Wednesday, September 14, 2016

Esthar 7 | எஸ்தர் 7 | Esther 7

ராஜாத்தியாகிய  எஸ்தருடனே  விருந்துண்ண,  ராஜாவும்  ஆமானும்  வந்தபோது,  (எஸ்தர்  7:1)

raajaaththiyaagiya  estharudanea  virunthu'n'na,  raajaavum  aamaanum  vanthapoathu,  (esthar  7:1)

இரண்டாம்  நாள்  விருந்தில்  திராட்சரசம்  பரிமாறப்படும்போது,  ராஜா  எஸ்தரை  நோக்கி:  எஸ்தர்  ராஜாத்தியே,  உன்  வேண்டுதல்  என்ன?  அது  உனக்குக்  கொடுக்கப்படும்;  நீ  கேட்கிற  மன்றாட்டு  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்  கிடைக்கும்  என்றான்.  (எஸ்தர்  7:2)

ira'ndaam  naa'l  virunthil  thiraadcharasam  parimaa’rappadumpoathu,  raajaa  estharai  noakki:  esthar  raajaaththiyea,  un  vea'nduthal  enna?  athu  unakkuk  kodukkappadum;  nee  keadki’ra  man’raattu  enna?  nee  raajyaththil  paathimattum  keattaalum  kidaikkum  en’raan.  (esthar  7:2)

அப்பொழுது  ராஜாத்தியாகிய  எஸ்தர்  பிரதியுத்தரமாக:  ராஜாவே,  உம்முடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடைத்து,  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்  என்  வேண்டுதலுக்கு  என்  ஜீவனும்,  என்  மன்றாட்டுக்கு  என்  ஜனங்களும்  எனக்குக்  கட்டளையிடப்படுவதாக.  (எஸ்தர்  7:3)

appozhuthu  raajaaththiyaagiya  esthar  pirathiyuththaramaaga:  raajaavea,  ummudaiya  ka'nga'lil  enakkuk  kirubai  kidaiththu,  raajaavukkuch  siththamaayirunthaal  en  vea'nduthalukku  en  jeevanum,  en  man’raattukku  en  janangga'lum  enakkuk  katta'laiyidappaduvathaaga.  (esthar  7:3)

எங்களை  அழித்துக்  கொன்று  நிர்மூலமாக்கும்படி  நானும்  என்  ஜனங்களும்  விற்கப்பட்டோம்;  அடிமைகளாகவும்  வெள்ளாட்டிகளாகவும்  விற்கப்பட்டுப்போனாலும்  நான்  மவுனமாயிருப்பேன்;  இப்பொழுதோ  ராஜாவுக்கு  உண்டாகும்  நஷ்டத்துக்கு  அந்தச்  சத்துரு  உத்தரவாதம்பண்ண  முடியாது  என்றாள்.  (எஸ்தர்  7:4)

engga'lai  azhiththuk  kon’ru  nirmoolamaakkumpadi  naanum  en  janangga'lum  vi’rkappattoam;  adimaiga'laagavum  ve'l'laattiga'laagavum  vi’rkappattuppoanaalum  naan  mavunamaayiruppean;  ippozhuthoa  raajaavukku  u'ndaagum  nashdaththukku  anthach  saththuru  uththaravaathampa'n'na  mudiyaathu  en’raa'l.  (esthar  7:4)

அப்பொழுது  ராஜாவாகிய  அகாஸ்வேரு  மறுமொழியாக,  ராஜாத்தியாகிய  எஸ்தரை  நோக்கி:  இப்படிச்  செய்யத்  துணிகரங்கொண்டவன்  யார்?  அவன்  எங்கே?  என்றான்.  (எஸ்தர்  7:5)

appozhuthu  raajaavaagiya  agaasvearu  ma’rumozhiyaaga,  raajaaththiyaagiya  estharai  noakki:  ippadich  seyyath  thu'nigarangko'ndavan  yaar?  avan  enggea?  en’raan.  (esthar  7:5)

அதற்கு  எஸ்தர்:  சத்துருவும்  பகைஞனுமாகிய  அந்த  மனிதன்  இந்தத்  துஷ்ட  ஆமான்தான்  என்றாள்;  அப்பொழுது  ராஜாவுக்கும்  ராஜாத்திக்கும்  முன்பாக  ஆமான்  திகிலடைந்தான்.  (எஸ்தர்  7:6)

atha’rku  esthar:  saththuruvum  pagaignanumaagiya  antha  manithan  inthath  thushda  aamaanthaan  en’raa'l;  appozhuthu  raajaavukkum  raajaaththikkum  munbaaga  aamaan  thigiladainthaan.  (esthar  7:6)

ராஜா  உக்கிரத்தோடே  திராட்சரசப்பந்தியை  விட்டெழுந்து,  அரமனைத்  தோட்டத்திற்குப்  போனான்;  ராஜாவினால்  தனக்குப்  பொல்லாப்பு  நிர்ணயிக்கப்பட்டதென்று  ஆமான்  கண்டு,  ராஜாத்தியாகிய  எஸ்தரிடத்தில்  தன்  பிராணனுக்காக  விண்ணப்பம்பண்ண  எழுந்துநின்றான்.  (எஸ்தர்  7:7)

raajaa  ukkiraththoadea  thiraadcharasappanthiyai  vittezhunthu,  aramanaith  thoattaththi’rkup  poanaan;  raajaavinaal  thanakkup  pollaappu  nir'nayikkappattathen’ru  aamaan  ka'ndu,  raajaaththiyaagiya  estharidaththil  than  piraa'nanukkaaga  vi'n'nappampa'n'na  ezhunthunin’raan.  (esthar  7:7)

ராஜா  அரமனைத்  தோட்டத்திலிருந்து  திராட்சரசம்  பரிமாறப்பட்ட  இடத்துக்குத்  திரும்பிவருகையில்,  எஸ்தர்  உட்கார்ந்திருக்கிற  மெத்தையின்மேல்  ஆமான்  விழுந்துகிடந்தான்;  அப்பொழுது  ராஜா:  நான்  அரமனையிலிருக்கும்போதே  என்  கண்முன்னே  இவன்  ராஜாத்தியைப்  பலவந்தம்  செய்யவேண்டுமென்றிருக்கிறானோ  என்றான்;  இந்த  வார்த்தை  ராஜாவின்  வாயிலிருந்து  பிறந்தவுடனே  ஆமானின்  முகத்தை  மூடிப்போட்டார்கள்.  (எஸ்தர்  7:8)

raajaa  aramanaith  thoattaththilirunthu  thiraadcharasam  parimaa’rappatta  idaththukkuth  thirumbivarugaiyil,  esthar  udkaarnthirukki’ra  meththaiyinmeal  aamaan  vizhunthukidanthaan;  appozhuthu  raajaa:  naan  aramanaiyilirukkumpoathea  en  ka'nmunnea  ivan  raajaaththiyaip  balavantham  seyyavea'ndumen’rirukki’raanoa  en’raan;  intha  vaarththai  raajaavin  vaayilirunthu  pi’ranthavudanea  aamaanin  mugaththai  moodippoattaarga'l.  (esthar  7:8)

அப்பொழுது  ராஜசமுகத்தில்  இருக்கிற  பிரதானிகளில்  அற்போனா  என்னும்  ஒருவன்:  இதோ,  ராஜாவின்  நன்மைக்காகப்  பேசின  மொர்தெகாய்க்கு  ஆமான்  செய்வித்த  ஐம்பது  முழ  உயரமான  தூக்குமரம்  ஆமானின்  வீட்டண்டை  நாட்டப்பட்டிருக்கிறது  என்றான்;  அப்பொழுது  ராஜா:  அதிலே  அவனைத்  தூக்கிப்போடுங்கள்  என்றான்.  (எஸ்தர்  7:9)

appozhuthu  raajasamugaththil  irukki’ra  pirathaaniga'lil  a’rboanaa  ennum  oruvan:  ithoa,  raajaavin  nanmaikkaagap  peasina  morthekaaykku  aamaan  seyviththa  aimbathu  muzha  uyaramaana  thookkumaram  aamaanin  veetta'ndai  naattappattirukki’rathu  en’raan;  appozhuthu  raajaa:  athilea  avanaith  thookkippoadungga'l  en’raan.  (esthar  7:9)

அப்படியே  ஆமான்  மொர்தெகாய்க்கு  ஆயத்தம்பண்ணின  தூக்குமரத்தில்  ஆமானையே  தூக்கிப்போட்டார்கள்;  அப்பொழுது  ராஜாவின்  உக்கிரம்  தணிந்தது.  (எஸ்தர்  7:10)

appadiyea  aamaan  morthekaaykku  aayaththampa'n'nina  thookkumaraththil  aamaanaiyea  thookkippoattaarga'l;  appozhuthu  raajaavin  ukkiram  tha'ninthathu.  (esthar  7:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!