Wednesday, September 14, 2016

Esthar 5 | எஸ்தர் 5 | Esther 5

மூன்றாம்  நாளிலே  எஸ்தர்  ராஜவஸ்திரந்  தரித்துக்கொண்டு,  ராஜ  அரமனையின்  உள்முற்றத்தில்,  ராஜா  கொலுவிருக்கும்  ஸ்தானத்துக்கு  எதிராக  வந்து  நின்றாள்;  ராஜா  அரமனைவாசலுக்கு  எதிரான  கொலுமண்டபத்தில்  ராஜாசனத்திலே  வீற்றிருந்தான்.  (எஸ்தர்  5:1)

moon’raam  naa'lilea  esthar  raajavasthiran  thariththukko'ndu,  raaja  aramanaiyin  u'lmut’raththil,  raajaa  koluvirukkum  sthaanaththukku  ethiraaga  vanthu  nin’raa'l;  raajaa  aramanaivaasalukku  ethiraana  koluma'ndabaththil  raajaasanaththilea  veet’rirunthaan.  (esthar  5:1)

ராஜா  ராஜஸ்திரீயாகிய  எஸ்தர்  முற்றத்தில்  நிற்கிறதைக்  கண்டபோது,  அவளுக்கு  அவன்  கண்களில்  தயை  கிடைத்ததினால்,  ராஜா  தன்  கையிலிருக்கிற  பொற்செங்கோலை  எஸ்தரிடத்திற்கு  நீட்டினான்;  அப்பொழுது  எஸ்தர்  கிட்டவந்து  செங்கோலின்  நுனியைத்  தொட்டாள்.  (எஸ்தர்  5:2)

raajaa  raajasthireeyaagiya  esthar  mut’raththil  ni’rki’rathaik  ka'ndapoathu,  ava'lukku  avan  ka'nga'lil  thayai  kidaiththathinaal,  raajaa  than  kaiyilirukki’ra  po’rsenggoalai  estharidaththi’rku  neettinaan;  appozhuthu  esthar  kittavanthu  senggoalin  nuniyaith  thottaa'l.  (esthar  5:2)

ராஜா  அவளை  நோக்கி:  எஸ்தர்  ராஜாத்தியே,  உனக்கு  என்னவேண்டும்?  நீ  கேட்கிற  மன்றாட்டு  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்,  உனக்குக்  கொடுக்கப்படும்  என்றான்.  (எஸ்தர்  5:3)

raajaa  ava'lai  noakki:  esthar  raajaaththiyea,  unakku  ennavea'ndum?  nee  keadki’ra  man’raattu  enna?  nee  raajyaththil  paathimattum  keattaalum,  unakkuk  kodukkappadum  en’raan.  (esthar  5:3)

அப்பொழுது  எஸ்தர்:  ராஜாவுக்குச்  சித்தமானால்,  நான்  தமக்குச்  செய்வித்த  விருந்துக்கு  ராஜாவும்  ஆமானும்  இன்றைக்கு  வரவேண்டும்  என்றாள்.  (எஸ்தர்  5:4)

appozhuthu  esthar:  raajaavukkuch  siththamaanaal,  naan  thamakkuch  seyviththa  virunthukku  raajaavum  aamaanum  in’raikku  varavea'ndum  en’raa'l.  (esthar  5:4)

அப்பொழுது  ராஜா  எஸ்தர்  சொற்படி  செய்ய,  ஆமானைத்  தீவிரித்து  வரும்படி  சொல்லி,  எஸ்தர்  செய்த  விருந்துக்கு  ராஜாவும்  ஆமானும்  வந்தார்கள்.  (எஸ்தர்  5:5)

appozhuthu  raajaa  esthar  so’rpadi  seyya,  aamaanaith  theeviriththu  varumpadi  solli,  esthar  seytha  virunthukku  raajaavum  aamaanum  vanthaarga'l.  (esthar  5:5)

விருந்திலே  திராட்சரசம்  பரிமாறப்படுகையில்,  ராஜா  எஸ்தரைப்  பார்த்து:  உன்  வேண்டுதல்  என்ன?  அது  உனக்குக்  கொடுக்கப்படும்;  நீ  கேட்கிறது  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்  கிடைக்கும்  என்றான்.  (எஸ்தர்  5:6)

virunthilea  thiraadcharasam  parimaa’rappadugaiyil,  raajaa  estharaip  paarththu:  un  vea'nduthal  enna?  athu  unakkuk  kodukkappadum;  nee  keadki’rathu  enna?  nee  raajyaththil  paathimattum  keattaalum  kidaikkum  en’raan.  (esthar  5:6)

அதற்கு  எஸ்தர்  பிரதியுத்தரமாக:  (எஸ்தர்  5:7)

atha’rku  esthar  pirathiyuththaramaaga:  (esthar  5:7)

ராஜாவின்  கண்களில்  எனக்குக்  கிருபைகிடைத்து,  என்  வேண்டுதலைக்  கட்டளையிடவும்,  என்  விண்ணப்பத்தின்படி  செய்யவும்,  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்,  ராஜாவும்  ஆமானும்  நான்  இன்னும்  தங்களுக்குச்  செய்யப்போகிற  விருந்துக்கு  வரவேண்டும்  என்பதே  என்  வேண்டுதலும்  என்  விண்ணப்பமுமாயிருக்கிறது;  நாளைக்கு  ராஜாவின்  சொற்படி  செய்வேன்  என்றாள்.  (எஸ்தர்  5:8)

raajaavin  ka'nga'lil  enakkuk  kirubaikidaiththu,  en  vea'nduthalaik  katta'laiyidavum,  en  vi'n'nappaththinpadi  seyyavum,  raajaavukkuch  siththamaayirunthaal,  raajaavum  aamaanum  naan  innum  thangga'lukkuch  seyyappoagi’ra  virunthukku  varavea'ndum  enbathea  en  vea'nduthalum  en  vi'n'nappamumaayirukki’rathu;  naa'laikku  raajaavin  so’rpadi  seyvean  en’raa'l.  (esthar  5:8)

அன்றையதினம்  ஆமான்  சந்தோஷமும்  மனமகிழ்ச்சியுமாய்ப்  புறப்பட்டான்;  ஆனாலும்  ராஜாவின்  அரமனை  வாசலிலிருக்கிற  மொர்தெகாய்  தனக்கு  முன்  எழுந்திராமலும்  அசையாமலும்  இருக்கிறதை  ஆமான்  கண்டபோது,  அவன்  மொர்தெகாயின்மேல்  உக்கிரம்  நிறைந்தவனானான்.  (எஸ்தர்  5:9)

an’raiyathinam  aamaan  santhoashamum  manamagizhchchiyumaayp  pu’rappattaan;  aanaalum  raajaavin  aramanai  vaasalilirukki’ra  morthekaay  thanakku  mun  ezhunthiraamalum  asaiyaamalum  irukki’rathai  aamaan  ka'ndapoathu,  avan  morthekaayinmeal  ukkiram  ni’rainthavanaanaan.  (esthar  5:9)

ஆகிலும்  ஆமான்  அதை  அடக்கிக்கொண்டு,  தன்  வீட்டுக்கு  வந்து,  தன்  சிநேகிதரையும்  தன்  மனைவியாகிய  சிரேஷையும்  அழைத்து,  (எஸ்தர்  5:10)

aagilum  aamaan  athai  adakkikko'ndu,  than  veettukku  vanthu,  than  sineagitharaiyum  than  manaiviyaagiya  sireashaiyum  azhaiththu,  (esthar  5:10)

தன்  ஐசுவரியத்தின்  மகிமையையும்,  தன்  பிள்ளைகளின்  திரட்சியையும்,  ராஜா  தன்னைப்  பெரியவனாக்கி,  தன்னைப்  பிரபுக்கள்மேலும்  ராஜாவின்  ஊழியக்காரர்மேலும்  உயர்த்தின  எல்லாவற்றையும்  ஆமான்  அவர்களுக்கு  விவரித்துச்சொன்னான்.  (எஸ்தர்  5:11)

than  aisuvariyaththin  magimaiyaiyum,  than  pi'l'laiga'lin  thiradchiyaiyum,  raajaa  thannaip  periyavanaakki,  thannaip  pirabukka'lmealum  raajaavin  oozhiyakkaararmealum  uyarththina  ellaavat’raiyum  aamaan  avarga'lukku  vivariththuchsonnaan.  (esthar  5:11)

பின்னையும்  ஆமான்:  ராஜஸ்திரீயாகிய  எஸ்தரும்  தான்  செய்த  விருந்துக்கு  ராஜாவுடனேகூட  என்னைத்தவிர  வேறொருவரையும்  அழைக்கவில்லை;  நாளைக்கும்  ராஜாவுடனேகூட  நான்  விருந்துக்கு  வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.  (எஸ்தர்  5:12)

pinnaiyum  aamaan:  raajasthireeyaagiya  estharum  thaan  seytha  virunthukku  raajaavudaneakooda  ennaiththavira  vea’roruvaraiyum  azhaikkavillai;  naa'laikkum  raajaavudaneakooda  naan  virunthukku  varavazhaikkappattirukki’rean.  (esthar  5:12)

ஆனாலும்  அந்த  யூதனாகிய  மொர்தெகாய்  ராஜாவின்  அரமனைவாசலில்  உட்கார்ந்திருக்கிறதை  நான்  காணுமளவும்  அவையெல்லாம்  எனக்கு  ஒன்றுமில்லையென்றான்.  (எஸ்தர்  5:13)

aanaalum  antha  yoothanaagiya  morthekaay  raajaavin  aramanaivaasalil  udkaarnthirukki’rathai  naan  kaa'numa'lavum  avaiyellaam  enakku  on’rumillaiyen’raan.  (esthar  5:13)

அப்பொழுது  அவன்  மனைவியாகிய  சிரேஷும்  அவனுடைய  சிநேகிதர்  எல்லாரும்  அவனைப்  பார்த்து:  ஐம்பதுமுழ  உயரமான  ஒரு  தூக்குமரம்  செய்யப்படவேண்டும்;  அதிலே  மொர்தெகாயை  தூக்கிப்போடும்படி  நாளையத்தினம்  நீர்  ராஜாவுக்குச்  சொல்லவேண்டும்;  பின்பு  சந்தோஷமாய்  ராஜாவுடனேகூட  விருந்துக்குப்  போகலாம்  என்றார்கள்;  இந்தக்  காரியம்  ஆமானுக்கு  நன்றாய்க்  கண்டதினால்  தூக்குமரத்தைச்  செய்வித்தான்.  (எஸ்தர்  5:14)

appozhuthu  avan  manaiviyaagiya  sireashum  avanudaiya  sineagithar  ellaarum  avanaip  paarththu:  aimbathumuzha  uyaramaana  oru  thookkumaram  seyyappadavea'ndum;  athilea  morthekaayai  thookkippoadumpadi  naa'laiyaththinam  neer  raajaavukkuch  sollavea'ndum;  pinbu  santhoashamaay  raajaavudaneakooda  virunthukkup  poagalaam  en’raarga'l;  inthak  kaariyam  aamaanukku  nan’raayk  ka'ndathinaal  thookkumaraththaich  seyviththaan.  (esthar  5:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!