Monday, September 12, 2016

Yoabu 10 | யோபு 10 | Job 10

என்  ஆத்துமா  ஜீவனை  அரோசிக்கிறது,  நான்  என்  துயரத்துக்கு  எனக்குள்ளே  இடங்கொடுத்து,  என்  மனச்சஞ்சலத்தினாலே  பேசுவேன்.  (யோபு  10:1)

en  aaththumaa  jeevanai  aroasikki’rathu,  naan  en  thuyaraththukku  enakku'l'lea  idangkoduththu,  en  manachsagnchalaththinaalea  peasuvean.  (yoabu  10:1)

நான்  தேவனை  நோக்கி:  என்னைக்  குற்றவாளியென்று  தீர்க்காதிரும்;  நீர்  எதினிமித்தம்  என்னோடே  வழக்காடுகிறீர்,  அதை  எனக்குத்  தெரியப்படுத்தும்  என்பேன்.  (யோபு  10:2)

naan  theavanai  noakki:  ennaik  kut’ravaa'liyen’ru  theerkkaathirum;  neer  ethinimiththam  ennoadea  vazhakkaadugi’reer,  athai  enakkuth  theriyappaduththum  enbean.  (yoabu  10:2)

நீர்  என்னை  ஒடுக்கி,  உம்முடைய  கைகளின்  கிரியையை  வெறுத்து,  துன்மார்க்கரின்  யோசனையைக்  கிருபையாய்ப்  பார்க்கிறது  உமக்கு  நன்றாயிருக்குமோ?  (யோபு  10:3)

neer  ennai  odukki,  ummudaiya  kaiga'lin  kiriyaiyai  ve’ruththu,  thunmaarkkarin  yoasanaiyaik  kirubaiyaayp  paarkki’rathu  umakku  nan’raayirukkumoa?  (yoabu  10:3)

மாம்சக்  கண்கள்  உமக்கு  உண்டோ?  மனுஷன்  பார்க்கிறபிரகாரமாய்ப்  பார்க்கிறீரோ?  (யோபு  10:4)

maamsak  ka'nga'l  umakku  u'ndoa?  manushan  paarkki’rapiragaaramaayp  paarkki’reeroa?  (yoabu  10:4)

நீர்  என்  அக்கிரமத்தைக்  கிண்டிக்கிளப்பி,  என்  பாவத்தை  ஆராய்ந்து  விசாரிக்கிறதற்கு,  (யோபு  10:5)

neer  en  akkiramaththaik  ki'ndikki'lappi,  en  paavaththai  aaraaynthu  visaarikki’ratha’rku,  (yoabu  10:5)

உம்முடைய  நாட்கள்  ஒரு  மனுஷனுடைய  நாட்களைப்போலவும்,  உம்முடைய  வருஷங்கள்  ஒரு  புருஷனுடைய  ஜீவகாலத்தைப்போலவும்  இருக்கிறதோ?  (யோபு  10:6)

ummudaiya  naadka'l  oru  manushanudaiya  naadka'laippoalavum,  ummudaiya  varushangga'l  oru  purushanudaiya  jeevakaalaththaippoalavum  irukki’rathoa?  (yoabu  10:6)

நான்  துன்மார்க்கன்  அல்ல  என்பது  உமக்குத்  தெரியும்;  உம்முடைய  கைக்கு  என்னைத்  தப்புவிக்கிறவன்  இல்லை.  (யோபு  10:7)

naan  thunmaarkkan  alla  enbathu  umakkuth  theriyum;  ummudaiya  kaikku  ennaith  thappuvikki’ravan  illai.  (yoabu  10:7)

உம்முடைய  கரங்கள்  என்னையும்  எனக்குரிய  எல்லாவற்றையும்  உருவாக்கிப்  படைத்திருந்தும்,  என்னை  நிர்மூலமாக்குகிறீர்.  (யோபு  10:8)

ummudaiya  karangga'l  ennaiyum  enakkuriya  ellaavat’raiyum  uruvaakkip  padaiththirunthum,  ennai  nirmoolamaakkugi’reer.  (yoabu  10:8)

களிமண்போல  என்னை  உருவாக்கினீர்  என்பதையும்,  என்னைத்  திரும்பத்  தூளாகப்போகப்பண்ணுவீர்  என்பதையும்  நினைத்தருளும்.  (யோபு  10:9)

ka'lima'npoala  ennai  uruvaakkineer  enbathaiyum,  ennaith  thirumbath  thoo'laagappoagappa'n'nuveer  enbathaiyum  ninaiththaru'lum.  (yoabu  10:9)

நீர்  என்னைப்  பால்போல்  வார்த்து,  தயிர்போல்  உறையப்பண்ணினீர்  அல்லவோ?  (யோபு  10:10)

neer  ennaip  paalpoal  vaarththu,  thayirpoal  u’raiyappa'n'nineer  allavoa?  (yoabu  10:10)

தோலையும்  சதையையும்  எனக்குத்  தரித்து,  எலும்புகளாலும்  நரம்புகளாலும்  என்னை  இசைத்தீர்.  (யோபு  10:11)

thoalaiyum  sathaiyaiyum  enakkuth  thariththu,  elumbuga'laalum  narambuga'laalum  ennai  isaiththeer.  (yoabu  10:11)

எனக்கு  ஜீவனைத்  தந்ததும்  அல்லாமல்,  தயவையும்  எனக்குப்  பாராட்டினீர்;  உம்முடைய  பராமரிப்பு  என்  ஆவியைக்  காப்பாற்றினது.  (யோபு  10:12)

enakku  jeevanaith  thanthathum  allaamal,  thayavaiyum  enakkup  paaraattineer;  ummudaiya  paraamarippu  en  aaviyaik  kaappaat’rinathu.  (yoabu  10:12)

இவைகள்  உம்முடைய  உள்ளத்தில்  மறைந்திருந்தாலும்,  இது  உமக்குள்  இருக்கிறது  என்று  அறிவேன்.  (யோபு  10:13)

ivaiga'l  ummudaiya  u'l'laththil  ma’rainthirunthaalum,  ithu  umakku'l  irukki’rathu  en’ru  a’rivean.  (yoabu  10:13)

நான்  பாவஞ்செய்தால்,  அதை  நீர்  என்னிடத்தில்  விசாரித்து,  என்  அக்கிரமத்தை  என்மேல்  சுமத்தாமல்  விடீர்.  (யோபு  10:14)

naan  paavagnseythaal,  athai  neer  ennidaththil  visaariththu,  en  akkiramaththai  enmeal  sumaththaamal  videer.  (yoabu  10:14)

நான்  துன்மார்க்கனாயிருந்தால்  எனக்கு  ஐயோ!  நான்  நீதிமானாயிருந்தாலும்  என்  தலையை  நான்  எடுக்கமாட்டேன்;  அவமானத்தால்  நிரப்பப்பட்டேன்;  நீர்  என்  சிறுமையைப்  பார்த்தருளும்,  அது  அதிகரிக்கிறது.  (யோபு  10:15)

naan  thunmaarkkanaayirunthaal  enakku  aiyoa!  naan  neethimaanaayirunthaalum  en  thalaiyai  naan  edukkamaattean;  avamaanaththaal  nirappappattean;  neer  en  si’rumaiyaip  paarththaru'lum,  athu  athigarikki’rathu.  (yoabu  10:15)

சிங்கத்தைப்போல  என்னை  வேட்டையாடி,  எனக்கு  விரோதமாய்  உமது  அதிசய  வல்லமையை  விளங்கப்பண்ணுகிறீர்.  (யோபு  10:16)

singgaththaippoala  ennai  veattaiyaadi,  enakku  viroathamaay  umathu  athisaya  vallamaiyai  vi'langgappa'n'nugi’reer.  (yoabu  10:16)

நீர்  உம்முடைய  சாட்சிகளை  எனக்கு  விரோதமாய்  இரட்டிக்கப்பண்ணுகிறீர்;  என்மேல்  உம்முடைய  கோபத்தை  அதிகரிக்கப்பண்ணுகிறீர்;  போராட்டத்தின்மேல்  போராட்டம்  அதிகரிக்கிறது.  (யோபு  10:17)

neer  ummudaiya  saadchiga'lai  enakku  viroathamaay  irattikkappa'n'nugi’reer;  enmeal  ummudaiya  koabaththai  athigarikkappa'n'nugi’reer;  poaraattaththinmeal  poaraattam  athigarikki’rathu.  (yoabu  10:17)

நீர்  என்னைக்  கர்ப்பத்திலிருந்து  புறப்படப்பண்ணினது  என்ன?  ஒரு  கண்ணும்  என்னைக்  காணாதபடி,  நான்  அப்பொழுதே  ஜீவித்துப்போனால்  நலமாமே.  (யோபு  10:18)

neer  ennaik  karppaththilirunthu  pu’rappadappa'n'ninathu  enna?  oru  ka'n'num  ennaik  kaa'naathapadi,  naan  appozhuthea  jeeviththuppoanaal  nalamaamea.  (yoabu  10:18)

நான்  ஒருக்காலும்  இல்லாதது  போலிருந்து,  கர்ப்பத்திலிருந்து  பிரேதக்குழிக்குக்  கொண்டுபோகப்பட்டிருப்பேன்.  (யோபு  10:19)

naan  orukkaalum  illaathathu  poalirunthu,  karppaththilirunthu  pireathakkuzhikkuk  ko'ndupoagappattiruppean.  (yoabu  10:19)

என்  நாட்கள்  கொஞ்சமல்லவோ?  (யோபு  10:20)

en  naadka'l  kognchamallavoa?  (yoabu  10:20)

காரிருளும்  மரணாந்தகாரமுமான  இருண்ட  தேசமும்,  இருள்சூழ்ந்த  ஒழுங்கில்லாத  மரணாந்தகாரமுள்ள  தேசமும்,  ஒளியும்  இருளாகும்  தேசமுமாகிய,  போனால்  திரும்பிவராத  தேசத்துக்கு,  நான்  போகுமுன்னே,  (யோபு  10:21)

kaariru'lum  mara'naanthagaaramumaana  iru'nda  theasamum,  iru'lsoozhntha  ozhunggillaatha  mara'naanthagaaramu'l'la  theasamum,  o'liyum  iru'laagum  theasamumaagiya,  poanaal  thirumbivaraatha  theasaththukku,  naan  poagumunnea,  (yoabu  10:21)

நான்  சற்று  இளைப்பாறும்படி  நீர்  என்னைவிட்டு  ஓய்ந்திரும்  என்றான்.  (யோபு  10:22)

naan  sat’ru  i'laippaa’rumpadi  neer  ennaivittu  oaynthirum  en’raan.  (yoabu  10:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!