Wednesday, September 14, 2016

Esthar 6 | எஸ்தர் 6 | Esther 6

அந்த  ராத்திரியிலே  ராஜாவுக்கு  நித்திரை  வராதபடியினால்,  காலவர்த்தமானங்கள்  எழுதியிருக்கிற  நடபடி  புஸ்தகத்தைக்  கொண்டுவரச்சொன்னான்;  அது  ராஜசமுகத்தில்  வாசிக்கப்பட்டது.  (எஸ்தர்  6:1)

antha  raaththiriyilea  raajaavukku  niththirai  varaathapadiyinaal,  kaalavarththamaanangga'l  ezhuthiyirukki’ra  nadapadi  pusthagaththaik  ko'nduvarachsonnaan;  athu  raajasamugaththil  vaasikkappattathu.  (esthar  6:1)

அப்பொழுது  வாசற்  காவலாளரில்  ராஜாவின்  இரண்டு  பிரதானிகளாகிய  பிக்தானாவும்  தேரேசும்,  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்மேல்  கைபோடப்பார்த்த  செய்தியை  மொர்தெகாய்  அறிவித்தான்  என்று  எழுதியிருக்கிறது  வாசிக்கப்பட்டது.  (எஸ்தர்  6:2)

appozhuthu  vaasa’r  kaavalaa'laril  raajaavin  ira'ndu  pirathaaniga'laagiya  bikthaanaavum  theareasum,  raajaavaagiya  agaasvearuvinmeal  kaipoadappaarththa  seythiyai  morthekaay  a’riviththaan  en’ru  ezhuthiyirukki’rathu  vaasikkappattathu.  (esthar  6:2)

அப்பொழுது  ராஜா:  இதற்காக  மொர்தெகாய்க்கு  கனமும்  மேன்மையும்  செய்யப்பட்டதா  என்று  கேட்டான்.  அதற்கு  ராஜாவைச்  சேவிக்கிற  ஊழியக்காரர்:  அவனுக்கு  ஒன்றும்  செய்யப்படவில்லை  என்று  சொன்னார்கள்.  (எஸ்தர்  6:3)

appozhuthu  raajaa:  itha’rkaaga  morthekaaykku  kanamum  meanmaiyum  seyyappattathaa  en’ru  keattaan.  atha’rku  raajaavaich  seavikki’ra  oozhiyakkaarar:  avanukku  on’rum  seyyappadavillai  en’ru  sonnaarga'l.  (esthar  6:3)

ஆமான்  தான்  செய்த  தூக்குமரத்திலே  மொர்தெகாயைத்  தூக்கிப்போடவேண்டுமென்று,  ராஜாவிடத்தில்  பேசும்படி  ராஜ  அரமனையின்  வெளிமுற்றத்திலே  வந்திருந்தான்.  அப்பொழுது  ராஜா:  முற்றத்திலிருக்கிறது  யார்  என்று  கேட்டான்.  (எஸ்தர்  6:4)

aamaan  thaan  seytha  thookkumaraththilea  morthekaayaith  thookkippoadavea'ndumen’ru,  raajaavidaththil  peasumpadi  raaja  aramanaiyin  ve'limut’raththilea  vanthirunthaan.  appozhuthu  raajaa:  mut’raththilirukki’rathu  yaar  en’ru  keattaan.  (esthar  6:4)

ராஜாவின்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  இதோ,  ஆமான்  முற்றத்திலே  நிற்கிறான்  என்றார்கள்;  ராஜா:  அவன்  உள்ளே  வரட்டும்  என்றான்.  (எஸ்தர்  6:5)

raajaavin  oozhiyakkaarar  avanai  noakki:  ithoa,  aamaan  mut’raththilea  ni’rki’raan  en’raarga'l;  raajaa:  avan  u'l'lea  varattum  en’raan.  (esthar  6:5)

ஆமான்  உள்ளே  வந்தபோது,  ராஜா  அவனை  நோக்கி:  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  என்ன  செய்யப்படவேண்டும்  என்று  கேட்டான்;  அதற்கு  ஆமான்,  என்னையன்றி,  யாரை  ராஜா  கனம்பண்ண  விரும்புவார்  என்று  தன்  மனதிலே  நினைத்து,  (எஸ்தர்  6:6)

aamaan  u'l'lea  vanthapoathu,  raajaa  avanai  noakki:  raajaa  kanampa'n'na  virumbugi’ra  manushanukku  enna  seyyappadavea'ndum  en’ru  keattaan;  atha’rku  aamaan,  ennaiyan’ri,  yaarai  raajaa  kanampa'n'na  virumbuvaar  en’ru  than  manathilea  ninaiththu,  (esthar  6:6)

ராஜாவை  நோக்கி:  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்குச்  செய்யவேண்டியது  என்னவென்றால்,  (எஸ்தர்  6:7)

raajaavai  noakki:  raajaa  kanampa'n'na  virumbugi’ra  manushanukkuch  seyyavea'ndiyathu  ennaven’raal,  (esthar  6:7)

ராஜா  உடுத்திக்கொள்ளுகிற  ராஜவஸ்திரமும்,  ராஜா  ஏறுகிற  குதிரையும்,  அவர்  சிரசிலே  தரிக்கப்படும்  ராஜமுடியும்  கொண்டுவரப்படவேண்டும்.  (எஸ்தர்  6:8)

raajaa  uduththikko'l'lugi’ra  raajavasthiramum,  raajaa  ea’rugi’ra  kuthiraiyum,  avar  sirasilea  tharikkappadum  raajamudiyum  ko'nduvarappadavea'ndum.  (esthar  6:8)

அந்த  வஸ்திரமும்  குதிரையும்  ராஜாவுடைய  பிரதான  பிரபுக்களில்  ஒருவனுடைய  கையிலே  கொடுக்கப்படவேண்டும்;  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனை  அலங்கரித்தபின்,  அவனைக்  குதிரையின்மேல்  ஏற்றி,  நகரவீதியில்  உலாவும்படி  செய்து,  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  இப்படியே  செய்யப்படும்  என்று  அவனுக்கு  முன்பாகக்  கூறப்படவேண்டும்  என்றான்.  (எஸ்தர்  6:9)

antha  vasthiramum  kuthiraiyum  raajaavudaiya  pirathaana  pirabukka'lil  oruvanudaiya  kaiyilea  kodukkappadavea'ndum;  raajaa  kanampa'n'na  virumbugi’ra  manushanai  alanggariththapin,  avanaik  kuthiraiyinmeal  eat’ri,  nagaraveethiyil  ulaavumpadi  seythu,  raajaa  kanampa'n'na  virumbugi’ra  manushanukku  ippadiyea  seyyappadum  en’ru  avanukku  munbaagak  koo’rappadavea'ndum  en’raan.  (esthar  6:9)

அப்பொழுது  ராஜா  ஆமானை  நோக்கி:  சீக்கிரமாய்  நீ  சொன்னபடி  வஸ்திரத்தையும்  குதிரையையும்  கொண்டுபோய்,  ராஜ  அரமனையின்  வாசலில்  உட்கார்ந்திருக்கிற  யூதனாகிய  மொர்தெகாய்க்கு  அந்தப்பிரகாரம்  செய்;  நீ  சொன்ன  எல்லாவற்றிலும்  ஒன்றும்  தவறாதபடி  பார்  என்றான்.  (எஸ்தர்  6:10)

appozhuthu  raajaa  aamaanai  noakki:  seekkiramaay  nee  sonnapadi  vasthiraththaiyum  kuthiraiyaiyum  ko'ndupoay,  raaja  aramanaiyin  vaasalil  udkaarnthirukki’ra  yoothanaagiya  morthekaaykku  anthappiragaaram  sey;  nee  sonna  ellaavat’rilum  on’rum  thava’raathapadi  paar  en’raan.  (esthar  6:10)

அப்படியே  ஆமான்  வஸ்திரத்தையும்  குதிரையையும்  கொண்டுபோய்,  மொர்தெகாயை  அலங்கரித்து,  அவனைக்  குதிரையின்மேல்  ஏற்றி,  நகரவீதியில்  உலாவும்படி  செய்து,  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  இப்படியே  செய்யப்படும்  என்று  அவனுக்கு  முன்பாகக்  கூறினான்.  (எஸ்தர்  6:11)

appadiyea  aamaan  vasthiraththaiyum  kuthiraiyaiyum  ko'ndupoay,  morthekaayai  alanggariththu,  avanaik  kuthiraiyinmeal  eat’ri,  nagaraveethiyil  ulaavumpadi  seythu,  raajaa  kanampa'n'na  virumbugi’ra  manushanukku  ippadiyea  seyyappadum  en’ru  avanukku  munbaagak  koo’rinaan.  (esthar  6:11)

பின்பு  மொர்தெகாய்  ராஜாவின்  அரமனைவாசலுக்குத்  திரும்பிவந்தான்;  ஆமானோவென்றால்  சஞ்சலப்பட்டு  முக்காடிட்டுக்கொண்டு  தன்  வீட்டுக்குத்  தீவிரித்துப்போனான்.  (எஸ்தர்  6:12)

pinbu  morthekaay  raajaavin  aramanaivaasalukkuth  thirumbivanthaan;  aamaanoaven’raal  sagnchalappattu  mukkaadittukko'ndu  than  veettukkuth  theeviriththuppoanaan.  (esthar  6:12)

ஆமான்  தனக்கு  நேரிட்ட  எல்லாவற்றையும்  தன்  மனைவியாகிய  சிரேஷுக்கும்  தன்  சிநேகிதர்  எல்லாருக்கும்  அறிவித்தபோது,  அவனுடைய  ஆலோசனைக்காரரும்  அவன்  மனைவியாகிய  சிரேஷும்  அவனைப்  பார்த்து:  மொர்தெகாய்க்கு  முன்பாக  நீர்  தாழ்ந்துபோகத்  தொடங்கினீர்;  அவன்  யூதகுலமானால்,  நீர்  அவனை  மேற்கொள்ளாமல்  அவனுக்கு  முன்பாகத்  தாழ்ந்துபோவது  நிச்சயம்  என்றார்கள்.  (எஸ்தர்  6:13)

aamaan  thanakku  nearitta  ellaavat’raiyum  than  manaiviyaagiya  sireashukkum  than  sineagithar  ellaarukkum  a’riviththapoathu,  avanudaiya  aaloasanaikkaararum  avan  manaiviyaagiya  sireashum  avanaip  paarththu:  morthekaaykku  munbaaga  neer  thaazhnthupoagath  thodanggineer;  avan  yoothakulamaanaal,  neer  avanai  mea’rko'l'laamal  avanukku  munbaagath  thaazhnthupoavathu  nichchayam  en’raarga'l.  (esthar  6:13)

அவர்கள்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கும்போதே,  ராஜாவின்  பிரதானிகள்  வந்து,  எஸ்தர்  செய்த  விருந்துக்கு  வர  ஆமானைத்  துரிதப்படுத்தினார்கள்.  (எஸ்தர்  6:14)

avarga'l  ippadip  peasikko'ndirukkumpoathea,  raajaavin  pirathaaniga'l  vanthu,  esthar  seytha  virunthukku  vara  aamaanaith  thurithappaduththinaarga'l.  (esthar  6:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!