  avan  kudalga'lil  maa’ri,  avanukku'l  viriyanpaambuga'lin  pichchaayppoagum.  (yoabu  20:14)

அவன்  விழுங்கின  ஆஸ்தியைக்  கக்குவான்;  தேவன்  அதை  அவன்  வயிற்றிலிருந்து  வெளியே  தள்ளிவிடுவார்.  (யோபு  20:15)

avan  vizhunggina  aasthiyaik  kakkuvaan;  theavan  athai  avan  vayit’rilirunthu  ve'liyea  tha'l'lividuvaar.  (yoabu  20:15)

அவன்  விரியன்  பாம்புகளின்  விஷத்தை  உறிஞ்சுவான்;  விரியனின்  நாக்கு  அவனைக்  கொல்லும்.  (யோபு  20:16)

avan  viriyan  paambuga'lin  vishaththai  u’rignchuvaan;  viriyanin  naakku  avanaik  kollum.  (yoabu  20:16)

தேனும்  நெய்யும்  ஓடும்  வாய்க்கால்களையும்  ஆறுகளையும்  அவன்  காண்பதில்லை.  (யோபு  20:17)

theanum  neyyum  oadum  vaaykkaalga'laiyum  aa’ruga'laiyum  avan  kaa'nbathillai.  (yoabu  20:17)

தான்  பிரயாசப்பட்டுத்  தேடினதை  அவன்  விழுங்காமல்  திரும்பக்  கொடுப்பான்;  அவன்  திரும்பக்கொடுக்கிறது  அவன்  ஆஸ்திக்குச்  சரியாயிருக்கும்;  அவன்  களிகூராதிருப்பான்.  (யோபு  20:18)

thaan  pirayaasappattuth  theadinathai  avan  vizhunggaamal  thirumbak  koduppaan;  avan  thirumbakkodukki’rathu  avan  aasthikkuch  sariyaayirukkum;  avan  ka'likooraathiruppaan.  (yoabu  20:18)

அவன்  ஒடுக்கி,  ஏழைகளைக்  கைவிட்டு,  தான்  கட்டாத  வீட்டைப்  பறித்தபடியினாலும்,  (யோபு  20:19)

avan  odukki,  eazhaiga'laik  kaivittu,  thaan  kattaatha  veettaip  pa’riththapadiyinaalum,  (yoabu  20:19)

தன்  வயிறு  திருப்தியற்றிருந்தபடியினாலும்,  அவன்  இச்சித்த  காரியங்களில்  அவனுக்கு  ஒன்றும்  இருப்பதில்லை.  (யோபு  20:20)

than  vayi’ru  thirupthiyat’rirunthapadiyinaalum,  avan  ichchiththa  kaariyangga'lil  avanukku  on’rum  iruppathillai.  (yoabu  20:20)

அவன்  போஜனத்தில்  ஒன்றும்  மீதியாவதில்லை;  ஆகையால்  அவன்  ஆஸ்தி  நிலைநிற்பதில்லை.  (யோபு  20:21)

avan  poajanaththil  on’rum  meethiyaavathillai;  aagaiyaal  avan  aasthi  nilaini’rpathillai.  (yoabu  20:21)

அவன்  வேண்டுமென்கிற  பரிபூரணம்  அவனுக்கு  வந்தபின்,  அவனுக்கு  வியாகுலம்  உண்டாகும்;  சிறுமைப்படுகிற  ஒவ்வொருவருடைய  கையும்  அவன்மேல்  வரும்.  (யோபு  20:22)

avan  vea'ndumengi’ra  paripoora'nam  avanukku  vanthapin,  avanukku  viyaagulam  u'ndaagum;  si’rumaippadugi’ra  ovvoruvarudaiya  kaiyum  avanmeal  varum.  (yoabu  20:22)

தன்  வயிற்றை  நிரப்பத்தக்கது  இன்னும்  அவனுக்கு  இருந்தாலும்,  அவர்  அவன்மேல்  தமது  கோபத்தின்  உக்கிரத்தை  வரவிட்டு,  அவன்  போஜனம்பண்ணுகையில்,  அதை  அவன்மேல்  சொரியப்பண்ணுவார்.  (யோபு  20:23)

than  vayit’rai  nirappaththakkathu  innum  avanukku  irunthaalum,  avar  avanmeal  thamathu  koabaththin  ukkiraththai  varavittu,  avan  poajanampa'n'nugaiyil,  athai  avanmeal  soriyappa'n'nuvaar.  (yoabu  20:23)

இருப்பு  ஆயுதத்துக்கு  அவன்  தப்பியோடினாலும்  உருக்குவில்  அவனை  உருவ  எய்யும்.  (யோபு  20:24)

iruppu  aayuthaththukku  avan  thappiyoadinaalum  urukkuvil  avanai  uruva  eyyum.  (yoabu  20:24)

உருவின  பட்டயம்  அவன்  சரீரத்தையும்,  மின்னுகிற  அம்பு  அவன்  பிச்சையும்  உருவிப்போகும்;  பயங்கரங்கள்  அவன்மேல்  வரும்.  (யோபு  20:25)

uruvina  pattayam  avan  sareeraththaiyum,  minnugi’ra  ambu  avan  pichchaiyum  uruvippoagum;  bayanggarangga'l  avanmeal  varum.  (yoabu  20:25)

அவன்  ஒளிக்கும்  இடங்களில்  காரிருள்  அடங்கியிருக்கும்;  அவியாத  அக்கினி  அவனைப்  பட்சிக்கும்;  அவன்  கூடாரத்தில்  மீதியாயிருக்கிறவன்  தீங்கு  அநுபவிப்பான்.  (யோபு  20:26)

avan  o'likkum  idangga'lil  kaariru'l  adanggiyirukkum;  aviyaatha  akkini  avanaip  padchikkum;  avan  koodaaraththil  meethiyaayirukki’ravan  theenggu  anubavippaan.  (yoabu  20:26)

வானங்கள்  அவன்  அக்கிரமத்தை  வெளிப்படுத்தி,  பூமி  அவனுக்கு  விரோதமாக  எழும்பும்.  (யோபு  20:27)

vaanangga'l  avan  akkiramaththai  ve'lippaduththi,  boomi  avanukku  viroathamaaga  ezhumbum.  (yoabu  20:27)

அவன்  வீட்டின்  சம்பத்துப்  போய்விடும்;  அவருடைய  கோபத்தின்  நாளிலே  அவைகள்  கரைந்துபோகும்.  (யோபு  20:28)

avan  veettin  sambaththup  poayvidum;  avarudaiya  koabaththin  naa'lilea  avaiga'l  karainthupoagum.  (yoabu  20:28)

இதுவே  தேவனால்  துன்மார்க்கனுக்குக்  கிடைக்கும்  பங்கும்,  அவன்  செய்கைக்குத்  தேவனால்  அவனுக்கு  வரும்  சுதந்தரமுமாம்  என்றான்.  (யோபு  20:29)

ithuvea  theavanaal  thunmaarkkanukkuk  kidaikkum  panggum,  avan  seygaikkuth  theavanaal  avanukku  varum  suthantharamumaam  en’raan.  (yoabu  20:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!