Monday, September 12, 2016

Yoabu 12 | யோபு 12 | Job 12

யோபு  பிரதியுத்தரமாக:  (யோபு  12:1)

yoabu  pirathiyuththaramaaga:  (yoabu  12:1)

ஆம்,  நீங்களே  ஞானமுள்ள  ஜனங்கள்;  உங்களுடனே  ஞானம்  சாகும்.  (யோபு  12:2)

aam,  neengga'lea  gnaanamu'l'la  janangga'l;  ungga'ludanea  gnaanam  saagum.  (yoabu  12:2)

உங்களைப்போல  எனக்கும்  புத்தியுண்டு;  உங்களிலும்  நான்  தாழ்ந்தவன்  அல்ல;  இப்படிப்பட்டவைகளை  அறியாதவன்  யார்?  (யோபு  12:3)

ungga'laippoala  enakkum  buththiyu'ndu;  ungga'lilum  naan  thaazhnthavan  alla;  ippadippattavaiga'lai  a’riyaathavan  yaar?  (yoabu  12:3)

என்  சிநேகிதரால்  நான்  நிந்திக்கப்பட்டு,  தேவனை  நோக்கிப்  பிரார்த்திப்பேன்;  அவர்  எனக்கு  மறுஉத்தரவு  அருளுவார்;  உத்தமனாகிய  நீதிமான்  பரியாசம்பண்ணப்படுகிறான்.  (யோபு  12:4)

en  sineagitharaal  naan  ninthikkappattu,  theavanai  noakkip  piraarththippean;  avar  enakku  ma’ruuththaravu  aru'luvaar;  uththamanaagiya  neethimaan  pariyaasampa'n'nappadugi’raan.  (yoabu  12:4)

ஆபத்துக்குள்ளானவன்  சுகமாயிருக்கிறவனுடைய  நினைவில்  இகழ்ச்சியடைகிறான்;  காலிடறினவர்களுக்கு  இது  நேரிடும்.  (யோபு  12:5)

aabaththukku'l'laanavan  sugamaayirukki’ravanudaiya  ninaivil  igazhchchiyadaigi’raan;  kaalida’rinavarga'lukku  ithu  nearidum.  (yoabu  12:5)

கள்ளருடைய  கூடாரங்களில்  செல்வமுண்டு;  தேவனைக்  கோபப்படுத்துகிறவர்களுக்குச்  சாங்கோபாங்கமுண்டு;  அவர்கள்  கையிலே  தேவன்  கொண்டுவந்து  கொடுக்கிறார்.  (யோபு  12:6)

ka'l'larudaiya  koodaarangga'lil  selvamu'ndu;  theavanaik  koabappaduththugi’ravarga'lukkuch  saanggoabaanggamu'ndu;  avarga'l  kaiyilea  theavan  ko'nduvanthu  kodukki’raar.  (yoabu  12:6)

இப்போதும்  நீ  மிருகங்களைக்  கேட்டுப்பார்,  அவைகள்  உனக்குப்  போதிக்கும்;  ஆகாயத்துப்  பறவைகளைக்  கேள்,  அவைகள்  உனக்கு  அறிவிக்கும்.  (யோபு  12:7)

ippoathum  nee  mirugangga'laik  keattuppaar,  avaiga'l  unakkup  poathikkum;  aagaayaththup  pa’ravaiga'laik  kea'l,  avaiga'l  unakku  a’rivikkum.  (yoabu  12:7)

அல்லது  பூமியை  விசாரித்துக்  கேள்,  அது  உனக்கு  உபதேசிக்கும்;  சமுத்திரத்தின்  மச்சங்களைக்  கேள்,  அவைகள்  உனக்கு  விவரிக்கும்.  (யோபு  12:8)

allathu  boomiyai  visaariththuk  kea'l,  athu  unakku  ubatheasikkum;  samuththiraththin  machchangga'laik  kea'l,  avaiga'l  unakku  vivarikkum.  (yoabu  12:8)

கர்த்தருடைய  கரம்  இதைச்  செய்ததென்று  இவைகளெல்லாவற்றினாலும்  அறியாதவன்  யார்?  (யோபு  12:9)

karththarudaiya  karam  ithaich  seythathen’ru  ivaiga'lellaavat’rinaalum  a’riyaathavan  yaar?  (yoabu  12:9)

சகல  பிராணிகளின்  ஜீவனும்,  மாம்சமான  சகல  மனுஷரின்  ஆவியும்  அவர்  கையிலிருக்கிறது.  (யோபு  12:10)

sagala  piraa'niga'lin  jeevanum,  maamsamaana  sagala  manusharin  aaviyum  avar  kaiyilirukki’rathu.  (yoabu  12:10)

வாயானது  போஜனத்தை  ருசிபார்க்கிறதுபோல,  செவியானது  வார்த்தைகளைச்  சோதித்துப்பார்க்கிறதல்லவா?  (யோபு  12:11)

vaayaanathu  poajanaththai  rusipaarkki’rathupoala,  seviyaanathu  vaarththaiga'laich  soathiththuppaarkki’rathallavaa?  (yoabu  12:11)

முதியோரிடத்தில்  ஞானமும்  வயதுசென்றவர்களிடத்தில்  புத்தியும்  இருக்குமே.  (யோபு  12:12)

muthiyoaridaththil  gnaanamum  vayathusen’ravarga'lidaththil  buththiyum  irukkumea.  (yoabu  12:12)

அவரிடத்தில்  ஞானமும்  வல்லமையும்  எத்தனை  அதிகமாய்  இருக்கும்?  அவருக்குத்தான்  ஆலோசனையும்  புத்தியும்  உண்டு.  (யோபு  12:13)

avaridaththil  gnaanamum  vallamaiyum  eththanai  athigamaay  irukkum?  avarukkuththaan  aaloasanaiyum  buththiyum  u'ndu.  (yoabu  12:13)

இதோ,  அவர்  இடித்தால்  கட்டமுடியாது;  அவர்  மனுஷனை  அடைத்தால்  விடுவிக்கமுடியாது.  (யோபு  12:14)

ithoa,  avar  idiththaal  kattamudiyaathu;  avar  manushanai  adaiththaal  viduvikkamudiyaathu.  (yoabu  12:14)

இதோ,  அவர்  தண்ணீர்களை  அடக்கினால்  எல்லாம்  உலர்ந்துபோம்;  அவர்  அவைகளை  வரவிட்டால்,  பூமியைக்  கீழதுமேலதாக்கும்.  (யோபு  12:15)

ithoa,  avar  tha'n'neerga'lai  adakkinaal  ellaam  ularnthupoam;  avar  avaiga'lai  varavittaal,  boomiyaik  keezhathumealathaakkum.  (yoabu  12:15)

அவரிடத்தில்  பெலனும்  ஞானமுமுண்டு;  மோசம்போகிறவனும்  மோசம்போக்குகிறவனும்,  அவர்  கையின்  கீழிருக்கிறார்கள்.  (யோபு  12:16)

avaridaththil  belanum  gnaanamumu'ndu;  moasampoagi’ravanum  moasampoakkugi’ravanum,  avar  kaiyin  keezhirukki’raarga'l.  (yoabu  12:16)

அவர்  ஆலோசனைக்காரரைச்  சிறைபிடித்து,  நியாயாதிபதிகளை  மதிமயக்குகிறார்.  (யோபு  12:17)

avar  aaloasanaikkaararaich  si’raipidiththu,  niyaayaathibathiga'lai  mathimayakkugi’raar.  (yoabu  12:17)

அவர்  ராஜாக்களுடைய  கட்டுகளை  அவிழ்த்து,  அவர்கள்  இடுப்புகளைக்  கச்சைகட்டுகிறார்.  (யோபு  12:18)

avar  raajaakka'ludaiya  kattuga'lai  avizhththu,  avarga'l  iduppuga'laik  kachchaikattugi’raar.  (yoabu  12:18)

அவர்  மந்திரிகளைச்  சிறைபிடித்துக்கொண்டுபோய்,  பெலவான்களைக்  கவிழ்த்துப்போடுகிறார்.  (யோபு  12:19)

avar  manthiriga'laich  si’raipidiththukko'ndupoay,  belavaanga'laik  kavizhththuppoadugi’raar.  (yoabu  12:19)

அவர்  நம்பிக்கையுள்ளவர்களுடைய  வாக்கை  விலக்கி,  முதிர்வயதுள்ளவர்களின்  ஆலோசனையை  வாங்கிப்போடுகிறார்.  (யோபு  12:20)

avar  nambikkaiyu'l'lavarga'ludaiya  vaakkai  vilakki,  muthirvayathu'l'lavarga'lin  aaloasanaiyai  vaanggippoadugi’raar.  (yoabu  12:20)

அவர்  பிரபுக்களின்மேல்  இகழ்ச்சி  வரப்பண்ணுகிறார்;  பலவான்களின்  கச்சையைத்  தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.  (யோபு  12:21)

avar  pirabukka'linmeal  igazhchchi  varappa'n'nugi’raar;  balavaanga'lin  kachchaiyaith  tha'larnthupoagappa'n'nugi’raar.  (yoabu  12:21)

அவர்  அந்தகாரத்திலிருக்கிற  ஆழங்களை  வெளியரங்கமாக்கி,  மரண  இருளை  வெளிச்சத்தில்  கொண்டுவருகிறார்.  (யோபு  12:22)

avar  anthagaaraththilirukki’ra  aazhangga'lai  ve'liyaranggamaakki,  mara'na  iru'lai  ve'lichchaththil  ko'nduvarugi’raar.  (yoabu  12:22)

அவர்  ஜாதிகளைப்  பெருகவும்  அழியவும்  பண்ணுகிறார்;  அவர்  ஜாதிகளைப்  பரவவும்  குறுகவும்  பண்ணுகிறார்.  (யோபு  12:23)

avar  jaathiga'laip  perugavum  azhiyavum  pa'n'nugi’raar;  avar  jaathiga'laip  paravavum  ku’rugavum  pa'n'nugi’raar.  (yoabu  12:23)

அவர்  பூமியிலுள்ள  ஜனத்தினுடைய  அதிபதிகளின்  நெஞ்சை  அகற்றிப்போட்டு,  அவர்களை  வழியில்லாத  அந்தரத்திலே  அலையப்பண்ணுகிறார்.  (யோபு  12:24)

avar  boomiyilu'l'la  janaththinudaiya  athibathiga'lin  negnchai  agat’rippoattu,  avarga'lai  vazhiyillaatha  antharaththilea  alaiyappa'n'nugi’raar.  (yoabu  12:24)

அவர்கள்  வெளிச்சமற்ற  இருளிலே  தடவித்திரிகிறார்கள்;  வெறித்தவர்களைப்போல  அவர்களைத்  தடுமாறித்  திரியப்பண்ணுகிறார்.  (யோபு  12:25)

avarga'l  ve'lichchamat’ra  iru'lilea  thadaviththirigi’raarga'l;  ve’riththavarga'laippoala  avarga'laith  thadumaa’rith  thiriyappa'n'nugi’raar.  (yoabu  12:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!