Monday, September 12, 2016

Yoabu 16 | யோபு 16 | Job 16

அதற்கு  யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  16:1)

atha’rku  yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  16:1)

இப்படிப்பட்ட  அநேகங்  காரியங்களை  நான்  கேட்டிருக்கிறேன்;  நீங்கள்  எல்லாரும்  அலட்டுண்டாக்குகிற  தேற்றரவாளர்.  (யோபு  16:2)

ippadippatta  aneagang  kaariyangga'lai  naan  keattirukki’rean;  neengga'l  ellaarum  alattu'ndaakkugi’ra  theat’raravaa'lar.  (yoabu  16:2)

காற்றைப்போன்ற  வார்த்தைகளுக்கு  முடிவிராதோ?  இப்படி  நீ  உத்தரவுசொல்ல  உனக்குத்  துணிவு  உண்டானதென்ன?  (யோபு  16:3)

kaat’raippoan’ra  vaarththaiga'lukku  mudiviraathoa?  ippadi  nee  uththaravusolla  unakkuth  thu'nivu  u'ndaanathenna?  (yoabu  16:3)

உங்களைப்போல  நானும்  பேசக்கூடும்;  நான்  இருக்கும்  நிலைமையில்  நீங்கள்  இருந்தால்,  நான்  உங்களுக்கு  விரோதமாக  வார்த்தைகளைக்  கோர்த்து,  உங்களுக்கு  எதிரே  என்  தலையைத்  துலுக்கவுங்கூடும்.  (யோபு  16:4)

ungga'laippoala  naanum  peasakkoodum;  naan  irukkum  nilaimaiyil  neengga'l  irunthaal,  naan  ungga'lukku  viroathamaaga  vaarththaiga'laik  koarththu,  ungga'lukku  ethirea  en  thalaiyaith  thulukkavungkoodum.  (yoabu  16:4)

ஆனாலும்  நான்  என்  வாயினால்  உங்களுக்குத்  திடன்சொல்லுவேன்,  என்  உதடுகளின்  அசைவு  உங்கள்  துக்கத்தை  ஆற்றும்.  (யோபு  16:5)

aanaalum  naan  en  vaayinaal  ungga'lukkuth  thidansolluvean,  en  uthaduga'lin  asaivu  ungga'l  thukkaththai  aat’rum.  (yoabu  16:5)

நான்  பேசினாலும்  என்  துக்கம்  ஆறாது;  நான்  பேசாமலிருந்தாலும்  எனக்கு  என்ன  ஆறுதல்?  (யோபு  16:6)

naan  peasinaalum  en  thukkam  aa’raathu;  naan  peasaamalirunthaalum  enakku  enna  aa’ruthal?  (yoabu  16:6)

இப்போது  அவர்  என்னை  இளைத்துப்போகச்  செய்தார்;  என்  கூட்டத்தையெல்லாம்  பாழாக்கினீர்.  (யோபு  16:7)

ippoathu  avar  ennai  i'laiththuppoagach  seythaar;  en  koottaththaiyellaam  paazhaakkineer.  (yoabu  16:7)

நீர்  என்னைச்  சுருங்கிப்போகப்பண்ணினது  அதற்குச்  சாட்சி;  என்  மெலிவு  என்னில்  அத்தாட்சியாக  நின்று,  என்  முகத்துக்கு  முன்பாக  உத்தரவு  சொல்லும்.  (யோபு  16:8)

neer  ennaich  surunggippoagappa'n'ninathu  atha’rkuch  saadchi;  en  melivu  ennil  aththaadchiyaaga  nin’ru,  en  mugaththukku  munbaaga  uththaravu  sollum.  (yoabu  16:8)

என்னைப்  பகைக்கிறவனுடைய  கோபம்  என்னைப்  பீறுகிறது,  என்பேரில்  பற்கடிக்கிறான்;  என்  சத்துரு  கொடிய  கண்ணினால்  என்னைப்  பார்க்கிறான்.  (யோபு  16:9)

ennaip  pagaikki’ravanudaiya  koabam  ennaip  pee’rugi’rathu,  enpearil  pa’rkadikki’raan;  en  saththuru  kodiya  ka'n'ninaal  ennaip  paarkki’raan.  (yoabu  16:9)

எனக்கு  விரோதமாகத்  தங்கள்  வாயை  விரிவாய்த்  திறந்தார்கள்;  நிந்தையாக  என்னைக்  கன்னத்தில்  அடித்தார்கள்;  எனக்கு  விரோதமாக  ஏகமாய்க்  கூட்டங்கூடினார்கள்.  (யோபு  16:10)

enakku  viroathamaagath  thangga'l  vaayai  virivaayth  thi’ranthaarga'l;  ninthaiyaaga  ennaik  kannaththil  adiththaarga'l;  enakku  viroathamaaga  eagamaayk  koottangkoodinaarga'l.  (yoabu  16:10)

தேவன்  என்னை  அநியாயக்காரன்  வசமாக  ஒப்புவித்து,  துன்மார்க்கரின்  கையில்  என்னை  அகப்படப்பண்ணினார்.  (யோபு  16:11)

theavan  ennai  aniyaayakkaaran  vasamaaga  oppuviththu,  thunmaarkkarin  kaiyil  ennai  agappadappa'n'ninaar.  (yoabu  16:11)

நான்  சுகமாய்  வாழ்ந்திருந்தேன்;  அவர்  என்னை  நருக்கி,  என்  பிடரியைப்  பிடித்து,  என்னை  நொறுக்கி,  என்னைத்  தமக்கு  இலக்காக  நிறுத்தினார்.  (யோபு  16:12)

naan  sugamaay  vaazhnthirunthean;  avar  ennai  narukki,  en  pidariyaip  pidiththu,  ennai  no’rukki,  ennaith  thamakku  ilakkaaga  ni’ruththinaar.  (yoabu  16:12)

அவருடைய  வில்லாளர்  என்னைச்  சூழ்ந்துகொண்டார்கள்;  என்  ஈரலைத்  தப்பவிடாமல்  பிளந்தார்;  என்  பிச்சைத்  தரையில்  ஊற்றிவிட்டார்.  (யோபு  16:13)

avarudaiya  villaa'lar  ennaich  soozhnthuko'ndaarga'l;  en  eeralaith  thappavidaamal  pi'lanthaar;  en  pichchaith  tharaiyil  oot’rivittaar.  (yoabu  16:13)

நொறுக்குதலின்மேல்  நொறுக்குதலை  என்மேல்  வரப்பண்ணினார்;  பராக்கிரமசாலியைப்போல  என்மேல்  பாய்ந்தார்.  (யோபு  16:14)

no’rukkuthalinmeal  no’rukkuthalai  enmeal  varappa'n'ninaar;  baraakkiramasaaliyaippoala  enmeal  paaynthaar.  (yoabu  16:14)

நான்  இரட்டுச்சேலையைத்  தைத்து,  என்  தோளின்மேல்  போர்த்துக்கொண்டேன்;  என்  மகிமையைப்  புழுதியிலே  போட்டுவிட்டேன்.  (யோபு  16:15)

naan  irattuchsealaiyaith  thaiththu,  en  thoa'linmeal  poarththukko'ndean;  en  magimaiyaip  puzhuthiyilea  poattuvittean.  (yoabu  16:15)

அழுகிறதினால்  என்  முகம்  அழுக்கடைந்தது;  மரண  இருள்  என்  கண்ணிமைகளின்மேல்  உண்டாயிருக்கிறது.  (யோபு  16:16)

azhugi’rathinaal  en  mugam  azhukkadainthathu;  mara'na  iru'l  en  ka'n'nimaiga'linmeal  u'ndaayirukki’rathu.  (yoabu  16:16)

என்  கைகளிலே  கொடுமையில்லாதிருக்கையிலும்,  என்  ஜெபம்  சுத்தமாயிருக்கையிலும்,  அப்படியாயிற்று.  (யோபு  16:17)

en  kaiga'lilea  kodumaiyillaathirukkaiyilum,  en  jebam  suththamaayirukkaiyilum,  appadiyaayit’ru.  (yoabu  16:17)

பூமியே,  என்  இரத்தத்தை  மூடிப்போடாதே;  என்  அலறுதலுக்கு  மறைவிடம்  உண்டாகாதிருப்பதாக.  (யோபு  16:18)

boomiyea,  en  iraththaththai  moodippoadaathea;  en  ala’ruthalukku  ma’raividam  u'ndaagaathiruppathaaga.  (yoabu  16:18)

இப்போதும்  இதோ,  என்  சாட்சி  பரலோகத்திலிருக்கிறது,  எனக்குச்  சாட்சி  பகருகிறவர்  உன்னதங்களில்  இருக்கிறார்.  (யோபு  16:19)

ippoathum  ithoa,  en  saadchi  paraloagaththilirukki’rathu,  enakkuch  saadchi  pagarugi’ravar  unnathangga'lil  irukki’raar.  (yoabu  16:19)

என்  சிநேகிதர்  என்னைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்;  என்  கண்  தேவனை  நோக்கிக்  கண்ணீர்  சொரிகிறது.  (யோபு  16:20)

en  sineagithar  ennaip  pariyaasampa'n'nugi’raarga'l;  en  ka'n  theavanai  noakkik  ka'n'neer  sorigi’rathu.  (yoabu  16:20)

ஒரு  மனுபுத்திரன்  தன்  சிநேகிதனுக்காக  வழக்காடுகிறதுபோல,  தேவனோடே  மனுஷனுக்காக  வழக்காடுகிறவர்  ஒருவர்  உண்டானால்  நலமாயிருக்கும்.  (யோபு  16:21)

oru  manupuththiran  than  sineagithanukkaaga  vazhakkaadugi’rathupoala,  theavanoadea  manushanukkaaga  vazhakkaadugi’ravar  oruvar  u'ndaanaal  nalamaayirukkum.  (yoabu  16:21)

குறுகின  வருஷங்களுக்கு  முடிவு  வருகிறது;  நான்  திரும்பிவராத  வழியே  போவேன்.  (யோபு  16:22)

ku’rugina  varushangga'lukku  mudivu  varugi’rathu;  naan  thirumbivaraatha  vazhiyea  poavean.  (yoabu  16:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!