Monday, September 12, 2016

Yoabu 19 | யோபு 19 | Job 19

யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  19:1)

yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  19:1)

நீங்கள்  எந்தமட்டும்  என்  ஆத்துமாவை  வருத்தப்படுத்தி,  வார்த்தைகளினால்  என்னை  நொறுக்குவீர்கள்?  (யோபு  19:2)

neengga'l  enthamattum  en  aaththumaavai  varuththappaduththi,  vaarththaiga'linaal  ennai  no’rukkuveerga'l?  (yoabu  19:2)

இப்போது  பத்துதரம்  என்னை  நிந்தித்தீர்கள்;  நீங்கள்  எனக்குக்  கடினமுகம்  காண்பிக்கிறதினால்  உங்களுக்கு  வெட்கமில்லை.  (யோபு  19:3)

ippoathu  paththutharam  ennai  ninthiththeerga'l;  neengga'l  enakkuk  kadinamugam  kaa'nbikki’rathinaal  ungga'lukku  vedkamillai.  (yoabu  19:3)

நான்  தப்பிநடந்தது  மெய்யானாலும்,  என்  தப்பிதம்  என்னோடேதான்  இருக்கிறது.  (யோபு  19:4)

naan  thappinadanthathu  meyyaanaalum,  en  thappitham  ennoadeathaan  irukki’rathu.  (yoabu  19:4)

நீங்கள்  எனக்கு  விரோதமாகப்  பெருமைபாராட்டி,  எனக்கு  நிந்தையாக  என்னைக்  கடிந்துகொள்ளவேண்டும்  என்றிருப்பீர்களாகில்,  (யோபு  19:5)

neengga'l  enakku  viroathamaagap  perumaipaaraatti,  enakku  ninthaiyaaga  ennaik  kadinthuko'l'lavea'ndum  en’riruppeerga'laagil,  (yoabu  19:5)

தேவன்  என்னைக்  கவிழ்த்து,  தம்முடைய  வலையை  என்மேல்  வீசினார்  என்று  அறியுங்கள்.  (யோபு  19:6)

theavan  ennaik  kavizhththu,  thammudaiya  valaiyai  enmeal  veesinaar  en’ru  a’riyungga'l.  (yoabu  19:6)

இதோ,  கொடுமை  என்று  கூப்பிடுகிறேன்,  கேட்பார்  ஒருவரும்  இல்லை;  கூக்குரலிடுகிறேன்,  நியாயவிசாரணை  இல்லை.  (யோபு  19:7)

ithoa,  kodumai  en’ru  kooppidugi’rean,  keadpaar  oruvarum  illai;  kookkuralidugi’rean,  niyaayavisaara'nai  illai.  (yoabu  19:7)

நான்  கடந்துபோகக்கூடாதபடிக்கு  அவர்  என்  பாதையை  வேலியடைத்து,  என்  வழிகளை  இருளாக்கிவிட்டார்.  (யோபு  19:8)

naan  kadanthupoagakkoodaathapadikku  avar  en  paathaiyai  vealiyadaiththu,  en  vazhiga'lai  iru'laakkivittaar.  (yoabu  19:8)

என்னிலிருந்த  என்  மகிமையை  அவர்  உரிந்துகொண்டு,  என்  சிரசின்  கிரீடத்தை  எடுத்துப்போட்டார்.  (யோபு  19:9)

enniliruntha  en  magimaiyai  avar  urinthuko'ndu,  en  sirasin  kireedaththai  eduththuppoattaar.  (yoabu  19:9)

அவர்  என்னை  நான்குபுறத்திலும்  நாசமாக்கினார்,  நான்  அற்றுப்போகிறேன்;  என்  நம்பிக்கையை  ஒரு  செடியைப்போலப்  பிடுங்கிப்போட்டார்.  (யோபு  19:10)

avar  ennai  naangupu’raththilum  naasamaakkinaar,  naan  at’ruppoagi’rean;  en  nambikkaiyai  oru  sediyaippoalap  pidunggippoattaar.  (yoabu  19:10)

அவர்  தமது  கோபத்தை  என்மேல்  எரியப்பண்ணினார்;  என்னைத்  தம்முடைய  சத்துருக்களில்  ஒருவனாக  எண்ணிக்கொள்ளுகிறார்.  (யோபு  19:11)

avar  thamathu  koabaththai  enmeal  eriyappa'n'ninaar;  ennaith  thammudaiya  saththurukka'lil  oruvanaaga  e'n'nikko'l'lugi’raar.  (yoabu  19:11)

அவருடைய  தண்டுப்படைகள்  ஏகமாய்  வந்து,  எனக்கு  விரோதமாய்த்  தங்கள்  வழியை  உயர்த்தி,  என்  கூடாரத்தைச்  சுற்றிப்  பாளயமிறங்கினார்கள்.  (யோபு  19:12)

avarudaiya  tha'nduppadaiga'l  eagamaay  vanthu,  enakku  viroathamaayth  thangga'l  vazhiyai  uyarththi,  en  koodaaraththaich  sut’rip  paa'layami’rangginaarga'l.  (yoabu  19:12)

என்  சகோதரரை  என்னைவிட்டுத்  தூரப்படுத்தினார்;  எனக்கு  அறிமுகமானவர்கள்  எனக்கு  அந்நியராய்ப்  போனார்கள்.  (யோபு  19:13)

en  sagoathararai  ennaivittuth  thoorappaduththinaar;  enakku  a’rimugamaanavarga'l  enakku  anniyaraayp  poanaarga'l.  (yoabu  19:13)

என்  பந்துஜனங்கள்  விலகிப்போனார்கள்;  என்  சிநேகிதர்  என்னை  மறந்துவிட்டார்கள்.  (யோபு  19:14)

en  panthujanangga'l  vilagippoanaarga'l;  en  sineagithar  ennai  ma’ranthuvittaarga'l.  (yoabu  19:14)

என்  வீட்டு  ஜனங்களும்,  என்  வேலைக்காரிகளும்,  என்னை  அந்நியனாக  எண்ணுகிறார்கள்;  அவர்கள்  பார்வைக்கு  நான்  பரதேசியானேன்.  (யோபு  19:15)

en  veettu  janangga'lum,  en  vealaikkaariga'lum,  ennai  anniyanaaga  e'n'nugi’raarga'l;  avarga'l  paarvaikku  naan  paratheasiyaanean.  (yoabu  19:15)

நான்  என்  வேலைக்காரனைக்  கூப்பிடுகிறபோது  அவன்  எனக்கு  உத்தரவுகொடான்;  என்  வாயினால்  நான்  அவனைக்  கெஞ்சவேண்டியதாயிற்று.  (யோபு  19:16)

naan  en  vealaikkaaranaik  kooppidugi’rapoathu  avan  enakku  uththaravukodaan;  en  vaayinaal  naan  avanaik  kegnchavea'ndiyathaayit’ru.  (yoabu  19:16)

என்  சுவாசம்  என்  மனைவிக்கு  வேறுபட்டிருக்கிறது;  என்  கர்ப்பத்தின்  பிள்ளைகளுக்காகப்  பரிதபிக்கிறேன்.  (யோபு  19:17)

en  suvaasam  en  manaivikku  vea’rupattirukki’rathu;  en  karppaththin  pi'l'laiga'lukkaagap  parithabikki’rean.  (yoabu  19:17)

சிறுபிள்ளைகளும்  என்னை  அசட்டைபண்ணுகிறார்கள்;  நான்  எழுந்தால்,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசுகிறார்கள்.  (யோபு  19:18)

si’rupi'l'laiga'lum  ennai  asattaipa'n'nugi’raarga'l;  naan  ezhunthaal,  avarga'l  enakku  viroathamaayp  peasugi’raarga'l.  (yoabu  19:18)

என்  பிராணசிநேகிதர்  எல்லாரும்  என்னை  வெறுக்கிறார்கள்;  நான்  சிநேகித்தவர்கள்  எனக்கு  விரோதிகளானார்கள்.  (யோபு  19:19)

en  piraa'nasineagithar  ellaarum  ennai  ve’rukki’raarga'l;  naan  sineagiththavarga'l  enakku  viroathiga'laanaarga'l.  (yoabu  19:19)

என்  எலும்புகள்  என்  தோலோடும்  என்  மாம்சத்தோடும்  ஒட்டிக்கொண்டிருக்கிறது;  என்  பற்களை  மூடக்  கொஞ்சம்  தோல்மாத்திரம்  தப்பினது.  (யோபு  19:20)

en  elumbuga'l  en  thoaloadum  en  maamsaththoadum  ottikko'ndirukki’rathu;  en  pa’rka'lai  moodak  kogncham  thoalmaaththiram  thappinathu.  (yoabu  19:20)

என்  சிநேகிதரே,  எனக்கு  இரங்குங்கள்,  எனக்கு  இரங்குங்கள்;  தேவனுடைய  கை  என்னைத்  தொட்டது.  (யோபு  19:21)

en  sineagitharea,  enakku  iranggungga'l,  enakku  iranggungga'l;  theavanudaiya  kai  ennaith  thottathu.  (yoabu  19:21)

தேவனைப்போல  நீங்களும்  என்னைத்  துன்பப்படுத்துவானேன்?  என்  மாம்சம்  பட்சிக்கப்பட்டாலும்  நீங்கள்  திருப்தியற்றிருக்கிறதென்ன?  (யோபு  19:22)

theavanaippoala  neengga'lum  ennaith  thunbappaduththuvaanean?  en  maamsam  padchikkappattaalum  neengga'l  thirupthiyat’rirukki’rathenna?  (yoabu  19:22)

ஆ,  நான்  இப்பொழுது  சொல்லும்  வார்த்தைகள்  எழுதப்பட்டால்  நலமாயிருக்கும்;  அவைகள்  ஒரு  புஸ்தகத்தில்  வரையப்பட்டு,  (யோபு  19:23)

aa,  naan  ippozhuthu  sollum  vaarththaiga'l  ezhuthappattaal  nalamaayirukkum;  avaiga'l  oru  pusthagaththil  varaiyappattu,  (yoabu  19:23)

அல்லது  என்றைக்கும்  நிலைக்க  அவைகள்  கருங்கல்லிலே  உளிவெட்டாகவும்  ஈய  எழுத்தாகவும்  பதிந்தால்  நலமாயிருக்கும்.  (யோபு  19:24)

allathu  en’raikkum  nilaikka  avaiga'l  karungkallilea  u'livettaagavum  eeya  ezhuththaagavum  pathinthaal  nalamaayirukkum.  (yoabu  19:24)

என்  மீட்பர்  உயிரோடிருக்கிறார்  என்றும்,  அவர்  கடைசிநாளில்  பூமியின்மேல்  நிற்பார்  என்றும்  நான்  அறிந்திருக்கிறேன்.  (யோபு  19:25)

en  meedpar  uyiroadirukki’raar  en’rum,  avar  kadaisinaa'lil  boomiyinmeal  ni’rpaar  en’rum  naan  a’rinthirukki’rean.  (yoabu  19:25)

இந்த  என்  தோல்முதலானவை  அழுகிப்போனபின்பு,  நான்  என்  மாம்சத்தில்  இருந்து  தேவனைப்  பார்ப்பேன்.  (யோபு  19:26)

intha  en  thoalmuthalaanavai  azhugippoanapinbu,  naan  en  maamsaththil  irunthu  theavanaip  paarppean.  (yoabu  19:26)

அவரை  நானே  பார்ப்பேன்;  அந்நிய  கண்கள்  அல்ல,  என்  கண்களே  அவரைக்  காணும்;  இந்த  வாஞ்சையால்  என்  உள்ளிந்திரியங்கள்  எனக்குள்  சோர்ந்துபோகிறது.  (யோபு  19:27)

avarai  naanea  paarppean;  anniya  ka'nga'l  alla,  en  ka'nga'lea  avaraik  kaa'num;  intha  vaagnchaiyaal  en  u'l'linthiriyangga'l  enakku'l  soarnthupoagi’rathu.  (yoabu  19:27)

காரியத்தின்  மூலம்  எனக்குள்  கண்டுபிடிக்கப்படுகையில்,  நாம்  ஏன்  அவனைத்  துன்பப்படுத்துகிறோம்  என்று  நீங்கள்  சொல்லவேண்டியதாமே.  (யோபு  19:28)

kaariyaththin  moolam  enakku'l  ka'ndupidikkappadugaiyil,  naam  ean  avanaith  thunbappaduththugi’roam  en’ru  neengga'l  sollavea'ndiyathaamea.  (yoabu  19:28)

பட்டயத்துக்குப்  பயப்படுங்கள்;  நியாயத்தீர்ப்பு  உண்டென்கிறதை  நீங்கள்  அறியும்பொருட்டு,  மூர்க்கமானது  பட்டயத்தினால்  உண்டாகும்  ஆக்கினையை  வரப்பண்ணும்  என்றான்.  (யோபு  19:29)

pattayaththukkup  bayappadungga'l;  niyaayaththeerppu  u'ndengi’rathai  neengga'l  a’riyumporuttu,  moorkkamaanathu  pattayaththinaal  u'ndaagum  aakkinaiyai  varappa'n'num  en’raan.  (yoabu  19:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!