Monday, September 12, 2016

Yoabu 17 | யோபு 17 | Job 17

என்  சுவாசம்  ஒழிகிறது,  என்  நாட்கள்  முடிகிறது;  பிரேதக்குழி  எனக்கு  ஆயத்தமாயிருக்கிறது.  (யோபு  17:1)

en  suvaasam  ozhigi’rathu,  en  naadka'l  mudigi’rathu;  pireathakkuzhi  enakku  aayaththamaayirukki’rathu.  (yoabu  17:1)

பரியாசம்பண்ணுகிறவர்கள்  என்னிடத்தில்  இல்லையோ?  அவர்கள்  செய்யும்  அநியாயங்களை  என்  கண்  பார்த்துக்கொண்டிருக்கிறது.  (யோபு  17:2)

pariyaasampa'n'nugi’ravarga'l  ennidaththil  illaiyoa?  avarga'l  seyyum  aniyaayangga'lai  en  ka'n  paarththukko'ndirukki’rathu.  (yoabu  17:2)

தேவரீர்  என்  காரியத்தை  மேல்போட்டுக்கொண்டு,  எனக்காகப்  பிணைப்படுவீராக;  வேறே  யார்  எனக்குக்  கைகொடுக்கத்தக்கவர்?  (யோபு  17:3)

theavareer  en  kaariyaththai  mealpoattukko'ndu,  enakkaagap  pi'naippaduveeraaga;  vea’rea  yaar  enakkuk  kaikodukkaththakkavar?  (yoabu  17:3)

நீர்  அவர்கள்  இருதயத்துக்கு  ஞானத்தை  மறைத்தீர்;  ஆகையால்  அவர்களை  உயர்த்தாதிருப்பீர்.  (யோபு  17:4)

neer  avarga'l  iruthayaththukku  gnaanaththai  ma’raiththeer;  aagaiyaal  avarga'lai  uyarththaathiruppeer.  (yoabu  17:4)

எவன்  தன்  சிநேகிதருக்குக்  கேடாகத்  துரோகம்  பேசுகிறானோ,  அவன்  பிள்ளைகளின்  கண்களும்  பூத்துப்போகும்.  (யோபு  17:5)

evan  than  sineagitharukkuk  keadaagath  thuroagam  peasugi’raanoa,  avan  pi'l'laiga'lin  ka'nga'lum  pooththuppoagum.  (yoabu  17:5)

ஜனங்களுக்குள்ளே  அவர்  என்னைப்  பழமொழியாக  வைத்தார்;  அவர்கள்  முகத்துக்குமுன்  நான்  அருவருப்பானேன்.  (யோபு  17:6)

janangga'lukku'l'lea  avar  ennaip  pazhamozhiyaaga  vaiththaar;  avarga'l  mugaththukkumun  naan  aruvaruppaanean.  (yoabu  17:6)

இதினிமித்தம்  என்  கண்கள்  சஞ்சலத்தினால்  இருளடைந்தது;  என்  அவயவங்களெல்லாம்  நிழலைப்போலிருக்கிறது.  (யோபு  17:7)

ithinimiththam  en  ka'nga'l  sagnchalaththinaal  iru'ladainthathu;  en  avayavangga'lellaam  nizhalaippoalirukki’rathu.  (yoabu  17:7)

சன்மார்க்கர்  இதற்காகப்  பிரமிப்பார்கள்;  குற்றமில்லாதவன்  மாயக்காரனுக்கு  விரோதமாக  எழும்புவான்.  (யோபு  17:8)

sanmaarkkar  itha’rkaagap  piramippaarga'l;  kut’ramillaathavan  maayakkaaranukku  viroathamaaga  ezhumbuvaan.  (yoabu  17:8)

நீதிமான்  தன்  வழியை  உறுதியாய்ப்  பிடிப்பான்;  சுத்தமான  கைகளுள்ளவன்  மேன்மேலும்  பலத்துப்போவான்.  (யோபு  17:9)

neethimaan  than  vazhiyai  u’ruthiyaayp  pidippaan;  suththamaana  kaiga'lu'l'lavan  meanmealum  balaththuppoavaan.  (yoabu  17:9)

இப்போதும்  நீங்கள்  எல்லாரும்  போய்வாருங்கள்;  உங்களில்  ஞானமுள்ள  ஒருவனையும்  காணேன்.  (யோபு  17:10)

ippoathum  neengga'l  ellaarum  poayvaarungga'l;  ungga'lil  gnaanamu'l'la  oruvanaiyum  kaa'nean.  (yoabu  17:10)

என்  நாட்கள்  போயிற்று;  என்  இருதயத்தில்  எனக்கு  உண்டாயிருந்த  சிந்தனைகள்  அற்றுப்போயிற்று.  (யோபு  17:11)

en  naadka'l  poayit’ru;  en  iruthayaththil  enakku  u'ndaayiruntha  sinthanaiga'l  at’ruppoayit’ru.  (yoabu  17:11)

அவைகள்  இரவைப்  பகலாக்கிற்று;  இருளை  வெளிச்சம்  தொடர்ந்துவரும்  என்று  எண்ணச்செய்தது.  (யோபு  17:12)

avaiga'l  iravaip  pagalaakkit’ru;  iru'lai  ve'lichcham  thodarnthuvarum  en’ru  e'n'nachseythathu.  (yoabu  17:12)

அப்படி  நான்  காத்துக்கொண்டிருந்தாலும்,  பாதாளம்  எனக்கு  வீடாயிருக்கும்;  இருளில்  என்  படுக்கையைப்  போடுவேன்.  (யோபு  17:13)

appadi  naan  kaaththukko'ndirunthaalum,  paathaa'lam  enakku  veedaayirukkum;  iru'lil  en  padukkaiyaip  poaduvean.  (yoabu  17:13)

அழிவைப்பார்த்து,  நீ  எனக்குத்  தகப்பன்  என்கிறேன்;  புழுக்களைப்  பார்த்து,  நீங்கள்  எனக்குத்  தாயும்  எனக்குச்  சகோதரியும்  என்கிறேன்.  (யோபு  17:14)

azhivaippaarththu,  nee  enakkuth  thagappan  engi’rean;  puzhukka'laip  paarththu,  neengga'l  enakkuth  thaayum  enakkuch  sagoathariyum  engi’rean.  (yoabu  17:14)

என்  நம்பிக்கை  இப்போது  எங்கே?  நான்  நம்பியிருந்ததைக்  காண்பவன்  யார்?  (யோபு  17:15)

en  nambikkai  ippoathu  enggea?  naan  nambiyirunthathaik  kaa'nbavan  yaar?  (yoabu  17:15)

அது  பாதாளத்தின்  காவலுக்குள்  இறங்கும்;  அப்போது  தூளில்  ஏகமாய்  இளைப்பாறுவோம்  என்றான்.  (யோபு  17:16)

athu  paathaa'laththin  kaavalukku'l  i’ranggum;  appoathu  thoo'lil  eagamaay  i'laippaa’ruvoam  en’raan.  (yoabu  17:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!