Wednesday, September 14, 2016

Esthar 4 | எஸ்தர் 4 | Esther 4

நடந்த  யாவற்றையும்  மொர்தெகாய்  அறிந்தபோது,  மொர்தெகாய்  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  இரட்டுடுத்தி,  சாம்பல்  போட்டுக்கொண்டு,  நகரத்தின்  நடுவே  புறப்பட்டுப்போய்,  துயரமுள்ள  மகா  சத்தத்துடனே  அலறிக்கொண்டு,  (எஸ்தர்  4:1)

nadantha  yaavat’raiyum  morthekaay  a’rinthapoathu,  morthekaay  than  vasthirangga'laik  kizhiththu,  irattuduththi,  saambal  poattukko'ndu,  nagaraththin  naduvea  pu’rappattuppoay,  thuyaramu'l'la  mahaa  saththaththudanea  ala’rikko'ndu,  (esthar  4:1)

ராஜாவின்  அரமனை  வாசல்  முகப்புமட்டும்  வந்தான்;  இரட்டுடுத்தினவனாய்  ராஜாவின்  அரமனை  வாசலுக்குள்  பிரவேசிக்க  ஒருவனுக்கும்  உத்தரவில்லை.  (எஸ்தர்  4:2)

raajaavin  aramanai  vaasal  mugappumattum  vanthaan;  irattuduththinavanaay  raajaavin  aramanai  vaasalukku'l  piraveasikka  oruvanukkum  uththaravillai.  (esthar  4:2)

ராஜாவின்  உத்தரவும்  அவனுடைய  கட்டளையும்  போய்ச்  சேர்ந்த  ஒவ்வொரு  நாட்டிலும்  ஸ்தலத்திலுமுள்ள  யூதருக்குள்ளே  மகா  துக்கமும்,  உபவாசமும்,  அழுகையும்,  புலம்பலும்  உண்டாய்,  அநேகர்  இரட்டுடுத்திச்  சாம்பலில்  கிடந்தார்கள்.  (எஸ்தர்  4:3)

raajaavin  uththaravum  avanudaiya  katta'laiyum  poaych  searntha  ovvoru  naattilum  sthalaththilumu'l'la  yootharukku'l'lea  mahaa  thukkamum,  ubavaasamum,  azhugaiyum,  pulambalum  u'ndaay,  aneagar  irattuduththich  saambalil  kidanthaarga'l.  (esthar  4:3)

அப்பொழுது  எஸ்தரின்  தாதிமார்களும்,  அவளுடைய  பிரதானிகளும்போய்,  அதை  அவளுக்கு  அறிவித்தார்கள்;  அதினாலே  ராஜாத்தி  மிகவும்  துக்கப்பட்டு,  மொர்தெகாய்  உடுத்திருந்த  இரட்டை  எடுத்துப்போட்டு,  அவனை  உடுத்துவிக்கிறதற்கு  வஸ்திரங்களை  அனுப்பினாள்;  அவனோ  அவைகளை  ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.  (எஸ்தர்  4:4)

appozhuthu  estharin  thaathimaarga'lum,  ava'ludaiya  pirathaaniga'lumpoay,  athai  ava'lukku  a’riviththaarga'l;  athinaalea  raajaaththi  migavum  thukkappattu,  morthekaay  uduththiruntha  irattai  eduththuppoattu,  avanai  uduththuvikki’ratha’rku  vasthirangga'lai  anuppinaa'l;  avanoa  avaiga'lai  eat’rukko'l'laathirunthaan.  (esthar  4:4)

அப்பொழுது  எஸ்தர்  தன்  பணிவிடைக்கென்று  ராஜாவினால்  நியமித்திருந்த  அவனுடைய  பிரதானிகளில்  ஒருவனாகிய  ஆத்தாகை  அழைப்பித்து:  காரியம்  என்ன?  அதின்  முகாந்தரம்  என்ன?  என்று  அறியும்படி,  மொர்தெகாயினிடத்தில்  விசாரிக்க  அவனுக்குக்  கட்டளையிட்டாள்.  (எஸ்தர்  4:5)

appozhuthu  esthar  than  pa'nividaikken’ru  raajaavinaal  niyamiththiruntha  avanudaiya  pirathaaniga'lil  oruvanaagiya  aaththaakai  azhaippiththu:  kaariyam  enna?  athin  mugaantharam  enna?  en’ru  a’riyumpadi,  morthekaayinidaththil  visaarikka  avanukkuk  katta'laiyittaa'l.  (esthar  4:5)

அப்படியே  ஆத்தாகு  ராஜாவின்  அரமனை  வாசலுக்கு  முன்னான  பட்டணவீதியிலிருக்கிற  மொர்தெகாயினிடத்தில்  புறப்பட்டுப்போனான்.  (எஸ்தர்  4:6)

appadiyea  aaththaaku  raajaavin  aramanai  vaasalukku  munnaana  patta'naveethiyilirukki’ra  morthekaayinidaththil  pu’rappattuppoanaan.  (esthar  4:6)

அப்பொழுது  மொர்தெகாய்  தனக்குச்  சம்பவித்த  எல்லாவற்றைப்பற்றியும்,  யூதரை  அழிக்கும்படி  ஆமான்  ராஜாவின்  கஜானாவுக்கு  எண்ணிக்கொடுப்பேன்  என்று  சொன்ன  பணத்தொகையைப்பற்றியும்  அவனுக்கு  அறிவித்ததும்  அன்றி,  (எஸ்தர்  4:7)

appozhuthu  morthekaay  thanakkuch  sambaviththa  ellaavat’raippat’riyum,  yootharai  azhikkumpadi  aamaan  raajaavin  kajaanaavukku  e'n'nikkoduppean  en’ru  sonna  pa'naththogaiyaippat’riyum  avanukku  a’riviththathum  an’ri,  (esthar  4:7)

யூதர்களை  அழிக்கும்படி  சூசானில்  பிறந்த  கட்டளையின்  நகலையும்  அவனிடத்தில்  கொடுத்து,  அதை  எஸ்தருக்குக்  காண்பித்துத்  தெரியப்படுத்தவும்,  அவள்  அகத்தியமாய்  ராஜாவினிடத்திற்  போய்,  அவனிடத்தில்  தன்  ஜனங்களுக்காக  விண்ணப்பம்பண்ணவும்  மன்றாடவும்  வேண்டுமென்று  அவளுக்குச்  சொல்லச்சொன்னான்.  (எஸ்தர்  4:8)

yootharga'lai  azhikkumpadi  soosaanil  pi’rantha  katta'laiyin  nagalaiyum  avanidaththil  koduththu,  athai  estharukkuk  kaa'nbiththuth  theriyappaduththavum,  ava'l  agaththiyamaay  raajaavinidaththi’r  poay,  avanidaththil  than  janangga'lukkaaga  vi'n'nappampa'n'navum  man’raadavum  vea'ndumen’ru  ava'lukkuch  sollachsonnaan.  (esthar  4:8)

ஆத்தாகு  வந்து,  மொர்தெகாயின்  வார்த்தைகளை  எஸ்தருக்கு  அறிவித்தான்.  (எஸ்தர்  4:9)

aaththaaku  vanthu,  morthekaayin  vaarththaiga'lai  estharukku  a’riviththaan.  (esthar  4:9)

அப்பொழுது  எஸ்தர்  ஆத்தாகினிடத்தில்  மொர்தெகாய்க்குச்  சொல்லியனுப்பினது:  (எஸ்தர்  4:10)

appozhuthu  esthar  aaththaakinidaththil  morthekaaykkuch  solliyanuppinathu:  (esthar  4:10)

யாராவது  அழைப்பிக்கப்படாமல்,  உள்முற்றத்தில்  ராஜாவினிடத்தில்  பிரவேசித்தால்,  புருஷரானாலும்  ஸ்திரீயானாலும்  சரி,  அவர்கள்  பிழைக்கும்படிக்கு  அவர்களுக்கு  ராஜா  பொற்செங்கோலை  நீட்டினாலொழிய  மற்றப்படி  சாகவேண்டும்  என்கிற  ஒரு  தவறாத  சட்டமுண்டு,  இது  ராஜாவின்  சகல  ஊழியக்காரருக்கும்,  ராஜாவினுடைய  நாடுகளிலுள்ள  சகல  ஜனங்களுக்கும்  தெரியும்;  நான்  இந்த  முப்பதுநாளளவும்  ராஜாவினிடத்தில்  வரவழைப்பிக்கப்படவில்லை  என்று  சொல்லச்சொன்னாள்.  (எஸ்தர்  4:11)

yaaraavathu  azhaippikkappadaamal,  u'lmut’raththil  raajaavinidaththil  piraveasiththaal,  purusharaanaalum  sthireeyaanaalum  sari,  avarga'l  pizhaikkumpadikku  avarga'lukku  raajaa  po’rsenggoalai  neettinaalozhiya  mat’rappadi  saagavea'ndum  engi’ra  oru  thava’raatha  sattamu'ndu,  ithu  raajaavin  sagala  oozhiyakkaararukkum,  raajaavinudaiya  naaduga'lilu'l'la  sagala  janangga'lukkum  theriyum;  naan  intha  muppathunaa'la'lavum  raajaavinidaththil  varavazhaippikkappadavillai  en’ru  sollachsonnaa'l.  (esthar  4:11)

எஸ்தரின்  வார்த்தைகளை  மொர்தெகாய்க்குத்  தெரிவித்தார்கள்.  (எஸ்தர்  4:12)

estharin  vaarththaiga'lai  morthekaaykkuth  theriviththaarga'l.  (esthar  4:12)

மொர்தெகாய்  எஸ்தருக்குத்  திரும்பச்  சொல்லச்சொன்னது:  நீ  ராஜாவின்  அரமனையிலிருக்கிறதினால்,  மற்ற  யூதர்  தப்பக்கூடாதிருக்க,  நீ  தப்புவாயென்று  உன்  மனதிலே  நினைவுகொள்ளாதே.  (எஸ்தர்  4:13)

morthekaay  estharukkuth  thirumbach  sollachsonnathu:  nee  raajaavin  aramanaiyilirukki’rathinaal,  mat’ra  yoothar  thappakkoodaathirukka,  nee  thappuvaayen’ru  un  manathilea  ninaivuko'l'laathea.  (esthar  4:13)

நீ  இந்தக்  காலத்திலே  மவுனமாயிருந்தால்,  யூதருக்குச்  சகாயமும்  இரட்சிப்பும்  வேறொரு  இடத்திலிருந்து  எழும்பும்,  அப்பொழுது  நீயும்  உன்  தகப்பன்  குடும்பத்தாரும்  அழிவீர்கள்;  நீ  இப்படிப்பட்ட  காலத்துக்கு  உதவியாயிருக்கும்படி  உனக்கு  ராஜமேன்மை  கிடைத்திருக்கலாமே,  யாருக்குத்  தெரியும்,  என்று  சொல்லச்சொன்னான்.  (எஸ்தர்  4:14)

nee  inthak  kaalaththilea  mavunamaayirunthaal,  yootharukkuch  sagaayamum  iradchippum  vea’roru  idaththilirunthu  ezhumbum,  appozhuthu  neeyum  un  thagappan  kudumbaththaarum  azhiveerga'l;  nee  ippadippatta  kaalaththukku  uthaviyaayirukkumpadi  unakku  raajameanmai  kidaiththirukkalaamea,  yaarukkuth  theriyum,  en’ru  sollachsonnaan.  (esthar  4:14)

அப்பொழுது  எஸ்தர்  மொர்தெகாய்க்கு  மறுபடியும்  சொல்லச்சொன்னது:  (எஸ்தர்  4:15)

appozhuthu  esthar  morthekaaykku  ma’rupadiyum  sollachsonnathu:  (esthar  4:15)

நீர்  போய்,  சூசானில்  இருக்கிற  யூதரையெல்லாம்  கூடிவரச்செய்து,  மூன்றுநாள்  அல்லும்  பகலும்  புசியாமலும்  குடியாமலுமிருந்து,  எனக்காக  உபவாசம்பண்ணுங்கள்;  நானும்  என்  தாதிமாரும்  உபவாசம்பண்ணுவோம்;  இவ்விதமாக  சட்டத்தை  மீறி,  ராஜாவினிடத்தில்  பிரவேசிப்பேன்;  நான்  செத்தாலும்  சாகிறேன்  என்று  சொல்லச்சொன்னாள்.  (எஸ்தர்  4:16)

neer  poay,  soosaanil  irukki’ra  yootharaiyellaam  koodivarachseythu,  moon’runaa'l  allum  pagalum  pusiyaamalum  kudiyaamalumirunthu,  enakkaaga  ubavaasampa'n'nungga'l;  naanum  en  thaathimaarum  ubavaasampa'n'nuvoam;  ivvithamaaga  sattaththai  mee’ri,  raajaavinidaththil  piraveasippean;  naan  seththaalum  saagi’rean  en’ru  sollachsonnaa'l.  (esthar  4:16)

அப்பொழுது  மொர்தெகாய்  புறப்பட்டுப்போய்,  எஸ்தர்  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  செய்தான்.  (எஸ்தர்  4:17)

appozhuthu  morthekaay  pu’rappattuppoay,  esthar  thanakkuk  ka’rpiththapadiyellaam  seythaan.  (esthar  4:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!